Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?
Page 1 of 1
கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?
சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு வழக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கக்கூடியது. அரசுடமை வங்கி ஒன்றில் கல்விக் கடன் பெற்று பொறியியல் படித்துள்ள மாணவர் ஒருவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ‘கடன் பெற்று சரிவர திருப்பிச் செலுத்த தவறியவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் என்னைப் போன்ற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக் கடன் பெற்றவர்கள் படிப்பை முடித்து 12 மாதத்துக்குள் அல்லது பணியில் சேர்ந்த 6 மாதத்துக்குள் தவணைத்தொகை செலுத்த வேண்டும் என நிபந்தனைகள் உள்ளன. என்னைப் போன்ற சில மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ள சூழலில், வங்கிப் பணிக்கான தேர்வில் பங்கேற்க தடை விதித்திருப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடியது. கல்விக் கடன் பாக்கி வைத்துள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என மனுவில் சொல்லியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல கல்விக் கடன் கொடுக்கல் வாங்கலில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.
மதிப்பெண் குறைவு, நல்ல கல்லூரி இல்லை, திருப்பிச் செலுத்தமாட்டார்கள் என பல காரணங்களைச் சொல்லி, கல்விக் கடன் மறுக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதே நேரத்தில் வங்கித் தரப்பில் சொல்லப்படும் காரணங்களும் யோசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.
பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்டாலே, இவன் திருப்பித் தருவானா என ஒன்றுக்கு பலமுறை யோசித்தே தருகிறார்கள். பல லட்சம் கொடுக்கும் வங்கிக்கு நாம் நம்பிக்கையை ஏற்படுத்துவதும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதும் நம்முடைய பொறுப்பே. இவை அனைத்தையும் தாண்டி கல்விக் கடன் கொடுப்பதிலும், வாங்குவதிலும் என்ன சிக்கல், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கல்விக் கடன் கிடைத்துவிடுகிறதா, கடன் வாங்கும் அனைவரும் திருப்பிச் செலுத்துகிறார்களா, கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன, தேவையான ஆவணங்கள் எவை, செலுத்தக்கூடிய தொகைக்கு வரிச்சலுகை உள்ளதா என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலைத் தேடி ஓடியபோது கிடைத்த தகவல்கள்...
என்ன தகுதி, எவ்வளவு கடன்?
உயர்கல்விக்கு அனுமதிக்கப் பட்ட அனைவருமே கல்விக் கடன் பெற தகுதியுடையவர்கள் தான். இந்தியாவுக்குள் படித்தால் ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படித்தால் ரூ.20 லட்சம் வரையிலும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. சுமார் 12 - 14 சதவிகிதம் வரை வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இந்தக் கடனை, படிக்கும்போதே செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. படிப்பு முடித்த ஓராண்டில் இருந்து அல்லது வேலையில் சேர்ந்த ஆறு மாதத்திலிருந்து திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். சுமார் ரூ. 7 லட்சம் வரை கடன் வாங்கியோர் அதிகபட்சம் 10 வருடங்களுக்குள்ளும், அதற்கு மேல் வாங்கியவர்கள் 15 வருடங்களுக்குள்ளும் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள்?
கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தோருக்கு, ஒரு மாதத்துக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள், கல்லூரி போனோஃபைட் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், பான் கார்டு போன்ற சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் கல்விக் கடன் பெறுவதில் சிரமம் இருக்காது. திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் அசலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் இல்லை. ஆனால், வட்டிக்கு, 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு.
சிக்கலைத் தவிர்க்கலாம்!
‘‘கல்விக் கடன் மட்டும் அல்ல, எந்த ஒரு கடனையும் பெறுவதற்கான தகுதிகளை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள். தகுதிக்கு ஏற்ப கடனைப் பெற்று, வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தவணைகளைத் தவறாமல் கட்டினால், கடன் கொடுப்பதிலோ வாங்குவதிலோ பிரச்னை இருக்காது’’ என, கல்விக் கடன் குறித்த நிஜத்தை சொன்ன நிதி ஆலோசகர் ஒருவர், ‘‘ஒவ்வொரு பொதுத் துறை வங்கிக்கும் கடன் குறித்த ஓர் இலக்கு இருக்கிறது. உரிய சான்றிதழ்களை சரியான முறையில் கொண்டுவரும் பட்சத்தில், விதிமுறைகளை மீறிய சலுகைகளை எதிர்பார்க்காத நிலையில், கல்விக் கடன் கொடுப்பதிலோ, வாங்குவதிலோ பிரச்னை இருக்காது’’ என கல்விக் கடன் வழங்குவதில் உள்ள சூட்சுமத்தையும் சுட்டிக்காட்டினார்.
வங்கி நிலைப்பாடு!
‘வாங்கக்கூடிய கடன்தொகை பெரும்பாலும் திரும்பி வருவது இல்லை’ என்பதே வங்கிகளின் குற்றச்சாட்டு. ‘வாங்கிய கடனுக்கு அரசு எப்போது தள்ளுபடி அறிவிக்கும்?’ என கடன் வாங்கிய பெற்றோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிலரால்தான், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மீது வங்கிகளுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்படுகிறது. கல்விக் கடன் கொடுப்பதில் வங்கியின் அணுகுமுறை குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணனிடம் கேட்டோம்.
‘‘கடன் கேட்டு வருபவர்களில் முழு தகுதியும் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், கடன் வாங்கும் அனைவரும் சரியாகத் திருப்பிச் செலுத்துகிறார்கள் எனச் சொல்ல முடியாது. கடன் வாங்கிய நபர் தன் படிப்பை முடித்துவிட்டாரா, வேலையில் சேர்ந்துவிட்டாரா, அவருடைய தற்போதைய ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸ் என்ன என கடன் வாங்கிய ஒவ்வொருவரையும் நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
சூழ்நிலை காரணமாக, வாங்கிய கடனை கட்ட இயலாத நபர்களை தொடர்புகொண்டு, அவர்களுக்கு உள்ள பிரச்னை, அதைத் தீர்ப்பதற்கு என்னென்ன வழிகளை மேற்கொண்டுள்ளனர் என அறிந்து அவர்களுக்கு எங்களால் ஆன பல உதவிகளை செய்கிறோம். அப்படியும் அவர்களால் கட்ட முடியவில்லை என்றால், மேல் அதிகாரியின் ஒப்புதலோடு, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அவர்களுக்கு நீடிக்கப்படுகிறது. அதிலேயே பெரும்பாலானவர்கள் வாங்கிய கடனைச் செலுத்திவிடுவர். ஓரிருவரால் இயலாமல் போகலாம். அப்போதுதான் அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என கல்விக் கடன் வழங்குவது, அதைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்னைகளை விளக்கினார் அழகப்பன் கிருஷ்ணன்.
அனைவருக்கும் கடன்!
அதிக மார்க், பிரமாண்ட காலேஜ் என்றெல்லாம் அளவுகோல்களை உருவாக்கிக்கொண்டு, கடன் தொகை திரும்ப வராது என முடிவுசெய்து கொள்வதால் பல மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை இழக்கிறார்கள். அப்படி அல்லாமல் அரசு வழங்கியிருக்கும் கல்விக் கடன் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதற்கான வழி இருக்கிறதா என முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.
“கல்விக் கடன் என்று இல்லை, பொதுவாக கடன் வழங்குவதும் அதைத் திருப்பிச் செலுத்துவதும் மிகச் சாதாரணமான ஒரு செயல்.
பான் கார்டு இருந்தால் மட்டுமே கடன் கொடுக்க வேண்டும். காரணம், இவரின் பான் கார்டு எண் மூலம் கிடைக்கும் இணைப்பை கடன் வழங்கும் வங்கியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது அவரைப் பற்றிய முழு தகவல்களும் வங்கியின் வசம் இருக்கும். படித்து முடித்து வேலைக்குச் சென்றவுடன், வாங்கிய கடனைக் கட்ட வேண்டும். அப்படிக் கட்டவில்லை என்றால் பான் கார்டு மூலம் அவரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். கடன் வாங்கியவர் வியாபாரம் செய்கிறார் என்றால், அவரின் வியாபார நடவடிக்கையின் அடிப்படையில் கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். கல்விக் கடன் கொடுப்பதற்கு வங்கிகள் தயங்குவதற்குக் காரணம், அதற்கான உத்தரவாதப் பொருளாக எதுவும் இல்லை. வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கு அந்தந்தப் பொருட்களையே உத்தரவாதமாக வைத்துக்கொள்கிறார்கள் என்பதுதான். இதில் கடன் வாங்கிய நபர், வங்கி மற்றும் வருமான வரித் துறை மூன்றுக்குமான ஒருங்கிணைப்பு திடமான நிலையில் இருத்தல் நல்லது’’ என்கிறார் நாகப்பன்.
சின்னச் சின்னச் சிக்கல்களைக் களைந்துவிட்டால் கல்விக் கடன் வாங்குவதும், வசூலிப்பதும் ஈஸிதான்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
» கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?
» கல்விக் கடன் உதவி செய்யும் அமைப்பு
» இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
» கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?
» கல்விக் கடன் உதவி செய்யும் அமைப்பு
» இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
» கல்விக் கடன்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum