வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இன்றைய பங்கு சந்தை நிலவரம்

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Thu Dec 19, 2013 3:50 pm

வியாழக்கிழமை, நவம்பர் 18

மும்பை பங்கு சந்தை 65.50 புள்ளிகள் அதிகரித்து 19934.64 ஆக காணப்பட்டது. தேசிய பங்கு சந்தை நிப்டி 10.10 புள்ளிகள் அதிகரித்து 5998.80 ஆக காணப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:-

24 கேரட் தங்கத்தின் விலை 2010 ரூபாய், 22 கேரட் தங்கத்தின் விலை 1869 ரூபாய் வெள்ளி விலை கிராம் 1க்கு ரூ 43.20 பைசா வெள்ளி கிலோ ரூ 40360.00 ஆக காணப்பட்டது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Thu Dec 19, 2013 3:55 pm

சென்செக்ஸ் 151 புள்ளிகள் வீழ்ச்சி!(19/12/2013)


அமெரிக்காவில் தற்போது டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து,  ஃபெடரல் மானிட்டரி கொள்கையில் மாத மாதம் வழங்கும் கடன் பத்திர அளவில் 10பில்லியன் டாலர் அளவை ஃபெடரல் வங்கி குறைத்துள்ளது. இதையடுத்து இன்று (19-12-2013) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.07 ரூபாயாக உள்ளது. மேலும்  இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 20,708 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 6,166 ஆக முடிவடைந்தது.

குறிப்பாக லார்சன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி போன்ற நிறுவனம் மற்றும் வங்கி பங்குகளின் விலை தலா 2சதவிகிதம் குறைந்தும், எஸ்.பி.ஐ மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Fri Jan 03, 2014 3:36 pm

பங்கு சந்தை நிலவரம்

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 252 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து சென்செக்ஸ் குறியீடு 21,000 புள்ளிகளுக்கும் குறைவான நிலையில் முடிவுற்றது.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களும் பங்குச் சந்தையில் நஷ்ட நிலையே காணப்பட்டது. சென்செக்ஸில் பட்டியலிட்டுள்ள 12 துறைகளில் 11 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இழப்பை சந்தித்தன. வீட்டு வசதித் துறை, மூலப்பொருள்கள் துறை, மின்சாரத் துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவடைந்தன. தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் மட்டும் சிறிதளவு முன்னேற்றம் அடைந்தன.

ஐடிசி, லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அடைந்த வீழ்ச்சி மட்டுமே சென்செக்ஸில் 131 புள்ளிகள் குறையக் காரணமாயிற்று. பி.எச்.இ.எல்., டாடா பவர், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததை தொடர்ந்து, சென்செக்ஸ் பட்டியலில் 25 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன. முப்பது நிறுவனங்களின் பங்கு விலைப்பட்டியலான சென்செக்ஸில் 5 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபகரமானதாக இருந்தன.

வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, 200 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. மதியத்துக்குப் பிறகு பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடங்கியது. வர்த்தக இறுதியில் 20,888 என்ற அளவில் சென்செக்ஸ் நிலைத்தது. சென்ற ஆண்டு நவம்பர் 21-இல் இருந்த 406 புள்ளிகள் வீழ்ச்சிக்குப் பிறகு, வியாழக்கிழமை காணப்பட்ட 252 புள்ளி வீழ்ச்சியே மிகப் பெரிது. இது சென்செக்ஸ் குறியீட்டை 21,000 புள்ளிகளுக்கும் குறைவான நிலைக்கு கொண்டு சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 80 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, நிஃப்டி குறியீடு 6,221 என்ற அளவில் நிலைத்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Mon Jan 13, 2014 10:25 am

இழப்பில் முடிவுற்ற பங்கு வர்த்தகம்(12/01/2014)

கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகம் இழப்பில் முடிவுற்றது. வார இறுதியில் ஒட்டுமொத்தமாக 93 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் குறியீடு 20,758 என்ற அளவில் நிலைத்தது.

தொடர்ச்சியாக இரண்டாவது வாரம் பங்கு வர்த்தகம் நஷ்டத்தில் முடிவுற்றது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் சற்று குறைந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வீட்டு வசதி, மூலதனப் பொருள்கள், வங்கி, நுகர்வோர் பொருள், மின்சாரம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. மருத்துவம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியாவதை முன்னிட்டு வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது அந்நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இடையே வரவேற்பு காணப்பட்டது. இதில் பங்கு விலை மூன்று சதவீதம் வரை அதிகரித்தது. காலாண்டு அளவில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆயினும் வார அளவில் இன்ஃபோசிஸ் பங்கு விலை அரை சதவீத அளவு குறைந்தது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதைவிட பத்திரங்களில் முதலீடு செய்வதிலேயே வாரம் முழுவதும் ஆர்வம் காட்டின. ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பத்திரங்களை அந் நிறுவனங்கள் வாங்கின என்று தெரிகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள நிறுவனங்களில், அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை 8 சதவீதம் நஷ்டம் அடைந்தது. டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ பங்கு விலை 7 சதவீதத்துக்கும் அதிகமாக நஷ்டம் அடைந்தன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை 6.6 சதவீத அளவுக்கு சரிந்தது.

டாக்டர் ரெட்டிஸ், ஸன் ஃபார்மா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ், ஐ.டி.சி., கெயில், ஸிப்லா, டாடா மோட்டர்ஸ், எச்.டி.எஃப்.சி. பங்குகள் லாபம் பெற்றுத் தந்தன.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக 39 புள்ளிகள் குறைந்து நிஃப்டி குறியீட்டளவு 6,171 என்ற அளவில் நிலைத்தது. சென்ற இரண்டு வாரங்களில் நிஃப்டி குறியீட்டில் 142 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாத அளவிலான பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந் நிலையில் பங்குச் சந்தையில் இது எவ்வாறு எதிரொலிக்கும் என்று முதலீட்டாளர்கள் கூர்ந்துநோக்கிவருகின்றனர்.

--தினமணி


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Tue Jan 14, 2014 8:38 am

பங்குச் சந்தையில் எழுச்சி: முதலீட்டாளர்கள் ரூ. 1 லட்சம் கோடி லாபம்(13/01/14)

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி காணப்பட்டு சென்செக்ஸ் குறியீட்டில் 375 புள்ளிகள் உயர்வு பெற்றது.

சென்ற ஏழு வாரங்களிலேயே மிக அதிகபட்ச உயர்வைப் பெற்று சென்செக்ஸ் குறியீடு 21,134 என்ற அளவில் நிலைத்தது. வட்டி விகித கொள்கையில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாது என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. சென்ற வார வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக 93 புள்ளிகள் இழப்பை சந்தித்த சென்செக்ஸ் குறியீட்டில், திங்கள்கிழமை 375 புள்ளிகள் உயர்வடைந்தது. முதலீட்டாளர்கள் ரூ. 1 லட்சம் கோடி லாபம் ஈட்டினர் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 101 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 6,272 என்ற அளவில் நிலைத்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Jan 21, 2014 8:35 am



பங்கு சந்தை நிலவரம்

முந்தைய வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாள் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஏற்றம் பெற்றது.

வர்த்தகம் முடிவில் 141 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 21205 புள்ளிகளானது. மூன்றாம் காலாண்டில் விப்ரோ நிறுவனம் கணிசமாக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து பங்குச் சந்தை உயர்வுக்கு அந்நிறுவனப் பங்குகள் காரணமாயின.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பிற பங்குகளும் ஏற்றம் பெற்றன. டிசிஎஸ் பங்கு விலை 5.53 சதவீதமும், விப்ரோ பங்கு விலை 3.37 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 0.59 சதவீதமும் உயர்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில் 52 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6303 புள்ளிகளானது. முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 1.70 சதவீதம் சரிந்து ரூ. 869.50-க்கு விற்பனையானது. ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போல கோல் இந்தியா நிறுவன பங்கு விலை 1.12 சதவீதமும், டாடா பவர் 1.02 சதவீதமும் சரிந்தன.

முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் பிஹெச்இஎல், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் செய்த முதலீடு ரூ. 75.27 கோடியாகும்.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,407 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,238 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 152 நிறுவனப் பங்கு விலை யில் எவ்வித மாற்றமும் இல்லை. பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகம் ரூ. 1,831.60 கோடி. கடந்த வெள்ளியன்று ரூ. 3,133 கோடிக்கு வர்த்தகமானது.

-Hindu

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Jan 30, 2014 3:06 pm

நான்காவது நாளாக சென்செக்ஸ் சரிவு(29/01/2014)

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று நான்காவது நாளாக சரிவில் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் 36 புள்ளிகள் குறைந்து 26,047 ஆக நிறைவு பெற்றது.தேசிய பங்குசந்தையான நிப்டி 6 புள்ளிகள் சரிந்து 6120,25 ஆக முடிந்தது

இன்றைய வர்த்தகத்தில் கடைசி ஒரு மணி நேரத்தில் வங்கிகளின் பங்குகள் அதிகம் விற்பனையாகின. அப்போது ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் ஒரு சதவீதம் சரிவினை சந்தித்தது.

இது குறித்து பங்குச்சந்தை ஆலோகர் ஒருவர் கூறுகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியானஐ சிஐசியை வங்கியின் நிகர லாபம் 13 சதவீதம் என்று அந்த வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிஐசிஐ வங்கியில் மிக மெதுவான வளர்ச்சி நிலவுகிறது. .மற்ற தனியார் வங்கியான யெஸ் பேங்க 21 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி 25 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றார்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Feb 11, 2014 10:28 am

பங்கு சந்தை நிலவரம்(10/02/2014)

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 42.66 புள்ளிகள் உயர்ந்து 20,419.22 புள்ளிகளாகவும், நிப்டி 12.25 புள்ளிகள் உயர்ந்து 6,075.45 புள்ளிகளாகவும் இருந்தன.

ஆசிய பங்குச்சந்தையின் வர்த்தகத்தின் ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்திருந்தன.

கடந்த 4 வர்த்தக தினங்களில், சென்செக்ஸ் 167.30 புள்ளிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நியச் செலாவணிச் சந்தையில்,வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 62.10 என்ற நிலையில் இருந்தது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Fri Feb 14, 2014 11:06 am

பங்குச் சந்தை: 255 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீட்டில் 255 புள்ளிகள் குறைந்தது.

கடந்த இரு நாட்களில் 114 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டிருந்தது மும்பை பங்குச் சந்தை. இந்நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் வங்கி, மூலதனப் பொருள்கள், எண்ணெய் சுத்திகரிப்பு, உலோகம், மருந்து துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன. சென்செக்ஸில் பன்னிரண்டு துறைகளில் 11 துறைகள் இழப்பை எதிர்கொண்டன. சிப்லா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததை தொடர்ந்து முதலீட்டாளர்கள் உற்சாகமிழந்ததாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் குறியீட்டில் 255 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த நான்கு மாத அளவில் குறைந்த நிலையான 20,193 என்ற அளவில் சென்செக்ஸ் முடிவுற்றது.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 82 புள்ளிகள் சரிந்து நிஃப்டி குறியீடு 6,001 என்ற அளவில் நிலைத்தது. மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லாவின் பங்கு விலை சுமார் 8 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Fri Feb 14, 2014 11:27 am

பங்குச்சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு

இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 76.80 புள்ளிகள் உயர்ந்து 20,270.15 புள்ளிகளாகவும், நிப்டி 19.90 புள்ளிகள் உயர்ந்து 6,021 புள்ளிகளாகவும் இருந்தது.

தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வர்த்தகம் ஏற்றத்தில் இருப்பதால் பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அந்நியச் செலாவணிச் சந்தையிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 62.28 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வுக்கு, சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு குறைந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by பாலாஜி Wed Feb 19, 2014 3:27 pm

88 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு

புதன்கிழமை மாலை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்வடைந்த நிலையில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்ந்து 20,722.97 என்ற நிலையிலும், நிப்டி 25.65 புள்ளிகள் உயர்ந்து 6,152.75 என்ற நிலையிலும் இருக்கும் போது நிறைவு பெற்றது.

ரான்பாக்ஸி, சன் பார்மா, டிசிஎஸ், லுபின், பினான்சியல் டெக் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன. ஜிண்டால் ஸ்டீல், டாடா கம்யூனிகேஷன், டாடா பவர், ஹீரோ மோட்டார், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

பாலாஜி
Admin

Posts : 5
Join date : 30/12/2013
Age : 47

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by பாலாஜி Fri Feb 21, 2014 8:44 am

186 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ் நிறைவு(20/02/2014)

இன்றைய பங்கு வர்த்தம் நிறைவடைந்த போது, மும்பை பங்குச் சந்தை 186 புள்ளிகள் சரிந்து 20,536 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை 61 புள்ளிகள் சரிந்து 6,091 என்ற நிலையில் இருந்தன.

டாக்டர் ரெட்டி, பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், எல் அன்ட் டி, அப்போலோ டையர்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், இந்தியன் வங்கி, முத்தூட் பைனான்ஸ், பேங்க் ஆப் பரோடா, கிராசிம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

பாலாஜி
Admin

Posts : 5
Join date : 30/12/2013
Age : 47

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by பாலாஜி Sat Feb 22, 2014 8:54 am

சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு(21/02/2014)

வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்து 20,700 என்ற நிலையிலும், நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 6,155 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

அம்புஜா சிமென்ட், ஏசிசி, எச்சிஎல் டெக், பிபீசிஎல், அல்ட்ரா டெக் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ரிலையன்ஸ், எம்சிஎக்ஸ், பைனான்சியல் டெக், பாரதி ஏர்டெல், டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

பாலாஜி
Admin

Posts : 5
Join date : 30/12/2013
Age : 47

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by பாலாஜி Tue Feb 25, 2014 1:11 am

பங்குச் சந்தையில் முன்னேற்றம்(25/02/2014)

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 110 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் ஒரு மாத அளவிலேயே அதிகபட்ச அளவைத் தொட்டது.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, சந்தை நிலவரம் மந்தமாகவே இருந்தது. ஆயினும் பின்னர், வங்கி, மூலதனப் பொருள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு கூடுதல் வரவேற்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கடந்த வாரம் அறிவுப்புகள் வெளியானது. அதைத் தொடர்ந்து, சென்ற வாரம் முதலே பங்குச் சந்தையில் ஏற்ற நிலை இருந்துவருகிறது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையில் 2.85 சதவீத அளவு உயர்வு காணப்பட்டது. இதன் துணை நிறுவனமான எல் அண்ட் டி இன்ஃபிராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் புராஜக்ட்ஸ் ரூ. 1,000 கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. இதையடுத்து லார்சன் அண்ட் டூப்ரோ பங்குகளுக்கு கூடுதல் வரவேற்பு இருந்தது. அதிகபட்சமாக டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்தது. மின்சார உற்பத்தி உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான பி.எச்.இ.எல். பங்கு விலை 3.95 சதவீதம் அதிகரித்தது.

வங்கித் துறையில், ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை 3.96 சதவீதம் அதிகரித்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முப்பது நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் லாபம் பெற்றன. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் குறியீட்டெண் 20,811 என்ற அளவில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 30 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீடு 6,186 என்ற அளவில் நிலைத்தது.

பாலாஜி
Admin

Posts : 5
Join date : 30/12/2013
Age : 47

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Sun Mar 02, 2014 9:58 am

21000 புள்ளிகளுக்கு மேலே சென்செக்ஸ்


தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து வரும் சந்தைகள், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 21000 புள்ளிகளுக்கு மேலே சென்றது. ஜனவரி 24-ம் தேதிக்கு பிறகு இப்போதுதான் சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு மேலே முடிந்தது. சென்செக்ஸ் 133.13 உயர்ந்து 20120 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 6276 புள்ளிகளில் முடிவடைந்தது. கேப்பிடல் குட்ஸ், வங்கி, ஹெல்த் கேர் ஆகிய பங்குகள் சந்தையின் உயர்வுக்குக் காரணமாக இருந்தன. அன்னிய முதலீடு காரணமாக சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் (பிப்ரவரி 26 வரை) சுமார் 4000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது.

ஹிண்டால்கோ பங்கு அதிகபட்சமாக 7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கடுத்து டி.சி.எஸ். மற்றும் டாடா மோட்டார் ஆகிய பங்குகளும் ஏற்றம் அடைந்தன.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 சதவித பங்குகளை ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் வாங்க இருப்பதால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன. குஜராத் சுசூகி தொழிற்சாலை குறித்த முதலீட்டாளர்களுக்கு தெளிவு ஏற்படாததால் அந்த நிறுவன பங்கு 4.5 சதவீதம் சரிந்தது.

சஹாரா குழும பங்குகள் சரிவு

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் லக்னோவில் கைது செய்யப்பட்டதால் அந்த குழும நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை சரிந்தன. சஹாரா ஒன் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பங்கு 2.99 சதவீதம் வரை சரிந்து 60.10 ரூபாயில் முடிந்தது. சஹாரா ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்கு 0.65 சதவீதம் வரை சரிந்தது.

டெக் மஹிந்திரா மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய வரும் மார்ச் 28-ம் தேதியில் இருந்து நிஃப்டி 50 பட்டியலில் இணையப்போகிறது. இதனால் டெக் மஹிந்த்ரா பங்கு 2.54 சதவீதமும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் 0.98 சதவீதமும் உயர்ந்தன.

இந்த இரண்டு பங்குகள் இணைவதால் ரான்பாக்ஸி மற்றும் ஜெய்பிரகாஷ் அஸோசியேட்ஸ் ஆகிய பங்குகள் நிஃப்டி பட்டியலில் இருந்து வெளியேறின. இதனால் இந்த பங்கு 0.52 சதவீதம் சரிந்தது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்த பங்கு 19 சதவீதம் வரை சரிந்தது. ஆனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு உயர்ந்து முடிவடைந்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Tue Mar 04, 2014 8:54 am

பங்குச் சந்தையில் தொடரும் முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக முன்னேற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில் வார அளவில் 419 புள்ளிகள் உயர்வு இருந்தது. சென்ற இரு வாரங்களில் சென்செக்ஸில் 753 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

மூலதனப் பொருள், மருந்து, ஆட்டோ மொபைல், நுகர்வோர் பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு இருந்ததையடுத்துத, பங்குச் சந்தையில் இரண்டு சதவீத அளவுக்கு ஏற்றம் இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளும் பங்குச் சந்தை முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தது.

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை, டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இடையே வரவேற்பு இருந்தது. டாடா கன்ஸல்டன்ஸி பங்கு விலை 4.14 சதவீதம் அதிகரித்தது. டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.15 சதவீதம் அதிகரித்தது. இவ்விரண்டு பங்கு விலையின் ஏற்றம் மட்டுமே சென்செக்ஸில் 100 புள்ளிகள் உயரக் காரணமாயிற்று. அதிகபட்சமாக ஹிண்டால்கோ பங்கு விலை 6.86 சதவீதம் அதிகரித்தது. சன் ஃபார்மா, ஓ.என்.ஜி.சி., லார்ஸன் அண்ட் டூப்ரோ, ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் பங்குகளை வாங்கவும் ஆர்வம் காணப்பட்டது.

சென்செக்ஸ் குறியீட்டில் மாத அளவில் 606 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்த நிலவரத்துக்குப் பிறகு, இதுவே மிகப் பெரிய உயர்வாகும். கடந்த அக்டோபரில் சென்செக்ஸில் 1,784 புள்ளிகள் அதிகரித்தது குறிப்பிடத் தக்கது. வாரத்தின் இறுதி வர்த்தக தினமும் மாதத்தின் இறுதி நாளுமான வெள்ளிக்கிழமை 133 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீடு 21,120 என்ற அளவில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் வார அளவில் 121 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 6,276 என்ற அளவில் நிலைத்தது. சென்ற ஐந்து வாரங்களில் இதுவே அதிகபட்ச நிலையாகும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,930.92 கோடி மதிப்பிலான பங்குகளை சென்ற வாரம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Mar 05, 2014 9:37 am

பங்குச் சந்தையில் எழுச்சி: 263 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி காணப்பட்டு சென்செக்ஸ் குறியீட்டில் 263 புள்ளிகள் உயர்வு இருந்தது.

தொடர்ந்து முன்னேற்ற நிலையைக் கண்டுவந்த சென்செக்ஸ், மாலையில் வர்த்தகம் முடிவுறும்போது 263 புள்ளிகள் உயர்வு பெற்று 21,209 என்ற அளவில் நிலைத்தது. கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 375 புள்ளிகள் உயர்வு பெற்றததைத் தொடர்ந்து, இதுவே மிக அதிகபட்ச வளர்ச்சியாகும்.

தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 76 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 6,297 என்ற அளவில் நிலைத்தது. ஒரு கட்டத்தில் 6,300 புள்ளிகள் என்ற அளவைக் கடந்தபோதிலும், அந்த முன்னேற்றம் வர்த்தக இறுதிவரை நீடிக்கவில்லை.

தினமணி

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Mon Mar 10, 2014 9:10 am

22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

வாரத்தின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த வாரம் முழுவதும், பங்கு வர்த்தகத்தில் இருந்த லாபகாரமான போக்கின் காரணமாக, முதலீட்டாளர்கள் இன்று அதிகளவு பங்குகளை விற்கத் துவங்கினர். இதனால், இன்றைய வர்த்தகம் இறக்கத்துடன் துவங்கினாலும், சிறிது நேரத்திலேயே உயரத் துவங்கியது.

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 22,005 என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Sun May 11, 2014 11:56 am

பங்குச்சந்தை வர்த்தகத்தில் எழுச்சி: பாஜக வெற்றிவாய்ப்பு எதிரொலி?

இந்திய பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எழுச்சி இருந்தது. பாஜக வெற்றிவாய்ப்பு பிரகாசமானதாக கருதப்பட்டதால் வர்த்தகம் தொடர்ந்து சீராக அதிகரித்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 22994 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 704 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்ச புள்ளியான 23048 புள்ளியைத் தொட்டது.

இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 198 புள்ளிகள் உயர்ந்து (2.99%) 6858 புள்ளிகளில் முடிவடைந்தது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் பங்குச்சந்தைகள் அதிக ஏற்றம் பெற்றது இப்போதுதான்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 150க்கு மேற்பட்ட பங்குகள் தன்னுடைய 52 வார உச்சபட்ச புள்ளியைத் தொட்டன. சென்செக்ஸ் பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம். அண்ட் எம்., ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.

இதுதவிர பஜாஜ் பைனான்ஸ், ஜே.கே வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஹெச்.பி.சி.எல். ஆகிய பல பங்குகள் உச்சபட்ச விலையை அடைந்தன.

வங்கிக் குறியீடு உயர்வு

பார்மா துறை குறியீடு தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. குறிப்பாக வங்கித்துறை குறியீடு (பேங்க் நிஃப்டி) அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தின் இடையே 13814 என்ற தன்னுடைய உச்சபட்ச புள்ளியைத் தொட்டது. முடிவில் வங்கிக் குறியீடு 5.34 சதவீதம் உயர்ந்தது. இதன்பிறகு ரியால்டி துறை 4.38 சதவீதமும், மின் துறை குறியீடு 4.12 சதவீதமும், கேபிடல் குட்ஸ் 3.34 சதவீதமும் உயர்ந்தது.

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள். செபி தகவல்படி வியாழன் அன்று 363 கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து பங்குச்சந்தை ஆலோசகர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்ட போது, ஐரோப்பிய மத்திய வங்கி அடுத்த மாதம் சில ஊக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்று தெரிவித்ததும் அந்நிய முதலீடுகள் வருவதற்கு ஒரு காரணமாகும். மேலும் நரேந்திர மோடி பிரதமர் ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முதலீட்டாளர்கள் மற்றும் பெரும்பாலான நிபுணர்கள் கருதுவதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தன.

வரும் திங்கள் கிழமை மாலை, கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அப்போது 220 தொகுதிகளுக்கு மேல் பி.ஜே.பி.க்கு கிடைக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மேலும் 300 புள்ளிகள் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் 220 தொகுதிகளுக்கு கீழே கருத்து கணிப்புகள் வரும் பட்சத்தில் சரியவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

மேலும் ரூபாய் மதிப்பு ஸ்திரமடைந்து வருகிறது. அதனால் ஏற்றுமதி வாய்ப்பு இருக்கும் துறை பங்குகளில் விற்கும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் பாதுகாப்பான துறை என்று சொல்லக்கூடிய எஃப்.எம்.சி.ஜி. துறை பங்குகளும் விற்கும் போக்கு அதிகரித்து வங்கி பங்குகளில் முதலீடு அதிகரிக்கிறது என்றார்.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Sun May 11, 2014 11:58 am

மோடி விளைவால் புதிய உச்சம்: சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச்சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 611.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.99 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நிஃப்டி 151.15 புள்ளிகள் உயர்ந்து 6,800 என்ற நிலையில் இருந்தது.

நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி, மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கி, மூலதன பொருட்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு, அட்டோ, உலோக துறை பங்குகளின் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்ததும் பங்குச்சந்தையில் புதிய உச்சம் ஏற்பட காரணம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

லாபமடைந்த நிறுவனங்கள்:

பங்குச்சந்தை ஏற்றத்தால் எச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் 3.19% உயர்ந்து ரூ.742-க்கும், ஐ.சி.ஐ.சி.ஐ பங்குகள் 3.98% உயர்ந்து ரூ.989.05-க்கும் வர்த்தகமாகின.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Mon May 12, 2014 2:21 pm

முதல் முறையாக 6,952 புள்ளிகளை எட்டியது நிப்டி

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் தொடங்கியது.

வர்த்தக துவக்கத்தில், சென்செக்ஸ் 338.67 புள்ளிகள் உயர்ந்து 23,332.90 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 6,952.40 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. முதல் முறையாக நிப்டி 6,900 புள்ளிகளை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஜப்பானின் நிக்கெய், ஹாங்காங்கின் ஹன்சென் போன்ற ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தையின் அண்மைக்கால் எழுச்சி குறித்து டெல்லியைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் மனோஜ் சோராரியா கூறுகையில்: "மக்களவை தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருவதால் அனைத்து துறை பங்குகளையும் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அண்மை காலமாக பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது" என்றார்.

இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 59.96 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri May 30, 2014 7:40 pm

சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!!

ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய நாள் முடிவில் சரிவோடு முடிந்தன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 16 புள்ளிகள் சரிந்து  24217 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 7229 என்ற நிலையிலும் முடிவுற்றன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.10 ரூபாயாக உள்ளது

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Tue Jun 03, 2014 5:50 pm

பங்குச் சந்தையில் ஏற்றம்

டந்த வாரம் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிக புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகம் முடிவில் 467 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 24217 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 132 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7362 புள்ளிகளானது.

செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. மத்தியில் பாஜக தலமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி வெளியிடும் நிதிக் கொள்கையாகும். இதனால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக. பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது.

கேபிடல் கூட்ஸ், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், உலோகம் சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக சீனாவின் தொழில்துறை உற்பத்தி அதிகரித்துள்ளதாக வெளியான அட்டவணை ஆசிய பிராந்தியத்தில் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு வழிவகுத்தது.

லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனப் பங்கு 6.23 சதவீதம் உயர்ந்து ரூ. 1,645.40-க்கும், ஓஎன்ஜிசி பங்கு 5.55 சதவீதம் உயர்ந்து ரூ. 399.25-க்கும், பார்தி ஏர்டெல் 5.03 சதவீதம் உயர்ந்து ரூ. 361.30-க்கும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு 4.02 சதவீதம் உயர்ந்து ரூ. 2,644.20-க்கும், டாடா ஸ்டீல் 3.75 சதவீதம் உயர்ந்து ரூ. 492.80-க்கும் விற்பனையாயின.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை 1.39 சதவீதம் சரிந்து ரூ. 2,414-க்கும், சன் பார்மா 1.34 சதவீதம் சரிந்து ரூ. 599.25-க்கும், ஐடிசி 1.22 சதவீதம் சரிந்து ரூ. 337.35-க்கும், விப்ரோ 1.17 சதவீதம் சரிந்து ரூ. 499.10-க்கும், டாடா கன்சல்டிங் சர்வீசஸ் பங்கு 0.67 சதவீதம் சரிந்து ரூ. 2,129.90-க்கும் விற்பனையாயின.

பங்குச் சந்தையில் சமீப காலமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் அந்நிய நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு ரூ. 2,977.62 கோடியாகும்.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Thu Jun 05, 2014 4:35 pm

முதன்முறையாக சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளில் முடிவு

மும்பை : இந்திய பங்குசந்தைகளில் முதன்முறையாக சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளில் முடிவுற்றது. சிறிய ஏற்றத்துடன் துவங்கிய இன்றைய பங்குவர்த்தகம் சற்று நேரத்திலேயே சரிய தொடங்கின. இருப்பினும் ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட இருக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பாலும், எண்ணெய், எரிவாயு, உலோகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றதால் மதியத்திற்கு பிறகு ஏற்றம் கண்ட பங்குசந்தைகள் இறுதியில் ஏற்றத்துடனேயே முடிந்தன. அதிலும் குறிப்பாக சென்செக்ஸ் முதன்முறையாக 25 ஆயிரம் புள்ளிகளில் முடிவுற்றது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 213.68 புள்ளிகள் உயர்ந்து 25,019.51-ஆகவும் தேசிய பங்குசந்தையான நிப்டி 71.85 புள்ளிகள் உயர்ந்து 7,474.10-ஆகவும் முடிந்தன.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Mon Jun 09, 2014 10:53 am

புதிய உச்சத்தை தொட்டது நிப்டி: 7600 புள்ளிகளை தாண்டி சாதனை

வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று, வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி, 25,579.72 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 7600 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. முதன்முறையாக நிப்டி 7,600 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்துள்ளது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum