Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சிமென்ட் விலை : புதைந்திருக்கும் ரகசியங்கள்!
Page 1 of 1

வீடு கட்ட நினைக்கும் சாமானியர்களை வாட்டி வதைக்கிறது, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு. அதிலும் குறிப்பாக, சிமென்ட் விலை உயர்வு கடந்த ஆறு மாதங்களில் ஒரு மூட்டை அதிகபட்சமாக 100 ரூபாய் வரை உயர்ந்து கண்ணாமூச்சி காட்டுகிறது. உள்ளூர் சந்தைகளில் ஊருக்கு ஊர் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி முதல்தர சிமென்ட் 340 - 360 வரையிலும், இரண்டாம்தர சிமென்ட் 290 - 310 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு வகைகளில் முயற்சிகள் எடுத்தாலும், விலை பெரிய அளவில் குறையவில்லை என்பதுதான் உண்மை.
தேவை அதிகரிக்கும்போது விலை ஏறினாலும் பரவாயில்லை, ஆனால், கட்டுமான சந்தை ஏற்கெனவே தேக்கத்தில் இருக்கும் நிலைமையில் ஏன் இந்த விலையேற்றம் என தற்போதைய நிலையில் இந்த விலையேற்றத்தை அதிர்ச்சியோடு நோக்குகின்றனர் கட்டுமான துறையினர். சிமென்ட் நிறுவனங்கள் இப்படி விலையை ஏற்றும் ஒவ்வொரு முறையும், உற்பத்தியாளர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், பிறகு விலையைக் குறைப்பது என்பதுவும் தொடர்ச்சியான போக்காக உள்ளது. உண்மையில் சிமென்ட் விலை ஏற்றத்தின் பின் உள்ள காரணங்கள் என்ன என்பதை விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல் ரகசியமானவை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தேக்கமான சந்தை!
கட்டுமானத் துறையின் தேக்கம், சிமென்ட் விலை யிலும் எதிரொலிக்கிறது. சந்தை தேக்கமாக இருக்கும் நிலையில் விலை குறைவாக இருக்கும் என்பதுதான் விதி. ஆனால், தங்களது லாப விகிதம் சரியக்கூடும் என்பதால் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன சிமென்ட் நிறுவனங்கள்.
தனிநபர்கள் வீடு கட்டுவது குறைவது ஒரு காரணம் என்றால், கட்டுமான நிறுவனங்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளும் இதற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட பின்னும் விற்பனையாகாத வீடுகள், புதிதாக ஒப்பந்தம் ஆன வீடுகளுக்கு அதிகரிக்கும் கட்டுமான செலவுகள், தவிர அதிகரித்தச் செலவுகளைக் காட்டி ஒப்பந்த விலையை ஏற்றவும் முடியவில்லை என்பது போன்ற சிக்கல்களைச் சந்திக்கிறது ரியல் எஸ்டேட் துறை. இரண்டு, மூன்று சதவிகிதம் லாபம்கூட சாத்தியமில்லை என்கின்றனர் இவர்கள்.
பொதுவாக, தமிழ்நாட்டில் நவம்பர் - ஜனவரி மாதங்களில் மழைக்காலம் என்பதால் கட்டுமான வேலைகளும் குறைவாகத்தான் நடக்கும். மழைக்காலத்தில் தனிநபர்கள் வீடு கட்டும் விகிதாசாரம் குறைவு. இந்தக் காலகட்டத்தில் மணல் தட்டுப்பாடு இருக்கும் என்பதால், மணல் விலை அதிகரிக்கும். சிமென்ட் விலை குறைவாகத்தான் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், இந்தப் பருவகாலத்தில் சிமென்ட் விலை நேர்மாறாக உள்ளது.
உற்பத்தியாளர்களின் நஷ்டம்!
சிமென்ட் விலை ஏறியுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை லாபம் என்று நினைக்கலாம். ஆனால், அதில் உண்மையில்லை என்கிறது உற்பத்தியாளர் தரப்பு. இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு நிலைமைகளைப் பார்த்தாலே தெரியும். சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் லாபம் பெருமளவு சரிந்திருக்கிறது. அம்புஜா நிறுவனத்தில் லாபம் 45 சதவிகிதமும், அல்ட்ரா டெக் நிறுவனத்தின் லாபம் 52 சதவிகிதமும், ஏசிசி நிறுவனத்தின் லாபம் 51 சதவிகிதமும் குறைந்துள்ளது.
இது இன்று நேற்று கதையல்ல, சிமென்ட் உற்பத்தியாளர்கள் ஆரம்ப காலம் தொட்டே நஷ்டத்தில்தான் இயங்கியுள்ளனர். இருபது வருடங்களுக்கு முன்பு வரை சிமென்ட் விலை அதிகபட்சமாக ரூபாய் 200-க்குள்தான் இருந்தது. இந்த காலத்தில் சிமென்ட் விலை ஏற்றம் இரண்டு மடங்குதான் உள்ளது. இதர பொருட்களின் விலை ஏற்றத்தோடு ஒப்பிட்டால் இது மிகக் குறைவு. பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் வந்த பிறகே சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் லாபம் பார்த்துள்ளன. இந்த விலை ஏற்றம்கூட எங்களுக்கு பெரிய லாபமில்லை என்கின்றன சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள்.
முறைப்படுத்தும் அமைப்பு இல்லை!
சிமென்ட் நிறுவனங் களை கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ முறையான அமைப்பு முறை கிடையாது. உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து வைப்பதுதான் விலை. அதாவது, விலை ஏற்றத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. செலவுகள் அதிகரிக்கிறது என்று அவர்களாகவே விலை ஏற்றுவார்கள். பிறகு சிமென்ட் உற்பத்தியாளர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். அவர்களும் ஏதோ ஒப்புக்கு விலையைக் குறைப்பார்கள். இதுதான் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
எவ்வளவு விலை ஏற்ற வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து அதை முறைப்படுத்துவதும், தேவை என்ன என்பதை அறிந்து, உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் முறையான அமைப்பு இருக்க வேண்டும். விலை எவ்வளவு ஏற்றலாம் என்பதை இந்த அமைப்பு முடிவு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள், தொழில் துறையினர், கட்டுமானத் துறையினர், பொதுமக்கள் கொண்ட தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும். அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப எவ்வளவு விலை ஏற்றிக் கொள்ளலாம் அல்லது குறைக்க வேண்டும் என்பதில் தெளிவிருந்தால் சிக்கல் இல்லை.
சரக்கு கட்டண உயர்வு!
மூலப்பொருட்கள் விநியோகத்திலும், சந்தை விநியோகத்திலும் முக்கிய பங்காற்றுகிறது சரக்கு போக்குவரத்து. சிமென்ட் விலையேற்றத்துக்கு கூடுதலான காரணம் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு. டீசல் விலையேற்றம் காரணமாக சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர, சிமென்ட் உற்பத்தியிலும், விநியோகத்திலும் சரக்கு ரயிலின் பங்கு பிரதானமாக உள்ளது. சமீபத்தில் இதற்கான கட்டணங்களை உயர்த்தியதும் விலை ஏற்றத்துக்கு காரணம். இதன்காரணமாக உள்ளூர் சந்தையில் விலை அதிகரிக்கிறது.
உள்ளூர் நிலைமைகள்!
தமிழ்நாட்டின் சிமென்ட் தேவைகளை கணிசமாக பூர்த்தி செய்கிறது ஆந்திராவின் ஆலைகள். ஆனால், கடந்த ஆறு மாதங்களில் அங்கு நடந்துவரும் தெலுங்கானா போராட்டம் காரணமாக அங்குள்ள ஆலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. இதுதவிர, ஆந்திராவில் நிலவிவரும் கடும் மின்தட்டுப்பாடும் இங்குள்ள விலையேற்றத்துக்கு காரணமாகிறது. ஆந்திராவில் தொழில் துறையினருக்கு மாதத்தில் 12 நாட்கள்தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக அங்கு சிமென்ட் ஆலைகளின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஆந்திரா சிமென்ட் வரத்து குறைவதும் விலை ஏறுவதற்கு முக்கிய காரணம்.
ஆதாய அரசியல்!
இந்த விலை ஏற்றத்துக்கு பின்னால் உள்ளூர் அரசியல் நிலைமைகளும் உள்ளது. கட்டுப்படுத்தவேண்டிய அரசு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. தவிர, அரசு நிறுவனங் கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதில்லை. வெளிச்சந்தையில் கிடைக்கும் பிராண்டுகளைவிட விலை குறைவாக இருந்தாலும், உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. தனியார் உற்பத்தியாளர் களோடு போட்டிபோடும் நிலையில் இருந்தால் விலையைக் கட்டுக்குள் வைக்கலாம். அரசு அதிகாரிகள் தரப்பில் இதற்கு தெளிவான பதில் இல்லை. சந்தையின் தேவையைப் புரிந்துகொள்ளாத அலட்சியம்.
மூலப்பொருட்கள் விலையேற்றம்!
நிலக்கரி, ஜிப்சம், மின்சாரம், டீசல், போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த சில மாதங் களில் கணிசமாக உயர்ந் திருக்கிறது என்கின்றனர் சிமென்ட் ஆலை உரிமையாளர்கள். ஆனால், எப்படி பார்த்தாலும் மொத்த உற்பத்தி செலவு ஒரு மூட்டைக்கு ரூபாய் 160தான் ஆகும் என்கின்றனர் தொழில் துறையினர்.
ஒப்பந்த வர்த்தகம்!
பெரிய கட்டுமான நிறுவனங்கள் சிமென்ட் நிறுவனங்களோடு முன்கூட்டியே ஒப்பந்த வர்த்தகம் செய்து கொள்கின்றன. இதன் காரணமாக பொதுச் சந்தையில் விலை ஏற்றத்தைக் கண்டுகொள்வதில்லை கட்டுமான நிறுவனங்கள். இதனால் பாதிக்கப்படுவது வீடு கட்டத் திட்டமிடும் தனிநபர்கள்தான்.
பண மதிப்பு வீழ்ச்சி!
சமீபத்தில் நம் பண மதிப்பில் ஏற்பட்ட சரிவும் முக்கிய காரணம். மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகம் செலவானதையும் மறுக்க முடியாது.
மொத்தத்தில், இந்த சிமென்ட் விலை யேற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்கள்தான். எனவே, இந்தப் பிரச்னை யில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
- நீரை.மகேந்திரன்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» அல்ட்ராடெக் சிமென்ட் நிகர லாபம் 47% உயர்வு
» வாரன் பஃபெட்: 5 முதலீட்டு ரகசியங்கள்! இரா.ரூபாவதி
» குறைகிறது வீடுகளின் விலை
» கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
» தங்க விலை குறைகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum