Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்!
Page 1 of 1

ஸ்மார்ட் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா... கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்கள்தான் இவை. இவற்றில் டிஜிட்டல் இந்தியா திட்டம் அதிமுக்கியமானது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய தேதியில், உலகில் பல நாடுகள் அதிநவீன நிர்வாக முறைக்கு மாறிவருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் வேகமான முன்னேற்றத்தைக் காண்பதற்காக ‘டிஜிட்டல் இந்தியா திட்டம்’ (Digital India Programme) மத்திய அரசினால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் என்ன நன்மைகள், அதனால் லாபம் அடையக்கூடிய நிறுவனப் பங்குகள் எவையெவை என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் (Cholawealthdirect.com) நிறுவனத்தின் மேலாளர் (ரிசர்ச் அனலிஸ்ட்) எம்.சத்தியநாராயணனிடம் கேட்டோம். டிஜிட்டல் இந்தியா தொடர்பான பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்த்து, விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘அதிநவீன நிர்வாக முறை என்பது இ-கவர்னன்ஸ் (e-governance) எனப்படுகிறது. இந்தியாவில் 1990-ம் ஆண்டுகளில் அரசுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள இ-கவர்னன்ஸ் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களுக்கு இ-கவர்னன்ஸ் மூலமான சேவைகள் அப்போது அளிக்கப் படவில்லை. தேசிய அளவிலான இ-கவர்னன்ஸ் கடந்த 2006-ம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.
தேசிய இ-கவர்னன்ஸ் திட்டத்தின்படி, விவசாயம், நில ஆவணங்கள், ஆரோக்கியம், கல்வி, பாஸ்போர்ட், காவல் துறை, நீதிமன்றங்கள், நகராட்சிகள், வர்த்தக வரி, கருவூலம் உள்ளிட்ட 31 துறைகளில் இ-கவர்னன்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பல துறைகளில் முழுமையாக அல்லது பகுதியாக இ-கவர்னன்ஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்குச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அரசுத் துறை நிர்வாகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி யின் விருப்பம். இந்தத் திட்டத்தின் படி, புதிய மற்றும் ஏற்கெனவே செயல்பட்டுவரும் இ-கவர்னன்ஸ் திட்டங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன. மேலும், இ-கவர்னன்ஸ் கொண்டு வரப்படும் துறைகளின் எண்ணிக்கை 31-லிருந்து 44-ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வேகமான இணையதளச் சேவை, அனைவருக்கும் மொபைல் பேங்கிங் சேவை, இணையதளப் பாதுகாப்பு, அரசுத் துறைகளுக்கு இடையே தடையற்ற தகவல் பரிமாற்றம், நிதிச் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவை களையும் உடனுக்குடன் பெறும் வசதி, அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அதிகம் ஆதாயம் அடைவது ஐ.டி சேவை அளிப்பவர்கள், ஃபைபர் ஆப்டிக்ஸ் உற்பத்தியாளர்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவைகளாக உள்ளன.
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.1,13,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.1,00,000 கோடி ஏற்கெனவே நடந்துவரும் திட்டங்களுக்கும், ரூ.13,000 கோடி புதிய திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டெலிகாம் துறை செலவிட இருக்கின்றன. இவை தவிர, இதர துறைகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு தனித் தனியே கணிசமான தொகையைச் செலவிட இருக்கின்றன.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஜிடிபி 32 லட்சம் கோடி ரூபாயி லிருந்து 64 லட்சம் கோடி ரூபாய் வரை 2025-ம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் என மெக்கென்சி நிறுவனம் கணித்துள்ளது.
கார்ட்னர் என்னும் ஆய்வு நிறுவனத்தின் கணிப்பின்படி, 2014-ம் ஆண்டில் இந்தியாவில் அரசு துறைகளுக்கு இடையே தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) மேம்பாட்டுக்காக 643 கோடி டாலரைச் செலவிட்டுள்ளது. இது அந்த ஆண்டில் இந்திய ஐ.டி துறை செலவிட்ட தொகையில் சுமார் 5-6% ஆகும். 2015-ம் ஆண்டில் ஐ.டி-க்காக அரசு செலவிடுவது 5.7% அதிகரித்து, 680 கோடி டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் தொடங்குவதற்கான அரசு நடைமுறைகள், எலெக்ட்ரானிக் டேடாபேஸ், இ-எஜுகேஷன், இ-ஹெல்த்கேர், அனைவருக்கும் வங்கிச் சேவைக்கான தொழில்நுட்பம், இ-ஜஸ்டிஸ், பாதுகாப்புக்கான தொழில்நுட்பம் போன்றவற்றில் அடுத்த சில ஆண்டுகளில் ஐ.டி சேவை அதிக அளவில் பயன் படுத்தப்பட உள்ளது.
இவையெல்லாம் எளிதில் நடைமுறைப்படுத்தப்படுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அதிக சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். கீழ்மட்டத்திலிருந்து நடுத்தர நிலை வரையில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்பது பெரிதாக இருக்காது.
அடுத்து, இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதற்கான செலவு, பணப் பட்டுவாடாவில் தாமதம் போன்றவை சவால்களாக இருக்கும். மேலும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, 'அரசுடன் வேலை செய்வது சுலபமாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்ப தையும் கவனிக்க வேண்டும்” என்றவர், முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய ஐந்து பங்குகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.
டிசிஎஸ் (TCS)
நிறுவனம் பற்றி..!
விரைவில் அரை நூற்றாண்டைத் தொடவிருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரியஐ.டி ஏற்றுமதி நிறுவனமாக இருக்கிறது.
இதன் வருமானம், வட அமெரிக்கா (55.3%), ஐரோப்பா (28.7%) எனப் பிரிந்து வருவதால், ரிஸ்க் குறைவாக உள்ளது.
என்டர் பிரைசஸ் சொல்யூஷன்ஸ், அஸ்யூரன்ஸ் சர்வீசஸ், இன்ஜினீயரிங் துறை, இன்ஃபோ சர்வீசஸ், குளோபல் கன்சல்டிங் எனப் பல துறை நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது.
காலாண்டு முடிவு:
2015-16-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் வருமானம் 3.5 சதவிகிதம்தான் அதிகரித் துள்ளது. ஜப்பான், லத்தின் அமெரிக்காவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையால் வருமானம் குறைந்துள்ளது.
இந்த நிறுவனம், அண்மையில் அதன் ‘டிஜிட்டல் டெக்’ நடைமுறையை அறிவித்து உள்ளது. ஜூன் காலாண்டில் டிஜிட்டல் மூலமான இதன் வருமானம் 12.5 சதவிகிதமாக உள்ளது. இது வரும் காலாண்டு களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு கூடுதலாக 38 வாடிக்கை நிறுவனங்கள் கிடைத்துள்ளன.
புதிதாக 20,302 பேரை பணிக்கு எடுத்துள்ளது. இவர்களையும் சேர்த்தால் மொத்த பணியாளர் கள் எண்ணிக்கை 3,24,935-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் காலாண்டில் வேலையைவிட்டுச் செல்பவர் களின் சதவிகிதம் 18.6-ஆக உள்ளது. இதனைக் குறைக்க சுமார் 1 லட்சம் பணியாளர் களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது.
பங்கு மதிப்பீடு:
இந்தத் துறையிலுள்ள இதர நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.
இந்தப் பங்கின் மூலம் சந்தை எந்த அளவுக்கு வருமானம் கொடுக்கிறதோ, அந்த வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
ரிஸ்க்:
ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, ஐ.டி சேவைக் கட்டணம் போன்ற வற்றில் ஏற்படும் மாற்றங்கள்.
டெக்னாலஜீஸ்(NIITTECH)
நிறுவனம் பற்றி..!
கடந்த 11 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.2,370 கோடியாக உள்ளது. அப்ளிகேஷன் டெவலப்மென்ட் & மெயின்டெனன்ஸ் (63%), சிஸ்டம் இன்டகிரேஷன் (8%), ஐபி அஸெட்ஸ் (8%), பிபிஓ (5%) எனப் பல பிரிவுகளில் இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது.
வங்கி, நிதிச் சேவை, இன்ஷூரன்ஸ் (36%), போக்குவரத்து (37%), உற்பத்தி (6%) உள்ளிட்ட துறை நிறுவனங் களுக்கு இந்த நிறுவனம் தீர்வுகளை அளித்து வருகிறது. ஐஎன்ஜி குழுமம், ஹோல்சிம் போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கை நிறுவனங்களாக இருக்கின்றன.
காலாண்டு முடிவு:
முதல் காலாண்டில் டாலர் அடிப்படையில் வருமானம் 3.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் இதர நிறுவனங் களைக் கையகப்படுத்துவதன் மூலமும் வளர்ச்சி கண்டு வருகிறது.
முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானத்தில் டிஜிட்டலின் பங்களிப்பு 14 சதவிகிதமாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது டிஜிட்டலின் வளர்ச்சி 63 சத விகிதமாக உள்ளது.
பங்கு மதிப்பீடு:
சந்தை எந்த அளவுக்கு வருமானம் கொடுக்கிறதோ, அந்த வருமானத்தை இந்தப் பங்கின் மூலம் எதிர்பார்க்கலாம்.
ரிஸ்க்:
மேக்ரோ பொருளாதார மாற்றங்கள், ஐ.டி-க்கு செலவிடு வது குறைவது, கரன்சி மதிப்பில் அதிக மாற்றம்.
மைண்ட்ட்ரீ(MINDTREE)
நிறுவனம் பற்றி..!
கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் மிட் கேப் ஐ.டி நிறுவனம். இந்த நிறுவனம், ஐ.டி சேவைகள் (72.6%), புராடக்ட் இன்ஜினீயரிங் (27.4%) ஆகிய இரு பிரிவுகளில் பிரதான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.
வங்கி, நிதிச் சேவை, இன்ஷூரன்ஸ் (23.3%), உற்பத்தி (22.1%), போக்குவரத்து (19.7%) உள்ளிட்ட துறை நிறுவனங் களுக்கு இந்த நிறுவனம் தீர்வுகளை அளித்து வருகிறது.
இந்த நிறுவனம் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஃபார்ச்சூன் 500 நிறுவனப் பட்டியலில் இடம் பெற்றவை. இதன் வருமானம், வட அமெரிக்கா (59%), ஐரோப்பா (28%), இந்தியா (4%) எனப் பிரிந்து வருவதால் ரிஸ்க் குறைவாக உள்ளது.
காலாண்டு முடிவு:
முதல் காலாண்டில் வருமானம் 4.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கி, நிதிச் சேவை, இன்ஷூரன்ஸ் சேவை மூலமான வருமானம் 10.5% அதிகரித்துள்ளது. இதர நிறுவனங்களைக் கையகப்படுத்து வதன் மூலமும் வளர்ச்சி கண்டு வருகிறது.
ஜூன் காலாண்டில் டிஜிட்டல் பிரிவில் இரண்டு நிறுவனங்களை (புளூஃபின் சொல்யூஷன்ஸ், ரிலேஷனல் சொல்யூஷன்ஸ்) கையகப்படுத்தி இருக்கிறது.
பங்கு மதிப்பீடு:
இதர மிட் கேப் பங்குகளுடன் ஒப்பிடும்போது மைண்ட்ட்ரீ வேல்யூவேஷன் பிரீமியமாக உள்ளது. பங்குச் சந்தையின் வருமானம் அளவுக்கு இந்தப் பங்கின் மூலமும் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
ரிஸ்க்:
கரன்சி மதிப்பில் அதிரடி மாற்றம்.
இன்ஃபோசிஸ் (INFY)
நிறுவனம் பற்றி..!
ஐ.டி சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பெரிய நிறுவனங் களில் ஒன்று. இதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,63,541. இதன் வருமானம், வட அமெரிக்கா (59.8%), ஐரோப்பா (25.2%) எனப் பிரிந்து வருவதால், ரிஸ்க் குறைவாக உள்ளது.
அப்ளிகேஷன் டெவலப்மென்ட் (15.5%), அப்ளிகேஷன் மெயின்டெனன்ஸ் (19.4%), டெஸ்டிங் (9.2%), எனப் பல்வேறு பிரிவுகளில் இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது.
காலாண்டு முடிவு:
ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலாண்டில் புதிதாக 79 வாடிக்கையாளர் நிறுவனங்கள் இதற்குக் கிடைத்துள்ளன.
ஆறு பெரிய கான்ட்ராக்ட்டு கள் முதல் காலாண்டில் கிடைக்கின்றன. புதிதாக 3,336 பேரை பணிக்கு சேர்த்துள்ளது.
பங்கு மதிப்பீடு:
தொடர்ந்து இரு காலாண்டு களாக மோசமான நிதிநிலை முடிவுகளைக் கொடுத்து வந்த நிலையில், ஜூன் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிதிநிலை மேம்பட்டுள்ளது. இதனால் பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
பங்குச் சந்தையின் வருமானத்தைவிட, இந்தப் பங்கின் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
ரிஸ்க்:
விசா பிரச்னை, கரன்சி மதிப்பில் அதிரடி மாற்றம், ஐ.டி சேவைக் கட்டணம் போன்ற வற்றில் ஏற்படும் மாற்றங்கள்.
சையன்ட் (CYIENT)
நிறுவனம் பற்றி..!
ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் இந்த நிறுவனம் மிட் கேப் ஐ.டி கம்பெனி. இதன் வாடிக்கை நிறுவனங்களில் 22 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களைச் சேர்ந்ததாகவும், 27 நிறுவனங்கள் குளோபல் 500 புளூசிப் நிறுவனங் களைச் சேர்ந்ததாகவும் இருக்கின்றன.
இதன் வருமானம் வட அமெரிக்கா (56.9%), ஐரோப்பா (28.4%), ஆசிய பசிபிக் மற்றும் இதர நாடுகள் (14.7%) எனப் பிரிந்து வருவதால், ரிஸ்க் குறைவாக உள்ளது.
காலாண்டு முடிவு:
ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலாண்டில் இந்த நிறுவனத்திலிருந்து சுமார் 30 பேர் பணி விலகி இருக்கிறார்கள். அதேநேரத்தில், புதிதாக 26 வாடிக்கை நிறுவனங்கள் கிடைத் திருக்கின்றன. இந்த நிறுவனம் வசம் ரூ.35.30 கோடி ரொக்கம் கையிருப்பு இருக்கிறது.
பங்கு மதிப்பீடு:
வருகிற காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இந்த நிறுவனம் அண்மையில் நிகழ்த்திய நிறுவன கையகப்படுத்தல்கள் இருக் கின்றன. பங்குச் சந்தை கொடுக்கும் வருமான அளவுக்கு இந்தப் பங்கின் மூலமும் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
ரிஸ்க்:
கரன்சி மதிப்பில் அதிரடி மாற்றம் மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம்.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் நம் நாட்டை முன்னேற்றும். அதுபோல, இந்தப் பங்குகளும் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரும் என்று எதிர்பார்க்கலாம்!
--ந.விகடன் இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் என்ன நன்மைகள், அதனால் லாபம் அடையக்கூடிய நிறுவனப் பங்குகள் எவையெவை என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் (Cholawealthdirect.com) நிறுவனத்தின் மேலாளர் (ரிசர்ச் அனலிஸ்ட்) எம்.சத்தியநாராயணனிடம் கேட்டோம். டிஜிட்டல் இந்தியா தொடர்பான பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்த்து, விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» உயரும் பொருளாதாரம்... அள்ளித் தரும் பங்குகள்!
» மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்!
» அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...
» வளரும் இன்ஃப்ரா துறை... லாபம் தரும் இன்ஃப்ரா பங்குகள் !
» வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum