வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கிரெடிட் கார்ட் இருக்கிறதா... விட்டில் பூச்சி ஆகாதீர்!

Go down

கிரெடிட் கார்ட் இருக்கிறதா... விட்டில் பூச்சி ஆகாதீர்! Empty கிரெடிட் கார்ட் இருக்கிறதா... விட்டில் பூச்சி ஆகாதீர்!

Post by தருண் Thu Dec 12, 2013 9:23 am

வங்கிகள் பற்றிய வாசகர்களின் கேள்விகளில் பரவலாக
கிரெடிட் கார்ட்கள் குறித்த சந்தேகங்கள் நிறைய!
வங்கிகள் அள்ளி வழங்கும் சலுகைகளெல்லாம் எப்படி சாத்தியம்?
எங்களை அறியாமல் நாங்கள் ஏமாற்றப்படு கிறோமா..? என்ற
அடிப்படை சந்தேகங்கள் பலவும் இருந்தன.
அவற்றில் சிலவற்றுக்கு பதில் தரும் வகையில்
கட்டுரையாகவே தந்திருக்கிறோம்
.


ப ணத்தை இனி அச்சடிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்தால்கூட, மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது போலிருக்கிறது. அந்த அளவுக்கு கிரெடிட் கார்ட்களின் ஆக்கிரமிப்பு வந்துவிட்டது. திரும்பின திசையெல்லாம் இலவசம் இலவசம் என்று அறிவிப்பு வைத்து, நம் சட்டைப் பையில் ஒரு பிளாஸ்டிக் அட்டையைத் திணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அதைப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, நாம் பிளாஸ்டிக் வணிகத்தின் ஓர் உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.

கிரெடிட் கார்ட்களுக்கு ஆண்டுக் கட்டணம் முதல் வருடத்துக்கு இல்லையென்று தொடங்கியது, இப்போது ஆயுள் முழுவதும் கட்டணமற்ற கிரெடிட் கார்ட்கள் வரை வந்து நின்றிருக்கிறது. அதேபோல், எங்கள் கார்ட்களில் இதுவெல்லாம் இலவசம் என்ற வகையில் நிறைய கவர்ச்சிகளும் கூடவே வருகின்றன.

ஓர் எச்சரிக்கை! ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்ட் உலகில் இலவசம் என்ற எதுவுமே இல்லை. சொல்லப்போனால், எந்த வணிக ஒப்பந்தங்களிலுமே இலவசம் என்ற ஒன்று கிடையாது. ஓரிடத்தில் கொடுத்ததை வேறொரு இடத்தில் வாங்கிக்கொள்ளப் போகிறார்கள். அல்லது உங்களுக்கு ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்துவிட்டு பிற்பாடு பறித்துக் கொள்கிறார்கள். இதை மனத்தில் வைத்துக்கொண்டால், ‘ஆஃபர்’ மாயையும் விலகிவிடும்.

பொதுவாக, நிறைய கிரெடிட் கார்ட்களோடு ஒரு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு வருகிறது. இலவச விபத்துக் காப்பீடுதான் அது. ரூ.10 லட்சம் வரை இலவச விபத்துக் காப்பீடு என்ற சொற்களை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். கோல்டு, சில்வர் போன்ற கிரெடிட் கார்ட்களைப் பொறுத்து அதனதன் மதிப்புக்கு ஏற்ப, விபத்துக் காப்பீடுக்கான தொகை மாறுபடும்.

இந்த விபத்துக் காப்பீடுக்கு உண்மையில் பொருள் என்ன? இது அடிப்படையில், விபத்தினால் மரணம் மற்றும் உடல்ஊனம் ஏற்படும்போது கொடுக்கப்படுவது. இந்தக் காப்பீடு, அந்த கிரெடிட் கார்ட் வைத்திருப்பவரின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது. அதைவிட, தங்கள் வங்கிக் கடனை வசூலிக்க ஒரு பாதுகாப்பான ஏற்பாடாகவும் இது இருக்கிறது.

சரி, விபத்து ஏற்பட்டவுடனேயே இந்தக் காப்பீடு கிடைக்குமா? இங்கேதான் சிக்கலே ஆரம்பிக்கிறது. அல்லது கிரெடிட் கார்ட் நிறுவனங்களின் சாமர்த்தியம் ஆரம்பிக்கிறது. அது என்ன?

கிரெடிட் கார்ட் ஆக்டிவ்வாக இருக்கவேண்டும். அதாவது, கிரெடிட் கார்டை வாங்கி சும்மா பாக்கெட் டில் போட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணம் எடுத்திருக்க வேண்டும். அப்போதுதான், காப்பீடு இலவசம் செல்லுபடியாகும்.

வங்கியைப் பொறுத்து, அதன் அட்டையின் தன்மையைப் பொறுத்து, முந்தைய 89 நாட்களுக்குள் மூன்று முறை, ஐந்து முறை என்று பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

கிரெடிட் கார்ட் உலகத்தில் எதுவுமே இலவசம் இல்லை. ஒரு குறிப்பிட்ட கார்டைப் பொறுத்தவரை, விமானப் பயணம் செய்ய விமானப்பயணச் சீட்டை அந்த நிறுவன கார்ட் மூலம் வாங்கி இருந்தால்தான், இந்த இலவசக் காப்பீட்டுக்கு உரியவராவார்.

இந்த இடத்தில் இயல்பாக வரும் இன்னொரு கேள்வியும் உண்டு. உதாரணமாக ஒருவர் இதுபோன்ற விபத்து காப்பீடு வழங்கும் கிரெடிட் கார்ட் வைத்திருக்கிறார், கூடவே, தனிப்பட்ட முயற்சியில் விபத்துக் காப்பீடு எடுத்து வைத்திருக்கிறார். அப்படியானால், இரண்டு இடத்திலும் காப்பீடு கோரமுடியுமா? முடியாது. இரண்டிலும் உயர்ந்தபட்ச காப்பீட்டுத் தொகை என்ற ஒரு வரையறை வைத்திருப்பார்கள். அந்த உயர்ந்தபட்சக் காப்பீட்டுக்கு மேல் இழப்பு இருக்குமானால், அடுத்த காப்பீடு கோரலாமே தவிர, இரண்டையும் ஒரேசமயத்தில் கோர முடியாது.

கிரெடிட் கார்ட்களில் இன்னொரு சிக்கலும் உண்டு. குறிப்பிட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டில் சேவையாக வழங்கப்பட்ட காப்பீட்டுக்கான பிரீமியத்தை திடீரென்று ஸ்டேட்மென்ட்டில் வசூலிக்கத் தொடங்கி விட்டார்கள். என்ன வென்று விசாரித்தால், அந்த வங்கி குறைந்த பிரீமியத்தில், குழுக் காப்பீடு ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மூன்று மாத முடிவில் அனுப்பப்படும் அந்த வங்கியின் ஸ்டேட்மென்ட்டில், இந்த பிரீமியத் தொகை சேர்க்கப்பட்டிருக்கும். அந்தச் சேவை தேவையில்லை என்று தோன்றினால், உடனடியாக வங்கியை அணுகி அதை நீக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், நீங்கள் அந்தக் காப்பீட்டை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று தொடர்ந்து வங்கி, அந்த பிரீமியத்தைப் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

சமீபத்திய ஐ.ஆர்.டிஏ. (இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆஃப் இந்தியா) கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் வழங்கும் இலவச இன்ஷூரன்ஸ் திட்டங்களை உடனே நிறுத்தவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது இங்கே சொல்லவேண்டிய கூடுதல் தகவல்.

‘உபயோகிப்பாளர்களுக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரங்கள் நடக்கிறதா?’ என்று நீங்கள் கொந்தளித்துக் கிளம்ப முடியாது. எல்லாம் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுதான் நடக்கிறது. குட்டி குட்டி எழுத்துக்களில் ஸ்டேட்மென்ட்டின் ஓர் ஓரத்தில் அச்சிடப்பட்டிருக்கும். உடனே, கிரெடிட் கார்ட் தகவல் புத்தகம் அல்லது ஸ்டேட்மென்ட்கள் வரும்போது, அதை முழுக்கப் படித்தபின் அடுத்தமுறை கார்டைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். அது குட்டி எழுத்தல்ல... உங்கள் தலையெழுத்தாகவும் இருக்கக்கூடும்.

வாழ்நாள் இலவச கிரெடிட் கார்ட்கள்

இ ன்று பல கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்ட்களை வழங்கத் தொடங்கியிருக்கின்றன. இதுநாள்வரை, 750 ரூபாயில் தொடங்கி 2,000 ரூபாய் வரை ஆண்டுக் கட்டணமாக ரகம் வாரியான தொகைகளை வசூலித்து வந்தன. அதோடு, சேரும் கட்டணமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த வங்கிகள் பெற்றுவந்தன.
இந்தக் கட்டணத்தைக் கட்டினால்தான், கிரெடிட் கார்டைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இருந்தது. ஆனால், இன்று பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏனிந்த மாற்றம்?

ஐந்தெழுத்து வங்கி ஒன்று இதுபோன்ற வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டை வழங்குகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரெடிட் கார்ட் என்று மக்களால், தேர்வு பெற்றுள்ளதால், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சலுகையைத் தருகிறோம் என்கிறார்கள் அந்த நிறுவனத்தார்.

கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால், விசாரித்தால் வேறு உண்மைகள் விளங்குகின்றன.

இன்று இந்தியாவில் கிரெடிட் கார்ட்கள் வழங்குவதில் நடைபெறும் மிகப்பெரும் போட்டியில், அந்த வங்கி முந்தியிருக்கிறது. கிரெடிட்கார்ட் துறை தனியாகத் தொடங்கப்பட்டு, நான்கே ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 லட்சம் கிரெடிட் கார்ட்களை இந்த வங்கி வழங்கியிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து லட்சம் கார்ட்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறது.

பெரிய பிரபல வங்கிகள்தான் என்றில்லை. சிறு சிறு வங்கிகள்கூட கிரெடிட் கார்ட்கள் வழங்கத் தொடங்கிவிட்டன. அதனால் போட்டியும், சலுகைகளும் விரிந்திருக்கின்றன.

சரி, விஷயத்துக்கு வருவோம். வாழ்நாள் இலவச கார்ட் என்ற உத்தியால், வங்கிக்கு நஷ்டம் இல்லையா?
கிரெடிட் கார்டில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சொல்லப்போனால், அந்த வங்கி லாபத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும், இந்த உத்தி மூலம் அது பெற்றிருக்கும் புது கார்ட்தாரர்களில் 50 சதவிகிதத்தினர் பயன்படுத்தினாலேயே அதன் வருமானமும் லாபமும் எவ்வளவு பெருகும் என்று யோசித்துப் பாருங்கள்.

கிரெடிட் கார்டில் புதியவர்களைச் சேர்ப்பது மட்டும்தான் பெரும் சவால்! அதைக் கடந்துவிட்டால், கார்ட்டைப் பயன்படுத்த வைப்பது சுலபம். அந்தத் திட்டங்கள் வங்கிகளுக்கு லாபத்தை அள்ளிக்கொட்ட ஆரம்பித்துவிடும். அதனால், கார்ட்தாரர்களைச் சேர்க்கும்போது சலுகைகளை அள்ளி வீசுவது என்பது ஓரு வியாபார உத்தியே. அது நீண்டகாலச் சிந்தனை அடிப்படையிலானது.

யோசித்துப் பாருங்கள். கிரெடிட் கார்டில், நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு போடப்படும் வட்டி, 2.95%. இது ஆண்டு வட்டியல்ல, மாத வட்டி. அதாவது உங்களுக்குக் கிடைக்கும் சலுகை நாள்களுக்குப் பின், குறிப்பிட்ட தேதியில் பணத்தைக் கட்டவில்லையென்றால், இந்த வட்டி போடப்படும். அதுவும் பொருளை வாங்கிய முதல் நாளில் இருந்தே இந்த வட்டி கணக்கிடப்பட்டுவிடும்.

இது மாத வட்டி மட்டுமல்ல, கூட்டு வட்டியும்கூட. கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டுப் பாருங்கள். மாதத்துக்கு 2.95% என்றால், ஆண்டு ஒன்றுக்கு 35% முதல் 40% வரை அநியாய வட்டி! இவ்வளவு பெரிய வருமானம் வங்கிக்குக் கிடைக்கும்போது, உங்களுக்குக் கொஞ்சம் சகாயம் செய்யக்கூடாதா என்ன?
என்ன... நாம் கொஞ்சம் கரெக்ட்டான நபர் என்றால், தப்பித்தோம். சரியான தேதிக்கு, கிரெடிட் கார்ட் பணத்தைக் கட்டாத நிலையில், மேற்சொன்ன வட்டி மட்டுமல்ல, அதற்கு மேல் தாமதக் கட்டணம் என்று 250 ரூபாயைப் போட்டுத் தாளித்து விடுவார்கள். அதையும் நீங்கள் கட்டத் தவறினால், அசல் தொகை, அதற்கு வட்டி, தாமதக் கட்டணம் எல்லாவற்றுக்கும் 2.95% வட்டி போட்டு அடுத்த ஸ்டேட்மென்ட் வந்துவிடும். இதுதான் வம்பை இலவசமாக வாங்குவது!

அதனால், இங்கே இலவசம் என்பது விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் ஒருவகையான விற்பனை உத்தி. உங்கள் சிண்டைப் பிடித்துக்கொள்ள ஒரு வழி. உங்கள் சாமர்த்தியம் செல்லுபடியானால் தப்பித்தீர்கள். இல்லையேல், சிண்டோடு தலையையும் சேர்த்து அடகு வைக்க வேண்டியதுதான்.

5% பணம் வாபஸ் வலை!

ச மீபகாலமாக பல வங்கிகள் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும் பொருட்களுக்கு 5% பணம் வாபஸ் என்று தொலைக்காட்சி, பத்திரிகை, ஹோர்டிங்குகள் மூலம் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது. பலன் இல்லாமல் எதையுமே கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் செய்வதில்லை. அந்த விளம்பரங்களை உத்தரவு போல ஏற்று செயல்படுத்தி, கிரெடிட் கார்டில் செலவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30% என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

‘பொருட்கள் வாங்கியதற்கு பணம் செலுத்திவிடுகிறோம். இந்த 5% என்பது சிறப்புத் தள்ளுபடி போல தானே எனக்கு கிடைக்கிறது...’ என்கிறீர்களா..?

ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை இப்படி பணம் வாபஸ் பெறமுடியும். ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பாருங்கள். 5% பணம் வாபஸ் சலுகையான ரூபாய் 20,000 பணம் கிடைக்க நீங்கள் எவ்வளவு செலவு செய்யவேண்டும் தெரியுமா? 4 லட்ச ரூபாய்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்குச் சராசரி கிரெடிட் கார்ட் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.24,000தான். ஆனால், நீங்கள் பண வாபஸ் சலுகை பெறவேண்டும் என்ற ஆசையில் அதிகம் செலவு செய்ய ஆரம்பிக்கிறீர்கள். தேவையோ இல்லையோ ஐந்து சதவிகிதத்துக்கு ஆசைப்பட்டு தள்ளுபடியில் கிடைக்கும் பல பொருட்களையும் 95% கூடுதல் செலவில், பட்ஜெட்டில் இல்லாத செலவில் கரைப்பீர்கள். அதிகம் செலவு செய்யச் செய்ய அதிகம் கடனும் மண்டைக் குடைச்சலும்தான் வந்து சேரும்.

இதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை எடுப்பது என்கிறார்கள். கிரெடிட் கார்ட் என்பதே பொரி தின்றவன் வாய்மாதிரிதான். எங்கும் எப்போதும் கையில் காசே இல்லையென்றாலும் தைரியமாக ஷாப்பிங் போக முடியும் என்ற மனநிலையை மாற்றுவது அத்தனை சுலபமல்ல... செலவு செய்ய ஆரம்பித்தபின்னால், உங்களால் நிறுத்தவே முடியாது.

ஆனால், வழக்கம்போல், கறார் பேர்வழிகள் இங்கேயும் பிழைத்துக்கொள்வார்கள். கறாராக ஸ்டேட்மென்ட் குறிப்பிடும் நாளில் பணத்தை ஒழுங்கு மரியாதையாகக் கட்டிவிட்டால், உண்மையில் இந்த ஒரு சதவிகிதமோ ஐந்து சதவிகிதமோ நிச்சயம் உங்களுக்கு லாபம்தான். நீண்ட நாட்களாக வாங்கத் திட்டமிட்டிருந்த பர்ச்சேஸை இந்த காலகட்டத்தில் செய்து அதற்கான பணத்தையும் உடனே கட்டினால் புத்திசாலித்தனம்தான்.

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவது சில வசதிகள் தரும். அந்த நேரமெல்லாம் கறார்தனம் தலைதூக்கவேண்டும். அதுதான், வசதியை வசதியாகப் பயன்படுத்திக்கொள்ள ஒரே வழி!


கிரெடிட் கார்ட் இருக்கிறதா... விட்டில் பூச்சி ஆகாதீர்! P29


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum