Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மொபைல் இன்ஷூரன்ஸ்...கிளைம் கிடைக்குமா?
Page 1 of 1
மொபைல் இன்ஷூரன்ஸ்...கிளைம் கிடைக்குமா?
இன்றைய மாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் வந்துவிட்டது. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்கூட இஎம்ஐ-யில் 20 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள். இப்படி அதிக விலை தந்து வாங்கும் போன் தொலைந்துபோனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய. இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் நமக்குக் கைதரும் என்றாலும், எந்தச் சூழ்நிலையில் நமக்கு கிளைம் கிடைக்கும், செல்போன் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு, கிளைம் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் சேகர் சம்பத்குமாரிடம் கேட்டோம்.
''செல்போன்களுக்கான இன்ஷூரன்ஸ் என்பது இன்று பரவலாக எல்லாப் பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலும் கிடைக்கிறது. இவை வேறுவேறு பெயர்களில் கிடைக்கிறது. விலைமதிப்புமிக்க எலெக்ட்ரானிக் பொருட்களுக்கெனத் தனியாக இன்ஷூரன்ஸ் உள்ளது. அதில் செல்போன்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.
புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிகபட்சம் மூன்று வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்குமேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும்.
செல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும்.
செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்களில் செல்போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும். இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன் தொலைந்து போனால் இத்தனை சதவிகிதம்தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள்.
மேலும், செல்போன் தொலைந்து விட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவை. சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் செல்போன் காணாமல்போன சம்பவத்தைக் காவல் துறை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும், காவல் துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது இருந்தால் போதும் எனக் கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது'' என்றார்.
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒருமுறை புது செல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும் வைத்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே போனை தொலைத்திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவதுதான் இதற்கு காரணம்.
மேலும், செல்போன் தொலைந்து போனால், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம். அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத் தொடர முடியும்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» புகைபிடித்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
» கிளைம் வாங்குவது எப்படி?
» கார் இன்ஸ்சூரன்ஸ் கிளைம் செய்வதில் பிரச்சனையா?? அப்ப இதை படிங்க பாஸ்!!
» எபோலாவுக்கு இழப்பீடு கிடைக்குமா?(ebola)
» மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum