Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
என்பிஎஸ் முதலீடு... (N P S)
Page 1 of 1
என்பிஎஸ் முதலீடு... (N P S)
யாருக்கு உகந்தது?
அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் சமூகநலத் திட்டங்களுக்கு, அதிலும் குறிப்பாக, பென்ஷன் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘நாட்டு மக்கள் அனைவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பமாக இருக்கிறது’ என்று பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
வருமான வரிச் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு, பட்ஜெட்டில் நியூ பென்ஷன் ஸ்கீமில் (என்பிஎஸ்) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உச்சவரம்பாக இருந்த 1 லட்சம் ரூபாயை 1.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளார். தவிர, மாதச் சம்பளக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தனியாக ஒரு நிதியாண்டில் என்பிஎஸ்-ல் செய்யும் முதலீட்டுக்கு ரூ.50,000 வரை வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் என்பிஎஸ் மூலம் மட்டும் முதலீடு செய்து ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று சொன்னார் மும்பையைச் சேர்ந்த முன்னணி நிதி ஆலோசகர் ஒருவர்.
‘‘பணியாளர் சேமநல நிதி (இபி.எஃப்) தொகையில் சுமார் 15 சதவிகித தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இபிஎஃப் அமைப்பை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பங்கு முதலீட்டு மீதான ரிஸ்க் காரணமாக, இதனைக் கண்டுகொள்ளாமல் இபிஎஃப் அமைப்பு உள்ளது. என்பிஎஸ்-ல் முதலீட்டாளரின் வயதுக்கு ஏற்ப நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீட்டுத் தொகை பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்த என்பிஎஸ் முதலீட்டை ஊக்கப்படுத்தும் பட்சத்தில், பங்குச் சந்தைக்கு அதிக நிதி வரும் என மத்திய நிதி அமைச்சகம் நினைக்கிறது. அந்த வகையில்தான் என்பிஎஸ் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இந்த என்பிஎஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து ஒருவர் முதலீடு செய்யும்பட்சத்தில், விருப்பத்தின் அடிப்படையில் அவர் பிஎஃப் முதலீட்டை விலக்கிக்கொண்டு, அதிக மாத சம்பளத்தைப் பெற முடியும். அதேநேரத்தில், நிறுவனம் பணியாளர் கணக்கில் சேர்க்க வேண்டிய பிஎஃப் தொகையைத் தொடர்ந்து செலுத்திவரும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிஎஃப் கணக்கில் பணியாளர்கள் செலுத்திவரும் முதலீட்டுப் பணத்தை என்பிஎஸ் முதலீட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மிக நீண்ட காலமாக பிஎஃப் முதலீடு ஒற்றை இலக்க (8.25 முதல் 9.5%) வருமானத்தையே கொடுத்து வருகிறது. என்பிஎஸ்-ல் முதலீட்டின் ஒருபகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இரட்டை இலக்க வருமானம் கிடைக்கக்கூடும்.
இருந்தாலும், இந்த முதலீட்டில் பெரிய குறையாக இருப்பது, பென்ஷனுக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்பதுதான். ஓய்வுக்காலத் திட்டமான இபிஎஃப், பிபிஎஃப்-க்கு முதலீடு, வருமானம், முதிர்வு என அனைத்து நிலையிலும் வருமான வரிவிலக்கு இருக்கிறது. ஆனால், என்பிஎஸ்-ல் முதலீடு, முதலீட்டு பெருக்கத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், வாங்கும் பென்ஷனுக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.
என்பிஎஸ்-ல் ஏன் முதலீடு செய்யவேண்டும் என்பதற்கு சில காரணங்களைச் சுட்டிக்காட்டு கிறார்கள், நிதி ஆலோசகர்கள். முதல் காரணம், முதலீட்டு மீதான ரிஸ்க் குறைவு. முதலீட்டின் ஒருபகுதி பங்குச் சந்தையில் வயதுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவிகித தொகைதான் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், நீண்ட கால முதலீடு என்கிறபோது ரிஸ்க் பரவலாக்கப்பட்டு விடுகிறது. தவிர, இந்தத் திட்டத்தை எஸ்பிஐ, ஐசிஐசிஐ நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த ஃபண்ட் மேனேஜர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.
ரூ.500 ரூபாய் இருந்தால் என்பிஎஸ் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும். புதிதாக என்பிஎஸ் கணக்கு ஆரம்பிக்க ரூ.100, ஒரு கணக்குக்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் ரூ.190, ஒரு பரிமாற்றத்துக்கான கட்டணம் ரூ.4 என ஏறக்குறைய ஆண்டுக்கு ரூ.300-க்கு மேல் கட்டணத்துக்கே போய்விடுகிறது. அந்தவகையில் சிறு முதலீட்டாளர்களுக்கு கட்டணம் மூலமே அதிகத் தொகை செலவாகிவிடுகிறது. அடுத்து, இந்தக் கணக்கை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தலைமை தபால் அலுவலகங்கள், வங்கிகளில் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும் என்றாலும், அவர்களுக்கான கமிஷன் மிகக் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்த நிதி ஆலோசகர்கள்.
என்பிஎஸ் யாருக்கு ஏற்றது?
பணி ஓய்வுக்குப் பிறகு கட்டாயம் பென்ஷன் தேவை என நினைக்கிற அனைத்து பணியாளர்களும் இதில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள், அவர்களின் பணியாளர்களை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வைக்கும்போது, நிறுவனத்துக்கும் பணியாளர்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கிறது. அமெரிக்காவில் 401k என்கிற பென்ஷன் திட்டம் இருக்கிறது. இதில் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்துகொள்ளலாம். முதலீட்டுத் தொகை முழுமைக்கும் வரிச் சலுகை உண்டு. அதே நேரத்தில், 60 வயதுக்குமுன் பணத்தை எடுத்தால் அபராதம் இருக்கிறது. அதேசமயம், 60 வயதுக்கு மேல் எடுக்கும் தொகைக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. இதேபோல், என்பிஎஸ்க்கும் கொண்டுவந்தால், இதில் அதிகம் பேர் முதலீடு செய்ய முன்வருவார்கள்.
நடப்பு பட்ஜெட்டில் பெண் குழந்தைகளுக்கான நீண்ட காலச் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதியின் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு, இபிஎஃப், பிபிஎஃப் வரிசையில் அது சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் என்பிஎஸ்-ம் இந்தப் பட்டியலில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பென்ஷன் திட்டங்களுக்கு முக்கியத்துவம்!
மத்திய பட்ஜெட் 2015-16-ல் பென்ஷன் திட்டங்களான 80சிசிசி மற்றும் 80சிசிடி, 80சிசிடி(1பி) முதலீட்டு வரம்புகள் தலா ரூ.50,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், 2015-16 பட்ஜெட்டில் பென்ஷன் முதலீட்டுக்காகப் புதிதாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய முடியும். எப்படி?
80சிசிசி: இந்த 80சிசிசி பிரிவின் கீழ் எல்ஐசி மற்றும் ஐஆர்டிஏ அங்கீகரித்த பென்ஷன் திட்ட முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்தப் பிரிவில் வரிச் சலுகைக்கான முதலீட்டு வரம்பு, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
80சிசிடி: இந்த 80சிசிடி பிரிவின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கான வரிச் சலுகைக்கான வரம்பும் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
80சிசிடி(1பி): பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) போல், என்பிஎஸ்-லும் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தனியாக முதலீடு செய்து வரிச் சலுகை பெறும் விதமாக வருமான வரிப் பிரிவு 80சிசிடி(1பி) புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஓய்வூதிய திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் செய்யும் முதலீட்டுக்கு ஒரு நிதியாண்டில் கூடுதலாக ரூ.50,000 வரை வரிச் சலுகை பெறலாம்.
ந.விகடன் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் சமூகநலத் திட்டங்களுக்கு, அதிலும் குறிப்பாக, பென்ஷன் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘நாட்டு மக்கள் அனைவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பமாக இருக்கிறது’ என்று பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» என்பிஎஸ்...10 சிறப்பு அம்சங்கள்!( National Pension System)
» வரிச் சேமிப்புக்கான முதலீடு...
» எது சிறந்த முதலீடு?
» உண்மையான முதலீடு எது ?
» கடன் வாங்கி முதலீடு?
» வரிச் சேமிப்புக்கான முதலீடு...
» எது சிறந்த முதலீடு?
» உண்மையான முதலீடு எது ?
» கடன் வாங்கி முதலீடு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum