Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சாலைப் பாதுகாப்பு ஹார்ன் தேவையா?
Page 1 of 1
சாலைப் பாதுகாப்பு ஹார்ன் தேவையா?
பெருகி வரும் டிராஃபிக் நெரிசல்களில், ஹார்ன் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவிட்டது. லாஜிக்படி பார்த்தால்... டிராஃபிக் அதிகமாக அதிகமாக, ஹார்ன் பயன்பாடு குறைய வேண்டும். ஆனால் அதிகரிக்கிறது. எங்கே தவறு நடக்கிறது?
முதலில் எதற்கு ஹார்ன்? 'வாகனம் வருகிறது. கவனம் தேவை’ என்பதுதான் ஹார்ன் ஒலிக்கான அர்த்தம். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஹார்ன் என்பது ஒரு சிக்னல் மாதிரி. ஆனால், இங்கு 'நான் உன்னைவிட விரைவாக ஓட்டுகிறேன். வழி விடு. எனக்கு டிராஃபிக் பிடிக்கவில்லை. எனக்குக் கோபம் வருகிறது. அட, தள்ளிப் போய்யா!’ போன்ற அர்த்தங்களில் ஒருவித பதற்றத்தை அறிவிக்கும் சங்கேத ஒலியாகவே அது பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், தமிழகத்தின் புறநகர் தனியார் பேருந்துகளின் டிரைவர்கள், இசையமைப்பாளர்கள் என்ற நினைப்பில் மல்ட்டி ஹார்ன்களுடன் விளையாடுவார்கள்.
நீண்ட டிராஃபிக் நெரிசலில் ஹார்னைத் தொடர்ந்து அழுத்தினால், டிராஃபிக் விலகிவிடும் என நினைப்பது என்ன உளவியல் என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல, ஹார்னைத் தொடர்ந்து அடித்து மற்றவர் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்களாக இருக்கிறார்கள். சென்னை சாலைகளில் டிராஃபிக் போலீஸார் எப்படி இந்த ஹார்ன் சத்தங்களைப் பொறுத்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. (டிராஃபிக் போலீஸிடம், ஹார்ன் ஒலி அளவை அளக்கும் டெசிபல் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?).
இந்தியாவுக்கு என ஸ்பெஷல் ஹார்ன்களை வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வடிவமைக்கும் அளவுக்கு, நம் மக்களின் ஹார்ன் பயன்பாடு இருக்கிறது. ஐரோப்பிய ஹார்ன்களை இங்கு பயன்படுத்தினால், இரண்டு வாரங்கள்கூட தாங்காதாம். உதாரணத்துக்கு, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இங்கு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ் கிளாஸ் காரை அசெம்பிள் செய்ய ஆரம்பித்தபோது, அவர்கள் முதலில் சேர்த்த லோக்கல் ஸ்பேர் - ஹார்ன்.
ஆடி இந்தியாவின் முன்னாள் தலைவர் மைக்கேல் பெர்ஷ்கே, 'இந்தியாவுக்கென ஸ்பெஷலான ஹார்ன்களை டிஸைன் செய்கிறோம்’ என்று ஒருமுறை கூறியிருக்கிறார். ஆடி நிறுவனம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்படும் ஹார்ன்களைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அடிக்கும் நிலையில் வைத்து சோதனை செய்திருக்கிறது. நாம் ஹார்ன் அடிக்கும் விஷயம் எப்படியெல்லாம் எதிரொலிக்கிறது பாருங்கள்.
சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு அடிக்கப்படும் ஹார்ன்களின் ஒலி அளவு, சாதாரண ஐரோப்பிய நகரத்தில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தப்படும் மொத்த ஹார்ன் ஒலிக்கு நிகரானதாம்.
சென்னை டிராஃபிக்கில் ஒலிக்கும் ஹார்ன்களுக்கும், டெல்லி டிராஃபிக்கில் ஒலிக்கும் ஹார்ன்களுக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கொஞ்சம் கவனித்தால் உணர முடியும். இங்கு, ஸ்டீயரிங் வீல் மீது கை வைக்கிறார்களோ இல்லையோ, ஹார்னைத் தொடர்ந்து அழுத்தியபடியே ஓட்டுகிறார்கள். ஆனால், டெல்லியில் சின்ன சிக்னல் போல மட்டும் ஹார்ன் அடிக்கிறார்கள். காரணம், சென்னையைவிட டெல்லியில் லேன் டிஸிப்ளின் அதிகம். டெல்லியில் டூவீலர்கள் சாலையின் வலது பக்க லேனை அடைத்துக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியாது. ஒருவகையில் ஹார்ன் பயன்பாடு அதிகரித்ததற்குக் காரணம், டூவீலர்களின் பெருக்கம்தான்.
டிராஃபிக் நெரிசல் கூடக் கூட ஹார்னின் பயன்பாடு குறைய வேண்டும். ஏனென்றால், சராசரி வேகம் மிக மிகக் குறைவு. ஒரு சிக்னலில் இருந்து அடுத்த சிக்னலைத் தாண்டுவதற்கான இடைப்பட்ட நேரத்தில், வேகம் அதிகபட்சம் மணிக்கு 40 கி.மீ-யைத் தாண்டப்போவது இல்லை. எனவே, வேகம் ஒரு காரணம் கிடையாது. சென்னையில் நிறைய வாகன ஓட்டிகளுக்கு லேன் டிஸிப்ளின் தெரியவில்லை; ரியர் வியூ மிரரையும் பார்ப்பது இல்லை. ரியர் வியூ மிரரை ஒழுங்காகப் பயன்படுத்தினால், ஹார்னுக்கு வேலையே கிடையாது! டூவீலர்கள்தான் ஹார்ன் அடிப்பதில் நம்பர் ஒன். அதுவும் சில குறிப்பிட்ட பைக்குகளில் ஹார்ன், மற்ற பைக்குகளைவிட சத்தம் வித்தியாசமாக இருக்கின்றன. ஒருமுறை, நான் பயணித்த மாநகரப் பேருந்தின் இரு பக்கமும் இரண்டு பைக்குகள் ஹார்ன்களை அடித்துக் கொண்டு முந்த, பேருந்தின் ஓட்டுநருக்குப் பதற்றம் கூடியது. பேருந்தை ஓரம் கட்டிவிட்டு தண்ணீர் குடித்துவிட்டுத்தான் திரும்பவும் ஓட்ட ஆரம்பித்தார். எல்லோரும் இப்படி ஹார்ன் அடித்துக் கொண்டு ஓட்டினால், ஏன் பேருந்து ஓட்டுநர்களுக்கு பணியில் இருக்கும்போதே மாரடைப்பு வராது?
ந.விகடன் முதலில் எதற்கு ஹார்ன்? 'வாகனம் வருகிறது. கவனம் தேவை’ என்பதுதான் ஹார்ன் ஒலிக்கான அர்த்தம். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஹார்ன் என்பது ஒரு சிக்னல் மாதிரி. ஆனால், இங்கு 'நான் உன்னைவிட விரைவாக ஓட்டுகிறேன். வழி விடு. எனக்கு டிராஃபிக் பிடிக்கவில்லை. எனக்குக் கோபம் வருகிறது. அட, தள்ளிப் போய்யா!’ போன்ற அர்த்தங்களில் ஒருவித பதற்றத்தை அறிவிக்கும் சங்கேத ஒலியாகவே அது பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், தமிழகத்தின் புறநகர் தனியார் பேருந்துகளின் டிரைவர்கள், இசையமைப்பாளர்கள் என்ற நினைப்பில் மல்ட்டி ஹார்ன்களுடன் விளையாடுவார்கள்.
நீண்ட டிராஃபிக் நெரிசலில் ஹார்னைத் தொடர்ந்து அழுத்தினால், டிராஃபிக் விலகிவிடும் என நினைப்பது என்ன உளவியல் என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல, ஹார்னைத் தொடர்ந்து அடித்து மற்றவர் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்களாக இருக்கிறார்கள். சென்னை சாலைகளில் டிராஃபிக் போலீஸார் எப்படி இந்த ஹார்ன் சத்தங்களைப் பொறுத்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. (டிராஃபிக் போலீஸிடம், ஹார்ன் ஒலி அளவை அளக்கும் டெசிபல் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?).
இந்தியாவுக்கு என ஸ்பெஷல் ஹார்ன்களை வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வடிவமைக்கும் அளவுக்கு, நம் மக்களின் ஹார்ன் பயன்பாடு இருக்கிறது. ஐரோப்பிய ஹார்ன்களை இங்கு பயன்படுத்தினால், இரண்டு வாரங்கள்கூட தாங்காதாம். உதாரணத்துக்கு, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இங்கு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ் கிளாஸ் காரை அசெம்பிள் செய்ய ஆரம்பித்தபோது, அவர்கள் முதலில் சேர்த்த லோக்கல் ஸ்பேர் - ஹார்ன்.
ஆடி இந்தியாவின் முன்னாள் தலைவர் மைக்கேல் பெர்ஷ்கே, 'இந்தியாவுக்கென ஸ்பெஷலான ஹார்ன்களை டிஸைன் செய்கிறோம்’ என்று ஒருமுறை கூறியிருக்கிறார். ஆடி நிறுவனம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்படும் ஹார்ன்களைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அடிக்கும் நிலையில் வைத்து சோதனை செய்திருக்கிறது. நாம் ஹார்ன் அடிக்கும் விஷயம் எப்படியெல்லாம் எதிரொலிக்கிறது பாருங்கள்.
சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு அடிக்கப்படும் ஹார்ன்களின் ஒலி அளவு, சாதாரண ஐரோப்பிய நகரத்தில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தப்படும் மொத்த ஹார்ன் ஒலிக்கு நிகரானதாம்.
சென்னை டிராஃபிக்கில் ஒலிக்கும் ஹார்ன்களுக்கும், டெல்லி டிராஃபிக்கில் ஒலிக்கும் ஹார்ன்களுக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கொஞ்சம் கவனித்தால் உணர முடியும். இங்கு, ஸ்டீயரிங் வீல் மீது கை வைக்கிறார்களோ இல்லையோ, ஹார்னைத் தொடர்ந்து அழுத்தியபடியே ஓட்டுகிறார்கள். ஆனால், டெல்லியில் சின்ன சிக்னல் போல மட்டும் ஹார்ன் அடிக்கிறார்கள். காரணம், சென்னையைவிட டெல்லியில் லேன் டிஸிப்ளின் அதிகம். டெல்லியில் டூவீலர்கள் சாலையின் வலது பக்க லேனை அடைத்துக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியாது. ஒருவகையில் ஹார்ன் பயன்பாடு அதிகரித்ததற்குக் காரணம், டூவீலர்களின் பெருக்கம்தான்.
டிராஃபிக் நெரிசல் கூடக் கூட ஹார்னின் பயன்பாடு குறைய வேண்டும். ஏனென்றால், சராசரி வேகம் மிக மிகக் குறைவு. ஒரு சிக்னலில் இருந்து அடுத்த சிக்னலைத் தாண்டுவதற்கான இடைப்பட்ட நேரத்தில், வேகம் அதிகபட்சம் மணிக்கு 40 கி.மீ-யைத் தாண்டப்போவது இல்லை. எனவே, வேகம் ஒரு காரணம் கிடையாது. சென்னையில் நிறைய வாகன ஓட்டிகளுக்கு லேன் டிஸிப்ளின் தெரியவில்லை; ரியர் வியூ மிரரையும் பார்ப்பது இல்லை. ரியர் வியூ மிரரை ஒழுங்காகப் பயன்படுத்தினால், ஹார்னுக்கு வேலையே கிடையாது! டூவீலர்கள்தான் ஹார்ன் அடிப்பதில் நம்பர் ஒன். அதுவும் சில குறிப்பிட்ட பைக்குகளில் ஹார்ன், மற்ற பைக்குகளைவிட சத்தம் வித்தியாசமாக இருக்கின்றன. ஒருமுறை, நான் பயணித்த மாநகரப் பேருந்தின் இரு பக்கமும் இரண்டு பைக்குகள் ஹார்ன்களை அடித்துக் கொண்டு முந்த, பேருந்தின் ஓட்டுநருக்குப் பதற்றம் கூடியது. பேருந்தை ஓரம் கட்டிவிட்டு தண்ணீர் குடித்துவிட்டுத்தான் திரும்பவும் ஓட்ட ஆரம்பித்தார். எல்லோரும் இப்படி ஹார்ன் அடித்துக் கொண்டு ஓட்டினால், ஏன் பேருந்து ஓட்டுநர்களுக்கு பணியில் இருக்கும்போதே மாரடைப்பு வராது?
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சாலைப் பாதுகாப்பு ஹார்ன் தேவையா?
» வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவையா?
» பாதுகாப்பு விளிம்பு
» மனைக்கும் தேவை பாதுகாப்பு
» பணம் பறிபோகாமல் இருக்க 3டி பாதுகாப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum