Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.74,000 கோடி வெளியேறியது
Page 1 of 1

ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.74,000 கோடி வெளியேறியுள்ளது.
முதலீடு
கடந்த டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் பொதுமக்கள் ரூ.8.85 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அதேசமயம், ரூ.9.59 லட்சம் கோடி மதிப்பிற்கு முதலீடுகளை விலக்கியுள்ளனர். அதாவது, முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் விலக்கிய தொகை ரூ.74,578 கோடி அதிகமாக உள்ளது. இது, 2013 மார்ச் மாதத்தில் ரூ.1.08 லட்சம் கோடியாக இருந்தது. அதன் பிறகு தற்போதுதான் முதலீடு அதிக அளவிற்கு விலக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு டிசம்பர் மாதத்தில் மிகவும் உயர்ந்தது. இதனையடுத்து அம்மாதத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 379 புள்ளிகள் அதிகரித்தது. எனவே, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் அதிக தொகையை விலக்கியதையடுத்து, நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.
நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு
கடந்த 2013 நவம்பர் மாதத்தில் இந்தியாவிலுள்ள 44 பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.8.90 லட்சம் கோடியாக இருந்தது. இது, டிசம்பர் மாதத்தில் 7.2 சதவீதம் குறைந்து ரூ.8.26 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. நிறுவன பங்குகள், நிதிச் சந்தைகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் அதிக தொகையை விலக்கும்போது நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறைகிறது.
நிபுணர்கள்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் நன்கு தேர்ச்சியும், அனுபவமும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்கின்றன. எனவே, பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சற்று பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் அதிக தொகையை விலக்கியுள்ள நிலையில், முந்தைய அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.1.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, விலக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.1.15 லட்சம் கோடி அதிகமாகும். இதனையடுத்து, சென்ற 2013–ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஈர்த்த நிகர முதலீடு ரூ.32,368 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர்) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஈர்த்த நிகர முதலீடு சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 37 சதவீதம் குறைந்து ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ.76,098 கோடியாக குறைந்துள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் இறக்குமதி குறைந்து வருகிறது. இதன் காரணமாக நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 5,000 கோடி டாலராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது.
சென்ற இரண்டு மாதங்களாக பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பொதுமக்கள் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டில் பரஸ்பர நிதி திட்டங்கள் ஈர்க்கும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Daily Thanthi
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பரஸ்பர நிதி நிறுவனங்களில் மாற்றம் வருவது தவிர்க்க முடியாதது
» லாபம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள் - சொக்கலிங்கம் பழனியப்பன்
» பரஸ்பர நிதித் திட்டங்களில் குழும நிறுவனங்களின் முதலீடு: விவரம் வெளியிட பரிந்துரை
» நிதி ஆவணங்கள்: பாதுகாத்தால்தான் பலன்!
» 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது கச்சா எண்ணெய் விலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum