Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வரிச் சேமிப்புக்கான முதலீடு...
Page 1 of 1
வரிச் சேமிப்புக்கான முதலீடு...
வருமான வரியை மிச்சப்படுத்தவேண்டும் என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், சரியான திட்டங்களை தேர்வு செய்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கடைசி நேரம் வரைக்கும் அதற்காக எந்தவகையிலும் திட்டமிடாமல் இருந்துவிட்டு, கடைசியில் ஏதோ ஓர் இன்ஷூரன்ஸ் பாலிசி, ஏதோ ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்று போட்டுவிட்டு, அவற்றால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரியவரும்போது வருத்தப்படுகிறோம்.
வரிச் சேமிப்பின்போது நம்மில் பலர் பொதுவாக செய்யும் தவறுகள் என்னென்ன? அவற்றை தவிர்க்க என்ன வழி என்பதை நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ் விளக்கிச் சொன்னார்.
ரிஸ்க் என்ன?
வருமான வரிச் சேமிப்புக்கான முதலீட்டை முன்கூட்டியே திட்டமிடுங்கள்; இதுவே பல தவறுகளை செய்யாமல் நம்மைத் தடுக்க உதவும். யாரோ ஒரு ஏஜென்ட் சொன்னார் என்பதற்காகப் பணத்தைப் போடாமல், ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்முன் அதிலுள்ள ரிஸ்க் என்ன, அதில் வருமானம் எவ்வளவு கிடைக்கும், லாக்-இன் பீரியட் எவ்வளவு என்பதைக் கவனிப்பது அவசியம்.
யூலிப் பாலிசி!
வரிச் சலுகை பெற சமீப காலமாகப் பலரும் செய்யும் தவறு, யூலிப் பாலிசிகளை எடுப்பது. இதில் குரோத், பேலன்ஸ்டு என சில ஆஃப்ஷன்கள் உள்ளன. அதில் ரிஸ்க்குக்கு ஏற்ப வருமானம் வித்தியாசப்படும். இவற்றில் அந்த ஆண்டு வரிச் சலுகைக்காக சிலபல ஆயிரம் ரூபாய்களை பிரீமியமாகக் கட்டிவிடுவார்கள். ஆனால், அடுத்துவரும் ஆண்டுகளுக்கும் இதேபோல் பிரீமியம் கட்டவேண்டும் என்பதை ஏஜென்ட் சொல்லாமல் விட்டிருப்பார். அல்லது மூன்றாண்டு கட்டினால் போதும் என்றிருப்பார். எனவே, மூன்றாண்டுகளுக்குப் பணம் கட்டிவிட்டு, அப்படியே விட்டுவிடுவோம். இது சரியல்ல. தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகள் பிரீமியம் கட்டினால் மட்டுமே யூலிப் பாலிசிகளால் லாபம் கிடைக்கும்.
தவிர, பங்குச் சந்தை சரியில்லை என்றால் யூலிப் பாலிசிகளில் கட்டிய பணம்கூட கணக்கில் இருக்காது. இந்த பாலிசிகள் நீண்ட காலத்தில் (சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல்) ஓரளவிற்கு வருமானம் தரும். அடுத்து, யூலிப் பென்ஷன் பாலிசி. இது ஓய்வுக்காலத்திற்காக வடிவமைக்கப்பட்டது. 58 வயது வரை கட்ட வேண்டியிருக்கும் என்பது தெரியாமலே பலரும் ஆரம்பித்து, சில ஆண்டுகளிலேயே அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
பொதுவாக, யூலிப் பாலிசிகளில் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். நீண்டகாலத் திட்டம் என்பதை அறியாமல் வரிச் சேமிப்புக்காக தேர்வு செய்துவிட்டு, இடையில் நஷ்டத்தோடு வெளியேறுவது பலரின் நிலையாக உள்ளது.
பி.பி.எஃப்.!
பொது பிராவிடண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்.) என்கிற இந்தத் திட்டத்திலும் நீங்கள் முதலீடு செய்யலாம். இதில் வட்டி விகிதம் 8.8%. அதோடு 15 ஆண்டுகள் வரை கட்டாயம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இடையில் நிறுத்தினால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்கிற விவரம் தெரியாமல் ஆரம்பித்துவிட்டு இடையில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள். அதேசமயம், இத்திட்டத்தில் தொடர்ந்து சேமித்து வந்தால் ஒருவர் ஓய்வுபெறும்போது கணிசமான தொகை கிடைக்கும். இத்திட்டம் ஓய்வுக்காலத்திற்கான சேமிப்புக்குச் சிறந்ததாகும்.
கல்விக் கட்டணம்..!
பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரிச் சலுகை உண்டு. சிலர் மொத்த பள்ளிக் கட்டணத்தையும் கணக்கில் காண்பிக்கிறார்கள். இதனால் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.
லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம்!
இன்ஷூரன்ஸ் பிரீமியம் என்பது கவரேஜ் தொகையில் பத்து சதவிகிதம் வரைதான் கணக்கில் காண்பிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் உள்ள ஆயுள் காப்பீடு பாலிசியில் பிரீமியம் 10,000 ரூபாய் வரை செலுத்தி இருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு. இதுவே 11,000 ரூபாய் பிரீமியம் என்றால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். இந்த விஷயத்தைக் கவனித்து பாலிசி எடுப்பது அவசியம்.
தேவை கலவை முதலீடு!
வரிச் சலுகைக்காக முதலீடு மேற்கொள்ளும் போது பங்குச் சார்ந்தது அல்லது கடன் சார்ந்த திட்டங்களை மட்டுமே சிலர் தேர்வு செய்துவிடுகிறார்கள். இது தவறு. இதற்கு பதில், பங்கு மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் பிரித்து முதலீடு செய்தால், ரிஸ்க் குறையும்.
கடைசி மாதங்களில் வரிச் சலுகைக்காக முதலீட்டுக்குத் தேவையான பணத்தை மொத்தமாகத் திரட்டுவது கஷ்டமான காரியமாக இருக்கும். அந்தவகையில், வருட ஆரம்பத்திலேயே திட்டமிடுங்கள்... வரியை வளமாகச் சேமியுங்கள்.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சேமிப்புக்கான வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ.
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்!
» வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்!
» எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum