வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தவிர்க்க வேண்டிய ஃபண்டுகள் !

Go down

தவிர்க்க வேண்டிய ஃபண்டுகள் !  Empty தவிர்க்க வேண்டிய ஃபண்டுகள் !

Post by தருண் Sat May 17, 2014 4:24 pm

வங்கி எஃப்.டி., அஞ்சலக வைப்பு நிதி ஆகிய திட்டங்களையே பலரும் நாடிப் போனது அந்தக் காலம். அவற்றுக்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நாடிவருவது கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் லேட்டஸ்ட் நடைமுறை. வங்கி எஃப்.டி.யைவிட கூடுதலாக சில சதவிகித லாபம், நினைத்த நேரத்தில் பணமாக மாற்றிக்கொள்ளும் வசதி, பணத்துக்கும் பாதுகாப்பு என பல கவர்ச்சிகரமான விஷயங்கள் இருப்பதால், சமீப காலமாகப் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஆனால், மொத்தமாக இருக்கும் பல நூறுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட திட்டங்கள் படுமோசமாகச் செயல்படும் திட்டங்களாக இருக்கின்றன. இவற்றில் சில, வங்கி எஃப்.டி. அளிக்கும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு வருமானத்தைக்கூட தரவில்லை என்பது கசப்பான உண்மை. பங்குச் சந்தையில் பணத்தைப் போடுவதைவிட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் இந்த உண்மையை அனுபவப்பூர்வமாக உணரும்போது ஏற்படும் வலியானது மறக்க முடியாததாகிவிடுகிறது.

இந்தியாவில் மொத்தம் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. இதில் சில நிறுவனங்களின் பெயரை நம்மில் பலர் கேள்விப்பட்டே இருக்கமாட்டோம். காரணம், 2006-க்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் நல்ல ஏற்றம் கண்டதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஃபண்ட் பிஸினஸுக்கு வந்தன. அப்படி வந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்த திட்டங்கள் எல்லாமே நல்ல வரும்படியைத் தந்தது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, கடந்த ஐந்து வருடங்களில் எஃப்.எம்.சி.ஜி., பார்மா, பேங்கிங் துறைகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அந்தத் துறைகளில் சில ஃபண்டுகள் அதனுடைய பெஞ்ச்மார்க் அளவைவிட குறைவான வளர்ச்சியே கண்டுள்ளன. இதற்கு காரணம் என்ன? பல காரணங்களைச் சொல்கிறார்கள் இத்துறையைச் சார்ந்தவர்கள்.

ஒன்று, அந்த ஃபண்ட் மேனேஜரின் தவறான முடிவாக இருக்கலாம்; ஃபண்ட் மேனேஜர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்பது உறுதி கிடையாது. தவிர, ஃபண்ட் மேனேஜர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தகவல்கள்தான் பெரும்பாலும் கிடைக்கின்றன. இதை வைத்து இனிவரும் நாட்களில் எந்தெந்தத் துறை வளரும் என்பதை யூகித்து, அதன் அடிப்படையில் சில குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும்போது, சில சமயங் களில் லாபமும் கிடைக்கிறது; சில சமயங்களில் நஷ்டமும் வந்துவிடுகிறது.

சந்தை சரியில்லாதபோது சில ஃபண்ட் மேனேஜர்கள், ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால், எஃப்.ஐ.ஐ.கள் தைரியமாக சந்தையைக் கணித்து முதலீடு செய்கிறார்கள். நல்ல லாபமும் பார்க்கிறார்கள். எஃப்.ஐ.ஐ.கள் அதிக அளவில் முதலீடு செய்து, சந்தை உயர்ந்த பிறகு மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்யத் தொடங்க, அந்தச் சமயத்தில் எஃப்.ஐ.ஐ.கள் பணத்தைத் திரும்ப எடுப்பதால் சந்தை இறங்கி நஷ்டம் வரக் காரணமாகிவிடுகிறது.

ஒரு ஃபண்ட் மோசமாகச் செயல்பட மேனேஜர் மட்டுமே காரணமல்ல, நிறுவனங்களும் ஒரு காரணம் ஆகிவிடுகிறது. இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஃபண்ட் மேனேஜர்களை தனித்து முடிவெடுக்க விடுவதில்லை. ஏனெனில், முதலீடு விஷயத்தில் அந்த நிறுவனங்கள் தனி ஸ்டைலை பின்பற்றுகின்றன. அந்த ஸ்டைல்படிதான் ஃபண்ட் மேனேஜர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

தவிர்க்க வேண்டிய ஃபண்டுகள் !  Na30b

தவிர, சின்ன ஃபண்ட் ஹவுஸ்கள் நிர்வகிக்கும் சில ஃபண்டுகள்தான் சில நேரங்களில் சரியாகச் செயல்படாமல் போக வாய்ப்புண்டு. காரணம், அந்நிறுவனங்களுக்கு அது முதன்மையான தொழிலாக இருக்காது. எனவே, இத்துறையில் கட்டாயம் லாபம் சம்பாதிக்கவேண்டிய அவசியம் அந்நிறுவனங்களுக்கு இருக்காது. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்'' என்கிறார்கள் துறை உள்ளாட்கள்.
ஐந்து விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை. நம்மோடு பழகுகிறவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதுபோல எல்லா ஃபண்டுகளும் நிச்சயம் லாபம் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. லாபம் தரவில்லை என்றாலும் நஷ்டத்தைத் தரும் ஃபண்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என ப்ரகலா வெல்த் மெனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனிப்பனிடம் கேட்டோம்.

''ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது அந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்படி செயல்பட்டுள்ளது, ஃபண்ட் மேனேஜர் செயல்பாடுகள் எப்படி, நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பு, ஃபண்ட் நிர்வகிக்கும் தொகையின் அளவு என்ன, நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி, நிறுவனத்தின் பிரதான தொழில் என்ன என்பதையெல்லாம் கவனித்து முதலீடு செய்வது நல்லது. இரண்டாயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்து மதிப்பு இருக்கும் நிறுவன ஃபண்டுகளில் முதலீடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பத்து ஃபண்டு நிறுவனங்கள்தான் இந்தச் சொத்து மதிப்பு வைத்துள்ளன. 300 முதல் 500 கோடிகளில் இயங்கும் ஃபண்ட் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. தொடர்ச்சியாக லாபம் கொடுக்கும் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது, புதிய ஃபண்டுகளை தவிர்ப்பதும் புத்திசாலிதனமாக இருக்கும்'' என்றார் அவர்.

முதலீடு விஷயத்தில் நமது ஃபண்ட் மேனேஜர்களுக்கும் எஃப்.ஐ.ஐ.களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார் வேல்யூ இன்வெஸ்டிங் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷ்.
''இந்திய பங்குச் சந்தைக்கு முக்கியமான தேவை அந்நிய முதலீடு. இங்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளின் முதலீடுதான் அதிகமாக வருகின்றன. காரணம் அங்கு வட்டி விகிதம் மிக குறைவாக இருப்பதுதான். சில நாடுகளில் வட்டி விகிதம் பூஜ்யமாகவும் உள்ளது. இந்தியா வளரும் நாடு என்பதால் இங்கு வளர்ச்சியும் நன்றாக உள்ளது.

அயல்நாட்டினர் நம் சந்தையின்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, நம் நாட்டினர் குறைவாகவே நம்பிக்கை வைத்துள்ளனர். நம்மவர்கள் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் அதிகம் முதலீடு செய்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் நம்மவர்கள் வாங்கி குவித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 2.9 லட்சம் கோடி ரூபாய். இவர்கள் ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்தாலே போதும் இந்தியச் சந்தை எப்போதும் ஏற்றத் திலேயே இருக்கும். ஈக்விட்டி சந்தையில் குறுகியகாலத்தில் லாபம் பார்க்க நினைக்கக் கூடாது. நீண்டகாலத்தில் கிடைக்கும் நல்ல லாபத்தைக் கணக்கில் கொள்ளவேண்டும்'' என்றார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கட்டாயம் தவிர்த்தாகவேண்டிய ஃபண்டுகளின் பட்டியலையும் சொல்ல முடியுமா என அவரிடமே கேட்டோம். (அந்தப் பட்டியல் முன் பக்கத்தில்!)
ஒரு மரத்தில் மாம்பழம் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்க, அந்தப் பழத்தைப் பறிக்காமல் காயைப் பறித்து சாப்பிட நினைப்பது புத்திசாலித்தனமல்ல. ஏதோ ஒரு காரணத்தால் நம்மிடம் சேர்ந்துவிட்ட குப்பை ஃபண்ட் திட்டங்களை இனியாவது ஒழித்துக்கட்டிவிட்டு, நல்ல ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்குவோம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைத்துவிடும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. நாம் எந்தவிதமான ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம் என்பதை பொறுத்துதான் லாபம் இருக்கும். சில ஃபண்டுகள் குறுகிய காலத்தில் அதிகலாபத்தை கொடுத்திருக்கும். அதை வைத்து மட்டும் அந்த ஃபண்டில் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் அந்த நிறுவனம் வாங்கி வைத்திருக்கும் ஏதாவது ஒரு பங்கு அதிக லாபம் தந்திருக்கும்.

எப்போதும் உங்களின் முதலீட்டை லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். அது துறை சார்ந்த ஃபண்டாக இருக்கும்போது அதிக ரிஸ்க் எடுக்கவேண்டிய அவசியமும் வரும். அதாவது இன்ஃப்ரா, மின் துறை, இயற்கை வளங்கள் சார்ந்த துறைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அரசின் கொள்கை முடிவுகளைப் பொறுத்து அந்த துறையின் வளர்ச்சி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதேபோல் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் பெஞ்ச்மார்க்கைவிட குறைவான வருமானம் கொடுக்கும் ஃபண்டு இருக்கிறது. அதிலும் கவனம் தேவை.

முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை இரண்டிலிருந்து, ஐந்து ஃபண்டுகளாக வைத்திருப்பது நல்லது. ஒரு ஃபண்டு வருமானம் குறைந்தாலும் மற்றொன்று நஷ்டத்தைக் குறைக்க உதவும். குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதலீடு என்றாலும் அதை இரண்டு ஃபண்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது. சஹாரா நிறுவனம் தற்பொழுது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எனவே இந்த நிறுவனத்தின் ஃபண்டுகளை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum