Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
நீளும் ஆயுள், குறையும் பென்ஷன்... மகிழ்ச்சியான ஓய்வுக்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீட்டு பிளான்!
Page 1 of 1

30 வயதில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள், 60 வயதுக்குப்பின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் கழிக்க என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து யோசிப்பதே இல்லை. இளமையின் மகிழ்ச்சியில் முதுமையை மறந்தே போய்விடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் முதுமையைத் தவிர்க்கவே முடியாது. இந்த முதுமைக் காலத்தில் என்னென்ன தேவைகள் இருக்கும், இந்தத் தேவைகளைப் பொருளாதார ரீதியாக எப்படி சமாளிக்கப் போகிறோம், இதற்காக எப்படிப்பட்ட சேமிப்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கான பதில் பற்றி இதுநாள் வரை நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்கலாம். இனி இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டறிவதற்கான கட்டாயம் வந்துவிட்டது. காரணம், பலப்பல.
அதிகரிக்கும் ஆயுட்காலம்!
மருத்துவ வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி ஆயுள் காலமும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ல் 7.4 சதவிகிதமாக இருந்தது. இதுவே 2026-ல் 12.17 சதவிகித மாக மாறும் என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 2008-ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 60-64 வயதுக்குள் இருப்பவரின் இறப்பு விகிதத்தைவிட 85 வயதுக்குப்பின் இறப்பவரின் விகிதம் 10 மடங்கு அதிகம்.
இதிலிருந்து மனிதர்களின் சராசரி வயது வெகுவேகமாக கூடி வருகிறது என்பது தெளிவாகிறது. கூடுதலாக வாழும் காலத்துக்குத் தேவையான பொருளாதார வசதியை நல்ல நிலையில் இருக்கும்போதே உருவாக்கிக் கொள்ளாவிட்டால், ஓய்வுக்கால வாழ்க்கை நரக நாட்களாக மாறிவிடும்.
அதிகரிக்கும் செலவு!
ஓய்வுக்காலத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஓரளவுக்கு சத்தான உணவு, கெளரவமாக உடுத்திக்கொள்ள உடை, நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவர ஆகும் போக்குவரத்து செலவு என ஒருவருக்கு ஆகும் செலவுக் கான பணம் கையில் இல்லாவிட்டால், கூடுதலாக வாழும் காலத்தில் பிறரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். மூத்தக் குடிமக்களில் 65 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்டவர் கள் மற்றவரை சார்ந்தே வாழ்வதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டு கின்றன. இதில் பெண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, மனிதர்களின் மருத்துவத் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. முன்பு உடல் உழைப்பை சளைக்காமல் செய்தவர்கள், முதுமையில் பெரிய அளவில் நோய் நொடி எதுவும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால், உடல் உழைப்பும் உணவுப் பழக்கமும் பெரிதாக மாறிவிட்ட இந்த காலத்தில், 60 வயதுக்குப் பிறகான வாழ்க்கையை மருந்து, மாத்திரைகளின் உதவியுடன் ஓட்ட வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு 1,000 - 2,000 ரூபாய் கையில் இருந்தால்தான், இந்த மருந்து, மாத்திரைகளை தவறாமல் வாங்க முடியும் என்பதே இன்றைய யதார்த்தம். இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தத் தொகை 6,000 - 8,000 ரூபாயாக உயரும் என்பது அதிர்ச்சிகரமான தகவல் அல்ல.
குறையும் வருமானம்!
இளம்வயதில் செலவு அதிகமாகும் போது கூடுதலாக ஏதாவது வேலை பார்த்து அதைச் சமாளிப்போம். ஆனால், முதுமைக் காலத்தில் அது முடியாது. நம் அன்றாட வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது வருமானம் ஈட்டுவதற் கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
மேலும், பேரக் குழந்தைகளுக்கு பரிசு, ஆன்மீகச் சுற்றுலா போன்றவற்றுக்கும் பணம் தேவைப்படும்.
ஆக மொத்தத்தில், ஓய்வுக்காலத்தை எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் கழிப்பதற்கு தேவையான பணத்தை எப்படி சேமிப்பது, முதலீடு செய்வது என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.
‘‘இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு அதிகமானவர்களின் எண்ணிக்கை சுமார் 8 கோடி பேர். அடுத்த 15 ஆண்டு களில் இந்த எண்ணிக்கை சுமார் 20 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இவர்களில் 90% பேர் எந்தவிதமான பென்ஷன் திட்டத்தின் கீழும் வருவதில்லை.
இன்றைய நிலையில், மனிதர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம். ஒன்று, அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள்; இரண்டாவது, தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள். மூன்றாவது, சொந்தமாகத் தொழில் செய்பவர்கள். இந்த மூன்று பிரிவினரும் தங்களது மகிழ்ச்சியான ஓய்வுக் காலத்துக்கு எப்படி திட்டமிட வேண்டும் என்று பார்ப்போம்.
அரசுத் துறை ஊழியர்கள்!
முதலில், அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கான திட்டத்தை பார்ப்போம்.
இருபது வருடங்களுக்கு முன்பு நூறு ரூபாய் சம்பளம் என்றாலும் அரசு வேலையில் சேரவே பலரும் விரும்பி னார்கள். ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த பென்ஷனை வைத்து மீதமுள்ள காலத்தில் நிறைவாக வாழ முடியாது என்றாலும் குறையில்லாமல் வாழ முடிந்ததால், ஓய்வுக்காலத்துக்கென எந்தவகையிலும் தனியாக சேமிப்பது தேவையில்லாத விஷயமாக இருந்தது.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசுப் பணியாளர் களுக்குப் பென்ஷன் திட்டத்தில் பல மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கான ஓய்வூதியமானது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், 2004-க்குப் பின் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு பிஎஃப்க்கு என எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்கான ஒரே முதலீடு என்பிஎஸ் திட்டம்தான்.
அரசுத் துறையில் ஒரு ஊழியர் வேலைக்குச் சேர்ந்த மாதத்திலிருந்து சம்பளத்தில் (அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி) 10 சதவிகிதமும், அரசு வழங்கும் 10 சதவிகித தொகை சேர்த்து ஊழியரின் பெயரில் முதலீடு செய்யப் படும். இதில் ஒருவர் அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் பெற முடியும். முதலீடு படிப்படியாக உயர்ந்து இறுதியாகக் கிடைக்கும் தொகையின் அடிப்படையில்தான் பென்ஷன் கிடைக்கும். ஊழியரின் பெயரில் முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானமும் இந்த பென்ஷன் தொகையுடன் சேரும்.
இதில் முதலீடு செய்யும் தொகையை எந்தக் காரணம் கொண்டும் இடையில் எடுக்க முடியாது. ஓய்வு பெறும்போதுதான் அதன் பயனை பெற முடியும். அதாவது, 60 வயதில் ஓய்வு பெறும்போது 40 சதவிகிதத்தைக் கட்டாயமாக ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகையை தேவை இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இந்த 60 சதவிகித தொகையை 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். 60 வயதுக்குமுன் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுத்தால், 20 சதவிகித தொகைதான் கிடைக்கும். மீதமுள்ள 80 சதவிகித தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உறுப்பினராகச் சேரும் ஊழியரின் வயது அடிப்படையில் முதலீட்டின் தன்மையும் இருக்கும். வயது குறைவாக இருக்கும் ஊழியர்களுக்கு அதிக ரிஸ்க் உடைய முதலீட்டையும், வயது அதிகம் உள்ள ஊழியர்களுக்கு ரிஸ்க் குறைவான முதலீட்டுத் திட்டங்களை ஊழியர்களே தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. மேலும், இந்த முதலீட்டுத் திட்டங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும் வசதியும் இதில் உள்ளது.
மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் 28 வயதுடைய அரசு ஊழியர் ஒருவருக்கு அவருடைய ஓய்வுக்காலத் தேவைகளுக்காகக் குறைந்தபட்சம் 7 சதவிகித பணவீக்க விகிதம் என வைத்துக் கொண்டால்கூட, ஒரு மாதத்துக்குச் சுமார் 2,57,972 ரூபாய் (32 வருடங்கள் கழித்து) தேவைப்படும். இந்த மாத வருமானத்துக்கு, 25 வருட ஓய்வுக்காலத்தைக் கழிக்க ( 85 வயது வரை) குறைந்தபட்சம் 5,53,05,824 ரூபாய் மூலதனப் பணம் தேவைப்படும். அரசு ஊழியரின் என்பிஎஸ் திட்ட முதலீட்டில் சுமார் 4,08,28,813 ரூபாய் கிடைக்கும். ஆக, மீதம் இருக்கும் 1,44,77,011 ரூபாய்க்கு நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் (பார்க்க எதிர்பக்கத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் அட்டவணை) மாதம் சுமார் 3,300 ரூபாய் கூடுதலாக முதலீடு செய்வது அவசியம்.
தனியார் நிறுவன ஊழியர்கள்!
இனிவரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் கொஞ்சநஞ்ச பென்ஷன்கூட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இனி கிடைக்கப் போவதில்லை. இதுவரை, பிஎஃப் அமைப்பின் கீழ் செயல்படும் குடும்பநல பென்ஷன் திட்டத்தில் இருந்து குறைந்தபட்ச பென்ஷன் தொகையை வைத்து சில தேவைகளையாவது நிறைவேற்றிக்கொள்ள தனியார் ஊழியர்களால் முடிந்தது. ஆனால், இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டது பிஎஃப் அமைப்பு. அதாவது, 1.9.2014-க்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி இரண்டையும் சேர்த்து 15 ஆயிரத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு இனி பென்ஷன் கிடையாது என்று அறிவித்திருக்கிறது.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையுடன் கூடுதலான தொகையை முதலீடு செய்யலாம் என்றாலும் பிஎஃப் மூலம் கிடைக்கும் வட்டி பணவீக்கத்தைவிட ஒன்றிரண்டு சதவிகிதமே கூடுதலாக இருக்கும். எதிர்காலத் தேவைக்கும் மிகக் குறைவாக பிடிக்கப்படும் இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்ற உதவுமா என்பது சந்தேகமே. இந்த வருமானமானது பணவீக்க விகிதத்தைவிடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்க விகிதமானது 2011-12-ல் 8.4 சதவிகிதமாகவும், 2012-13-ல் 10.2 சதவிகிதமாகவும், 2013-14-ல் 9.5 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால், அதே ஆண்டுகளில் பிஎஃப் வருமானமானது முறையே 8.25, 8.50 மற்றும் 8.75 சதவிகித மாகவே இருந்தது. நீண்ட காலத்திலும் இதே அளவு வருமானமே கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் எதிர்பார்க்கும் அளவைவிடக் குறைவான தொகையே அவர்களுக்கு பென்ஷனாக கிடைக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சி யாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டுமெனில், அதற்காக தொடங்கப்படும் முதலீடு குறைந்தது 12-15% வரை வருமானம் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
தவிர, தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுக்காலத்துக்காக சேமிக்கும் தொகையானது, அதற்குமுன்பு எடுக்க முடியாத நிலையில் இருக்க வேண்டும். இடையில் எடுக்கும்படி இருந்தால், திட்டமிடாத பெரிய செலவுகளுக்கோ அல்லது குடும்பத்தினர், உறவினரின் தேவைகளுக்கோ அதை எடுத்து செலவு செய்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ஓய்வுக்காலத்தில் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட நேரிடும்.
எனவே, இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க முடியாதபடிக்கு, தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10 - 20 சதவிகிதத்தை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாகவே இருக்கும் என்றாலும், இதில் நிர்வாகக் கட்டணம் 0.009% மட்டுமே (மியூச்சுவல் ஃபண்டில் நிர்வாகக் கட்டணம் 2.5%).
ஓய்வுக்காலத்துக்கென சேமிக்கும் பணத்தை இடைப்பட்ட காலத்தில் எடுக்கவே மாட்டேன் என்கிற மன உறுதியும் நிதி ஒழுங்கும் இருப்பவர்கள், நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி திட்டம் மூலம் இப்படி சேர்க்கும் பணத்தை எந்தத் திட்டத்தில் எவ்வளவுக்கு சேர்ப்பது என்பது குறித்து நன்கு அனுபவம் கொண்ட ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
28 வயதுடைய தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு எதிர்காலத்தில் ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.2,78,888 தேவைப்படும். இந்த வருமானமானது பணவீக்கத்தையும் சேர்த்து சமாளிக்கும் வகையில் 85 வயது வரை கிடைக்க வேண்டுமெனில் ரூ.5,97,90,080 தேவைப்படும். இந்த தொகை ஓய்வு பெறும்போது பெறுவதற்கு குறைந்த பட்சம் 12% வருமானம் கிடைக்கிற மாதிரி எஸ்ஐபி மூலம் சுமார் ரூ.13,400 முதலீடு செய்ய வேண்டும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள்!
மேற்சொன்ன இரண்டு வகையினருடன் ஒப்பிட்டால், சொந்தத் தொழில் செய்பவர்கள் வித்தியாச மானவர்கள். இவர்களுக்கு நிலையான வருமானம் இருக்காது. இதனால் மாதம் இவ்வளவு என எதிர்காலத் தேவைக்கு ஒதுக்கி வைக்கவும் முடியாது. ஆனால், தொழில் நன்றாக செய்யும்பட்சத்தில் மாதச் சம்பளம் வாங்குகிறவர்களைவிட பல மடங்கு அதிக வருமானத்தை இந்த வகையினரால் சம்பாதிக்க முடியும். இப்படி சம்பாதிக்கிற பணத்தில் ஒருபகுதியை ஓய்வுக் காலத் தேவைக்காக ஒரு ஒழுங்குடன் ஒதுக்கி வைப்பதை இந்த வகையினர் ஒரு கடமையாகவே கருதி செய்ய வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
சொந்தமாக தொழில் செய்யும் ஒரு பிசினஸ்மேன் தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் 20 - 25 சதவிகித பணத்தை ஓய்வுக்காலத்துக்கென ஒதுக்கி வைப்பது அவசியம். அதாவது, ஒரு லட்ச ரூபாய் வருமானம் எனில், அதில் 20,000 ரூபாயை ஓய்வுக்கால சேமிப்புக்கு கொண்டு சென்றுவிட வேண்டும். இந்த சேமிப்பை என்பிஎஸ் திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு அடிக்கடி நிதிப் பிரச்னை வரும் என்ப தால், இடையில் எடுக்க முடியாத என்பிஎஸ் திட்டம் சரியாக இருக்கும்.
ஆக, ஓய்வுக்காலத்தை நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கத் தேவையான பணத்தை பெறும் வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை தாமதம் செய்யாமல் உடனே தொடங்குவது நல்லது.
-ந.விகடன் அதிகரிக்கும் ஆயுட்காலம்!

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!
» ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (F.M.P)
» ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா ! இளைஞர்களுக்கான ஈஸி பிளான்
» பென்ஷன் ஃபண்டுகள்:நம்பித் தேர்வு செய்யலாமா?
» அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum