Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்!
Page 1 of 1
தீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்!
பாவளி ஷாப்பிங்கில் அனைவரும் பிஸியாக இருக்கும் நேரம் இது. உங்கள் ஷாப்பிங்கை சிக்கனமாகவும், சீக்கிரமாகவும் முடிக்க சில டிரிக்ஸ் அண்ட் டிப்ஸ் இங்கே...
* எந்தக் கடைக்குச் செல்லப் போகிறீர்கள் என்பதை வீட்டில் இருந்து கிளம்பும்போதே முடிவு செய்துவிடுங்கள். எந்தக் கடையில் என் ரசனைக்கான ஆடை கிடைக்கும்? எந்தக் கடையில் விலை நியாயமானதாக இருக்கும்? என்கிற இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கும் கடையை தேர்ந்தெடுங்கள்.
* வீட்டில் உள்ளவர்களுக்கு, உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்க என... ஷாப்பிங் செய்ய வேண்டிய உடைகளை லிஸ்ட் எழுதி எடுத்துச் செல்லுங்கள். கடையில் பில் போடுவதற்கு முன், லிஸ்டை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
* பசி, அலுவல் வேலை, பள்ளியில் இருந்து குழந்தைகள் வீடு திரும்பும் நேரம் என்று மனதை அரிக்கும் எந்த விஷயமும் இல்லாமல், வசதியான ஒரு பொழுதை ஷாப்பிங் செய்ய ஒதுக்குங்கள். அப்போதுதான் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடியும்.
* தீபாவளி போன்ற பண்டிகை கால ஷாப்பிங் என்பது, கூட்ட நெரிசலில் நீந்த வேண்டிய ஒன்றாகவே இருக்கும். எனவே, விசேஷத்துக்கு செல்வது போல் கிராண்டாக உடுத்திச் செல்ல வேண்டாம். வசதியான ஒரு கேஷுவல் உடையில் செல்லுங்கள். அதற்காக கசங்கிய அழுக்கு ஆடையுடன் செல்லாதீர்கள். உங்களின் பளிச் தோற்றமே சேல்ஸ் நபர்களை அழகழகான ஆடைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டத் தூண்டும் என்பதால், நீட் அண்ட் ஸ்மார்ட்டாகச் செல்லுங்கள்.
*ஆயிரமோ, பத்தாயிரமோ, இருபதாயிரமோ... ஷாப்பிங் பட்ஜெட்டை முதலில் நிர்ணயித்து விடுங்கள். தேவையானவற்றை மட்டும் வாங்குவது நல்லது. பிடித்தவற்றை வாங்குவது தவறில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு மேல் வாங்கினால், வீடு திரும்பும்போது ஷாப்பிங் சந்தோஷத்தைவிட, அந்த உறுத்தலே அதிகமாக இருக்கும். அதுவே, பஜெட்டுக்குள் ஷாப்பிங்கை முடித்துவிட்டால், சந்தோஷம் இரட்டிப்பாகும். ஒவ்வொரு ஆடையாக பில்லுக்கு அனுப்பும்போதே மனக்கணக்காகவோ, மொபைல் கால்குலேட்டரிலோ உங்களின் பட்ஜெட் லிமிட்டை நெருங்கி விட்டீர்களா என்று கணக்குப் பார்த்து, சில ஆயிரங்கள் மீறி இருந்தால், ஒருவருக்கே எடுத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளில் சிலவற்றை பரிசீலித்துக் கழித்துவிடுங்கள்.
* ஒவ்வொருவருக்கும் வசதியான ஆடைகளையே வாங்குங்கள். பையனுக்கு ஏற்கெனவே எடுத்த ஷெர்வானி செட்கள் பீரோவில் தூங்கினால், மற்றுமொரு ஷெர்வானி வாங்காதீர்கள். மகளுக்கு பார்ட்டி வேர் கலெக்ஷன்களில் விருப்பம் இல்லை எனில், உங்கள் ரசனைக்கு அவளுக்கு ஆடை வாங்காதீர்கள்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் பில் செலுத்தும்போது, ஏதோ மற்றவர்களின் பணத்தை செலுத்துவதுபோல, எவ்வளவு தொகை என்றாலும் நம் மனம் பதறாமல்தான் இருக்கும். ஆனால், டாக்ஸ், இன்ட்ரஸ்ட் என நம் பணம் விரயமாவதும் உண்டு. கையில் பணமாக வைத்துக் கொள்ளுங்கள். பில்லிங் செக் ஷனில் நூறுகளும், ஐநூறுகளும், ஆயிரங்களுமாக உங்கள் கையாலேயே எண்ணிக் கொடுக்கும்போதுதான், மனதுக்குக் கடிவாளம் கிடைக்கும்.
* உங்களுக்கான ஷாப்பிங் அனைத்தும் முடிந்துவிட்டால், திருப்தியுடன் சட்டென அங்கிருந்து கிளம்பிவிடுங்கள். ‘சும்மா பார்க்கலாம்...’ என்று மேலும் ஒரு ரவுண்ட் வந்தால், மீண்டும் ஒன்றிரண்டு பில்கள் அதிகமாகும்.
* சேல்ஸ் நபர்களின் வேலை, அன்று, அந்த ஆடையை எப்படியாவது உங்களிடம் விற்றுவிடுவது. எனவே, ‘உங்களுக்கு இந்த பெரிய பூ புடவை சூப்பரா இருக்கும் மேடம்!’ என்று அவர்கள் சொல்வதை, கணக்கில் எடுக்காதீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு அந்தப் பெரிய பூ புடவை பிடித்திருந்தால் மட்டுமே எடுங்கள்.
* ‘இந்த சைஸ் பத்துமா..?’ என்று சந்தேகம் வந்துவிட்டால், தயங்காமல் டிரையல் ரூம் சென்றுவிடுங்கள். ஒருவேளை வீட்டில் உள்ளவர்களின் ஆடை சைஸில் சந்தேகம் எனில், அந்தக் கடையின் ரிட்டர்ன் பாலிசியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ரிசீட்களை பத்திரப்படுங்கள்.
ஷாப்பிங் செய்யுங்கள் ஹேப்பியாக!
-முக நூல் * எந்தக் கடைக்குச் செல்லப் போகிறீர்கள் என்பதை வீட்டில் இருந்து கிளம்பும்போதே முடிவு செய்துவிடுங்கள். எந்தக் கடையில் என் ரசனைக்கான ஆடை கிடைக்கும்? எந்தக் கடையில் விலை நியாயமானதாக இருக்கும்? என்கிற இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கும் கடையை தேர்ந்தெடுங்கள்.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஃப்ளிப்கார்ட்டின் ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' ஷாப்பிங் செய்யலாமா? (BIG APP SHOPPING DAYS)
» இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்!
» EMI - ஈஸி டிப்ஸ்!
» குரோம் பிரவுசர் டிப்ஸ்
» வாழ்வை வழிநடத்தும் 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum