Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மசாலா பாண்டுகள் வெளியீடு... வெளிச்சம் பெறுமா இந்திய வங்கித் துறை?
Page 1 of 1
மசாலா பாண்டுகள் வெளியீடு... வெளிச்சம் பெறுமா இந்திய வங்கித் துறை?
இந்தியப் பொருளாதாரம் வரும் காலங்களில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணும் என சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த அபாரமான வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் தொழில் துறையும் அது சார்ந்த துறைகளும் அதிவேகமாக வளர்ந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.
சில ஆண்டுகள் முன்பு வரை கடுமையான தள்ளாட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் இருந்த சூழலில், தொழில் துறை முடக்கம் பொருளாதாரச் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. அதன் காரணமாக வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் தாக்கம் இந்திய வங்கித் துறையில் இன்னும் விலகாத சூழலில் தொழில் துறையினருக்கு தங்களின் வளர்ச்சிக்காக தேவைப்படும் கடன் போதிய அளவு கிடைக்காமலே இருந்து வருகிறது.
வங்கிகளுக்கு அனுமதி!
வாராக் கடன் பிரச்னைகள் இன்னும் தீராத காரணத்தால் பல வங்கிகளும் கடன் தருவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் என்னும் வட்டி விகிதத்தைக் குறைத்தும்கூட, அதன் முழுப்பலன் இன்னும் பொருளாதாரத்திலும் கடன் வழங்குதலிலும் பிரதிபலிக்க வில்லை. அதன் காரணமாக கடன் வட்டியில் பெரிய மாற்றங்கள் இல்லாதது தொழில் துறைக்கு ஒரு பின்னடைவே.
இந்தச் சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டில் மசாலா பாண்டுகள் என வழங்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்று பிரத்யேகமாக இந்திய நிறுவனங்களால் வழங்கப்படும் ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு அனுமதி அளித்தது. தனது பதவிக் காலம் முடிவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த அனுமதியை அளித்தார் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன்.
இந்தியத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக கடன் வாங்க முடியாதபட்சத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர் களிடம் இதுபோன்ற கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கலாம் என்பதே இதன் சிறப்பம்சம். முதலில் இந்த அனுமதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இருந்த சூழலில், தற்போது வங்கிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மசாலா பாண்டுகளை வழங்கி கடன் பெறலாம் என்று அறிவித்து உள்ளது ஆர்.பி.ஐ.
மசாலா பாண்டுகள் என்பது...
அடிப்படையில், பாண்ட் என்றால் கடன் பெறுவதற்காக வழங்கப்படும் கடன் பத்திரம் என்று அர்த்தம். கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறுவது நிறுவனங்களின் வாடிக்கை. கடந்த காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர் களிமிருந்து இந்திய நிறுவனங்கள் கடன் பெறுவது இ.சி.பி. (ECB- External Commercial Borrowings) என்று சொல்லப்படுகிற வழிமுறை மூலம்தான். அந்த வழிமுறை மூலம் கடன் பெறுவது நிறுவனங்களுக்கு மிகக் கடினம். ஏனெனில் அந்த வழிமுறையால் நிறுவனங்கள் வெளிநாட்டு கரன்சி மதிப்பில் தான் கடன் பெறவேண்டும்.
உதாரணமாக, டாலர் அல்லது யூரோ போன்ற நாணய மாற்று முறையில் அந்தக் கடனைப் பெறவேண்டும். சர்வதேச நாணயச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடந்த காலங்களில் இ.சி.பி. மூலம் கடன் திரட்டிய நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தச் சிக்கலையும் சவாலையும் ஈடுகட்டும் நோக்குடையதுதான் இந்த மசாலா பாண்டுகளின் நோக்கம்.
ஏனென்றால் இந்த வகை கடன் பத்திரங்கள் இந்திய ரூபாய் அடிப்படையில் வழங்கப்படுவதால், சர்வதேச நாணய மதிப்பு மாற்றம் இந்த பாண்டுகளை வெளியிட்ட நிறுவனங்களைப் பாதிக்காது என்பது பெரும் நிம்மதி தரும் விஷயம்.
வரிச் சலுகைகள்!
இந்த மசாலா பாண்ட் கடன் பத்திரச் சந்தை இன்னும் சில ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில், அதாவது 50 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பார்க்லேஸ் நிறுவனம் கணித்துள்ளது. இது போன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு சில முக்கிய வரிச் சலுகைகளை அளித்திருப்பது மிகப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. இந்த வகை பத்திரங்களின் முதலீட்டாளர் களுக்கு, டிடிஎஸ் என்பது போன்ற வித்ஹோல்டிங் டாக்ஸ் (Withholding tax) 20 சதவிகிதத்தி லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கபட்டுள்ளது. அதே போல், முதிர்வு தொகையை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாய வரி இல்லை.
உலக நாடுகளில் வட்டி விகிதம் இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த மசாலா பாண்டுகள் மீதான ஆர்வம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும்.
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை ஏற்றப் போகிறது என்ற பேச்சு அவ்வப்போது இருந்து வந்தாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் மேலை நாடுகளில் குறைந்த அளவிலேயே காணப்படும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும், நமது அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் நமது கடன் பத்திரச் சந்தையை வலுப் படுத்தும்விதமாக இந்த மசாலா பாண்ட் கடன் பத்திரங்களுக்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருகிறது. மசாலா பாண்டுகள் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போன்றவற்றில் பட்டியிலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள், இந்த வகை பாண்டுகளில் முதலீடு செய்வதும் விற்பதும் எளிது.
இந்தியப் பொருளாதாரமும் நிதித் தேவையும்!
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப் படுகிறது. இதைப் பூர்த்தி செய்ய உள்நாட்டில் போதுமான அளவு நிதி இல்லை. இதனால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மசாலா பாண்டுகள் வங்கிகளுக்கு நிதி திரட்ட பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சீராக இருந்து வருகிறது. இந்திய ரூபாய் கடந்த சில ஆண்டுகளில், இதர நாடுகளான சீனா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளின் நாணயங்களைக் காட்டிலும் மிகவும் சீராகவே இருந்து வந்துள்ளது.
பிரெக்சிட், சீனப் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில்கூட இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சீராக இருந்தது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீதுள்ள மதிப்பை பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது.
அந்தவகையில், புதிதாகக் கொண்டுவரப்படும் மசாலா பாண்டுகளிலும் வெளி நாட்டினர் ஆர்வத்துடன் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
வங்கிகளும் மசாலா பாண்டுகளும்!
பேசல் III (Basel III) என்ற சர்வதேச வங்கித் துறை கட்டுப்பாடுகள் அடுத்த சில ஆண்டுகளில் அமலுக்கு வர இருப்பதால், இந்திய வங்கிகள் அந்த மாற்றத்துக்குத் தயாராவதற்கு பல லட்சம் கோடி ரூபாய் தேவை இருக்கிறது. அதுபோன்ற தேவைகளுக்கு நமது நாட்டில் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் மசாலா பாண்டுகள் மூலமாக கணிசமான நிதியை வெளி நாட்டு முதலீட்டாளர்களின் மூலம் திரட்டிவிட முடியும் என்பது நமது வங்கித் துறைக்கு மிகப் பெரிய பலம்.
மேலும், வாராக் கடன் ஒரு பெரிய பிரச்னையாக இருந்தாலும், இந்திய வங்கிகள் உலகளாவிய மதிப்பீட்டில் நல்ல அளவில் இருப்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கட்டாயம் நமது வங்கிகள் வெளியிடும் மசாலா பாண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
மசாலா பாண்டுகள் மூலம் கூடுதல் நிதி ஆதாரம் வங்கிகளுக்குக் கிடைத்திருப்ப தால் நிச்சயம் இந்திய வங்கிகள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனலாம்.
அந்த வகையில், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்கள் வங்கித் துறை பங்குகளில் முதலீடு செய்வார்களேயானால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மே மாதம் தங்க பத்திரம் வெளியீடு
» தொடர்ந்து ஜொலிக்குமா - மைக்ரோ ஃபை னான்ஸ் துறை?
» ஏஜென்ட் கமிஷன் குறைப்பு... மியூச்சுவல் ஃபண்ட் துறை பாதிக்குமா?
» ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு துறை
» புதிய அரசிடம் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்பது என்ன
» தொடர்ந்து ஜொலிக்குமா - மைக்ரோ ஃபை னான்ஸ் துறை?
» ஏஜென்ட் கமிஷன் குறைப்பு... மியூச்சுவல் ஃபண்ட் துறை பாதிக்குமா?
» ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு துறை
» புதிய அரசிடம் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்பது என்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum