வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


காலாண்டு முடிவுகள் !

Go down

காலாண்டு முடிவுகள் ! Empty காலாண்டு முடிவுகள் !

Post by தருண் Sat Sep 06, 2014 4:00 pm

காலாண்டு முடிவுகள் ! 086

முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எப்படி?

நடப்பு நிதி ஆண்டின் (2014-15) முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன்) நிதி நிலை முடிவுகள் ஏறக்குறைய வந்துள்ளன. ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிறுவனங்களின் விற்பனை மற்றும் நிகர லாபம் ஏறக்குறைய 15 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக சரிவு கண்டுவந்த வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் கண்டு வருகிறது.
அந்நிய நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீட்டை  அதிகரித்து வருகின்றன.

கடந்த நான்கு காலாண்டுகளாக தொடர்ந்து நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்க வளர்ச்சியில் உள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளாக மூலப்பொருள் செலவினம் 31 சதவிகிதம் என்கிற அளவுக்கு இருந்தது. இது, ஜூன் காலாண்டில் 29.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த 13 காலாண்டுகளில் மிகக் குறைவு. நிறுவனங்களின் முதலீடு கடந்த ஆறு காலாண்டுகளில் முடிந்த முதல் காலாண்டில் 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

முதல் காலாண்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு 19.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதிக வருமானம் தந்த நிறுவனங்கள்!

சந்தை எதிர்பார்ப்பை மீறி அதிக வருமானத்தை பல நிறுவனங்கள் தந்துள்ளன. குறிப்பாக, லார்ஜ் கேப் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், லுபின், பேங்க் ஆஃப் பரோடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆயில் இந்தியா, அம்புஜா சிமென்ட்ஸ், ஐடியா செல்லுலார், ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.

அதேநேரத்தில், கெயில், ஹீரோ மோட்டோ, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் ஜிங்க், டாபர், கோல் இந்தியா, சேச ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களின் நிகர லாபம் எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளன.

வேகம் எடுத்துள்ள வாகனத் துறை!

முதல் காலாண்டில் விற்பனை அதிகரிப்பு அடிப்படையில் வாகனத் துறை முன்னணியில் இருக்கிறது. இந்தத் துறை நிறுவனங்களின் விற்பனை 26 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அடுத்த இடங்களில் டெக்னாலஜி (18%), கன்ஸ்யூமர் (17%), மெட்டல்ஸ் (16), நிதிச் சேவை (14%) போன்ற துறைகள் உள்ளன. நிகர லாப அடிப்படையிலும் வாகனத் துறையே முன்னணியில் இருக்கிறது. அதன் நிகர லாபம் முதல் காலாண்டில் 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அடுத்து டெலிகாம் (48%), டெக்னாலஜி (25%), தனியார் வங்கிகள் (18%) ஆகிய துறைகள் உள்ளன.

அதேநேரத்தில், கேப்பிட்டல் கூட்ஸ், சிமென்ட் துறைகள் நிகர இழப்பைச் சந்தித்துள்ளன. அந்த இழப்பு முறையை 13% மற்றும் 11% ஆக உள்ளது.

டாடா குழுமம்!

நிகர லாப அதிகரிப்பில் சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (191%), டாடா பவர் (131%) நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. அடுத்த இடங்களில் சேச ஸ்டெர்லைட் (124%), டாக்டர் ரெட்டீஸ் (68%), பார்தி ஏர்டெல் (61%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அதிக நிகர இழப்பைச் சந்தித்த நிறுவனத்தில் பிஹெச்இஎல் (மைனஸ் 58) முதல் இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம், விற்பனை 20 சதவிகிதம் குறைந்து போனதே. அடுத்த இடங்களில் டாடா ஸ்டீல் (-47), என்டிபிசி (-11) சிப்லா (-38), கெயில் (-23) போன்றவை உள்ளன.

2012-13-ம் நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம், முந்தைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக குறைந்தது. இது 2013-14-ல் 4.7 சதவிகிதமாக இருந்தது. தொடர்ந்து இரு ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் நிச்சயம் 5.5 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் என்று பல பகுப்பாய்வாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

இப்போது மத்தியில் நரேந்திர மோடி  தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சி, சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் இப்போது விரிவாக்க நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றன. ஆரம்பத்தில் பருவமழை தாமதம் ஆனாலும், ஜூலை மத்தியில் அதிகரித்துள்ளது. இது நடப்பு இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

- சேனா சரவணன்

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

காலாண்டு முடிவுகள் ! Empty காலாண்டு முடிவுகள் - ஐசிஐசிஐ, யெஸ், ஆந்திரா வங்கி, மாருது சுஸுகி, ஏர்டெல்

Post by தருண் Mon Nov 03, 2014 2:05 pm

ஐசிஐசிஐ வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து 2,709 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 2,352 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 12,979 கோடி ரூபாயிலிருந்து 14,888 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வாராக்கடன்களுக்கு ஒதுக்கியுள்ள தொகை ரூ.850 கோடியாக அதிகரித்திருக்கிறது.

யெஸ் வங்கி லாபம் ரூ.482 கோடி

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகரலாபம் 30 சதவீதம் உயர்ந்து 482 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 371 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 2,947 கோடி ரூபாயிலிருந்து 3,337 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.36 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 0.09 சதவீதமாக இருக்கிறது.

ஆந்திரா வங்கி லாபம் இரு மடங்கு உயர்வு

பொதுத்துறை வங்கியான ஆந்திரா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 70 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 144 கோடி ரூபாயாக இருக்கிறது.வங்கி செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் மொத்த ரூ.3,817 கோடியிலிருந்து ரூ.4,423 கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கிப்பங்குகள் 6 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

மாருதி சுஸுகி லாபம் 29% உயர்வு

மாருதி சுஸுகி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 29% உயர்ந்து 862 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 670 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 17% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 10,211 கோடி ரூபாயாக இருந்த விற்பனை இப்போது 11,996 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

ஏர்டெல் லாபம் 3 மடங்கு உயர்வு

ஏர்டெல் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் சுமார் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் 512 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 1,383 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் 7.1 சதவீதம் உயர்ந்து 22,845 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21,324 கோடி ரூபாயாக இருந்தது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

காலாண்டு முடிவுகள் ! Empty Re: காலாண்டு முடிவுகள் !

Post by தருண் Mon Nov 03, 2014 2:25 pm

பேங்க் ஆஃப் பரோடா: நிகர லாபம் 26%அதிகரிப்பு

பேங்க் ஆஃப் பரோடாவின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இந்த காலாண்டில் வங்கின் நிகர லாபம் 26.41% 786 கோடி ரூபாயாக உள்ளது. இதே 2013-14ம் நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 621.77 கோடி ரூபாயாக இருந்தது.

வங்கியின் வட்டி வருமானம் 20சதவிகிதம் அதிகரித்து 11,093 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 9,239 கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த வாராக் கடன் 3.54 சதவிகிதத்திலிருந்து 2.93 சதவிகிதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் 2.32 சதவிகிதமாக உள்ளது.

மேலும் வங்கியின் மொத்த வருமானம் செப்டம்பர் மாதத்தில் 12,099 கோடி ரூபாயாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 10,339 கோடி ரூபாயாக இருந்தது. இந்த பங்கின் விலை இன்று சுமார் 2 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து 949.75 வர்த்தமாகி வருகிறது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

காலாண்டு முடிவுகள் ! Empty Re: காலாண்டு முடிவுகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum