வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


நுகர்வோர் கடன் வாங்கப் போறீங்களா ? கிரெடிட் ஸ்கோர் கவனியுங்க !

Go down

நுகர்வோர் கடன் வாங்கப் போறீங்களா ? கிரெடிட் ஸ்கோர் கவனியுங்க ! Empty நுகர்வோர் கடன் வாங்கப் போறீங்களா ? கிரெடிட் ஸ்கோர் கவனியுங்க !

Post by தருண் Wed May 27, 2015 11:06 am

வெயில் காலத்தில்தான் ஏசியையும் வாட்டர் கூலரையும் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வரும். கதிர்வேலன் - மீனா தம்பதியும் கத்திரி வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஒரு ஏசியை வாங்க நினைத்து, பிரபலமான கடைக்குப் போனார்கள்.

பல்வேறு நிறுவனங்களின் ஏசி பற்றி விவரமாக விசாரித்தார்கள். ஏசி வாங்க அவர்களுக்கு ஆசைதான். ஆனால், ஏசிக்கான பணத்தை மொத்தமாக தந்து வாங்குகிற அளவுக்கு அவர் களிடம் பணமில்லை. எனவே, ஏக்கத்துடன் கடையைவிட்டு வெளியேறி னார்கள்.

அவர்கள் வெளியேறுவதைப் பார்த்துத் தடுத்தார் அந்தக் கடையின் விற்பனைப் பிரதிநிதி. ‘‘மொத்தமாக பணம் கட்டி வாங்க முடியவில்லை என்றால் என்ன? நாங்கள் சுலபத் தவணையில் கடன் தருகிறோம்’’ என்று சொல்லி கடன் வழங்கும் நிறுவன பிரதிநிதியின் முன்பு அவர்களை நிறுத்தினார்.

விற்பனைப் பிரதிநிதி சொன்ன நிபந்தனைகளுக்கு கதிர்வேலன் - மீனா ஓகே சொல்லவே, கடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களையும் தந்தனர்.

நிதி நிறுவனப் பிரதிநிதி அந்த இடத்திலேயே கதிர்வேலன், மீனாவின் சிபில் ஸ்கோர் என்ன என்பதை ஆன்லைனில் பார்த்தார். அவர்களின் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தது. தவிர, அவர்கள் இருவரின் கடன் வரலாறும் நல்ல நிலையில் இருந்தது. உடனே அவர்களுக்கு கடன் கிடைக்க, அடுத்த நாளே அவர்கள் வீட்டுக்கு ஏசி வந்தது.

பொருட்களை வாங்கு வதற்கான நுகர்வோர் கடன் மட்டுமல்ல, வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்க நினைக்கும் ஒருவருக்கு சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

ஒருவரது சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் நிதி சார்ந்த விஷயங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். ஒருவரது சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

கடனுக்கான இஎம்ஐகளை கவனிப்பது!

கிரெடிட் கார்டு கடன் மற்றும் பிற வகையான கடன்களுக்கான இஎம்ஐ தேதிக்கு முன்பாகவே பணத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைப்பது அவசியம். இதை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து செய்வது முக்கியம். குறித்த இஎம்ஐ தேதியில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் உங்கள் சிபில் ஸ்கோர் குறையும்.

பேமென்ட் அலெர்ட்!

கிரெடிட் கார்டு பில் செலுத்தும் தேதி, வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றின் இஎம்ஐ தேதிகளுக்கு மொபைல் அல்லது மெயிலில் அலெர்ட் செட் செய்துவைப்பது நல்லது. இது இஎம்ஐ தேதிக்கு முன்கூட்டியே பணத்தை ஏற்பாடு செய்ய உதவும்.

ஜாமீன் தந்த கடன்கள்!

நண்பர்கள் அல்லது உறவினர்கள் கடன் வாங்குவதற்கு நீங்கள் உத்தரவாதம் தந்திருந்தால், அந்தக் கடன்களை அவர்கள் சரியாகக் கட்டி வருகிறார்களா என்பதைக் கவனிப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் உத்தரவாதம் அளித்த நபர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லையெனில், அது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும். எனவே, இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

சிபில் ஸ்கோர் ஆய்வு!

கடன், கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வதற்குமுன்பே, உங்களின் சிபில் ரிப்போர்ட் மற்றும் சிபில் ஸ்கோரை ஆய்வு செய்வது நல்லது. இதன் மூலமாக சிபில் ஸ்கோரில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்க முடியும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், முதலில் அதை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, அதன்பிறகு கடனுக்கு விண்ணப்பம் செய்வது நல்லது.

நிதி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய கடன் அவசியம். எனவே, சிபில் ஸ்கோரின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவது நல்லது. கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்துமே சிபில் ஸ்கோரை கட்டாயம் கவனிக்கும். இதில் நம் நிதி சார்ந்த ஒழுக்கம் சரியாக இருந்தால்தான் கடன் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!


தொகுப்பு: இரா.ரூபாவதி.
விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum