வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்?

Go down

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? Empty இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்?

Post by தருண் Sun Mar 22, 2015 11:14 am

நமது நாட்டின் பொருளாதாரத்திலும் பாரம்பர்யத்திலும் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. எல்லா காலகட்டங்களிலும் தங்கத்தின் தேவை குறையாமல் இருப்பதே தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு உள்ள மோகத்துக்கான அத்தாட்சி.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P12a

நம் நாட்டவர்களுக்கு தங்கத்தின் தேவை பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. திருமணம் மற்றும் தீபாவளி போன்ற திருவிழாக் காலங்களில் தேவை அதிகமாவதைப் பார்க்கலாம். அதுபோக, தங்கம் ஒரு முக்கிய முதலீட்டு வழியாக நமது நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது.

நிலையற்ற முதலீடுகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும், பல காலம் நீடித்து இருக்கும் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பழக்கமாகவே இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயத் துறையின் முதுகெலும் பாக விளங்குவது தங்கம். விவசாயிகளுக்குக் கடன் கிடைக் காதபட்சத்திலோ அல்லது அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் நிலை நேரிட்டாலோ, தங்களிடம் உள்ள தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற்று அதைக் கொண்டு விவசாயச் செலவுகளை செய்வது என்பது இன்றும் நடைபெறக்கூடிய நிகழ்வுதான். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தங்கம் என்பது ஒரு ஒர்க்கிங் கேப்பிட்டல் வழிமுறை என்றே சொல்லலாம்.

சரியும் தங்கம்!

சமீப காலமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்து வருகிறது. இந்த விலைச் சரிவு, இந்தியாவில் எந்தெந்த வழிகளில் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P13a

உலகளவில் அதிகம் தங்கம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா முதன்மை வகித்தாலும், விலை நிர்ணயம் செய்வது என்னவோ சர்வதேச சந்தைதான். நம்நாட்டில் தங்கச் சுரகங்கள் இல்லாததால், நமது தேவைகள் முழுவதும் வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால், சர்வதேச விலை நிர்ணயம் என்பது தவிர்க்க முடியாதுதான்.

இந்தச் சூழலில், சர்வதேச சந்தையில், தங்கத்தின் தற்போதைய விலையானது ஒரு அவுன்ஸுக்கு 1,160 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப் படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. எதனால் அந்த வீழ்ச்சி மற்றும் அதன் பின்னணியைப் பார்ப்போம்.

சமீப காலமாக, தங்கத்தின் விலைக்கும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்து வருகிறது. பொருளாதாரம் வளர்ச்சியில் இருக்கும்போது, பெரும்பாலும் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் இருந்திருக்காது. அரிதாக விலை வீழ்ச்சி ஏற்பட்ட காலமும் உண்டு. ஆனால், தற்போது எப்போதெல்லாம் உலகப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை ஏற்றம் பெற்றதைப் பார்த்தோம். பொருளாதாரமும் தங்கத்தின் விலையும் எதிர்மறையாகச் செயல்படும் போக்கு அதிகரித்திருக்கிறது. ஏன் இந்த எதிர்மறை செயல்பாடு என்பதுதானே உங்கள் கேள்வி. இதோ அதற்கான விளக்கம்..!

என்ன காரணம்?

உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்தால், நிறுவனங்களின் வியாபாரம் மற்றும் லாபம் அதிகரிக்கும். அதன் அடிப்படையில் பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும். பெரிய முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுத்து பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக பங்குச் சந்தை தொடர் ஏற்றத்தில் காணப்படும். அதேசமயம், முதலீட்டாளர்கள் அந்தக் காலத்தில் அதிக ரிஸ்க் இல்லாத அதிக வருமானம் தராத திட்டங்களில் முதலீடு செய்யமாட்டார்கள். மாறாக, தங்கத்தில் உள்ள முதலீட்டை எடுத்து நிறுவனப் பங்குகளிலும், ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்வார்கள். அந்தச் சூழலில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருக்கும்.

மாறாக, உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்தால், நிறுவனங்களின் வியாபாரம் மற்றும் லாபம் பாதிக்கப்பட்டு பங்குச் சந்தை வீழ்ச்சிகாணச் செய்யும். அந்தச் சூழலில் முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்க தயக்கம்காட்டுவார்கள். அந்தத் தயக்கத்தினால் பங்குச் சந்தையில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதற்குப் பதிலாக, பிசிக்கலாக ரிஸ்க் இல்லாத தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அந்தச் சூழலில் தங்கத் தின் விலை ஏறுமுகமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் தெரியும்.

மேலும், பங்குச் சந்தையில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தை வீழ்வதும், தங்கத்தின் விலை உயர்வதையும் கடந்த காலத்தில் பார்த்தோம். அதன் காரணமாக பங்குச் சந்தையும் தங்கமும் எதிர்மறை முதலீடுகளாக இருந்து வருகின்றன என்பதற்கு கடந்த கால விலை மாற்றங்களே சாட்சி.

தங்கத்தின் விலையில் கடந்த ஐந்தாண்டுகளில் தான் (2009-2014) வரலாறு காணாத ஏற்ற, இறக்கம் இருந்தது. அதே காலகட்டத்தில்தான் உலகப் பொருளாதாரமும் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்தது. கடந்த 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உலகை ஸ்தம்பிக்கச் செய்தது. அதன் தொடர்ச்சியாக ரியஸ் எஸ்டேட் துறையும் பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்தக் காலகட்டத்தில் 2007-ல் அவுன்ஸ் ஒன்றுக்கு 600 டாலர் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை படிப்படியாகத் தொடர்ந்து உயர்ந்து, 2011ல் வரலாறு காணாத 1,900 டாலர் என்ற நிலையை எட்டியது.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P13b

ஏன் இந்த அபார வளர்ச்சி?

1. நிதி நெருக்கடி காலத்தில் பெரிய முதலீட்டாளர் கள் பணத்தை அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளில் இருந்து எடுத்து, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்தார்கள்.

2. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் டாலரின் மதிப்பை சரியச் செய்தன. டாலர் சரியும்போது டாலருக்கு நிகரான பொருட்களின் விலை ஏறும். தங்கத்தின் விலை ஏறியதும் அப்படித்தான்.

3. பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க உலக மத்திய வங்கிகள், குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி தொடர்ந்து பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் தொழில் ஊக்குவிப்பு சலுகை (stimulas) யுக்தியைக் கையாண்டன. அதனால் பணப்புழக்கம் அதிகமாகி, முதலீடுகள் தங்கத்தில் அதிகம் வரத்தொடங்கின. மேலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தும் தங்கத்துக்கு ஆதரவான சூழலையை ஏற்படுத்தியது.

ஆனால், 2012-லிருந்து பல மாற்றங்கள் ஏற்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் படிப்படி யாக சீரானது. அதன் காரணமாக முதலீட்டாளர் களின் கவனமும் பங்குச் சந்தையை நோக்கித் திரும்பியது. அதன் காரணமாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை 2013-ல் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு, சர்வதேச சந்தையில் 1,200 டாலர் நிலையை எட்டியது. 2014-ல் 1,150 - 1,300 டாலர் என்ற அளவிலேயே வர்த்தகமாகியது.

சமீபநாட்களில் தங்கம் விலை சரியத் தொடங்கி, 1,160 டாலர் அளவை எட்டியுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் வலுப்பெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துவரும் நிலையில் ஃபெடரல் ரிசர்வ், வட்டியைத் திட்டமிட்டதற்கு முன்பாக அதிகரிக்கலாம் என்ற பேச்சு எழத் தொடங்கியுள்ளது தங்கத்தின் விலைச் சரிவுக்கு முக்கிய காரணம். கூடவே, கடந்த வாரங்களில் அமெரிக்க கரன்சியான டாலரும் அசுர பலம் பெற்றுவருவது தங்கத்தின் விலை மேலும் குறையக் காரணமாகி இருக்கிறது.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P14a

இன்னும் சரியும்!

எப்போதெல்லாம் டாலரின் மதிப்பு கூடுகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை குறைவதைக் கடந்த காலங்களில் பார்த்தோம். நடப்பு ஆண்டில் பல பெரிய மாற்றங்கள் நிகழவிருப்பதால், தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. முக்கியமாக, அமெரிக்காவில் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது. அதனால் முதலீட்டாளர் களின் கவனம் கூடுதலாக பங்குச் சந்தையில் இருக்கும். அது தங்கத்தின் தேவை மற்றும் விலையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.

இந்தியாவில் தங்கத்தின் விலை மாற்றங்கள்!

கடந்த காலத்தில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கம் நமது நாட்டில் அதே அளவில் பிரதிபலிக்கவில்லை. அது ஏன் என்று பார்க்கும்முன், இந்தியாவில் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

1. ரூபாயின் மதிப்பு:

சர்வதேச விலையையொட்டி இந்தியாவில் தங்கத்தின் விலை இருக்க வேண்டும் என்றாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, 2013-ல் சர்வதேச தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஆனால், ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்ததால், சர்வதேச விலை வீழ்ச்சி இங்கே பிரதிபலிக்கவில்லை. டாலரின் மதிப்பு கூடும்போது, தங்கத்தின் மதிப்பு குறையும். அதேபோல் ரூபாயின் மதிப்பும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உலகளவில் சரியும்போது அதே அளவு சரிவு இந்தியாவில் இருப்பதில்லை.

2. அரசுக் கொள்கை:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவை எட்டியது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்தின் மீதான பல இறக்குமதி விதிகளை அறிவித்தது. முக்கியமாக, இறக்குமதி வரி படிப்படி யாக உயர்த்தப்பட்டு 10%-மாக உள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்யவும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால், தேவைகளைச் சமாளிக்கக்கூடிய அளவில் தங்கத்தின் இருப்பு போதுமானதாக இல்லை. இதனாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் இறங்கவில்லை.

இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இறக்குமதி வரி தளர்த்தப்படவில்லை. அதனால் தேவைக்கு ஏற்ற தங்கம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.

தங்கம் விலை இனி எப்படி?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்து ஒரு அவுன்ஸ் 1,100-1,000 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவில் மாறிவரும் பொருளாதாரச் சூழல், பங்குச் சந்தையின் மீதான முதலீட்டாளர்களின் கவனம், ஃபெடரல் ரிசர்வின் கடன் வட்டி மாற்றம் போன்றவை தங்கத்துக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், 1,150 டாலர் என்பது முக்கிய ஆதரவு நிலையாக இருக்கும். ஏனென்றால், தங்கத்தின் சுரங்க உற்பத்தி விலை என்பது அந்த அளவில்தான் உள்ளது. உற்பத்தி விலையை விட, விற்கும் விலை கீழே போகும்போது, ஒட்டுமொத்த துறையையே பாதிப்படையச் செய்யும். ஆனால், தங்கத்தைவிட்டு முதலீட்டாளர்கள் மேலும் வெளியேறினால், 1,100-1,050 என்ற அளவை எட்ட வாய்ப்பிருக்கிறது.

வரும் வாரத்தில் நடைபெறக்கூடிய ஃபெடரல் ரிசர்வின் சந்திப்பு அதிமுக்கியமானதாகக் கருதப் படுகிறது. அதில் வங்கி வட்டி உயர்த்தப்பட்டால், டாலரின் மதிப்புக் கூடும். அது மேலும் தங்கத்தின் விலையை சரியச் செய்யும்.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P14c

இந்தியாவில் தங்கம் விலையின் நிலை..!

பொது பட்ஜெட்டில் தங்கத்தின் மீது முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. முக்கியமாக, முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் புழக்கத்தில் கொண்டுவரத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தங்கத்தின் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏற்பட்டால் தங்கத்தின் விலை நமது நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது.

மேலும், இறக்குமதிவரியைக் குறைக்க சாத்தியம் குறைவாக உள்ளது. ஏனென்றால், அமெரிக்காவில் கடன் வட்டி உயர்த்தப்பட்டால், டாலரின் மதிப்பு கூடி அது ரூபாயின் மதிப்பைக் குறைக்கும். மேலும், அமெரிக்காவில் வட்டி உயர்ந்தால், இங்குள்ள எஃப்ஐஐகளின் முதலீடு கணிசமாக பங்குச் சந்தை யிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அதுவும் ரூபாயின் மதிப்புக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும்.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P15a(1)

அதனால், மத்திய அரசாங்கம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதில் அதிக எச்சரிக்கையாகவே இருக்கும். அதனால் இடைப்பட்ட காலத்தில் நமது சந்தையில் பெரிய விலை இறக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், டாலரின் மதிப்பு கூடும்போது தங்கத்தின் விலை நமது நாட்டில் பெரிதாகக் குறைய வாய்ப்பில்லை.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தங்கத்தை ஒரு முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய முதலீடாக வருங்காலத்தில் இருக்காது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் இறக்க நிலை நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்றே கருதலாம். பெரிய ஏற்றம் அடையும் என்ற சூழல் கிடையாது. அதனால் முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட் ஃபோலியோவில் 5%-த்துக்கும் குறைவாக மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. தங்கத்தின் விலை என்பது நீண்ட கால கரடிச் சந்தை (நீண்ட கால கரடிச் சந்தை) என்ற நிலையில் உள்ளது.

உலகப் பொருளாதாரம், முக்கியமாக அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து வருவதால், தங்கத்தில் செய்யப்படும் முதலீடு, இதர முதலீடுகளை விட அதிக லாபம் அளிக்காது. ஐரோப்பா மற்றும் கிரீஸ் பிரச்னை, பூதாகாரமாக மாறினால் மட்டுமே தங்கத்தின் விலை உயரும் வாய்ப்பைப் பெறும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், கோல்டு இடிஎஃப், மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் கோல்டு சேமிப்பு திட்டங்கள் மற்றும் சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கோல்டு பாண்ட் ஸ்கீம் போன்றவற்றில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்? P15b

தங்கத்தின் சர்வதேச விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதே தவிர, ஏற வாய்ப்பில்லை. இந்தியாவிலும் தங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், அது மேலும் விலையை சரியச் செய்யும். ஆகவே, நீண்ட காலத்துக்குத் தேவையான தங்கத்தை வாங்குவதற்கு உண்டான காலகட்டமே தவிர, முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் ஈட்டித் தரும் காலகட்டம் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

வி.கோபாலகிருஷ்ணன்,

நிறுவனர், மணி அவென்யூஸ்
ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum