வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்!

Go down

சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்! Empty சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்!

Post by தருண் Thu Nov 17, 2016 10:22 am

நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு. ஆனால், வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் ஒருவரால் மொத்தமாகப் புரட்டுவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. வேறு என்னதான் செய்வது..? கவலையேபடத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இஎம்ஐ.

சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்! P58

Posted Date : 06:00 (06/11/2016)
சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்!

சேனா சரவணன்
நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு. ஆனால், வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் ஒருவரால் மொத்தமாகப் புரட்டுவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. வேறு என்னதான் செய்வது..? கவலையேபடத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இஎம்ஐ.



பெரிய கனவுகளை எல்லாம் மாதத் தவணை திட்டங்கள் மூலம்தான் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிறிது சிறிதாக பணம் சேர்த்து வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மிரட்டுவதாக இருக்கிறது. வீட்டு வாடகையும் அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இஎம்ஐ-தானே ஒரே வழி. நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம்...

சென்னை கூடுவாஞ்சேரியில் 600 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கிறது. மாதச் சம்பளம் ரூ.40,000 வாங்கும் ஒருவரால் எப்படி இவ்வளவு தொகையைப் புரட்டி அந்த வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடியும்.

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே சுலப வழி. ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, கையில் இருக்கும் சேமிப்பு ரூ.5 லட்சம் போக, மீதி ரூ.20 லட்சத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் 10% என்கிறபோது, மாதத் தவணை18,200 ரூபாய்தான். ரூ.40,000 சம்பளம் வாங்கும் ஒருவரால் இந்தத் தொகையைக் கட்டுவது ஒன்றும் கஷ்டமில்லை.

வாடகை கொடுக்கும் தொகையைவிட கொஞ்சம்தான் அதிகம். சொத்தும் சொந்தமாகும்; வாடகை வீட்டு நச்சரிப்புகளில் இருந்தும் விடுதலை. அதனால், உங்கள் கனவுகளின் பின்னால் ஓடாதீர்கள். அவற்றை நனவாக்க இஎம்ஐ செலுத் துங்கள். கொஞ்சம் யோசனை செய்தால் சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்!
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum