வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank, ING Vysya Bank)

Go down

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank, ING Vysya Bank) Empty ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank, ING Vysya Bank)

Post by தருண் Fri Nov 21, 2014 8:54 am

கோட்டக் மஹிந்திரா வங்கி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியுள்ளது. இந்த வங்கியை சுமார் 15000 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணைப்பிற்கு பிறகு இந்தியாவில் உள்ள தனியாவர் வங்கிகளின் வரிசையில் கோட்டக் - ஐஎன்ஜி இணைந்த வங்கி நான்காவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank, ING Vysya Bank) Kotak-Mahindra-Bank-L

இந்த நிறுவனத்தின் மதிப்பீடு விலை நிலவரங்களின் சராசரியை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது எனவும், ஐஎன்ஜி வைஸ்யாவில் 1000 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு கோட்டக்கின் 725 பங்குகள் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா முழுவதும் 1214 வங்கி கிளைகளை கொண்டு இந்த இணைந்த வங்கி செயல்படும் என்று கூறப்படுகிறது.

கோட்டக் வங்கி தற்போது ரீடெயில் தொழிலுக்கான வங்கிக்கடன்களை அளிப்பதில் சிரப்பாக செயல்பட்டு வருகிறது, அதேபோல் ஐஎன்ஜிவைஸ்யா எஸ்எம்இக்களுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த இணைப்பு இன்னமும் மக்களை சென்றடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இணைப்பு தற்போது ஆர்பிஐயின் அனுமதி மற்ற நெறிமுறை அனுமதிகளுக்காக காத்திருக்கிறது.


Last edited by தருண் on Fri Nov 21, 2014 9:08 am; edited 2 times in total

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank, ING Vysya Bank) Empty கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைகிறது ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கி: இரு பங்குகளின் விலையும் 52 வார உச்சத்தை தொட்டன

Post by தருண் Fri Nov 21, 2014 9:06 am


ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. மும்பை பங்குச்சந்தைக்கு அளித்த செய்திகுறிப்பில் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி இதனை தெரிவித்திருக்கிறது. கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்கும் இதனை தன்னுடைய ட்விட்டர் மூலம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். முறையான அனுமதி பெற்ற பிறகு இந்த இணைப்பு இருக்கும், மேலும் பங்குதாரர்கள் நலனுக்கு இணைந்து வேலை செய்வோம் என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த இரண்டு பங்குகளின் விலையும் உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டன. ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி பங்கு 7.84 சதவீதம் உயர்ந்து 816 ரூபாயில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையான 865 ரூபாயை தொட்டது. அதேபோல கோடக் மஹிந்திரா வங்கி பங்கு 7.35 சதவீதம் உயர்ந்து 1156 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 1163 ரூபாயில் முடிவடைந்தது.

பெங்களூருவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கோடக் வங்கியுடன் இணையவிருக்கிறது. இந்த இணைப்பு மூலம், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி. ஆக்ஸிஸ் வங்கி களுக்கு பிறகு நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோடக் வங்கி இருக்கும்.

1000 ஐ.எம்.ஜி வைஸ்யா வங்கிக்கு 725 கோடக் பங்குகள் கிடைக்கும். ஐ.எம்.ஜி வைஸ்யா வங்கியிடம் நாடு முழுக்க 573 கிளைகளும் 635 ஏடிஎம்களும் இருக்கின்றன.

இந்தியன் வைஸ்யா வங்கியை டச்சு நாடு நிறுவனமான ஐஎன்ஜி குழுமம் இணைத்து 2002-ம் ஆண்டு ஐஎன்.ஜி. வைஸ்யா வங்கி உருவானது. இந்திய வங்கி ஒன்று வெளிநாட்டு வங்கியை இணைத்தது அப்போதுதான். இப்போது இந்த வங்கியில் ஐஎன்ஜி குழுமம் வசம் 42.73 சதவீத பங்குகள் இருக்கின்றன.

ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. சைலேந்திர பண்டாரி இயக்குநர் குழு முன்பு தன்னுடைய ராஜி நாமாவை சமர்ப்பித்தார். அவரது ராஜிநாமாவை இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டது. ஆனால் அவர் அடுத்த வருடம் ஜனவரி 31 வரை இந்த பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய துணை சி.இ.ஓ உதய் சரணை சி.இ.ஓவாக இயக்குநர் குழு நியமித்து ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த இணைப்பு குறித்து ஒரு வருடங்களாக அவ்வப்போது செய்திகள் கசிந்து வந்தன.

இதேபோல இந்த வருட ஆரம்பத்தில் டச்சு நிறுவனமான ஐ.என்.ஜி குழுமம், ஐ.என்.ஜி. வைஸ்யா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தன்வசம் இருந்த 26% பங்குகளை எக்ஸைட் நிறுவனத்திடம் விற்றது குறிப்பிடத் தக்கது. மேலும் ஐஎம்ஜி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எக்ஸைட் காப்பீட்டு நிறுவனம் என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
-- தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum