Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கல்விக் கடன் Vs முதலீடு: உயர் கல்விக்கு உங்கள் சாய்ஸ் எது?
Page 1 of 1

சா.ராஜசேகரன் www.wisdomwealthplanners.com, நிதி ஆலோசகர், புதுச்சேரி
மாறி வரும் பொருளாதார நிலையை நன்கு உணர்ந்த இந்தக் காலத்து பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வியைத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தான் பெற்ற கஷ்டங்கள், தன் பிள்ளைகள் பெறக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு பெற்றோரும் மிக கடினமாக போராடித்தான் தங்கள் குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைக்கிறார்கள்.
இன்றைக்கு கல்வித் தரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், கல்விக் கட்டணம் அதைவிட வேகமாக உயர்ந்து வருவது பெற்றோர்கள் இடையே பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் அன்றைக்கு கல்லூரிப் படிப்புக்கு ஆன செலவு இன்று மழலைக் கல்விக்கே சரியாகப் போய்விடுகிறது.
இன்று மாணவர்கள் விரும்பி படிக்கும் படிப்புகளில் பொறியியல், மருத்துவம், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் என பல படிப்புகள் முன்னிலையில் இருக்கின்றன. கூடவே பட்டப் படிப்பு முடித்தவுடன் ஐஏஎஸ் , ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கும் தயாராக வேண்டியிருக்கிறது. படிப்பு மற்றும் பயிற்சிக்கு ஏற்றாற்போல் கல்வி செலவும் அதிகமாக உள்ளது.
இந்தக் கல்விக் கட்டண செலவை கல்விக் கடன் வாங்கி எளிதில் சமாளித்துவிட முடிகிறது என்றாலும், இந்தக் கல்விக் கடனானது, எல்லா படிப்புகளுக்கும் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. படிப்பை பொறுத்தே கிடைக்கும் தொகையானது மாறுபடும். மேலும், 100 சதவிகித செலவுக்கும் கல்விக் கடன் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.
உயரும் கல்வி பணவீக்க விகிதம்!
ஐந்து வருடத்துக்கு முன்னர் (அதாவது, 2010-ல்) மருத்துவப் படிப்புக்கான செலவு செய்த தொகையைவிட இன்று பன்மடங்கு உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியில் (அனைவருக்கும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்து விடாதே?) மருத்துவ படிப்புக்கு, 2010-ல் சுமார் ரூ.3 லட்சம் வருடத்துக்கு செலவானது எனில், தற்போது (2015-ல்) ஒரு வருடத்துக்கு ரூ.6 லட்சத்துக்கும் மேல் ஆகிறது. சுமார் 15 சதவிகிதத்தில் கல்விக் கட்டணம் உயர்ந்து வருகிறது. இது குறைந்தபட்சம் மட்டுமே. சில கல்லூரிகளில் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும் உயர்ந்துள்ளது. இது தவிர, நன்கொடையாக பல லட்சங்கள் வசூலிக்கப்படுகின்றன.
ஆக, இன்றைக்கு சராசரி மாணவன் ஒருவன் அரசுக் கல்லூரி இல்லாமல் பிற தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க குறைந்தது ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இதில் மிகப் பெரிய பிரச்னை என்னவெனில், தன் குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களின் கையில் இல்லை. என்ன படிக்கவேண்டும், எங்கு படிக்கவேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கின்ற னர். எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை படிக்க வேண்டும் என்பதை தங்கள் சக நண்பர்களை பார்த்தும், இன்றைக்கு சமுதாயத் தில் எது அந்தஸ்தை தருகிறது என்பதைப் பொருத்தும் முடிவு எடுக்கின்றனர்.
ஆக, இத்தகைய மாற்றத்தை வேறு வழி இல்லாமல் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையில் பெற்றோர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இன்றைய பெற்றோர்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்தவே சவாலாக இருக்கும் போது, இது ஒரு மிகப் பெரிய சவாலாகவே அவர்களுக்கு இருக்கும்.
ஏன் கல்விக் கடன்?
இன்றைக்கு உயர் கல்வி செலவுக்கு கல்விக் கடன் வாங்குவதில் உள்ள சாதக, பாதகத்தை ஓர் உதாரணம் மூலம் காண்போம்.
கல்விக் கடனுக்காக செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டாலும், அதற்காக கடன் வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காரணம், கடன் வாங்கிய தொகையில் பெரும்பகுதி வட்டிக்காகவே செல்கிறது. ஒருவர் மேலே உள்ள அட்டவணைப்படி, ரூ.30 லட்சம் கல்விக் கடன் வாங்கியிருந்தால் அவர் கடனை எட்டு ஆண்டு களில் திரும்பக் கட்டும்போது (8 ஆண்டுகளுக்கு திரும்பக் கட்டும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும் என்பதால் 8 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது!) சுமார் ரூ.17 லட்சம் வட்டியாக கட்ட வேண்டியிருக்கும். இந்த வட்டிக்கு 30% வரி வரம்பில் இருந்தால், அதிகபட்சம் ரூ.5.10 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். மீதி ரூ. 11.9 லட்சம் தேவை இல்லாத வட்டிதானே?
கல்விக் கட்டண சுமையை குறைக்கவும், பிள்ளையின் கல்விக் கனவை நிறைவேற்றவும், கல்விக் கடன் வாங்காமல், செலவுக்கு முன்னரே திட்டமிடு வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
எப்போது திட்டமிடுவது?
உயர் கல்விக்கான முதலீட்டுத் திட்டத்தை, பெற்றோர்கள் குழந்தை பிறந்த கையோடு திட்டமிட தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் உங்களது குழந்தையின் மழலைக் கல்வி, ஆரம்பக் கல்வி, நடுநிலைக்கல்வி, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, என்று ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்கள் தனித்தனியாக ஒரு தொகையை தீர்மானித்து அதற்கேற்ப ஏற்ற முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கும் முதலீடானது, இன்றைக்கு எதிர்கொள்ளும் பணவீக்கத்தின் உயர்வை கருத்தில் கொண்டு, அதற்கேற்றார்ப்போல், உங்களது முதலீட்டு தொகை வளர்ச்சி அடைவதாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் கல்விக் கனவு மாறும்போது அதற்கு ஏற்றாற்ப் போல், கல்வித் தொகை இலக்கை மாற்றி அமைக்கும் நிலையில் இருத்தல் வேண்டும். (கூட்டவோ அல்லது குறைக்கவோ) முதலீட்டின் வளர்ச்சி, நீண்ட காலத்தில் தொடர்ச்சியாக கூட்டு வட்டியின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.
குழந்தையின் கல்விக்கான முதலீட்டுத் திட்டம், ஆயுள் காப்பீட்டுடன் இல்லாமல் (எண்டோவ்மென்ட் பாலிசி தவிர்க்கவும்) முழுக்க முழுக்க முதலீட்டுத் திட்டமாக இருப்பது மிகவும் நன்று.
குழந்தையின் குறுகிய கால செலவுக்காக - குறுகிய கால முதலீட்டு திட்டங்களாக வங்கி வைப்பு நிதி, அஞ்சல் சேமிப்பு என உள்ளன.
நீண்ட காலத்துக்கு (10 வருடத்துக்கு மேல்) என்றால் கண்டிப்பாக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
ஒரே முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யாமல், பல திட்டத்தில் பிரித்து முதலீடு செய்து, அத்தகைய தொகையை தங்களின் குழந்தையின் தேவை நெருங்கும் வரை அதனை தொடர வேண்டும்.
ரிஸ்க் உள்ள முதலீட்டு திட்டம் என்றால் இலக்கு தொகை கிடைத்தவுடன் அல்லது தேவைக்கு சில ஆண்டுகளுக்கு முன் லாபத்தில் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பான ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்படி குழந்தையின் ஒவ்வொரு காலத்தேவைக்கு ஏற்ப முதலீட்டை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆக, ஆரம்ப கல்விக்கா, உயர் கல்விக்கா? எப்போது தேவை என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ஆரம்ப கல்வி என்பது, 3 அல்லது 4 வயதில் செய்யும் செலவு. அதுவே உயர் கல்வி என்பது பிள்ளை களின் 18-வது வயதில் நடக்கும் நிகழ்வாகும். ஆக, இத்தகைய நிகழ்வுக்கு, இன்றைய நிலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தீர்மானித்து அதற்கான பணவீக்கத்தை கருத்தில் கொண்டு முதலீட்டின் தன்மையையும், தொகையையும் தீர்மானிக்க வேண்டும்.
உயர் கல்விக்கு 18 ஆண்டுகள் கழித்து எவ்வளவு செலவாகும் என்பதை அருகில் உள்ள அட்டவணையில் தந்திருக்கி றோம். தோராயமாக பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இந்த அட்டவணையைப் பார்த்தவுடன் பல பெற்றோருக்கு பயம் வந்துவிடும். பணவீக்கம் சுமார் 10% என்று எடுத்து கொண் டாலே இப்படி இருக்கிறதே, இதுவே 15%, 20%, 25% என்று உயர்ந்துகொண்டு போனால், வருங்காலத்தில் நமது குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும் என்று திகைத்து போவோம்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, பெற்றோர்கள் தாமதிக்காமல், குழந்தை பிறந்தவுடனே உங்கள் தகுதிக்கேற்ப முதலீட்டை ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்போதுதான் கூட்டு வட்டி வலிமையின் மூலமாக நீங்கள் சேர்த்து வைக்கும் தொகை குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தையும் தாண்டி, நல்ல லாபத்தை அடைய முடியும்.
இதற்கு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள மேற்கண்ட அட்டவணையைப் பாருங்கள். உதாரணமாக, முதலீட்டு காலம் 18 ஆண்டுகள் (அதாவது, 216 மாதங்கள்) என்று எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.ஒரு குழந்தையின் உயர் கல்விக்கு தேவையான தொகை ரூ. 50 லட்சம் எனில், அதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.6,598 முதலீடு செய்யவேண்டும். இது 12% வளர்ச்சி அடைந்தால், உங்களுக்குத் தேவையான ரூ.50 லட்சம் பெறலாம். 18 ஆண்டுக்கு (216 மாதம்), நீங்கள் சேமிக்கும் தொகையோ ரூ.14 லட்சம்தான்.ஆனால், உங்களுக்கு கிடைப்பதோ ரூ.50 லட்சம். இதுதான் கூட்டு வட்டியின் அதிசயம்.
ஆகவே, முன்னரே திட்டமிட தொடங்கினால், உங்கள் முதலீட்டுத் தொகை குறைவாகவும், அதே சமயம் உங்கள் முதலீட்டுத் தொகை அதிக வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தை வளர வளர கல்வித் தேவை நெருங்குவதால் மிகுந்த பொறுப்பும், பயமும் உங்களை பற்றிக் கொள்ளும். ஆகவே வெகு விரைவாக, சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். உங்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றாற்போல் முதலீட்டை மாற்றி அமைத்து கல்விக் கடனை முழுமையாக தவிர்க்க முடியும் அல்லது கல்விக் கடனை குறைவாக வாங்கிக் கொள்ள முடியும். அப்போது பிள்ளைகளின் உயர் கல்வி ஆசையை சுலபமாக நிறைவேற்றலாம்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல, சிறு கன்று பெரிய மரமாவதுபோல, உங்களது சிறு முதலீடு என்பது நீண்ட கால கூட்டு வட்டி வளர்ச்சியில், உங்களின் பிள்ளையின் கல்வி கனவை நிறைவேற்றும்.
ந.விகடன் சா.ராஜசேகரன் www.wisdomwealthplanners.com, நிதி ஆலோசகர், புதுச்சேரி

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?
» கல்விக் கடன் உதவி செய்யும் அமைப்பு
» கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?
» இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum