Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கிளைம் வாங்குவது எப்படி?
Page 1 of 1
கிளைம் வாங்குவது எப்படி?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் நோக்கமே, அவசர காலத்தில், பிரச்னை இல்லாமல் சிகிச்சை பெறுவதற்குதான். ஆனால், சிலர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தும், எப்படி சிகிச்சை பெறுவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இன்னும் சிலர், சிகிச்சை எடுக்கும்போது அந்த விதிமுறைகளை தெரிந்துகொள்ளலாம் என்று அசட்டையாக இருக்கிறார்கள். ஆனால், நோயும் விபத்தும் சொல்லிவிட்டு வருவதில்லை! திடீரென வரும்போது, கிளைம் வாங்க முடியாமல் பலரும் தடுமாறிவிடுகிறார்கள். எனவே, பிரச்னை ஏதும் இல்லாமல் கிளைம் வாங்குவது எப்படி என்பதை இப்போதாவது தெரிந்துகொள்வோம்.
கிளைம்களில் இரண்டு வகை இருக்கிறது. முதலாவது, கேஷ்லெஸ் சிகிச்சை; இரண்டாவது, ரீஇம்பர்ஸ்மென்ட் (க்ஷீமீவீனீதீuக்ஷீsமீனீமீஸீt); அதாவது, சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு, அதன்பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் பில்களைக் கொடுத்து அதற்கான பணத்தை கிளைமாகப் பெறுவது.
கேஷ்லெஸ் கிளைம்:
சாதாரணமாக, ஒருவர் திட்டமிட்டு மருத்துவமனைக்கு போகலாம். உதாரணமாக, கண் அறுவை சிகிச்சையை நாம் நன்றாக திட்டமிட்டுக் கொள்ளலாம். ஆனால், மாரடைப்பு போன்ற நோய்கள் திடீரென வருவதால் அவற்றுக்கான சிகிச்சையை நாம் திடீரென மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தவிர, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். அப்படிப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, பெரும்பாலும் எந்தவிதமான கட்டணமும் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்துவிட முடியும். திட்டமிட்டு சிகிச்சைக்குச் செல்லும்போது இதுபோன்ற நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்லலாம்.
ஆனால், எதிர்பாராதவிதமாக சிகிச்சைக்குச் செல்லும்பட்சத்தில், அருகில் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனை போனால் பிரச்னை இல்லை. கேஷ்லெஸ் முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பிரச்னை இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியே வரலாம். நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனை அருகில் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்!
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்!
அவசரக் காலத்தில் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டும் கிளைம் வாங்கிக்கொள்ளலாம். பிரச்னை ஏதும் இல்லை. சிகிச்சைக்கான அனைத்து பில்கள், மருத்துவச் சான்றிதழ்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு ஆகியவற்றை இணைத்துத் தரும்பட்சத்தில் எளிதாக கிளைம் கிடைத்துவிடும்.
யாரிடம் கொடுப்பது?
சரி, அனைத்து பில்களும் நம்மிடம் சரியாக இருக்கிறது. இந்த பில்லை யாரிடம் கொடுப்பது? பாலிசி எடுத்தது இன்ஷூரன்ஸ் நிறுவனம்தான். இதுபோன்ற கிளைம்களை செட்டில் செய்வதற்காகவே 'தேர்டு பார்டி அட்மினிஸ்ட்ரேட்டர்கள்’ (டி.பி.ஏ.) இருக்கின்றன. இவர்களின் வேலை, பாலிசிதாரர்கள், மருத்துவமனைகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதுதான். பாலிசி ஆவணத்திலேயே யாரிடம் தொடர்புகொள்வது என்ற எண் இருக்கும். அந்த எண்ணுடன் தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தபிறகு 15 முதல் 21 நாட்களில் கிளைம் கிடைக்கலாம்.
அதற்காக கிளைம் வாங்கும்போது ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும் என்று நினைக்க வேண்டாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனே எவ்வளவு சீக்கிரம் டி.பி.ஏ.களிடம் சொல்லிவிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது. இதை பாலிசிதாரர்தான் சொல்ல வேண்டும். சிகிச்சை எடுத்து முடித்தபிறகு சொன்னால், உங்கள் கிளைம் நிராகரிக்கப்படலாம்.
சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிளைம் தரும் வேலையைத் தாங்களாகவே செய்வதால், அங்கு 'தேர்டு பாலிசி அட்மினிஸ்ட்ரேட்டர்கள்’ இருக்க மாட்டார்கள். அப்போது நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையே தொடர்புகொள்ள வேண்டியதுதான்.
விதிவிலக்குகள்?
கேஷ்லெஸ் சிகிச்சையாக இருந்தாலும் சரி, ரீஇம்பர்ஸ்மென்ட் சிகிச்சையாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கிளைம் வாங்க முடியாது. குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கிளைம் வாங்க முடியும். (கண் சிகிச்சை உள்ளிட்ட மிக சில நோய்களுக்கு மட்டும்
24 மணி நேரம் தேவை இல்லை). கிளினிக்குகளில் எடுக்கப்படும் சிகிச்சைக்கு கிளைம் கிடைக்காது. குறிப்பிட்ட அளவு படுக்கைகள் இருந்தால் மட்டுமே அதை மருத்துவமனை என்று சொல்கிறார்கள். மேலும், நாம் எடுத்திருக்கும் பாலிசி அளவைப் பொறுத்துதான் ஆம்புலன்ஸ் சேவை, ரூம் வாடகை உள்ளிட்ட செலவுகள் கொடுக்கப்படும்.
அதேபோல ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கிளைம் வாங்க முடியாது. பாலிசி எடுத்து குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வருடங்கள் முடிந்தபிறகுதான் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கிளைம் வாங்க முடியும். அதனால் தொடர்ந்து பாலிசியைப் புதுப்பிப்பது மிக அவசியம். ஒருவேளை தொடர்ந்து புதுப்பிக்கத் தவறினால் காத்திருக்கும் காலம் இன்னும் ஒரு நான்கு வருடம் அதிகரிக்கும்.
ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், கிளைம் வாங்கும்போது ஏதாவது ஒரு பாலிசியை வைத்து கிளைம் வாங்கிக்கொள்ளலாம். அந்த தொகை முடிவடையும்பட்சத்தில் அடுத்த பாலிசியை வைத்து கிளைம் பெறலாம்.
- வா.கார்த்திகேயன்
வீட்டில் சிகிச்சை... இழப்பீடு உண்டு!
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால்தான் மெடிக்ளைம் பாலிசியில் இழப்பீடு பெற முடியும் என பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் அதற்கான பணத்தை கிளைம் செய்ய முடியும் என்கிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீடு ஆலோசகர் ரவி.
''நோயாளியால் இருந்த இடத்தைவிட்டு நகர முடியாது. சிகிச்சையை வீட்டில் வைத்துதான் தரமுடியும் என்கிற நிலையில், மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாத சமயங்களில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். நோயாளியால் வீட்டில் இருந்துதான் சிகிச்சை பெற முடியும் என்று மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மருத்துவர் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கிறார் என்பதற்கும் சான்றிதழ் இருக்க வேண்டும். சாதாரணமாக மெடிக்ளைம் பெற 24 மணி நேரம்
மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயம். ஆனால், வீடு என்கிறபோது குறைந்தது மூன்று நாட்களாவது சிகிச்சை நடந்திருக்க வேண்டும்'' என்றார்.
நல்ல வளர்ச்சிதான்!
- இரா.ரூபாவதி
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மொபைல் இன்ஷூரன்ஸ்...கிளைம் கிடைக்குமா?
» சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்!
» பழைய கார் வாங்குவது லாபமா? எதை வாங்கலாம்?
» கார் இன்ஸ்சூரன்ஸ் கிளைம் செய்வதில் பிரச்சனையா?? அப்ப இதை படிங்க பாஸ்!!
» ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவது அதிகரிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum