வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

Go down

போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா? Empty போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

Post by தருண் Tue Jul 19, 2016 2:02 pm

போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா? P56s

சமீபத்தில் ஐடிசி நிறுவனம் போனஸ் பங்கு தருவதாக அறிவித்தது. அப்போது அதன் பங்கு விலை ரூ.350 - 365 என்ற வரம்பில் இருந்தது. கடந்த ஜூன் 30-ம் தேதி திடீரென்று அதன் பங்கு விலை ரூ.240 - 245-ஆகக் குறைந்தது. போனஸ் பங்கு கிடைக்கும் என்று இந்தப் பங்கை வாங்கியவர்கள் நஷ்டமடைந்துவிட்டதாக அதிர்ச்சி அடைந்தனர். பங்குச் சந்தையில் போனஸ், பங்குப் பிரிப்பு போன்ற நடவடிக்கைகள் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் போனஸ், பங்குப் பிரிப்பு இரண்டுக்கு மான வித்தியாசம் என்ன, இதனால் பங்கின் விலை ஏன் குறைகிறது, இவற்றினால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

“போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளின்போது அதிகரிக்கப்படும் பங்கு எண்ணிக்கைக்கு ஏற்ப பங்கின் விலை சமநிலைப்படுத்தப்படும். இதனால்தான் பங்கின் விலை குறைகிறது. ஆனால், உண்மையில் ஒருவர் செய்த முதலீட்டின் மதிப்பு போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கையினால் குறையாது. போனஸ் மற்றும் பங்குப் பிரிப்புக்குப்பின் முதலீட்டாளரிடம் உள்ள பங்கு களின் எண்ணிக்கைக் கூடுவதால் அவற்றின் விலை குறைந்திருந் தாலும் மொத்த மதிப்பு கிட்ட தட்ட அப்படியேதான் இருக்கும்.

நிறுவனங்கள் போனஸ், பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்குக் காரணம், நிறுவனத்தின் லிக்விடிட்டியை அதிகப்படுத்த விரும்புவதுதான். போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பின்போது அந்த நிறுவனப் பங்கின் விலை கணிசமாகக் குறைவதால், பல முதலீட்டாளர் களால் அந்தப் பங்கை வாங்கி முதலீடு செய்யும் நிலை உருவா கிறது. இதன் மூலம் வர்த்தகமாகும் நிறுவனத்தின் பங்குகளின் வால்யூம்களும் அதிகமாக இருக்கும்.

போனஸ், பங்குப் பிரிப்பு: என்ன வித்தியாசம்?

போனஸ் வழங்கும் கம்பெனி, அடிப்படையில் வலுவாக இருக்கும். ஏனெனில் ஒரு நிறுவனம் லாபத்தில் டிவிடெண்ட் கொடுத்தது போக தன்னிடம் உள்ள கையிருப்புத் தொகைக்கேற்ப போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் என்பது ஒரு நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் இலவசப் பங்கு களாகும். இது ஏற்கெனவே வைத்திருக்கும் ஒரு பங்குக்கு ஒன்று அல்லது இரண்டு பங்குக்கு ஒன்று அல்லது 5 பங்குக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு ஐந்து என்பது போன்ற விகிதத்தில் இருக்கும். போனஸ் பங்குகள் வழங்கும் போது, நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அதன் பங்கு மூலதனமும் அதிகரிக்கும்.

போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா? P57B

பங்குப் பிரிப்பு என்பது, பங்கின் முகமதிப்பைக் குறைப்பதாகும். உதாரணத்துக்கு, பத்து ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றை 2 ரூபாய் முக மதிப்பு கொண்ட 5 பங்குகளாக அல்லது 5 ரூபாய் முக மதிப்புள்ள 2 பங்குகளாக அல்லது 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட 10 பங்கு களாக பிரித்துக் கொள்ளலாம். பிரிக்கப்படும் முக மதிப்புக்கு ஏற்ப நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில், பங்குப் பிரிப்பால் நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரிக்காது.

இரண்டிலுமே பங்குகளின் எண்ணிக்கைதான் கூடுமே தவிர, முதலீடு செய்யப்பட்ட மதிப்பின் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. உதாரணத்துக்கு, ஐடிசி 2:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு அறிவிக்கிறது என்றால் இரண்டு பங்குகளின் மதிப்பு ரூ.700 எனில், அது 3 ஆகப் பிரிக்கப்பட்டு, ஒரு பங்கு ரூ.230-240 என்ற அளவில் பங்குகளின் விலை சரிசெய்யப்பட்டு இரண்டு பங்குகள் வைத்துள்ளவரின் கணக்கில் மூன்று பங்குகளாகக் கணக்கு வைக்கப்படும். இப்போதும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.700தான்.

பங்குப் பிரிப்பில் நிறுவனம் ஒன்றின் முக மதிப்பு ரூ.10-ஐ ரூ. 5-ஆக குறைத்து ஒரு பங்கு இரண்டு பங்காகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். அந்தப் பங்கின் விலை ரூ.300 என்றால் பங்குப் பிரிப்புக்குப்பின் அதன் பங்கு விலை ரூ.150-ஆக இருக்கும்.

போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா? P58A

முதலீட்டாளர்களுக்கு லாபமா?

நிறுவனங்கள் முதலீட்டாளர் களைத் தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ளவும், புதிய முதலீட்டாளர் களை ஈர்க்கவும்தான் போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளில் இறங்கு கின்றன. ஆனால், முதலீட்டாளர் களைப் பொறுத்தவரை, போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பினால் பெரிய லாபம் எதுவும் இல்லை.

ஏனெனில் போனஸ் மற்றும் பங்குப் பிரிப்புக்குப் பின்னர், பங்குதாரருக்கு வழங்கப்படும் கூடுதல் பங்குகளால் அவருடைய முதலீட்டு மதிப்பு உயராது. ஆனால், போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பின் காரணமாக அந்தப் பங்கின் விலை கணிசமாகக் குறைவதால், பலரும் அந்த நிறுவனப் பங்கை வாங்க முன் வருவார்கள். அப்போது அந்தப் பங்கின் விலையில் சிறிய ஏற்றம் ஏற்படலாம்.

போனஸ் பங்கு, பங்குப் பிரிப்பு இவற்றில் எதில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கேட்டால், போனஸ் பங்கைச் சொல்லலாம். காரணம், முந்தைய ஆண்டு தரப்பட்ட அதே அளவு டிவிடெண்ட் இந்த ஆண்டும் தரப்படும்பட்சத்தில், போனஸ் பங்குகள் வழங்கப்பட்டு இருந்தால், முதலீட்டாளருக்கு கூடுதல் டிவிடெண்ட் கிடைக்கும். இந்த டிவிடெண்ட் லாபம் பங்குப் பிரிப்பில் முக மதிப்பு குறைக்கப்படும்போது கிடைக்காது” என்று முடித்தார்.

ஆக, ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான செயல்பாடு களைப் பொறுத்தே அந்த நிறுவன பங்கு நல்ல வருவாயைத் தருமே தவிர போனஸ், பங்குப் பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால் பெரிய லாபம் எதுவும் கிடைத்து விடாது. எனவே, எதிர்காலத்தில் நன்கு செயல்பட வாய்ப்புள்ள நிறுவனம் என்றால் மட்டுமே போனஸ் மற்றும் பங்குப் பிரிப்புக்குப் பின் பங்கின் விலை குறையும்போது முதலீடு செய்யலாம். போனஸ் பங்குக்காக இந்தப் பங்குகளை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum