Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வளரும் இன்ஃப்ரா துறை... லாபம் தரும் இன்ஃப்ரா பங்குகள் !
Page 1 of 1

மின் துறைக்கென பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் இருப்பதுபோல, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைக்கு ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்கிற ஓர் அமைப்பையும், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிசினஸ் டிரஸ்ட் என்கிற இன்னொரு அமைப்பையும் உருவாக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் அமைப்புக்கு ஆரம்ப கால நிதியாக ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.ஜப்பான் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் முதலீடு செய்ய உள்ளனர். அதாவது, அவர்களின் பங்களிப்பாக 26,000 கோடி ரூபாய் இந்தத் திட்டத்தில் இருக்கும். இந்த முதலீட்டுக்கு 9% வருமானத்தை இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு சுங்கச்சாவடி (டோல்கேட்) மூலமாகப் பெறப்படும் வருமானம் இந்தத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
இதற்கு முன்பாக இதில் ஈடுபடுத்தப் பட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பெரும்பாலான புராஜெக்ட்டுகள் முறையாகச் செய்து முடிக்கப்படவில்லை. 2012-13-ம் ஆண்டில் பில்டு-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (build-operate-transfer - BOT) முறையின் கீழ் 7,464 கிலோ மீட்டர் அளவுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 1,115 கிலோ மீட்டர் தூரத்துக்கான சாலை வசதிக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதேபோல, அரசு மற்றும் தனியார் துறை இணைந்து சாலை அமைக்கும் திட்டத்தின்படி (public - private partnership - PPP) 2013-14-ம் ஆண்டில் 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், வெறும் 287 கிலோ மீட்டருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், சரியாக நிதி ஒதுக்கப்படாததே. நடப்பு 2014-15-ம் நிதியாண்டில் பிஓடி திட்டத்தின்படி 3,000 - 3,500 கி.மீட்டர் சாலை வசதியும், இபிசி திட்டத்தின்படி 5,000 கி.மீட்டர் சாலை வசதியும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிசினஸ் டிரஸ்ட்!
அதேபோல, நமது அரசாங்கம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் களுக்கு உதவி செய்வதற்காக இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிசினஸ் டிரஸ்ட் அமைப்பை உருவாக்குவது குறித்து, மத்திய நேரடி வரி வாரியம் மற்றும் பொருளாதார விவகாரத் துறையிடமும் பேசி இருக்கிறது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி. இந்த பிசினஸ் டிரஸ்ட்டானது இரண்டு வகையான நிதியைத் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. முதல்வகை தனிப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் இந்திய நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டுவது. இரண்டாவது வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நிதியைத் திரட்டுவது. இப்படியாகத் திரட்டப்படும் நிதியைக்கொண்டு, நீண்டகால அடிப்படையில் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் களுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது. இந்த அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பெறும் வருமானத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும் எனவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லாபம் தரும் இன்ஃப்ரா பங்குகள்!
இந்திய அரசின் இந்தத் திட்டத்தி னால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். ''வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்தபோது சாலை போக்குவரத்தால் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற முனைப்புத் தெரிந்தது. அவரது ஆட்சி காலத்திலேயே டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு தங்க நாற்கரச் சாலை போக்குவரத்தானது அமைக்கப்பட்டது.
அதற்கடுத்து வந்த அரசாங்கம் திட்டத்தைத் தீட்டினார்களே தவிர, நிலத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் போன்ற விவகாரங்களை கண்டுகொள்ளாமல் தாமதப்படுத்தியதால் ஏராளமான புராஜெக்ட்டுகள் முழுமையடையாமலேயே கைவிடப்பட்டன. ஆனால், இந்த அரசு எடுத்த எடுப்பிலேயே சாலை அமைப்பதற்காக நிதியை தனியாக ஒதுக்கயிருக்கிறது. இதனால் இந்தத் திட்டம் செயல்படும் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. தவிர, இந்தத் திட்டத்தில் ஜப்பான் முதலீட்டாளர்களை இணைத்துக்கொண்டது சிறப்பு. காரணம், தற்போது அந்த நாட்டின் முதலீட்டு வருமானங்கள் மைனஸில் உள்ளன. இந்தச் சமயத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் இந்த 9% வருமானம் என்பது அதிகம் என்பதால் அவர்களில் பெரும்பாலானவர்கள் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறார்கள்.
கடந்த எட்டு ஆண்டுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட டெல்லி, மும்பைக்கு இடையே யான ரயில் ரோடு புராஜெக்ட்டிலும் ஜப்பான் முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அந்தத் திட்டம் நிறுத்தப் பட்டாலும், நடப்பு அரசு அந்தத் திட்டத்தையும் செயபடுத்தினால் ஜப்பான் முதலீட்டாளர்களின் ஆர்வம் இன்னும் அதிகரிக்கும்'' என்றார்.
திட்டமிட்டபடி மேலே சொல்லப்பட்டிருக்கும் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் எந்தெந்த பங்குகள் லாபம் அடையும் என்றும் அவரிடமே கேட்டோம். ''தற்போது திட்டவடிவிலேயே அனைத்து செயல்பாடுகளும் இருந்து வருகின்றன. எதிர்பார்க்கப்படுவதுபோல பட்ஜெட் தாக்கலுக்குப்பின் திட்ட செயல்பாடு குறித்து தகவல்கள் வெளியானால், இன்ஃப்ரா துறை சார்ந்த எல் அண்ட் டி, ஐஆர்பி (IRB), இன்ஃப்ரா, ஐஎல்எஃப்எஸ் டிரான்ஸ்போர்ட், நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன், சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ரா, ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன், கிரீவ்ஸ் காட்டன் (Greaves Cotten), கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், யுனிட்டி இன்ஃப்ரா, பிரதீபா, பிஇஎம்எல் (BEML), ஏசிஇ (ACE), ஏபிபி (ABB), சீமென்ஸ் போன்ற நிறுவனத்தின் பங்குகள் லாபமடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது'' என்றார்.
இன்ஃப்ரா துறைகள் வளர்ந்தால் மற்ற துறைகளும் வளரும் என்பதால், அரசு இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்!
» இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?
» உயரும் பொருளாதாரம்... அள்ளித் தரும் பங்குகள்!
» டிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்!
» அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்! அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum