வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா?

Go down

சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா? Empty சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா?

Post by தருண் Sat May 17, 2014 3:40 pm

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இப்போது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 கோடிக்கு மேல். இது உலக மக்கள் தொகையில் 6 சதவிகிதம். 2025 -ம் ஆண்டு இது 38 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது அதிர்ச்சி தகவல். சென்னையில் 30 சதவிகிதத்தினருக்கு இந்நோய் உள்ளது.

வேகமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவு போன்றவற்றால் முப்பது வயதை நெருங்கும்போதே பலருக்கு சர்க்கரை நோய் (இதன் இன்னொரு பெயர் நீரிழிவு நோய்) பாதிப்பு வந்துவிடுகிறது. இதனால் நரம்புகளில் பாதிப்பு, கண் பார்வை குறைவு, சிறுநீரகத்தில் பிரச்னை என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு சர்க்கரை நோய்தான் வாசல் என்பதால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்நோய் கண்டவர்களுக்கு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் தருவதில்லை. அப்படியே தந்தாலும் அதிக கட்டுப்பாடு, அதிக பிரீமியம் என பல பிரச்னைகள். ஏன் இப்படி என்று பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.என்.முரளியிடம் கேட்டோம்.

''சர்க்கரை நோய் என்றில்லை. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இருக்கும் எந்த நோய்க்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கவரேஜ் தருவதில்லை. கட்டாயம் க்ளைம் வரும் என தெரியும்போது பல நிறுவனங்கள் கவரேஜ் தர தயங்கவே செய்யும். ஆனால், பாலிசி எடுத்தபிறகு சர்க்கரை நோய் வந்தால் நிச்சயம் கவரேஜ் இருக்கும். அப்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். அறுவை சிகிச்சை நடந்தாலும் க்ளைம் பெறலாம். ஆனால்,  சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.  

ஏற்கெனவே பாலிசியை எடுத்தவர்களுக்கு இந்நோய் வந்தால் அவர்கள் பாலிசியைப் புதுப்பிக்கும்போது இந்நோய்க்காக முன்பு க்ளைம் செய்த தொகையைவிட  கவரேஜ் தொகையை அதிகரிக்க மாட்டார்கள்.

சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா? P39

குரூப் இன்ஷூரன்ஸ்!  

குரூப் இன்ஷூரன்ஸில் சர்க்கரை நோய்க்கு கவரேஜ் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குரூப் இன்ஷூரன்ஸின் விதிமுறைகளைப் பொறுத்து இது அமையும். உங்கள் நிறுவனம் உங்களுக்கு குரூப் பாலிசி எடுத்துத் தந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்'' என்றார் பார்தி ஆக்ஸாவின் முரளி.
ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக பிரீமியம் வாங்கிக்கொண்டு 70 வயது வரை டேர்ம் பிளான்களை அளிக்கிறது. அதேபோல, அதிக பிரீமியம் வாங்கிக்கொண்டு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மெடிக்ளைம் பாலிசிகளைத் தரலாம். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மனசு வைக்குமா?

- இரா.ரூபாவதி

சிறப்பு பாலிசிகள்!

சர்க்கரை நோய்க்கு எந்தெந்த நிறுவனம் சிறப்பு பாலிசிகளை அளிக்கிறது என்று பார்ப்போம்.

மேக்ஸ் புபா

மேக்ஸ் புபா நிறுவனம், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாலிசியை அளிக்கிறது. இதற்கென தனியாக கூடுதல் பிரீமியமும் வசூலிப்பதில்லை. ஆனால், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய்க்கு கவரேஜ் கொடுப்பதில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ. லொம்பார்ட்

டயாபெட்டிக் கேர் டைப் 2 சர்க்கரை நோய்க்கு பாலிசி தருகிறார்கள். இதில் கால் மற்றும் கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு க்ளைம் தருகிறார்கள். சர்க்கரை நோயைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரீமியத்தைக் குறைக்கவும் செய்கிறார்கள்.

ஸ்டார் ஹெல்த்

டயாபெட்டிக் சேஃப் என்ற இந்த பாலிசியை 26 வயது முதல் 65 வயது வரை எடுத்துக்கொள்ளலாம். இது டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டும்தான். 70 வயது வரை கவரேஜ் கிடைக்கும்.

vikatan.com

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum