வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்!

Go down

எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்! Empty எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்!

Post by தருண் Tue Jul 26, 2016 2:58 pm

எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்! P64a

ஒரு காலத்தில் வியர்வையில் நனைந்த முகத்தைத் துடைத்துக் கொள்ள கர்சீப்பைத்தான் பயன்படுத்தினோம். ஆனால், இன்றைக்கோ கர்சீப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. அதை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதில் பலருக்கும் தயக்கம். எனவே, ஆங்காங்கே டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தி, முகத்தில் இருக்கும் வியர்வையையும் எண்ணெய்ப் பசையையும் நீக்கிக் கொள்வது இன்றைய இளைய தலைமுறைக்கு வழக்கமான விஷயமாகிவிட்டது.

அது மட்டுமல்ல, ஹோட்டலில் சாப்பிட்டபிறகு கை துடைப்பதில் இருந்து ஜலதோஷம் பிடித்து விட்டால் மூக்கைத் துடைப்பது வரைக்கும் பலரும் இன்றைக்கு டிஷ்யூ பேப்பரைதான் பயன்படுத்தி வருகிறார்கள். துடைத்தோமா, தூக்கி எறிந்தோமா என்று இருப்பதால் டிஷ்யூ பேப்பருக்கான தேவை எல்லா இடங்களிலும் அதிகரித்து விட்டது. இதனால் இந்தத் தொழிலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன், லேட்டஸ்ட் இயந்திரங்களுடன் டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்கிற நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமெனில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி கோயம்புத்தூரில் இருக்கிற ஃபெதர் டச் டிஷ்யூஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிரோத்கரிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்! P66a

‘‘தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, இப்போதைக்கு பெரிய அளவில் போட்டி இல்லாத தொழிலாக இருக்கிறது இந்தத் தொழில். முன்பைவிட டிஷ்யூ பேப்பரை நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆரம்பத்தில் ஹோட்டல், சலூன், ரெஸ்டாரன்ட்டுகள்தான் டிஷ்யூ பேப்பருக்கான வாடிக்கையாளர் களாக இருந்தன. இன்றைக்குத் திருமணம் போன்ற நிகழ்வு களிலிருந்து, ஐடி நிறுவனங்கள், வீடுகள் உட்பட எல்லா இடங்களிலும் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த ஆரம்பித்திருக் கின்றனர். ஹோட்டல்களில் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துவது இரண்டு மடங்காகி இருக்கிறது. அதனால் இந்தத் தொழிலைத் தொடங்குவது சரியான முடிவாகவே இருக்கும்.

இந்தத் தொழிலை புதிதாக ஆரம்பிக்க அருகிலுள்ள சிறு தொழில் மையத்துக்குச் சென்று பதிவு செய்து சான்றிதழைப் பெற்றாலே போதுமானது.

டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்வதைப் பொறுத்தவரை, மிக சுலபமான தொழில். பேப்பர் ரீலை மெஷினில் விட்டாலே போதும் அதுவே ஆட்டோ மேட்டிக்காக எல்லாவற்றையும் செய்து நமக்குத் தேவையான அளவில், வடிவத்தில் டிஷ்யூ பேப்பராக வெளியில் கொண்டுவந்து கொடுத்துவிடும். அவற்றை நாம் ஒழுங்காக அடுக்கி பேக்கிங் செய்தாலே போதும்.

நாம் உற்பத்தி செய்த டிஷ்யூ பேப்பரை எங்கு கொண்டு சென்று விற்பது என்பதை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே இந்தத் தொழிலில் இறங்க வேண்டும்.

சிறிய அளவில், ஒரு நல்ல தரமான டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்கிற நிறுவனத்தை ஆரம்பிக்கத் தேவையான மல்டி சைஸ் இயந்திரம், 700 சதுர அடி இடம் போன்றவற்றுக்கு ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டி யிருக்கும். நல்ல போக்குவரத்து வசதியுள்ள இடங்களில், நகரத்தின் மையப்பகுதியில் இந்தத் தொழிலை ஆரம்பிப்பது நல்லது. டிஷ்யூ பேப்பர் தயாரிப்பதற்கான மூலப் பொருளான பேப்பரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ஆர்டரைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம். டெல்லி, மும்பை, உடுமலைப்பேட்டையில் மூலப் பொருளான பேப்பர் கிடைக்கும்.

டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்கிற இயந்திரத்தை வாங்கும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் எந்த இடத்தில் தொழிலை தொடங்கப் போகிறோம், அங்கே எந்த மாதிரியான டிஷ்யூ பேப்பருக் கான தேவை இருக்கிறது என்பதை எல்லாம் அறிந்தபிறகு, அந்த வகையான டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்கிற மெஷினை வாங்க வேண்டும்.

ஹேண்ட் நாப்கின், டாய்லெட் ரோல், கிச்சன் டவல், என்ஃபோல்டு பேப்பர் டவல் என பல வகையில் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபடுகிறவர்கள் முதலில் சலூன், ஹோட்டல், ரெஸ்டாரன்ட், மருத்துவமனைகள்தான் தங்களுடைய வாடிக்கையாளர் கள் என்று ஒரு டார்கெட்டை வைத்து தொழில் செய்வார்கள். ஆனால், டிஷ்யூ பேப்பருக்கு என்று பெரிய சந்தையே இருக்கிறது. சிப்ஸ் தயாரிக்கும் கடையில் எண்ணெய்யை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பரைதான் பயன்படுத்துகிறார்கள்.

இதுபோல, டிஷ்யூ பேப்பர் களின் பயன்பாடு எங்கெல்லாம் இருக்கிறது என்று நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்தால் மட்டும்தான் நம்மால் இந்த பிசினஸை பெரிய அளவில் எடுத்துச் செல்ல முடியும்.

ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் போட்டு விடுவதால், தரத்தைவிட விலைதான் வாடிக்கை யாளர்களை திருப்தி படுத்தும் விஷயமாக இருக்கிறது. எனவே, யார் குறைந்த விலையில் டிஷ்யூ பேப்பரை தருகிறார்களோ, அவர்களைத்தான் வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கின்றனர். அதனால் மற்றவர்களைவிட குறைந்த லாபத்தில் மலிவான விலையில் கொடுத்தால் நமக்கான வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

ஆட்களுக்கு சம்பளம் கொடுத்தது போக குறைந்தபட்ச மாத வருமானமாக ரூ.30,000 ஈட்ட முடியும். நம்முடைய மார்க்கெட்டிங்கை எந்தளவுக்கு எல்லா இடங்களிலும் விரிவுபடுத்து கிறோமோ, அந்தளவுக்கு நம்மால் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

மார்க்கெட்டிங் செய்கிற திறமை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் வெற்றிப் பெற்றுவிடலாம்’’ என்று முடித்தார் ஷிரோத்கர்.

மக்களுக்கு அன்றாடத் தேவையாக இருக்கும் டிஷ்யூ பேப்பர் உற்பத்தி செய்யும் தொழிலில் நீங்களும் ஈடுபடலாமே!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum