வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்

Go down

கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்  Empty கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்

Post by தருண் Tue Jan 14, 2014 8:54 am

மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை அதனை பயன்படுத்தியவர் ஒருவர் கவனித்தார். அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்து 'ஸ்கிம்மர்' என்ற அம்சம் தான் அது.

ஸ்கிம்மர் என்பது நீங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்கிம்மர் உங்களுடைய அட்டை பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். இந்த தகவல்கள் வேறொரு வடிவத்தில் உங்களுடைய பணத்தை திருட பயன்படுத்தப்படும்.

மேலே படித்த விஷயத்தில், அந்த இயந்திரத்தை பயன்படுத்தியவர் உடனடியாக சம்மந்தப்பட்ட (Market Security) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அந்த ஸ்கிம்மர் எவ்வளவு நாட்களாக தொடர்புடைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றோ அல்லது எத்தனை கிரெடிட் கார்டுகளை பிரதி எடுத்திருந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை!!

மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் வாடிக்கையாளர்களையும் கூட இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் பயப்படுத்துகின்றன. நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டின் எண் வேறொருவரிடம் இருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கார்டு வழங்கியவர்களுக்கு போன் செய்யவும், போலீஸாரிடம் தகவல்களை கொடுக்கவும் வேண்டும். ஆனால் இதற்குள்ளாக உங்கள் கார்டை வைத்திருப்பவர் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

எனவே இங்கே தரப்பட்டுள்ள சில தவறான பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

ஸ்கிம்மர்கள் இருப்பதை கண்டறியாமல் இருத்தல்

உங்களுக்கான தனிநபர் அடையாள எண்ணை (PIN) கேட்கும் ஏடிஎம் அல்லது விற்பனை புள்ளிகளில் ஸ்கிம்மிங் கருவிகள் பொருத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் கார்டை தேய்க்கும் முன்னர் சற்றே கவனிப்பது நல்லது. 'ஏதாவது வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகிறதா என்று எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது நல்லது. அதாவது பசை அல்லது உராய்வு ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளனவா என்றும் அல்லது தனிநபர் அடையாள எண்ணை அடிக்கும் இடத்தில் ஏதாவது அடையாளங்கள் உள்ளனவா என்றும் அல்லது நீங்கள் கார்டை சொருகும் இடத்தில் ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்' என்கிறார் மனீஷா தாகோர்.

நீங்கள் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களுக்குள் செல்லும் போது இந்த கவனத்தை சற்றே அதிகமாக காட்ட வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் உள்ள இயந்திரங்களில் எளிதில் ஏதாவது ஒரு ஸ்கிம்மரை இணைத்து விட முடியும். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வேறு ஒரு ATM-ஐ பயன்படுத்துங்கள்.

இண்டர்நெட் மையங்களில் வங்கி பரிமாற்றம் செய்தல் நீங்கள்

ஃபேவரிட்டாக சென்று வரும் இணையதள மையங்களில் வை-ஃபை வசதிகள் இருந்தாலும் கூட, அந்த இடங்களில் உங்களுடைய வங்கி பரிமாற்றங்களை செய்ய வேண்டாம். நீங்கள் ஓபன் வயர்லஸ் நெட்வொர்க்கை பயன்படுத்தினால், ஹாக்கர்ஸ் உங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களையும், கடவுச்சொற்களையும் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களையும் எளிதில் சேகரித்து விடுவார்கள். எனவே, 'உங்களுடைய வங்கி பரிமாற்றங்கள் அல்லது ஷாப்பிங் செய்ய இணையதள மையங்கள் சரியான இடம் இல்லை என்பதை புர்pந்து கொள்ளுங்கள்' என்று பிரபலமான பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிமான்டெக் (Symantec)-ஐ சேர்ந்த மரியான் மெர்ரிட் என்ற இணைய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிடுகிறார்.

நீங்கள் பயன்படுத்துவது HTTP மற்றும் HTTPS என எந்த வகை இணைய தளமாக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் காஃபி ஷாப் அல்லது இணைய தள மையங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பது உங்கள் கையில் இல்லை. 'மேன் இன் தி மிடில்' என்ற வகை தாக்குதல்களின் மூலம் ஹாக்கர்கள் உங்களுடைய கடவுச் சொல், அட்டை எண் மற்றும் பிற தகவல்களை பொது நெட்வொர்க்கில் இருந்து எளிதில் எடுத்து விடுவார்கள். எனவே, காஃபி ஷாப் போனால் காஃபி மட்டும் குடியுங்கள், வங்கி கணக்கை பாதூகப்பாக வீட்டில் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிஷ்ஸிங் (Phishing) செய்திகளுக்கு பதில் அனுப்புதல்

உங்களுடைய மொபைலுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியில், நீங்கள் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கிற்கு சென்று பார்க்குமாறும், இடையில் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தால், அங்கே உங்களுடைய பகுத்தறிவை சற்றே பயன்படுத்துங்கள். இதே போன்ற செய்திகள், முகநூல், டுவிட்டர் அல்லது பிற வகை தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியாகவும் வரலாம்.

'அடையாளம் தெரியாத வகையில் எந்த ஒரு தொலைபேசி அழைப்போ, மின்னஞ்சலோ அல்லது சமூக வலைத்தள செய்தியோ வந்தால் அதை பிஷ்ஸிங் தாக்குதல்' என்று சொல்லலாம் என்று மாஸ்டர் கார்டு வேர்ல்டுவைடு அமைப்பின் பேமண்ட் சிஸ்டம் இன்டிகிரிட்டி பிரிவின் துணைத்தலைவர் எரிக் முய்லர் சொல்லுகிறார். 'இந்த செய்திகளை சந்தேகக் கண்ணுடனேயே அணுகுங்கள், குறிப்பாக அவை உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஏதாவதொரு இணைய தளத்திற்கு தொடர்பு கொள்ளச் சொல்லியோ வரும் போது' என்கிறார் அவர். ஏனெனில், இந்த பிஷ்ஸிங் தகவல்களுக்கு பதிலாக நாம் சரியான தகவல்களை அனுப்பினால், எந்த ஒரு பிஷ்ஸிங் அனுப்பிய நபரும் எளிதில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தகிடுதத்தங்கள் செய்து விடுவார்.

உங்களுக்கு வந்த செய்தி சரியானது என்றோ அல்லது சந்தேத்தை தூண்டுவதாகவோ, இருந்தால் உங்களுக்கு கார்டு வழங்கிய நிறுவனத்தினருடைய வாடிக்கையாளர் மைய எண்ணுக்கு (அட்டையின் பின்பகுதியில் இருக்கும் தொடர்பு எண்) உடனடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.

உரிமைகள் மற்றும் கடமைகளை மறுத்தல்

நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டை தொலைத்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டதாக சந்தேகப்பட்டாலோ அல்லது உங்களுடைய அட்டை எண்ணை யாரோ ஒருவர் இணையத்திலிருந்து எடுத்து விட்டதாகவோ நீங்கள் நினைத்தால், உடனடியாக கார்டை வழங்கியவருக்கு தகவல் கொடுங்கள். இந்த வகை ஏமாற்று வேலைகளிலிருந்து விடுபட கிரெடிட் கார்டுகள் மிகவும் அதிகமான பாதுகாப்பை கொடுக்கின்றன.

பெரும்பாலான கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராட் பாதுகாப்புகளை (Zero-Liability Fraud Protection) வழங்குகின்றன. மேலும், உங்களுயை அட்டை தொலைந்து விட்டது அல்லது திருடப்படடு விட்டது என்று நீங்கள் ஒருமுறை தகவல் தெரிவித்து விட்டால் போதும், அதன் பின் அந்த கார்டு மூலம் நடக்கும் எந்தவிதமான பரிமாற்றங்களுக்கும் சட்டப்படியாகவே நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். இந்த வகையான பரிமாற்றங்களுக்கு அதிகபட்ச வரம்புகளும் சட்டப்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையிலும் உங்களுடைய உரிமைகளும், கடமைகளும் மாறுபட்டிருக்கின்றன. உங்களுடைய டெபிட் கார்டுகளுக்கு ஜீரோ-லையபிலிட்டி ஃப்ராடு பாதுகாப்பு இருந்தாலும், தனிநபர் அடையாள எண் அல்லது ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்காகவே சில பிரத்யோகமான சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன. யாராவது ஒருவர் உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு பொருட்களை வாங்கும் போது, நீங்கள் அது தொலைந்து போன தகவலை தெரிவிக்காமல் இருந்தால் முழுப்பொறுப்பும் உங்களையே சேரும். மேலும், 60 நாட்களுக்குள்ளாக நீங்கள் தகவல் அளிக்காவிட்டால் உங்கள் கதி அதோகதி தான். இது மட்டுமல்லாமல், உங்களுடைய அட்டையத் திருடியவர், உங்கள் கணக்கை முழுமையாக சுரண்டி விட்டால், உங்கள் வங்கி விதிக்கும் அபராதத்தைக் கூட உங்களால் கட்ட முடியாது.

இலவசமான ஃப்ராடு பாதுகாப்பை பயன்படுத்தாமல் இருத்தல்

எண்ணற்ற கார்டு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலவசமாகவே ஃப்ராடு பாதுகாப்புகளை வழங்கி வருகின்றன. இதற்கு சிறிதளவு விசாரணையோ அல்லது பதிவு செய்து கொள்ளவோ வேண்டும். உதாரணமாக, விஸா அட்டை வைத்திருப்பவர்கள் இணைய வழியாக வர்த்தக பரிமாற்றங்கள் செய்யும் போது, வெரிஃபைடு பை விஸா (Verified-by-Visa) என்ற திட்டத்தின் படி அவர்கள் மற்றொரு இரகசிய கடவுச் சொல்லை டைப் செய்ய வேண்டியிருக்கும். அதே போல தான் மாஸ்டர் கார்டு செக்யூர் கோடு (MasterCard SecureCode) என்ற கடவுச் சொல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்காக செயல்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்துபவர், இணைய வழியில் வர்த்தகத்தை முடிக்கும் போதும் சரியான தனிநபர் அடையாள எண்ணை டைப் செய்ய வேண்டும் என்று கேட்கும்.

மற்றுமொரு வழிமுறை : சிட்டிப பேங்க் அல்லது பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்றவை இவ்வகையான இணைய வழி பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவோ 'விர்ச்சுவல்' கிரெடிட் கார்டுகள் அல்லது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டால், மறுமுறை பயன்படுத்த முடியாது. எனவே, இந்த கார்டுகளை எங்கே தேய்த்தோம் அல்லது யார் எனது பணத்தை திருடுவது என்று பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இலவசமான கணக்கு எச்சரிக்கை தகவல்கள் கொடுக்கும் வசதிகளில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிக்க முடியும். இந்த வசதிகளில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக எந்தவிதமான பரிமாற்றங்கள் அல்லது மாற்றங்கள் உங்களுடைய அட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், அல்லது ஒரு டாருக்கும் அதிகமாகவோ அல்லது வெளிநாடுகளில் பொருட்களை வாங்கினாலோ அந்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாக வந்து விடும்.

உங்களுக்கு கார்டு வழங்கும் நிறுவனத்தினர் இது போன்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்களா அல்லது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அவர்களுடைய இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

-Thatstamil.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum