Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
விலை குறையும் கச்சா எண்ணெய்...
Page 1 of 1
விலை குறையும் கச்சா எண்ணெய்...
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3.37 ரூபாய் குறைந்துள்ளது என்ற செய்தி அனைவருக்கும் தீபாவளி இனிப்பாக தித்திக்க வைத்திருக்கிறது. எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை இப்போது எப்படி குறைந்தது. சாதாரண மனிதர்களுக்கும் தோன்றும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், உலக அளவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் பின்னணியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
எண்ணெய் யுத்தம் காரணமா?
கச்சா எண்ணெய்யின் விலை உலக அளவில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 110 டாலருக்கு விற்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ஏறக்குறைய 25% குறைந்து, தற்போது 85 டாலருக்கு விற்பனையாகி வருகிறது. இந்த அபார விலை குறைவுக்கு பின்னால் நடப்பது வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் எண்ணெய் யுத்தமே காரணம் என்கிறார்கள். எப்படி?
கச்சா எண்ணெய்யின் விலை சமீப காலமாக குறைந்ததற்கு முக்கிய காரணம், அமெரிக்காவிலிருந்து வரும் அதிகப்படி யான சப்ளை மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்திருப்பதே. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 70 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு ஏறக்குறைய 9 மில்லியன் பேரல்களைத் தொட்டுள்ளது.
அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிகரிக்க என்ன காரணம்? உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய நாடுகளான ஈரானுக்கும் அதன் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே அமெரிக்கா உற்பத்தியை அதிகரித்துள்ளது என சில சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளும் சமாளிக்கும் வழி தெரியாமல் திணறி வருகின்றன. இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது என்றாலும், இதனால் நீண்ட காலத்தில் அமெரிக்காவுக்கு லாப இழப்பே ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எனினும் கச்சா எண்ணெய் விலை குறைய இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும் என்று சில நிபுணர்களிடம் கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான டி.பி.கபாலியை. நம் கேள்விகளுக்கு தெளிவான பதிலைச் சொன்னார் அவர்.
தொழில்நுட்பமே காரணம்!
‘‘தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி என்பது முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளது. அதிலும், அமெரிக்காவின் உற்பத்தி என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா விடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள் தான். அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ‘ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடிகிறது.
அதேசமயம், உலகில் கச்சா எண்ணெய்க்கான தேவையும், பயன்பாடும் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் பயன்பாட்டாளரான சீனாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதும் கச்சா எண்ணெய்க்கான தேவையைக் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் இறக்கத்தில் இருப்பதும் கச்சா எண்ணெய்யின் விலை குறைய காரணமாகியுள்ளது. தற்போது சுமார் 85 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வரும் கச்சா எண்ணெய் இன்னமும் குறைந்து 75 டாலர் வரைகூட செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அதற்குக் கீழ் செல்லும்போது அதிக உற்பத்தி செய்யும் நாடுகளும், அமெரிக்காவும் அதன் உற்பத்தியைக் குறைக்கலாம். அப்போது மீண்டும் அதன் விலை ஒரு நிலைக்குவர வாய்ப்புள்ளது.
இதனால் இந்தியாவில் எரிபொருளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையும்; அதனால் போக்குவரத்து செலவு குறையும். அப்போது, அத்தியாவசிய பொருள்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
அடுத்து நாம் சந்தித்தது கமாடிட்டி நிபுணரும் பெஞ்ச்மார்க் அட்வைஸரி சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநருமான சண்முகநாதன் நாகசுந்தரத்தை. அவர் சொன்ன கருத்து வேறுவிதமாக இருந்தது.
விலை குறைவு தற்காலிகமானதே!
‘‘கச்சா எண்ணெய்யின் விலை குறைய முக்கியக் காரணம், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதும்; அதிகமான சப்ளையும்தான். கடந்த பத்து வருட கச்சா எண்ணெய் விலையை எடுத்துக் கொண்டால், தற்போது உள்ள விலை சராசரியானதே.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த விலை இறக்கமும் தற்காலிகமானதுதான். இதன் பின்புலத்தில் போட்டி இருக்கிறது என்று கூறினாலும், இன்னும் ஆறு மாதங்களில் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும்.
கச்சா எண்ணெய்யின் விலை குறைவதால் அத்தியாவசிய பொருள் களின் விலை குறையுமா என்று கேட்டால், குறையாது என்றுதான் சொல்வேன். பணவீக்கம் என்பது ஆர்பிஐ பணத்தை அச்சடிப்பது சம்பந்தப்பட்ட விஷயம். ஆர்பிஐயின் நடவடிக்கைகள் மட்டுமே பணவீக்கத்தைக் குறைக்கும் என்பதால், கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்திய சந்தை களில் பெரிய விலை மாற்றத்தை ஏற்படுத்தாது’’ என்று வித்தியாசமான கோணத்தில் கருத்து சொன்னார்.
நமக்கு என்ன நன்மை?
வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் இந்த யுத்தத்தினால் கச்சா எண்ணெய் விலை இறங்குவதாகச் சொல்லப்பட் டாலும், இதனால் நமக்கு சாதகமா, இல்லை பாதகமா என்கிற கேள்வி முக்கியமானது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான மூன்று மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
முதலாவதாக, வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்களில் முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். பொதுவாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பங்குச் சந்தையின் மதிப்பு உயரும். அப்படி உயரும்போது ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும். அதாவது, முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 100 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.6,100) தந்து வாங்கி இருப்போம். அதையே தற்போது 85 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.5,185) என்ற அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்குவதால், நமது இறக்குமதி செலவு கணிசமாக குறையும்.
இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை குறையும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்திருக்கிறது. ஜனவரி 2012-ல் 5,432 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 6,000 ரூபாய்க்குமேல் சென்றது. கடந்த மாதம் மிகக் குறைந்த விலையான 5,525-க்கு குறைந்து வர்த்தகமானது. கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகும் பட்சத்தில், நமது ஜிடிபியில் 2.2 சத விகிதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 1.55 சதவிகிதமாகக் குறையும் என்று கிரைசில் நிறுவனம் சொல்லியிருக்கிறது.
மூன்றாவதாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை குறைந்து வாகனங்களின் போக்குவரத்துச் செலவும் குறையும். இதன்மூலம் காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருள் களின் விலை குறையும் என எதிர்பார்க்க லாம். இந்தத் தொடர் நடவடிக்கைகளால் மக்களின் கையிருப்பு அதிகமாகி, அவை சேமிப்பாகவும் முதலீடாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆக, என்ன காரணத்துக்காக கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இதனால் இந்தியாவுக்கு சாதகமான சூழலே ஏற்பட்டுள்ளது. நெடுங்காலமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த விலை குறைப்பு மகிழ்ச்சி தரும் விஷயம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது கச்சா எண்ணெய் விலை
» குறையும் டிமாண்ட், சரியும் விலை!
» தங்கம் விலை: இன்னும் எவ்வளவு குறையும்?
» விலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா?
» தேங்காய் எண்ணெய் பிசினஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum