வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்?

Go down

பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்? Empty பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்?

Post by தருண் Tue Feb 24, 2015 3:32 pm

தாத்தா, பாட்டிகள் தங்களுடைய பேரன், பேத்திகளுக்கு பணத்தையும் ஆடைகளையும் ஆபரணங்களையும் பரிசாக அளிக்கிறார்கள். ஏன், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை பரிசாக அளிக்கக்கூடாதா? தாராளமாக அளிக்கலாம். அதற்கான திட்டங்கள் இப்போது தயாராகவே இருக்கின்றன.

உதாரணமாக, ஒரு தாத்தா தன் பேரனின் மூன்றாவது பிறந்தநாளில் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் 1,00,000 ரூபாய் ஒரே தவணையில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீடு 15 வருட காலத்தில் 12% வருமானம் தரும்பட்சத்தில், பேரனின் 18வது வயதில் கல்லூரியில் நுழையும்போது சுமார் 5.47 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்? P50b

தாத்தா பரிசாகத் தந்த தொகையை வைத்தே பேரன் தனது கல்லூரிப் படிப்புக்கான செலவை எளிதாக முடித்துவிடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தாத்தா, பாட்டிகள் எப்படி தனது பேரக் குழந்தைகளுக்கு பரிசாகத் தரலாம் என்பது பற்றி ப்ளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டர் லிமிடெட் நிறுவனத்தின் மண்டல அதிகாரி முருகன் விளக்கிச் சொன்னார்.

''சைல்டு பிளான்களில் மட்டுமே குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் அல்லது தாத்தா, பாட்டிகள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் சேர வழக்கமாக நாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக்கொடுக்கும் கேஒய்சி மற்றும் வங்கிக் கணக்கு முதலீடு செய்பவர் (தாத்தா, பாட்டி) விவரம் கொடுக்க வேண்டும். ஏனெனில், தாத்தா மற்றும் பாட்டியின் கணக்கிலிருந்துதான் காசோலை வரும்.

இதில் ஒரு தவணையாகவோ, எஸ்ஐபி முறையில் பல தவணையாகவோ முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர், தாத்தா அல்லது பாட்டி மூன்றாவது நபராகக் கருதப்படுவார்கள். எனவே, அவருடைய கேஒய்சி கட்டாயம் வேண்டும். ஆனால், பேரன் அல்லது பேத்தியின் லீகல் கார்டியனாகப் பெற்றோரே கருதப்படுவார்கள். எனவே, பெற்றோரின் (தாய், தந்தை இந்த இருவரில் ஒருவரது) கேஒய்சியும் இணைக்கப்பட வேண்டும். மைனராக இருக்கும் பேரன், பேத்திகளின் வயதை உறுதிப்படுத்த, அவர்களின் பிறப்புச் சான்றிதழ் அவசியம். இந்த ஆவணங்களுடன் தேர்டு பார்ட்டி டிக்ளரேஷன் பார்ம்ஐ (Third Party Declaration Form) நிரப்பிக் கொடுக்க வேண்டும். இதில் எஸ்ஐபி முறையிலும் முதலீடு செய்யலாம்' என்று கூறினார் முருகன்.

பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்? Nav50a

இந்த சைல்டு பிளான்களில் முதலீடு செய்வதற்கு வரி சலுகை கிடையாது. அதேநேரத்தில், சைல்டு பிளான் ஈக்விட்டி ஃபண்டாக இருந்தால், நீண்ட கால மூலதன வரி கிடையாது. சைல்டு ஃபண்டுகள் கடன் சார்ந்தது அல்லது பேலன்ஸ்டு (ஈக்விட்டி பகுதி 65%க்கு கீழ்) என்றால், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும்.

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சைல்டு ஃபண்டுகளைப் பேரன், பேத்திக்கு அன்பளிப்பாக அளிக்கும்போது, ஆண்டு மொத்த முதலீடு 50,000 ரூபாய்க்குமேல் போகக் கூடாது என்று நிபந்தனை விதிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமா னாலும் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன.

அதேபோல், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் யார் பெயரில் முதலீடு தொடங்கப்படுகிறதோ, அவர் மேஜரான பிறகு அவர் மட்டும்தான் முதலீட்டை கையாள முடியும் என்று கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் கார்டியனாக உள்ள பெற்றோர்கள்கூட இந்த முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றன.

இந்த சைல்டு பிளான்களின் விதிமுறைகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது. எனவே, உங்களுக்குத் தகுந்த விதிமுறைகள் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.

--ந.விகடன்


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum