Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வரி சேமிப்பு: இவற்றையும் கவனியுங்கள்!
Page 1 of 1
வரி சேமிப்பு: இவற்றையும் கவனியுங்கள்!
80 சி பிரிவைத் தாண்டியும் முதலீடு மற்றும் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. அவற்றை இங்கே பார்ப்போம்.
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (80சிசிஜி)
* ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள்) முதன்முறையாக முதலீடு செய்பவர் களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையில் (50% சலுகை) வரி சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் தொகையில் 50 சதவிகிதத்தை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். 80சி முதலீடு தவிர, கூடுதலாக இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது.
* வரி சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். பங்குகளில் முதல்முறையாக முதலீடு செய்பவராக இருக்க வேண்டும்.
* இந்தத் திட்டத்துக்கான லாக்-இன் பீரியடு மூன்று ஆண்டுகள்.
* அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏற்றது.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80டி)
* மருத்துவச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்துக்கு (கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள்) ரூ.3-5 லட்சத்துக்குக் கவரேஜ் கொடுக்கும் பாலிசி எடுத்துக்கொள்வது கட்டாயம். இதற்கான ஆண்டு பிரீமியம் சுமார் 5,000 ரூபாய்.
* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரி சலுகை இருக்கிறது. ஒரு நிதியாண்டில் வரிதாரர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் 15,000 ரூபாய்க்கு வரி சலுகை உண்டு.
* வரி கட்டுபவர் மூத்த குடிமகனாக இருந்தால், ரூ.20,000 வரையிலான பிரீமியத்துக்கு வரி சலுகை இருக்கிறது.
* வரிதாரர் தனது பெற்றோருக்கும் (மூத்த குடிமக்கள்) சேர்த்து எடுக்கும் மெடிக்ளெய்ம் பாலிசி பிரீமியத்துக்கு அதிகப்படியாக ரூ.20,000 வரை வரி சலுகை பெற முடியும். அதாவது, ரூ.35,000-க்கு வரி சலுகை கிடைக்கும்.
* ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்யும் செலவுகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5000 வரி சலுகை கிடைக்கும். இது வரி சலுகை அளிக்கப்படும் 15,000 ரூபாய் பிரீமியத் தொகைக்குள் அடங்கும்.
வீட்டுக் கடனுக்கான வட்டி (24பி)
* வீட்டுக் கடன் திரும்பச் செலுத்துவதில் வட்டியில் (அந்த வீட்டில் குடியிருக்கும்பட்சத்தில்) ஒரு நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரை வரி சலுகை உண்டு.
* வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டியிருந்தால், செலுத்தும் முழு வட்டிக்கும் வரி சலுகை உண்டு.
* வருமான வரியை அதிகமாகச் சேமிக்க, கணவன் - மனைவி இருவரும் வருமானம் ஈட்டும்பட்சத்தில், கூட்டாக வீட்டுக் கடன் வாங்கலாம். அப்போது இருவரும் தனித்தனியே அசல் தொகைக்கு 80சி பிரிவில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டிக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரி சலுகை பெற முடியும்.
வீட்டு வாடகை படி (10 (13ஏ))
* வசிக்கும் வீட்டுக்குத் தரப்படும் வாடகைக்கு வரிவிலக்கு சலுகை உண்டு.
* மொத்த சம்பளத்தில் 10 சதவிகிதக்குமேல் வாடகையாகத் தந்திருக்க வேண்டும்.
* வசிக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகை படி ஆகியவற்றைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது.
* வீட்டு வாடகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேலே என்றால், வீடு உரிமையாளரின் பான் என்ணை வீட்டு வாடகை ரசீதில் குறிப்பிடுவது கட்டாயம்.
கல்விக் கடன் (80இ)
* வரிக் கட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி சலுகை இருக்கிறது.
* கடனைக் கட்டத் தொடங்கி, எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரி சலுகை உண்டு.
* திரும்பக் கட்டும் அசல் தொகைக்கு வரி சலுகை இல்லை.
உடல் ஊனமுற்ற வரிதாரர் (80யூ)
வருமான வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சம்) வரி சலுகை இருக்கிறது.
மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80 டிடி)
வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1 லட்சம்) வரை வருமான வரி சலுகை இருக்கிறது.
தீவிர நோய்களுக்கான சிகிச்சை(80 டிடிபி)
எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரி சலுக்கை உள்ளது.
நன்கொடை (80ஜி)
பிரதமர் நிவாரண நிதி, கல்லூரிக்கு கொடுக்கும் நன்கொடை என பல நன்கொடைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 - 100% வரை வரி சலுகை இருக்கிறது.
--ந.விகடன் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (80சிசிஜி)

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்
» வருமான வரி சேமிப்பு... முதலீட்டு திட்டங்களும் வருமானமும்!
» 10 சதவீத சேமிப்பு போதுமா?
» மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு
» அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum