வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


களைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா?

Go down

களைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா? Empty களைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா?

Post by தருண் Sat Oct 18, 2014 12:20 pm

என் நண்பர் ஒருவர் நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர். கடந்த பிப்ரவரியில் ஆக்ஸிஸ் வங்கியின் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.1,100 தந்து வாங்கினார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று ஒருநாள் எனக்கு போன் செய்து, ‘‘ஆக்ஸிஸ் வங்கிப் பங்கு விலை வெகு வாக சரிந்துவிட்டதே’ வங்கியில் ஏதாவது பிரச்னையா? என்று பதற்றத்துடன் கேட்டார். அவர் தொடர்பு கொண்ட நாள் 2014 ஜூலை 28. அன்றுதான் ஆக்ஸிஸ் வங்கி, பங்கின் முக மதிப்பை ரூ.10-லிருந்து 2-ஆகக் குறைத்தது. பங்குப் பிரிப்பின் காரணமாகச் சந்தை விலையும் குறைந்ததை அவருக்கு எடுத்துச் சொன்னபின், தான் வாங்கிய 100 பங்கு இப்போது 500 பங்குகளாக அதிகரித்தி ருப்பதைக் கேட்டு சந்தோஷமாக போனை வைத்தார்.

சமீப காலமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பங்குகளின் முக மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நடப்பாண்டில் இதுவரைக்கும் ஏறக்குறைய 80-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்குகளின் முக மதிப்பைக் குறைப்பதன் மூலம் பங்குகளைப் பிரிக்கும் வேலையைச் செய்து முடித்துள்ளன.

2000-01 ஆண்டுகளில் சாஃப்ட்வேர் துறை சார்ந்த நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையில் பங்குப் பிரிப்பில் ஈடுபட்டன. பின்னர் 2005-07-ம் ஆண்டு களில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங் கள் பங்குப் பிரிப்பில் ஈடுபட்டன. நடப்பாண்டில் வங்கிகள் இந்த வேலையை மும்முரமாகச் செய்து வரு கின்றன. நிறுவனங்கள் ஏன் பங்குகளைப் பிரிக்கின்றன?

களைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா? Nav56a

முக மதிப்பு!

ஒரு நிறுவனம் தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் மூன்று வகை களில் திரட்டப்படுகிறது. ஒன்று, வங்கி களில் கடன் வாங்குவது. இரண்டு, பங்குகளை வெளியிடுவது. மூன்றாவது, கடன் திரட்டுதல். உதாரணமாக, ஒரு நிறுவனம் 1 கோடி பங்குகளை வெளி யிட்டு, ரூ.10 கோடி நிதி திரட்டுகிறது என்று கொள்வோம். மொத்த மதிப்பை வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு தெரிந்துவிடும். இதைத்தான் முக மதிப்பு என்று குறிப்பிடுகிறோம். அதாவது, அந்த நிறுவனம் வெளியிட்ட மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.10 கோடி. வெளியிடப்பட்ட பங்குகள் எண்ணிக்கை 1 கோடி. முக மதிப்பு = 10 கோடி / ஒரு கோடி = ரூ.10

சந்தை விலை!

ரூ.10 முக மதிப்புள்ள பங்கு, சந்தையில் வர்த்தகமாகும் விலையை சந்தை விலை என்கிறோம். முக மதிப்பு என்பது நிறுவனம் மாற்றினால் மட்டுமே மாறக் கூடியது. சந்தை விலை என்பது தினசரி மாற்றத்துக்கு உட்பட்டது.

பங்குப் பிரிப்பு!

ஒரு நிறுவனம் தனது நிறுவனப் பங்குகளின் முக மதிப்பை குறைத்து, பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பங்குப் பிரிப்பு. உதாரணமாக, ஒரு பங்கின் முக மதிப்பு ரூ10. அந்த நிறுவன பங்குகள் எண்ணிக்கை 1 கோடி. அந்தப் பங்கின் சந்தை விலை ரூ.50
நிறுவனப் பங்கின் முக மதிப்பு ரூ.10லிருந்து 2-ஆகக் குறைக்கப்படுகிறது எனில், பங்குப் பிரிப்பின் விகிதம் 1:5. அதாவது, நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்து, 5 கோடி பங்குகளாகி உள்ளது. சந்தை விலை 5-ல் ஒரு பங்காகக் குறைந்து, ரூ.10-க்கு வரும். இதனால் நமது முதலீட்டின் மதிப்பில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது.

எடுத்துக்காட்டாக, நம்மிடம் 100 ரூபாய் இருக்கிறது என்று கொள்வோம். அந்த 100 ரூபாயை எப்படி வேண்டுமா னாலும் மாற்றிக்கொள்ளலாம். 2 ஐம்பது ரூபாயாகவோ, 5 இருபது ரூபாய்களா கவோ, 10 பத்து ரூபாய்களாகவோ மாற்றிக் கொள்ளலாம். ஆனால், மொத்த மதிப்பான ரூ.100 மாறாது. இதேபோல் பங்குப் பிரிப்பின் விகிதம் எந்த விகிதத்தில் இருந்தாலும் நம்முடைய முலீட்டின் மதிப்பில் பெரிய மாற்றம் இருக்காது.

பங்குப் பிரிப்பு ஏன்?

பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்கின் விலை அபரிமிதமாக உயரும் போது சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கு வசதியாகப் பங்கின் விலையைக் குறைக்க வேண்டி பங்குப் பிரிப்பைச் செய்கின்றன. இது நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

சில முதலீட்டாளர்கள், பங்கின் விலை தொடர்ந்து ஏறுவதால், அந்த நிறுவனப் பங்கு லாபமாகச் செயல்படுகிறது. இனிவரும் நாட்களிலும் அந்த ஏற்றம் தொடரும் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். இது தவறான அணுகுமுறை.
கடந்த காலத்தில் சில நிறுவனங்களின் பங்குகள் பிரிக்கப்பட்டபின் லாபம் தந்திருக்கிறதா, இல்லையா என்று பார்ப்போம். உதாரணமாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த 24.7.2009 அன்று பங்குகளைப் பிரித்தது. அதாவது, 1:2 (ரூ.10 முக மதிப்பிலிருந்து ரூ.5) என்கிற விகிதத்தில் பங்குகளைப் பிரித்தது. 24.7.2009 அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.415.50. ஆனால், 23.7.2010 அன்று ஒரு பங்கின் விலை ரூ.313.70. இது ஏறக்குறைய 25% விலை சரிவு! காரணம், பங்குப் பிரிப்புக்கு முன் வர்த்தக எண்ணிக்கை சுமார் 6.9 லட்சம் பங்குகள். ஆனால், பங்குப் பிரிப்புக்குப்பின் சராசரி வர்த்தக எண்ணிக்கை 20.13 லட்சம் பங்குகள்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஏசியன் பெயின்ட் நிறுவனம் 30.7.2013 அன்று 1:10 என்கிற விகிதத்தில், அதாவது ரூ.10 முக மதிப்புள்ள பங்கை ரூ.1-ஆக குறைத்தது. 29.7.2013 அன்று (பங்குப் பிரிப்புக்குமுன்) இந்தப் பங்கின் விலை ரூ.5,118.20. ஆனால், 30.7.2013 அன்று (பங்குப் பிரிப்புக்குப்பின்) தொடக்க விலை ரூ.510.75. பங்குப் பிரிப்புக்குப்பின் இதன் விலை ரூ.395-ஆக குறைந்தாலும், ஓராண்டுக்குப்பின் 30.7.2014 அன்று ரூ.644-ஐ தொட்டது.
ஓர் ஆய்வின்படி, பங்குப் பிரிப்புக்குப் பின் 50% பங்குகள் விலை குறைந்துள்ளன. பல பங்குகளின் விலை மிகப் பெரிய அளவில் சரிந்து இருக்கின்றன. உதாரணமாக, ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, சுஸ்லான், ஜெய் கார்ப்பரேஷன் போன்ற பங்குகளைக் குறிப்பிடலாம். இதற்கு நிறுவனங்களின் செயல்பாடும், பொருளாதார சூழல்களும் காரணமாக இருந்திருக்கலாம்.

பல நன்மைகள்!

பங்குகளைப் பிரிப்பதன் மூலம் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். பங்குகளைப் பிரித்தபின் விலை எவ்வாறு இருந்தாலும் வர்த்தமாகும் பங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதால், விற்பனை விலை மற்றும் வாங்கும் விலைக்கான வித்தியாசம் குறைவதால், பங்கின் உண்மையான விலையைக் கண்டறிய முடியும். இதன்மூலம் செயற்கையாகப் பங்கின் விலை ஏற்றப்படுவது தவிர்க்கப்படும். முகமதிப்புக் குறைவதன் காரணமாகச் சந்தை விலை குறையும்போது, அதிக முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக அமைகிறது.

களைகட்டிய பங்குப் பிரிப்பு... வாங்கினால் லாபம் கிடைக்குமா? Nav56e

கவனிக்க வேண்டியவை!

பங்குப் பிரிப்பை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

பங்குப் பிரிப்பு அந்த நிறுவனத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

பங்குப் பிரிப்புக்கும் விலை ஏற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பங்கின் விலை ஏற்ற இறக்கங்கள் பொருளாதாரத்தின் அடிப்படையில் சந்தையில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டைப் பொறுத்து இருக்கிறது.

பங்குப் பிரிப்பினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு பங்கினை முதலீட்டுக்குத் தேர்வு செய்யக்கூடாது. பங்குகளைப் பிரித்தபின் குறைந்த விலையில் அந்தப் பங்கை வாங்கினால் மட்டும் போதாது; தொடர்ந்து அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியம்.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum