வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பெர்சனல் லோன் உஷார்! விழிப்பு உணர்வு

Go down

பெர்சனல் லோன் உஷார்! விழிப்பு உணர்வு Empty பெர்சனல் லோன் உஷார்! விழிப்பு உணர்வு

Post by தருண் Sun Dec 29, 2013 5:31 pm

பெர்சனல் லோன் உஷார்! விழிப்பு உணர்வு P26

சமீப காலமாக பலருக்கும் ஒரு போன் வருகிறது. ''சார், 15 லட்ச ரூபாய் வரை எந்த ஜாமீனும் இல்லாம பெர்சனல் லோன் குடுக்கத் தயார். உங்களுக்கு கடன் வேணுமா சார்?'' என்று கெஞ்சிக் கேட்கிறார்கள். சாதாரணமாக 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கிக்குப் போனாலே கொடுக்காதவர்கள், இப்போது 15 லட்ச ரூபாய் வரை, அதிலும் எந்த ஜாமீனும் இல்லாமல் தரத் தயார் என்கிறார்களே! என்ன ஆச்சு வங்கிகளுக்கு என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.


''வங்கிகள், அதிலும் புதிய தலைமுறை வங்கிகள், இது மாதிரியான பெர்சனல் லோன்களுக்கு அதிக வட்டி விதிப்பதால், பலரும் இந்த கடனை வாங்கவே தயங்குகிறார்கள். குறிப்பிட்ட அளவு கடன் தரவில்லை என்றால் வங்கி களின் வருமானம் உயராது. அதனால்தான் வங்கிகளே கூப்பிட்டு கடன் கொடுக்கத் தயாராகிவிட்டன'' என்றார் வங்கி நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்துவரும் நிதி ஆலோசகர் ஒருவர்.

வங்கிகள் கடன் கொடுக்கத் தயார் என்று வரும்போது வாங்கித்தான் பார்ப்போமே என்கிற ஆசை எல்லோருக்குமே வரும். ஆனால், எதுவும் யோசிக்காமல் வாங்கினால், பிற்பாடு அதுவே நம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக மாறிவிடும். பின்வரும் விஷயங் களை கொஞ்சம் கவனித்தால், இந்த கடனை வாங்கலாமா, வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்யலாம்.

வட்டியைக் கவனியுங்க..!

இந்தக் கடனுக்கு பொதுவாக 14 முதல் 22% வட்டி வசூலிக்கப்படுகிறது. பெர்சனல் லோன் வாங்க இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் மட்டும் கொடுத்தால் போதும், ஓரிரு நாட்களில் கடன் கிடைத்துவிடும். பெர்சனல் லோனில் பலரும் ஏமாறுவது, வட்டி கணக்கிடும் முறையில்தான். ஃபிளாட் வட்டியா? (திறீணீt ஸிணீtமீ) அல்லது கடனை கட்டக் கட்ட குறையும் வட்டியா? என்பதைக் கட்டாயமாக கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும்.

உதாரணத்துக்கு, ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டு களில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி எனில் மாதத் தவணையாக 4,025 ரூபாய் கட்ட வேண்டும். அந்த வகை யில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் 45,000 கட்ட வேண்டி இருக்கும்.

இதுவே கடன் தொகை குறையக் குறைய வட்டி கணக்கிடும் முறை எனில், கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். இந்த முறையில் மாதத் தவணையாக 3,475 ரூபாய் கட்டினால் போதும். இந்த முறையில் மொத்தம் 24,800 ரூபாய் மட்டுமே கட்டினால் போதும். அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,200 ரூபாய் குறைவாக இருக்கும்.

முன்கூட்டி அடைக்கலாமா?

பெர்சனல் லோனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் ஒப்புக்கொள்வதில்லை. இடை யில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் போடுவார் கள் வங்கி அதிகாரிகள். இது பாக்கி இருக்கும் கடன் தொகையில் சுமார் 3-5% ஆக இருக்கும். ஒரு சில வங்கிகள் பாக்கி கடனில் 20-25% வரை அபராதமாக விதிக்கின்றன என்பது அதிர்ச்சித் தகவல்.

மிகச் சில வங்கிகள் 6 முதல் 12 மாதங்களுக்குப் பிறகு கடனை மொத்தமாக அடைக்க ஒப்புக்கொள்கின்றன. கடனை மொத்தமாக அடைப்பதற்கான நிபந்தனைகள் லோன் அக்ரிமென்டில் குறிப்பிடப் பட்டு இருக்கும். அதை தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.

கடைசி வாய்ப்பு..!

பெர்சனல் லோன் என்பது மிக அவசரச் செலவுக்காக வாங்குவது. வட்டி விகிதத்தைப் பார்த்தால், இதைவிட அதிக வட்டி, கிரெடிட் கார்டு கடனுக்குதான் (ஆண்டுக்கு 35-40%). அந்த வகையில், கிரெடிட் கார்டு கடன் வாங்குவதற்குப் பதில் இதனை வாங்கலாம். அதே நேரத்தில், வீட்டு அடமானக் கடன் (12.5 -15%), தங்க நகை அடமானக் கடன் (வங்கிகள் 11-14%), இன்ஷூரன்ஸ் பாலிசி மீதான கடன் (10-13%), நிதி ஆவணங்கள் மீதான கடன் (12-14%) போன்ற கடன்கள், பெர்சனல் கடனைவிட குறை வான வட்டியில் கிடைக் கின்றன. அவசரச் செலவு ஏதாவது வந்தால் இந்த வகை கடன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, அதிக வட்டி கட்ட வேண்டிய பெர்சனல் லோன் வாங்கத் தேவையில்லை.

வீடு தேடி வந்து தருகிறார் கள் என்பதற்காக விஷத்தை சாப்பிட முடியாது என்கிற மாதிரி, தேடி வந்து தருகிறார்கள் என்பதற்காக பெர்சனல் லோன் வாங்க வேண்டிய அவசியமில்லை!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum