Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சொத்து இருந்தும் வங்கி கடனை திரும்ப தராதோருக்கு ‘கிடுக்கிப்பிடி : நிதியமைச்சகம் அதிரடி உத்தரவு
Page 1 of 1

வங்கிகளின் வசூலாகாத கடனை குறைக்கும் நோக்கில், மத்திய நிதியமைச்சகம், வருமான வரி துறைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில், கடனாளிகள் தாக்கல் செய்யும் செல்வ வரி சார்ந்த கணக்கு விவரங்களை, வருமான வரி துறை, பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி: எனினும், வங்கிகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே, கடனாளியின் செல்வ வரி கணக்கு விவரங்களை, வருமான வரி துறை வழங்க வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதே சமயம், கடனாளிக்கும், வருமான வரி துறைக்கும் இடையே வரி தொடர்பான பிரச்னை இருந்தால், அதற்கு தீர்வு கண்ட பின்னரே, அவரது சொத்துகளை விற்று, கடன் தொகையை வசூலிக்க, வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
வருமான வரி துறை அளிக்கும், ஒருவரின் செல்வ வரி கணக்கு விவரங்களை, கடனை திரும்ப பெறும் நடவடிக்கைக்காக மட்டுமே, வங்கிகள் பயன்படுத்த வேண்டும். வேறு யாருக்கும், அத்தகவல்களை வங்கிகள் வழங்கக் கூடாது என, நிதியமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வசூலாகாமல் உள்ள கடன்களால், பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, மார்ச் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 1.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, அடுத்த ஆறு மாதங்களில், அதாவது, செப்டம்பர் இறுதியில், 28.5 சதவீதம் அதிகரித்து, 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செல்வ வரி:பொதுத் துறை வங்கிகளின், மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ் உள்ள தொகை மட்டும், 40.2 சதவீதம் (95 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளது. கடனை திரும்ப செலுத்தக் கூடிய அளவிற்கு சொத்துகள் இருந்தும், பலர், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.இத்தகையோரின் செல்வ வரி மற்றும் வருமான வரி கணக்கு விவரங்களை அறிவதன் மூலம், வசூலாகாத கடனை திரும்ப பெறலாம் என, வங்கிகள் முயற்சி மேற்கொண்டன.
புகார்:இத்தகவல்களை தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், வருமான வரி துறை செவி சாய்க்காமல் உள்ளதாக, வங்கிகள் புகார் தெரிவித்தன.இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம், வங்கிகள் கேட்கும் தகவலை அளிக்க வேண்டும் என, வருமான வரி துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.இதனால், திட்டமிட்டு கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளோரின் சொத்துகளை அடையாளம் கண்டு, கையகப்படுத்தும் வாய்ப்பு, வங்கிகளுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், அவை, வசூலாகாத கடன் சுமையை குறைத்துக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
» தனிநபர் கடனை தவிர்க்க 6 சிறந்த கடன் திட்டங்கள்!!!!
» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
» தனிநபர் கடனை தவறாக பயன்படுத்தாதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum