Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சேலை டிஸைன்... செழிப்பான வருமானம்!
Page 1 of 1
சேலை டிஸைன்... செழிப்பான வருமானம்!
சேலை டிஸைன்... செழிப்பான வருமானம்!
‘‘ஒ ரு சேலையை செலக்ட் பண்றதுக்குள்ளே கடையையே புரட்டிப் போட வேண்டியிருக்கு. பார்டர் சரியா இருந்தா புட்டா சரியில்லை, புட்டா சரியா இருந்தா முந்தானை டிஸைன் சரியா இல்லை. போனதுக்கு ஒரு சேலையை எடுக்கணுமேனுதான் எடுக்க வேண்டியிருக்கு’ என்று குறைபட்டுக் கொள்ளும் அம்மணியா நீங்கள்? உங்களுக்குப் பிடித்த டிஸைனை நீங்களே உருவாக்கலாம். அது புடவையாக மாறும்போது ஆசையோடு வாங்கி அணிந்து கொள்ளலாம்.
புடவைக்கு டிஸைன்களை உருவாக்கிக் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்பது இன்றைக்கு பணம் கொழிக்கும் பார்ட் டைம் தொழிலாகி இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே டிஸைன்களை உருவாக்கிக் கொடுத்து மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். ஒரு டிஸைனுக்கு நாலாயிரம் ரூபாய்வரை கிடைக்குமாம். ஒரு மாதத்துக்கு நான்கு டிஸைன்கள் தயாரிக்க முடிந்தால்கூட கணக்கு எங்கேயோ போகிறது.
சரி, டிஸைன்களை எப்படி உருவாக்குவது?
‘‘அதை நாங்கள் சொல்லித் தருகிறோம். கூடவே, அந்த டிஸைன்களை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்’’ என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தருகிறார் சண்முக மகேஷ்.
போத்தீஸ், குமரன், நல்லி போன்ற துணிக்கடைகளுக்கு புடவை டிஸைன்களை வழங்குகிறது இவருடைய ‘விஷால் டெக்ஸ்டைல் டிஸைன் ஸ்டூடியோ’தான்!
அவரைச் சந்தித்தபோதுதான் இந்த டிஸைன் தயாரிப்பு என்பது எத்தனை பெரிய வேலை வாய்ப்பு என்பது தெரிய வந்தது.
‘‘கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். பட்டுப்புடவை என்றாலே மாங்காய், மயில், அன்னம் என்று குறிப்பிட்ட டிஸைன்களில்தான் பார்டர் அமைப்பார்கள். அதை ஒட்டிய டிஸைனாகத்தான் சேலையும், முந்தானையும் இருக்கும். இந்த பழைமையை உடைத்தாலே பளிச்சென்று புதுமை கிடைத்துவிடுமே என்று தோன்றியது. நான் டெக்ஸ்டைல் டிஸைனராக மத்திய அரசு வேலையில் இருந்தபோது அதைச் செய்ய முடியவில்லை. வேலையை உதறிவிட்டு சொந்தமாகத் தொழிலைத் தொடங்கியபோது என் விருப்பம் போல டிஸைன்களை உருவாக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வாய்ப்புகள் அதிகமானதும்தான் இதற்கான ஆட்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்தேன். அதற்கென நாமே ஒரு இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கினால் என்ன என்று முடிவெடுத்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. கம்ப்யூட்டரில் புடவை டிஸைன்களை உருவாக்கும் விதம் பற்றி என்னுடைய இன்ஸ்டிடியூட்டில் கற்றுத் தருகிறேன். இதுபோன்ற டெக்ஸ்டைல் டிஸைன்களை வடிவமைக்க தனியான சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. ஆனால், நான் கற்றுத் தருவது கம்ப்யூட்டரில் அடிப்படையாக இருக்கும் விண்டோஸ் சாஃப்ட்வேரைக் கொண்டுதான். அதனால், டிஸைன் சாஃப்ட்வேருக்காக லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டுமா என்ற கவலை யாருக்கும் தேவையில்லை’’ என்றார் சண்முக மகேஷ்.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தன்னுடைய பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர், கூடவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் பல முக்கியமான டெக்ஸ்டைல் மில்களுக்கு டிஸைன்களை சப்ளை செய்கிறார்.
‘‘என்னிடம் படிப்பவர்களையும் என்னுடைய டிஸைன்களை வாங்கும் நெசவாளர்களையும் கோத்து விட்டு விடுகிறேன். அதனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. என்னிடம் டிஸைனராகப் பணிபுரிய ஆர்வமாக இருப்பவர்களை நானே எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் தயாரிக்கும் டிஸைனுக்குரிய பணத்தை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன். சம்பளம் என்று கொடுப்பதைவிட இது டிஸைனர்களுக்கு நல்ல வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. என்னிடம் டிஸைனராகப் பணிபுரிபவர்கள் தனித்தனியே தமிழக அரசின் சிறந்த டிஸைனுக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் என்னைவிட அதிகமான விருதுகளைக்கூடப் பெற்றிருக்கிறார்கள்.
இப்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்காக டிஸைன்களை உருவாக்கும் ஆர்டரைப் பெற்றிருக்கிறேன். அதனால், பலருக்கும் வேலைவாய்ப்புக் கொடுக்கும் சூழல் உருவாகி இருக்கிறது’’ என்று சொன்ன சண்முக மகேஷ்,
இந்தப் பயிற்சியை பத்துநாள் கோர்ஸ், மற்றும் இரண்டு மாத கோர்ஸ் என்று இருவிதமாக நடத்துகிறேன். இரண்டு மாத கோர்ஸில் முழுமையான பாடத்திட்டம் இருக்கிறது. பத்துநாள் கோர்ஸ் இந்த டிஸைன் துறை பற்றிய அறிமுகமாக இருக்கும். இரண்டிலுமே இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு பேட்ச்சுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்களைச் சேர்க்கிறேன். எண்ணிக்கையை விட கவனம் செலுத்திக் கற்றுத்தருவது முக்கியமாச்சே..!’’ என்றார்.
இது தவிர சேவை அமைப்புகள் நடத்தும் பல பயிற்சி நிலையங்களிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் இவர் கற்றுத் தருகிறார். இப்போது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் டிஸைன் தொழிலைக் கற்றுத் தரும் யோசனையைத் தெரிவித்திருக்கிறார். அரசுமட்டத்தில் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்கிறார் இவர்.
‘‘சுய உதவிக் குழுவினர் கஷ்டப்பட்டு உழைத்து மாதம் ரெண்டாயிரம் மூவாயிரம் என்ற அளவில்தான் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள அரசு ஊக்கத்தொகையும் கொடுக்கிறது. அந்த ஊக்கத்தொகையை ஃபீஸாகப் பெற்றுக்கொண்டு இந்த டிஸைன் தொழிலைக் கற்றுத் தரத் தயாராக இருக்கிறோம். இதன்மூலம் பல ஆயிரம் ரூபாயை அவர்கள் சம்பாதிக்க முடியும்’’ என்றார்.
இவர் சொல்வது சேலை டிஸைன்களை மட்டும் அல்ல... கைலி, சோபா கவர் துணிகள், ஸ்க்ரீன் துணிகள் போன்றவற்றில் போடப்படும் டிஸைன்களையும் சேர்த்துதான். அதனால், இதற்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
‘‘நான் ஃபீஸ் வாங்குவது என்பதை முக்கியமாக நினைக்கவில்லை. ஆர்வமாக கற்றுக்கொள்ள வருபவர்கள்தான் எனக்கு முக்கியம். பல பெண்கள் அமைப்புகளுக்கு குறைந்த ஃபீஸுக்கு கற்றுத் தருகிறேன். உங்கள் நாணயம் வாசகர்களுக்கும் நான் சலுகை தரத் தயாராக இருக்கிறேன். கொஞ்சம் தொழில் ஆர்வமும், அடிப்படை கலை ஆர்வமும் இருந்தால் போதும்... யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எத்தனை பேர் வந்தாலும் இடமிருக்கிறது இங்கே!’’ என்றார் சண்முக மகேஷ்.
ரங்கோலி போடும் பெண்கள், அக்கம்பக்கத்து வீட்டாரிடம் வெறும் பாராட்டு வாங்குவதோடு நின்று விடாமல் அதையே சேலை டிஸைனாக போட்டு சம்பாதித்தால், பல ஆயிரங்களை சம்பாதிக்கலாம். அதைவைத்து டிஸைன் டிஸைனாக புடவை எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஐடியா!
-விகடன் ‘‘ஒ ரு சேலையை செலக்ட் பண்றதுக்குள்ளே கடையையே புரட்டிப் போட வேண்டியிருக்கு. பார்டர் சரியா இருந்தா புட்டா சரியில்லை, புட்டா சரியா இருந்தா முந்தானை டிஸைன் சரியா இல்லை. போனதுக்கு ஒரு சேலையை எடுக்கணுமேனுதான் எடுக்க வேண்டியிருக்கு’ என்று குறைபட்டுக் கொள்ளும் அம்மணியா நீங்கள்? உங்களுக்குப் பிடித்த டிஸைனை நீங்களே உருவாக்கலாம். அது புடவையாக மாறும்போது ஆசையோடு வாங்கி அணிந்து கொள்ளலாம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வருமானம் என்றால் என்ன?
» அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்!
» இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
» மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
» பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum