வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இன்றைய பங்கு சந்தை நிலவரம்

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Thu Dec 19, 2013 3:50 pm

First topic message reminder :

வியாழக்கிழமை, நவம்பர் 18

மும்பை பங்கு சந்தை 65.50 புள்ளிகள் அதிகரித்து 19934.64 ஆக காணப்பட்டது. தேசிய பங்கு சந்தை நிப்டி 10.10 புள்ளிகள் அதிகரித்து 5998.80 ஆக காணப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:-

24 கேரட் தங்கத்தின் விலை 2010 ரூபாய், 22 கேரட் தங்கத்தின் விலை 1869 ரூபாய் வெள்ளி விலை கிராம் 1க்கு ரூ 43.20 பைசா வெள்ளி கிலோ ரூ 40360.00 ஆக காணப்பட்டது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down


இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Nov 19, 2014 2:52 pm

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம்

இன்று காலை வர்த்தக துவக்கத்தின்போது பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.72 புள்ளிகள் உயர்ந்து 28,294.01 என்ற நிலையில் இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 8,455.65 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Nov 25, 2014 9:52 am

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம்

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை அடைந்தது.

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 180.35 புள்ளிகள் உயர்ந்து 28,514.98 என்ற நிலையில் இருந்தது. நிப்டியும் முதல் முறையாக 8,500 புள்ளிகளாக இருந்தது.

இதேபோல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. காலை வர்த்தக துவக்கத்தின்போது, அந்நிய செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் அதிகரித்து 61.68 என்ற நிலையில் இருந்தது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Dec 11, 2014 2:33 pm


28000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது சென்செக்ஸ்

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமை யாக சரிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 28000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. 27797 புள்ளியில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல நிப்டியும் 97 புள்ளிகள் சரிந்து 8341 புள்ளியில் முடிவடைந்தது.

காரணம் என்ன?

பங்குச்சந்தைகள் சரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டாம் காலாண்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவின் காம்போசிட் இண்டெக்ஸ் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் சரிவது இப்போதுதான். இதனால் ஹாங்செங் குறியீடும் 2.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. மேலும் முதலீட்டாளர்களின் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்தாலும் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.

துறைவாரியான நிலவரம்

அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன.குறிப்பாக மின்சாரம், உலோகம், கட்டுமானம் மற்றும் பொதுத்துறை குறியீடு அதிகமாக சரிந்தது. அதிகபட்சமாக மின் துறை குறியீடு 2.75 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. மேலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, எம் அண்ட் எம் மற்றும் டிசிஎஸ் பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிவடைந்தன. ஓ.என்.ஜி.சி. பங்கு கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து முடிந்தது. மெக்யாரெ நிறுவனம் இந்த பங்குக்கான இலக்கு விலையை குறைத்து பரிந்துரை செய்ததால் 4 சதவீத அளவு இந்த பங்கு சரிந்தது.

திங்கள் கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 4,984 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள்.

கச்சா எண்ணெய் நிலவரம்

பிரென்ட் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து ஒரு பீப்பாய் 66 டாலர் அளவுக்கு சரிந்தது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 43 சதவீதம் அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் சரிந்தது.
-- தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Mar 04, 2015 9:57 am

சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டியது; நிப்டியும் புதிய உச்சம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Sensex_2330043f

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 30,000 புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது. தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் நிப்டியும் புதிய உச்சத்தைத் தொட்டது.

இன்றைய வர்த்தக துவக்கத்தில், சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 29,937.27 என்ற நிலையில் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 91 புள்ளிகள் மேல் உயர்ந்து 9,000 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, சென்செக்ஸ் 30,025 புள்ளிகள் என்ற புதிய வரலாற்றையும், நிப்டி 9,119 என்ற புதிய உச்சத்தையும் எட்டிப் பிடித்தன.

இந்திய பங்குவர்த்தகம் புதிய உச்சத்தை எட்டுவதற்கு, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட ரெபோ 0.25% குறைப்பு தொடர்பான அறிவிப்பே முக்கியக் காரணம்.

ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இது, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் தாக்கம் பங்குச்சந்தை துவக்கத்திலேயே எதிரொலித்தது.

அனைத்து துறை பங்குகள் பரிவர்த்தனையும் ஏற்றம் கண்டன. குறிப்பாக வங்கி, முதலீட்டு துறை, ஆட்டோமொபைல் துறை பங்குகள் பரிவர்த்தனை குறிப்பிடத்தகும்படி இருந்தன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) 9,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை முதல் முறையாக எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Mar 11, 2015 3:57 pm

பங்குச் சந்தையில் தொடரும் சரிவு

இரண்டாவது நாளாக தொடந்து இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 135 புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 44 புள்ளிகள் சரிந்தது.

முக்கிய சென்செக்ஸ் பங்குகள் 135 சதவீதம் சரிந்து 28709 என்கிற புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. நேற்றைய நிப்டி வர்த்தகம் 8712 புள்ளிகளின் நிலை கொண்டுள்ளது.

சர்வதேச அளவிலும் நேற்று சந்தை இறக்கமாகவே இருந்தது. சீனாவின் பணவீக்க விவரத்தை பொறுத்து சந்தையின் போக்கு மாறலாம் என தெரிகிறது. சீனாவின் பற்றாக்குறை பணவீக்க விகிதத்தை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆசியாவின் முக்கிய பங்கு சந்தைகளான நிக்கி, ஹாங்காங் அண்ட் ஷாங்காய் சந்தைகள் 0.5 முதல் 1 சதவீதம் வரை நேற்று சரிந்தது. ஐரோப்பிய சந்தைகளும் 0.6 சதவீதம் வரை சரிந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகளின் நேற்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி பங்குகள் 4.9 சதவீதம் வரை சரிவைக் கண்டது. தவிர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் மற்றும் டாடா பவர் பங்குகளும் சரிவைக் கண்டன.

பார்தி ஏர்டெல் 7.13 சதவீதம் வரை ஏற்றம் சந்தித்தது. கோல் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, லுபின் நிறுவனப் பங்குகளும் ஏற்றத்தைச் சந்தித்தன.

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் பங்குகள் நேற்று ரூ 30 வரை சரிந்தது. இந்த நிறுவனம் பெல்ஜியம் யூசிபி நிறுவனத்தின் இந்திய பிரிவை 135 மில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது என்கிற உறுதிபடுத்தப்படாத தகவலை அடுத்து இதன் பங்குகள் சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அடிப்படைப் பொருட்கள், வங்கி, எண்ணெய் மற்றும் காஸ், ஹெல்த்கேர் துறை பங்குகள் சரிந்தன. ஆட்டோமொபைல், உலோகம், தொழில்நுட்ப துறைையச் சேர்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன.

இதற்கிடையே நிதியாண்டின் இறுதி காலகட்டம் காரணமாகவும் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திப்பதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri Apr 17, 2015 10:17 am

பங்குச் சந்தையில் சரிவு

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Karadi_2295959f

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 28664 புள்ளிகளில் நிலைகொண் டுள்ளது.

தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 43 புள்ளிகள் சரிந்து 8706 புள்ளிகள் முடிந்துள்ளது.

எப்எம்சிஜி, ஹெல்த்கேர், கேபிடல் கூட்ஸ் துறை பங்குகள் சரிந்தன. எண்ணெய் நிறுவனப் பங்குகள் இந்த ஆண்டின் உச்ச அளவைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக ஓஎன்ஜிசி, கெய்ர்ன் இந்தியா நிறுவன பங்குகள் 3 - 4 சதவீதம் வரை ஏற்றத்தை கண்டுள்ளது.

ஹூரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் 3.74 சதவீதம் வரை சரிந்தது. சர்வதேச சந்தை களிலும் நேற்று ஏற்ற இறக்கமான நிலைமையே நீடித்தது.
---தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Apr 21, 2015 10:36 am

பங்குச் சந்தையில் 555 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தை நேற்று கடுமையான சரிவைக் கண்டது. கடந்த வார சரிவிலிருந்து சந்தை மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 555 புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 157 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. கடந்த மூன்று வாரங்களில் சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இதுவாகும்.

அந்நிய முதலீடு வெளியே எடுக்கபட்டதன் காரணமாக ஒரே நாளில் சந்தை 500 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து குறைந்தபட்ச மாற்றுவரியாக 40 ஆயிரம் கோடி வசூலிப்பது தொடர்பான விவகாரம் காரணமாக சந்தை சரிந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்எம்சிஜி, ஐடி, மின்சாரம், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் கடுமையாக சரிந்தன. சென்செக்ஸ் பங்குகளாக என்எம்டிசி உச்சபட்சமாக 5.09 சதவீதம் சரிந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 4.45 சதவீதம் சரிந்தன. இந்த பங்குகள் நேற்று மட்டும் ரூ. 41.20 வரை விலை குறைந்து வர்த்தகம் ஆனது. முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎப்சி, ஐடிசி, இன்போசிஸ், டிசிஸ், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகளின் விலையும் சரிவடைந்தன.

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Karadi_2354792f

சந்தையின் சரிவான வர்த்தக போக்கிலும் சன் பார்மா, பேங்க் ஆப் பரோடா, லுபின் நிறுவன பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.

ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே அந்நிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஏப்ரல் 16 வரை இந்திய பங்குகளில் அந்நிய முதலீடு 3000 கோடிக்கும் குறைவாகவே உள்ளது என செபி புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன.

இதற்கிடையே நடப்பு பிரச்சினையாக அந்நிய முதலீட்டா ளர்களிடமிருந்து குறைந்தபட்ச மாற்று வரி வசூலிக்க வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நிய முதலீட்டா ளர்கள் வெளியேறுவது நேற்று அதிகரித்துள்ளது என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களில் சீன பங்குகள் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச முதலீட்டா ளர்கள் இதை கவனித்து வருகின் றனர் என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். சீன மத்திய வங்கி, வங்கிகளின் ரிசர்வ் தொகையில் 100 புள்ளிகள் குறைத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கான சமிக்கை யாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஆசிய சந்தைகளைப் பொறுத்த வரை ஏற்ற இறக்கமான வர்த்தக நிலைமை நீடித்தது.

ஜப்பானின் நிக்கி 0.1 சதவீதம் சரிவாக வர்த்தகம் கண்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Jun 11, 2015 2:31 pm

7 நாள் சரிவுக்கு பின்பு பங்குச் சந்தை ஏற்றம்

ஏழு நாள் தொடர் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தையில் நேற்று ஏற்றம் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 8124 புள்ளியில் முடிந்தது. 8100 என்ற முக்கியமான புள்ளிக்கு மேலே நிப்டி உயர்ந்தது.

அதேபோல சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்து 26840 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1.1 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தன. வங்கி, டெக்னாலஜி, ஆட்டோ ஆகிய குறியீடுகளின் ஏற்றம் காரணமாக பங்குச் சந்தை உயர்ந்து முடிந்தது. அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 29 பங்குகள் உயர்ந்து முடிந்தன. ஐடி, ஆட்டோ, கேபிடல் குட்ஸ் ஆகிய குறியீடுகள் 2 சதவீதம் உயர்ந்தன.

சர்க்கரை பங்குகள் உயர்வு

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகைய கொடுப்பதற்கு சர்க்கரை நிறுவனங்களுக்கு 6,000 கோடி ரூபாயை வட்டி இல்லாத கடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் சர்க்கரை பங்குகள் உயர்ந்து முடிந்தன.

சக்தி சுகர்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான், பல்ராம்பூர் சின்னி மில்ஸ்,  ரேணுகா சுகர்ஸ் உள்ளிட்ட சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 6 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்தன.

பிவிஆர் பங்கு 4% சரிவு

பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் டிஎல்எப் நிறுவனத்தின் டிடி சினிமா நிறுவனத்தை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் நேற்றைய வர்த்தகத்தின் இடையில் 5.53 சதவீதம் அளவுக்கு பிவிஆர் சினிமாஸ் பங்கு உயர்ந்தன. ஆனால் முதலீட்டாளர்களிடையே லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்ததால் வர்த்தகத்தின் முடிவில் 3.68 சதவீதம் சரிந்து முடிந்தது.

செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 645 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றார்கள்.

யெஸ் வங்கியில் எல்ஐசி முதலீடு உயர்வு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யெஸ் வங்கியில் கூடுதலாக 2 சதவீத் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது. கடந்த 22 மாதங்களில் யெஸ் வங்கியின் 83.94 லட்சம் பங்குகளை எல்ஐசி வாங்கி இருக்கிறது. தற்போதைய சந்தை மதிப்பில் இந்த பங்குகளின் மதிப்பு 698 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 2009 ஆகஸ்ட் முதல் ஜூன் 8, 2015 வரையிலான காலகட்டத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக இந்த வங்கியில் எல்ஐசி 6.31 சதவீத பங்குகளை வைத்திருந்தது. தற்போது 8.36 சதவீத அளவுக்கு எல்ஐசியின் முதலீடு உயர்ந்திருக்கிறது.
---தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Jul 23, 2015 4:08 pm

சென்செக்ஸ் 322 புள்ளிகள் ஏற்றம்: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமான வர்த்தக சூழல் நிலவியது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 322 புள்ளிகள் உயர்ந்து 28504 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 104 புள்ளிகள் உயர்ந்து 8633 புள்ளிகளில் முடிந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் சந்தித்த அதிகபட்ச உயர்வு இது என்று முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள், வங்கிப் பங்குகள் நேற்றைய ஏற்றத்தில் அதிக லாபத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 1.3 சதவீதம் ஏற்றம் கண்டது. ஸ்மால் கேப் பங்குகள் 0.90 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.26 சதவீதம் உயர்ந்தது. நேற்று மட்டும் இந்த பங்குகள் ரூ. 43 லாபம் கண்டு ரூ.1050.55 க்கு வர்த்தகம் முடிந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக மந்த நிலையில் இருந்த இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளது என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடு வரவு அதிகரித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை சரிவு பங்குச் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளதாக குறிப் பிட்டனர்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றத்துக்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் 5.18%, ரிலையன்ஸ் 4.23%, சன் பார்மா 3.64%, எம் அண்ட் எம் 3.36%, ஆசியன் பெயிண்ட்ஸ் 3.34% பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.

லுபின் -3.25 %, ஐடியா செல்லுலார் -1.73%, பார்தி ஏர்டெல் -1.31%, டிசிஸ் -1.30%, இன்போசிஸ் -0.85.% ஆகிய பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1763 பங்குகள் ஏற்றத்தையும், 1059 பங்குகள் நஷ்டத்தையும் கண்டன.

செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 226 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 0.18 சதவீதம் சரிந்து 63.59 ஆக உள்ளது. அடுத்த வாரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் வட்டி உயரக்கூடும் என்று எதிர்பார்ப்பதால் டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது.

டாலர் மதிப்பு அதிகரித் துள்ளதால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கள் 1,100 டாலருக்கு கீழே சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Jul 29, 2015 9:40 am

பங்குச் சந்தை 4 வது நாளாக சரிவு: கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவான வர்த்தகத்தைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 102 புள்ளிகள் சரிந்து 27459 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 24 புள்ளிகள் குறைந்து 8337 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற முக்கியப் பங்குகள் சரிவை கண்டன. நேற்றைய வர்த்தக நேரத்தில் சந்தையில் ஏற்ற இறக்கமான நிலைமை காணப்பட்டது. நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் பங்கு வர்த்தகம் நடந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையில் சந்தை உச்சபட்சமாக 27676 புள்ளிகள் வரை சென்றது. குறைந்தபட்சமாக 27416 புள்ளிகள் வரை சரிந்து காணப்பட்டது.

ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நேற்று அதிக சரிவை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் ரியாலிட்டி குறியீடு 2.72 சதவீதம் சரிந்தது. இந்த துறையின் முக்கிய பங்குகளான டிஎல்எப், ஹெச்டிஐஎல், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன.

வங்கித்துறை குறியீடான பேங்க் நிப்டி 0.4 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதன் காரணமாக இந்த துறையின் குறிப்பிட்ட சில பங்குகள் லாபமாக வர்த்தகம் ஆனது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 4.96 சதவீதம் லாபம் கண்டது. கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி பங்குகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

இதற்கிடையே சந்தையின் இந்த சரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், பார்ச்சிபேட்டரி நோட் (பி நோட்) குறித்து முதலீட்டாளர்களுக்கு அரசு கொடுத்துள்ள நம்பிக்கை சந்தையின் சரிவை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த ஏற்ற இறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தால் அது அனைத்து சொத்து மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரங்களை பொறுத்தவரை ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன. ஆசிய சந்தைகளில் சீனாவின் ஷாங்காய் சந்தை 1.71 சதவீதம் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சீன பங்கு சந்தையின் சரிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையும் சரிவில் முடிந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிந்துள்ளது. சீன பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு காரணமாக கச்சா எண்ணெட் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் பயன்பாட்டில் சீனா முக்கிய இடத்தில் உள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 52.72 டாலராக உள்ளது, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் 52.28 டாலருக்கு வர்த்தகமானது. மார்ச் மாதம் முதல் உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் இப்போது சரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் பேரல்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Aug 05, 2015 8:41 am

தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகள் உயர்வு: வங்கி பங்குகள் விலை ஏற்றம்

தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்றும் உயர்ந்தன. சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்ந்து 28187 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 8543 புள்ளியில் முடிவடைந்தது. இதேபோல மிட்கேப் குறியீடு 0.5 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது.

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, வங்கிகளின் கடன் நிலைமை மேம்பட்டு வருவது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. மேலும் இன்று ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது, பருவமழை பற்றாக்குறை குறைந்திருப்பது ஆகிய காரணங்களாலும் பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டீஸ், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், இமாமி, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் அமரராஜா பேட்டரீஸ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேற்று தங்களது 52 வார உச்சத்தை தொட்டன.

துறைவாரியாக பார்க்கும் போது வட்டி விகிதங்களால் மாற்றங்கள் உண்டாகும் வங்கி, ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. வங்கி குறியீடு 1 சதவீதமும், ஆட்டோ குறியீடு 0.7 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் நல்ல ஏற்றத்தை சந்தித்தன. இந்தியன் வங்கி 9%, கனரா வங்கி 5.56%, பேங்க் ஆப் பரோடா 4%, பஞ்சாப் நேஷனல் வங்கி 2.78% மற்றும் எஸ்பிஐ 3.94 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. அதேபோல ஐசிஐசிஐ வங்கி 3.40 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

சன் டிவி பங்கு உயர்வு

கடந்த எட்டு வர்த்தக தினங்களில் மட்டும் சன் டிவி பங்கு 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு கள் வெள்ளிக்கிழமை வெளி யானது. நிறுவனத்தின் நிகரலாபம் 19 சதவீதம் உயர்ந்ததை அடுத்து நேற்று இந்த பங்கு 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

தங்கம் விலை குறையும்

தங்கத்தின் விலை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருந்த நிலையில் மேலும் விலை குறையும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1090 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் விரைவில் 1,000 டாலருக்கு கீழே ஒரு அவுன்ஸ் தங்கம் செல்லும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. அமெரிக்க பொருளாதார சூழல் மேம்பட்டு வருதற்கான தகவல் வந்து கொண்டிருப்பதால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை விரைவில் உயர்த்தும் என்றும் இதனால் தங்கம் சரியும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.

கடந்த எட்டு வர்த்தக தினங்களில் மட்டும் சன் டிவி பங்கு 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Aug 18, 2016 2:33 pm

அதிரடி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்.

மும்பை : காலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 118.07 புள்ளிகள் உயர்ந்து 28,123.44 புள்ளிகளாகவும், நிப்டி 49.20 புள்ளிகள் உயர்ந்து 8673.25 புள்ளிகளாகவும் இருந்தன. ஜூலை மாதத்தில் தங்கம் விற்பனை அமோகமாக இருந்ததாக தகவல் வெளியிடப்பட்டதே இந்திய பங்குச்சந்தைகளின் தொடர் உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Aug 31, 2016 9:47 am

சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்வு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிப்டி ஏற்றம்

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடி வடைந்தன. சென்செக்ஸ் குறியீடு 52 வார உச்சத்தை தொட்டது. அதேபோல நிப்டி குறியீடு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருப்பது மற்றும் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்வது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்து 28343 என்னும் புள்ளியில் முடிவடைந்தது. அதே போல நிப்டி 136 புள்ளிகள் உயர்ந்து 8744 என்னும் புள்ளியில் முடிவடைந் தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 28478 என்னும் அதிகபட்ச புள்ளியை தொட்டது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. அதிகபட்சமாக ஆட்டோ குறியீடு 1.81 சதவீதம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம், வங்கி, எப்எம்சிஜி ஆகிய துறை குறியீடுகள் உயர்ந்து முடிந்தன.

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 SENSEX_857945f_273_2993258f

சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி, கெயில், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை உயர்ந்தன. 30 பங்குகள் உள்ள இந்த பட்டியலில் பார்தி ஏர்டெல் பங்கு மட்டும் 2.8 சதவீதம் சரிந்தது.

புதிய உச்சத்தில் சந்தை மதிப்பு

பிஎஸ்இ பட்டியலில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மதிப்பும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் பிஎஸ்இ சந்தை மதிப்பு ரூ.110.70 லட்சம் கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.1.39 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. சந்தை மதிப்பு அடிப்படையில் உலகளவில் முதல் 10 பங்குச் சந்தைகளில் பிஎஸ்இயும் ஒன்று. இந்தியாவில் அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.02 லட்சம் கோடியாக உள்ளது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 3 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum