Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சரிவில் சந்தை: வாங்கும் தருணமா?
Page 1 of 1
சரிவில் சந்தை: வாங்கும் தருணமா?
மத்திய பட்ஜெட் சலுகைகள், ஆர்பிஐ வட்டி விகிதம் குறைப்பு, நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கலாகி இருப்பது உள்ளிட்ட பல பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தாலும், இந்திய பங்குச் சந்தை இறக்கத்தைக் கண்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், கூடியவிரைவில் அங்கு வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்கிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அப்படி நடக்கும்போது, அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு நம் சந்தை யிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிப் போய்விடும் என்பதால், இந்திய பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்திக்கும் என்கிற நிலைமை உருவாகியிருக்கிறது. பொதுவாக, பங்குச் சந்தை என்பது பின்னால் நடக்கப்போகிற நிகழ்வுக்காக முன்னரே ஏற்றத்தையோ, இறக்கத்தையோ இப்போதே சந்திக்கும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் பி.ராம் விளக்கிச் சொன்னார்.
‘‘நடப்பு எஃப் அண்ட் ஓ முதிர்வின் போது, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பிப்ரவரி 27-ம் தேதி தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8752-ல் ஆரம்பித்தது. சந்தையின் சிறப்பான ஏற்றத்தால் புள்ளிகள் ஏற்றம் கண்டன. முந்தைய செட்டில்மென்டில் நிஃப்டி 8671 புள்ளிகளில் நிலைப் பெற்றது. நடப்பு மாத ஓப்பனிங் கேப் 8671 மற்றும் 8771 ஆக இருக்கிறது. மார்ச் 4-ம் தேதி திடீரென ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் 0.25% குறைத்தார். இதனால், நிஃப்டி இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமான 9191-ஐ எட்டியது. பேங்க் நிஃப்டி புள்ளிகளும் அதிக ஏற்றம் கண்டன.
இந்த வட்டி விகித குறைப்புக்குபின், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக எண்ணிக்கையில் லாப நோக்கம் (பிராஃபிட் புக்கிங்) கருதி விற்கப்பட்டி ருக்கிறது. வங்கிப் பங்குகளும் அதிகமாக விற்கப்பட்டிருக்கின்றன. இதனால், பேங்க் நிஃப்டி இண்டெக்ஸும் அதிக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பேங்க் நிஃப்டி புதிய உச்சமாக 20740ஐ (ஃப்யூச்சர்ஸ் பிரைஸ்) அடைந்தது. ஆர்பிஐ வட்டிக் குறைப்புக்குப் பிறகு பிராஃபிட் புக்கிங் நடந்ததால், மார்ச் 10-ம் தேதி 19001 புள்ளிகளுக்கு இறங்கியது. அதாவது, 1739 புள்ளிகள் (ஏறக்குறைய 9%) வீழ்ச்சி கண்டிருக்கிறது. நிஃப்டி புள்ளிகள், (புதன்கிழமை முடிவு புள்ளிகள்படி) 8712-க்கு இறங்கி இருக்கிறது. இது பிப்ரவரி மாத செட்டில்மென்டைவிட அதிகம்” என்ற ராம், குறுகிய காலத்தில் நிஃப்டியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொன்னார்.
‘‘நிறுவனப் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்கள், ஆப்ஷன் புள்ளி விவரங்கள் மற்றும் கடந்த சில மாதங்களில் நிஃப்டி யின் செயல்பாடு போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, குறுகிய காலத்தில் நிஃப்டி 8550 புள்ளிகளுக்கு இறங்கக்கூடும். தற்போதைய நிலையி லிருந்து மேலும் 2 முதல் 3 சதவிகிதம் சந்தை இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பரந்து விரிந்த சந்தையில் இதுபோன்ற இறக்கங்கள், கரெக்ஷன் களாக கருதப்படுகிறது. இந்த கரெக்ஷன் கள் என்பது பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதாக அமையும்.
நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும் ஒரு விஷயம், காளைச் சந்தையில் இதுபோன்ற கரெக்ஷன்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். தற்போதைய சூழ்நிலையில், 8400-க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்துக்கொண்டு நிஃப்டியில் முதலீடு செய்யலாம். (அல்லது பாதுகாப்பு வழியாக புட் ஆஃப்ஷன் களை ஸ்ட்ரைக் விலை 8400-ல் வைத்தி ருக்கலாம்)” என்றவரிடம், சிறு முதலீட் டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதைக் கேட்டோம்.
‘‘மார்ச் என்பது நிதியாண்டு இறுதி என்பதால் சந்தை காளையின் பிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் என்ஏவி மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்க வாய்ப்பு இல்லை. பல வங்கிப் பங்குகள் இப்போதும் முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாக இருக்கின்றன. முதலீட்டு நோக்கம் என்கிறபோது தற்போதைய நிலையில் முன்னணி நிறுவனப் பங்குகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். குறுகிய காலத்தில் 4 முதல் 5 சதவிகிதம் விலை அதிகரிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கலாம்” என்றார்.
--ந.விகடன் அப்படி நடக்கும்போது, அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு நம் சந்தை யிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிப் போய்விடும் என்பதால், இந்திய பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்திக்கும் என்கிற நிலைமை உருவாகியிருக்கிறது. பொதுவாக, பங்குச் சந்தை என்பது பின்னால் நடக்கப்போகிற நிகழ்வுக்காக முன்னரே ஏற்றத்தையோ, இறக்கத்தையோ இப்போதே சந்திக்கும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் பி.ராம் விளக்கிச் சொன்னார்.
‘‘நடப்பு எஃப் அண்ட் ஓ முதிர்வின் போது, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பிப்ரவரி 27-ம் தேதி தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8752-ல் ஆரம்பித்தது. சந்தையின் சிறப்பான ஏற்றத்தால் புள்ளிகள் ஏற்றம் கண்டன. முந்தைய செட்டில்மென்டில் நிஃப்டி 8671 புள்ளிகளில் நிலைப் பெற்றது. நடப்பு மாத ஓப்பனிங் கேப் 8671 மற்றும் 8771 ஆக இருக்கிறது. மார்ச் 4-ம் தேதி திடீரென ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் 0.25% குறைத்தார். இதனால், நிஃப்டி இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமான 9191-ஐ எட்டியது. பேங்க் நிஃப்டி புள்ளிகளும் அதிக ஏற்றம் கண்டன.
இந்த வட்டி விகித குறைப்புக்குபின், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக எண்ணிக்கையில் லாப நோக்கம் (பிராஃபிட் புக்கிங்) கருதி விற்கப்பட்டி ருக்கிறது. வங்கிப் பங்குகளும் அதிகமாக விற்கப்பட்டிருக்கின்றன. இதனால், பேங்க் நிஃப்டி இண்டெக்ஸும் அதிக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பேங்க் நிஃப்டி புதிய உச்சமாக 20740ஐ (ஃப்யூச்சர்ஸ் பிரைஸ்) அடைந்தது. ஆர்பிஐ வட்டிக் குறைப்புக்குப் பிறகு பிராஃபிட் புக்கிங் நடந்ததால், மார்ச் 10-ம் தேதி 19001 புள்ளிகளுக்கு இறங்கியது. அதாவது, 1739 புள்ளிகள் (ஏறக்குறைய 9%) வீழ்ச்சி கண்டிருக்கிறது. நிஃப்டி புள்ளிகள், (புதன்கிழமை முடிவு புள்ளிகள்படி) 8712-க்கு இறங்கி இருக்கிறது. இது பிப்ரவரி மாத செட்டில்மென்டைவிட அதிகம்” என்ற ராம், குறுகிய காலத்தில் நிஃப்டியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொன்னார்.
‘‘நிறுவனப் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்கள், ஆப்ஷன் புள்ளி விவரங்கள் மற்றும் கடந்த சில மாதங்களில் நிஃப்டி யின் செயல்பாடு போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, குறுகிய காலத்தில் நிஃப்டி 8550 புள்ளிகளுக்கு இறங்கக்கூடும். தற்போதைய நிலையி லிருந்து மேலும் 2 முதல் 3 சதவிகிதம் சந்தை இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பரந்து விரிந்த சந்தையில் இதுபோன்ற இறக்கங்கள், கரெக்ஷன் களாக கருதப்படுகிறது. இந்த கரெக்ஷன் கள் என்பது பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதாக அமையும்.
நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும் ஒரு விஷயம், காளைச் சந்தையில் இதுபோன்ற கரெக்ஷன்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். தற்போதைய சூழ்நிலையில், 8400-க்கு கீழே ஸ்டாப் லாஸ் வைத்துக்கொண்டு நிஃப்டியில் முதலீடு செய்யலாம். (அல்லது பாதுகாப்பு வழியாக புட் ஆஃப்ஷன் களை ஸ்ட்ரைக் விலை 8400-ல் வைத்தி ருக்கலாம்)” என்றவரிடம், சிறு முதலீட் டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதைக் கேட்டோம்.
‘‘மார்ச் என்பது நிதியாண்டு இறுதி என்பதால் சந்தை காளையின் பிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் என்ஏவி மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்க வாய்ப்பு இல்லை. பல வங்கிப் பங்குகள் இப்போதும் முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாக இருக்கின்றன. முதலீட்டு நோக்கம் என்கிறபோது தற்போதைய நிலையில் முன்னணி நிறுவனப் பங்குகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். குறுகிய காலத்தில் 4 முதல் 5 சதவிகிதம் விலை அதிகரிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கலாம்” என்றார்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பிரெக்ஸிட் தாக்கத்தினால் கடும் இறக்கத்தில் சந்தை, வாங்க வேண்டிய தருணமா?
» இது முதலீட்டிற்கான சரியான தருணமா?
» பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற தருணமா?
» மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
» தங்கம் வாங்கும் போது கவனிக்கவேண்டிய சில விசயங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum