வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


எஸ்.எம்.இ. லோன் (S.M.E LOAN)- தகுதி இருந்தால் நிச்சயம் கிடைக்கும்!

Go down

எஸ்.எம்.இ. லோன் (S.M.E LOAN)- தகுதி இருந்தால் நிச்சயம் கிடைக்கும்! Empty எஸ்.எம்.இ. லோன் (S.M.E LOAN)- தகுதி இருந்தால் நிச்சயம் கிடைக்கும்!

Post by தருண் Tue Jan 28, 2014 3:47 pm


'
'நான் ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், லோன் கிடைக்குமா?''


-இப்படி ஒரு கேள்வியோடு வங்கிக்குப் போய் விட்டு, வாடி வதங்கித் திரும்புபவர்கள் ஏராளம். கடன் கொடுக்கத்தான் வங்கிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் பிறகு ஏன் தொழில் துவங்க நிதி கேட்டுச் சென்றால் பலருக்கு கிடைக்காமல் போய்விடுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொள்ளாச்சி கிளை மேலாளர் பிரபாகரனிடம் கேட்டோம்...

ஏதாவது ஒரு தொழில் ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லி கடன் கேட்டால் யாரும் தரமாட் டார்கள். முதலில் என்ன தொழில் செய்யப்போகிறீர்கள் என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும். அந்தத் தொழிலில் உங்களுக்கு ஓரளவுக்காவது அனுபவம் இருக்க வேண்டும். அடுத்து நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கு என்ன வரவேற்பு இருக்கிறது, அதற்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறதா, நீங்கள் இருக்கும் ஊரில் அந்தத் தொழிலைச் செய்ய முடியுமா? பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்ப்போம். உதாரணமாக பொள்ளாச்சியில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லி கடன் கேட்டால் எப்படிக் கிடைக்கும்?

தொழிலைப் பற்றி மட்டுமல்ல இதற்கடுத்து, லோனை கேட்டு வருகிறவர் பற்றியும் வங்கி அதிகாரிகள் விசாரிப்பார்கள். வந்திருப்பவர் சரியான நபர்தான்; வங்கியை ஏமாற்றும் எண்ணம் அவருக்கில்லை என்பது உறுதியானால் மட்டுமே அவருக்குக் கடன் கொடுப்பார்கள். இறுதியாக, ஏதாவது வங்கியில் லோன் எடுத்துக் கட்டாமல் இருக்கிறரா என்பதையும் சிபில் ரிப்போர்ட் மூலம் தெரிந்து கொள்வார்கள். இதெல்லாம் ஓகே என்றால், அடுத்து உங்களிடம் செக்யூரிட்டியாக நிலமோ, வீடோ இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

செக்யூரிட்டி இல்லாத பட்சத்தில் நல்ல திட்டமாக இருந்தால் சி.ஜி.டி.எம்.எஸ்.இ. (credit gaurantee fund trust for micro and small enterprise) அமைப்பிடம் உறுதி பெற்று லோன் வழங்கப்படும். இது தொழிற்கடன்களுக்கான இன்ஷூரன்ஸ் போன்றது. தொழிற்கடன் பெறு பவர் ஏமாற்றிவிட்டாலோ, திட்டம் தோல்வி அடைந்து கொடுத்த பணம் திரும்ப வராமல் போகும்போதோ சி.ஜி.டி.எம்.எஸ்.இ. கடன் தொகையில் 75 சதவிகிததத்தை வங்கிக்குக் கொடுத்து, இழப்பின் பகுதியை ஈடுகட்டும். இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை தொழில் கடன் பெறுபவரிடம் வங்கி வாங்கிக் கொள்ளும்'' என்றார்.இதையெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டு மீண்டும் போய்க் கேட்டுப் பாருங்கள், லோன் உங்களைத் தேடி வரும்!

-செ.திருக்குறள் அரசி,




தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum