வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


விலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா?

Go down

விலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா? Empty விலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா?

Post by தருண் Mon Sep 29, 2014 3:07 pm

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு இருந்த விலையைவிட மீண்டும் குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,223 டாலர் அளவுக்கு குறைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்ததால், இந்தியாவிலும் கடந்த ஏழரை மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு கிராம் ஏறக்குறைய 3,000 ரூபாய்க்கு விற்ற தங்கம், இன்று சுமார் 2,550 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாவது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இந்த விலை இறக்கத்துக்கு காரணம் என்ன, இந்த விலைச் சரிவு இன்னும் நீடிக்குமா, தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், தங்களது தேவைகளுக்காக தங்கம் வாங்குபவர்களும் இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுக்கு பதில் தேடிப் புறப்பட்டோம்.

முதலில், தங்கம் விலை குறைந்ததற்கான காரணங்களைப் பார்த்துவிடுவோம். உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட நன்கு முன்னேறி வருகிறது. உதாரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கூடியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை பங்குச் சந்தை மீது திரும்பியுள்ளது. சர்வதேச சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த மூன்று மாதங்களில் சுமார் 10 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாலும் முதலீட்டாளர்களின் பார்வை லாபம் தரும் பங்குகள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க உள்ளது என்கிற எதிர்பார்ப்பினாலும் தங்கத்தின் விலை குறைய ஒரு முக்கிய காரணமாகும்.

தங்கத்தின் விலை இறக்கம் தொடருமா, எந்த அளவுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.

‘‘உலகச் சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே முடிவு செய்வார்கள். அப்படி இருக்கும்போது தற்போது வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரத்தால் முதலீட்டாளர்களின் பார்வை சந்தைகளின் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறையும் என்பது முதலீட்டாளர்கள் அறிந்ததே!

அதுமட்டுமின்றி, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம், இந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், அமெரிக்க நாடுகளில் கோடைகாலம் என்பதால், அவர்கள் விடுமுறையைக் கழிக்க மற்ற நாடுகளுக்கும், பகுதிகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்போது தங்கத்தில் முதலீடு செய்யாமல் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துவிட்டு செல்வதையே அதிகம் விரும்புவார்கள்.

இது இந்த ஆண்டு மட்டுமல்ல, எல்லா ஆண்டுகளிலும் நடப்பதுதான். உலகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தங்கத்துக்கான தேவை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைவாக உள்ளதும் தங்கம் விலை குறைய ஒரு காரணம்.

ஆனால், முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த மாத ஆரம்பத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தைக் காணும். தங்கத்தின் விலை இன்னமும் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறையலாம். தற்போது ஏற்பட்டிருக்கும் விலை இறக்கம் தற்காலிகமானதே. அதனால் தங்கத்தின் விலை தற்போது குறைவது போல் இருந்தாலும் மீண்டும் உயர வாய்ப்புள்ளது'' என்றார் அவர்.

தங்கம் விலை குறைவதை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது குறித்து சென்னையில் உள்ள சில தங்க நகை விற்பனையாளர்களிடம் கேட்டோம்.

‘‘மக்களது மனநிலை தங்கத்தில் சேமிப்பதையே அதிகம் விரும்புவதாக இருக்கிறது. தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் மக்கள் தங்கத்தை வாங்குவதை நிறுத்த மாட்டார்கள். ஆனால், அளவு என்ற விஷயத்தில் மட்டும்தான் சற்று குறைத்துக் கொள்வார்கள். தற்போது விலை குறைந்து வருவதால், மக்கள் அதிகமாக தங்கம் வாங்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். அடுத்து, எப்போது தங்கம் விலை உயரும் என்று தெரியாததால், மக்கள் இப்போது குறைந்த விலையில் வாங்கி வைத்தால், நமது தேவைக்கோ அல்லது விலை ஏறும்போதோ விற்கலாம் என்ற மனநிலையில் தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகின்றனர்’’ என்றார்கள்.

தங்கத்தை பொருத்தவரை, உடனடி தேவை இருப்பவர்களுக்கு தற்போதைய விலையிறக்கம் சாதகமாக இருக்கும். முதலீட்டு நோக்கில் நீண்ட காலத்துக்கு சேமிக்க நினைப்பவர்கள், விலை குறையும்போதெல்லாம் வாங்கலாம். தங்க நகைகளுக்கு அதிக சேதாரம், செய்கூலி போன்றவை இருப்பதால், கோல்டு இடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum