Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
காலாண்டு முடிவுகள்
Page 1 of 1
காலாண்டு முடிவுகள்
ஹெச்டிஎப்சி வங்கி லாபம் 21% உயர்வு
தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ. 2,233 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ. 1,844 கோடி லாபம் ஈட்டியது. மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 11,588.56 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம், இப்போது 13,070.65 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.6 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு இப்போது 4.4 சதவீதமாக இருக்கிறது. ஆனால் வட்டி வருமானம் 16.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.9,663 கோடியாக இருந்த வட்டி வருமானம் இப்போது ரூ. 11,220 கோடியாக இருக்கிறது.
ஹெச்டிஎப்சி லாபம் 15% உயர்வு
வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்தி ருக்கிறது. வீட்டுக் கடனுக்கான தேவை அதிகரித்திருப்பதால் இத்தகைய வளர்ச்சி உருவாகி இருக்கிறது. நடந்து முடிந்த ஜூன் காலாண்டில் 1,345 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,173 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. நிகர வட்டி வருமானம் 14.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 5,557 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இப்போது 16 சதவீதம் அதிகரித்து 6,446 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வரம்பு 3.8 சதவீதமாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 0.7 சதவீதமாக இருக்கிறது.
கனரா வங்கி நிகரலாபம் 1.36% உயர்வு
கனரா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1.36 சதவீதம் உயர்ந்து 806.86 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 792 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. நிகர வட்டி வருமானம் 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,991 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம் இப்போது 2,429 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதர வருமானம் 17 சதவீதம் சரிந்து ரூ. 1,026.9 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,238 கோடி ரூபாயாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.67 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.03 சதவீதமாகவும் இருக்கிறது. காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்ததால் இந்த வங்கியின் பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து 401.15 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
ஐடியா செல்லுலார் நிகர லாபம் 57% உயர்வு
இந்தியாவின் மூன்றாவது செல் போன் சேவை வழங்கும் நிறுவனமான ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 57% உயர்ந்திருக்கிறது. நடந்து முடிந்த காலாண்டில் 728 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 463 கோடி ரூபாய் லாபமீட்டியது இந்த நிறுவனம். வர்த்தகத்தின் முடிவில் 1.08 சதவீதம் உயர்ந்து 139.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
டாடா மெட்டாலிக்ஸ் லாபம் ரூ.34.3 கோடி
டாடா மெட்டாலிக்ஸ் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.13.2 கோடி நஷ்டமடைந்த இந்த நிறுவனம், முடிந்த ஜூன் காலாண்டில் 34.3 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. நிகர விற்பனையும் 341 கோடி ரூபாயிலிருந்து 356 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
காலாண்டு முடிவுகள்
கிளென்மார்க் பார்மா நிகர லாபம் 43.7% உயர்வு
கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் உயர்ந்து ரூ. 184.8 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 128.60 கோடி ரூபாயாக நிறுவனத்தின் நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின் நிகர விற்பனை 19.38 சதவீதம் உயர்ந்து 1,477.80 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,237.80 கோடியாக நிகர விற்பனை இருந்தது.
ஏசிசி நிகர லாபம் 7 சதவீதம் சரிவு
சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி-யின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் சரிந்து ரூ.243.15 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 261.76 கோடி ரூபாய் நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின் விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2790 கோடியாக இருந்த விற்பனை இப்போது 3,009 கோடியாக உயர்ந்திருக்கிறது.
விப்ரோ நிகர லாபம் 29.5% உயர்வு
விப்ரோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 29.5 சதவீதம் உயர்ந்து ரூ.2,103 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1623 கோடி ரூபாய் என்ற அளவில் நிகர லாபம் இருந்தது. நிகர விற்பனை 15.5 சதவீதம் உயர்ந்து 11,245.5 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் 9,733.20 கோடியாக நிறுவனத்தின் நிகர விற்பனை இருந்தது.
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 39.42% உயர்வு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 39.42 சதவீதம் உயர்ந்து 72.32 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 51.87 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின் நிகர விற்பனை 30.05 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,740 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 2,263 கோடியாக உயர்ந்திருக்கிறது.
--தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
காலாண்டு முடிவுகள்
இந்தியன் வங்கி லாபம் ரூ.207 கோடி
இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 207.15 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 317.39 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானத்திலும் சிறிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.4,195 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,144 கோடி ரூபாயாக இருக்கிறது. வர்த்தகத்தின் இடையே இந்தியன் வங்கி பங்குகள் 5 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. ஆனால் வர்த்தகம் முடியும்போது 1.84% சரிந்து 157.70 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 10% உயர்வு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து 1,405.12 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 1,275 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த வருடம் ரூ.11,746 கோடியாக இருந்த மொத்த வருமானம், இப்போது ரூ.12,825 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 5.48 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.02 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த விகிதம் கடந்த வருடம் இதே காலாண்டில் முறையே 5.25 மற்றும் 2.85 சதவீதமாக இருந்தது.
கோல்கேட் பாமோலிவ் லாபம் ரூ.134 கோடி
எப்.எம்.சி.ஜி. நிறுவனமான கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் சரிந்து 134.91 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 185.22 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது.
நிகர விற்பனை 12.55 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.844.62 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.950.64 கோடியாக உயர்ந்திருக்கிறது. புதுமைகளை புகுத்தி, செலவுகளை குறைத்து, விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக விற்பனை அதிகரித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
பயோகான் லாபம் ரூ.103 கோடி
உயிரி தொழில்நுட்பத்துறை நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 9% உயர்ந்து 103 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.94 கோடியை மட்டுமே நிகர லாபமாக பயோகான் ஈட்டியது.
நிறுவனத்தின் வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.723 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.742 கோடியாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் சவால்கள் காரணமாக வருமானத்தில் பெரிய ஏற்றம் இல்லை என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய தலைமை நிதி அதிகாரியாக சித்தார்த் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
-தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
காலாண்டு முடிவுகள்
பேங்க் ஆப் பரோடா லாபம் 16% உயர்வு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிகர லாபம் 16.6 சதவீதம் உயர்ந்து 1,361 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் 1,167 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறைவாக இருந்ததால் நிகரலாபம் அதிகரித்திருக்கிறது.
வங்கியின் மொத்த லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.10,717 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,682 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 1,017 கோடியாக இருந்த வாராக்கடன் இப்போது ரூ.526 கோடியாக இருக்கிறது. வாராக்கடன் 1.58 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ஹெவல்ஸ் லாபம் ரூ.107 கோடி
மின் சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் ஹெவல்ஸ் இந்தியாவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.32 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 94 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 107 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிகர விற்பனையும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,044 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.1,267 கோடியாக உயர்ந்திருக்கிறது. அனைத்து பிரிவு பொருட்களின் எண்ணிக்கையிலும் லாப வரம்பிலும் நல்ல வளர்ச்சியை பெற்றிருப்பதாக நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் அனில் ராஜ் குப்தா தெரிவித்தார். கட்டுமானத்துறை வளர்ச்சி அடைந்து வருவதால் வரும் காலாண்டுகளிலும் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றார்.
ஹெச்.யூ.எல். லாபம் 3.68% உயர்வு
எப்.எம்.சி.ஜி. துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலிவரின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.68 சதவீதம் உயர்ந்து 1,056 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 1,019 கோடி ரூபாயாக இருந்தது. சந்தை எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர விற்பனை 13.20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 6,687 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 7,570 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
செலவுகள் அதிகரித் திருப்பதால் லாபம் குறைந்தி ருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,789 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.6,466 கோடியாக இருக்கிறது.
டாபர் நிகர லாபம் ரூ. 210 கோடி
டாபர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.3 சதவீதம் உயர்ந்து 210 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 186 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 13.16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,647 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 1,869 கோடி ரூபாயாக இருக்கிறது.
டாபர் அனைத்து பிரிவுகளிலும் சீரான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று அதன் சிஇஓ சுனில் துக்கல் தெரிவித்தார். கன்ஸுமர் கேர் பிஸினஸ் 13.56 சதவீதமும், உணவு பிஸினஸ் 19.38 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. அதேபோல சர்வதேச வியாபாரமும் 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
விஜயா வங்கியின் நிகர லாபம் 22% உயர்வு
பெங்களூருவை தலைமையாக கொண்ட விஜயா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 161 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் 132 கோடி ரூபாய். மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,698 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,189 கோடியாக இருக்கிறது. ஜூன் காலாண்டில் வாராக்கடன்கள் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 2.42 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.68 சதவீதமாக இருக்கிறது.
நிகர வாராக்கடன் 1.45 சதவீதத்திலிருந்து 1.77 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 49.35 ரூபாய்க்கு விற்பனையானது.
எல் அண்ட் டி லாபம் 2 மடங்கு உயர்வு
எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.458 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.967 கோடியாக உயர்ந்திருக்கிறது.
எதிர்கால திட்டங்களுக்காக பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டியதும் லாபம் உயர்வதற்கு காரணமாகும். நிகர விற்பனையும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் 17,241 கோடியாக இருந்த நிகர விற்பனை, இப்போது 18,974 கோடி ரூபாயாக இருக்கிறது. முடிந்த காலாண்டில் 33,408 கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன. இதில் 14,574 கோடி ரூபாய் வெளி நாட்டிலிருந்து வருபவை. ஜூன் 30 நிலவரப்படி ரூ.1,95,392 கோடிக்கு ஆர்டர்கள் இருக்கிறது.
-தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Re: காலாண்டு முடிவுகள்
ஐடிசி நிகர லாபம் 15% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 15.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,186 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,891 கோடியாக இருந்தது.
நிகர விற்பனை 25.88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.7,338 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.9,164 கோடியாக இருக்கிறது. சிகரெட் மூலம் கிடைக்கும் வருமானம் 18.76 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
பார்தி ஏர்டெல் லாபம் 60% உயர்வு
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 60.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,108 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் 689 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் 13.3 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 20,264 கோடி ரூபாயாக இருந்த நிகர வருமானம் இப்போது 22,962 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 11.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி லாபம் 17% உயர்வு
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் நிகரலாபம் 17% உயர்ந்து ரூ.2,655 கோடியாக இருக்கிறது. வட்டி மற்றும் வட்டியல்லாத வருமானம் உயர்ந்ததுதான் இதற்கு காரணம். கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,274 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிகர வட்டி வருமானம் 18% உயர்ந்து ரூ.4,492 கோடியாக இருக்கிறது. கடன் விகிதம் 15% உயர்ந்து ரூ. 3.47 லட்சம் கோடியாக இருக்கிறது. அதேபோல டெபாசிட்டும் 15 சதவீதம் உயர்ந்து ரூ. 3.35 லட்சம் கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3.3 சதவீதமாக இருந்தது.
மாருதி சுசூகி லாபம் 20.7% உயர்வு
மாருதியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 20.7% உயர்ந்து ரூ. 762 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.631 கோடியாக இருந்தது. செலவுகளை குறைத்தது, விற்பனையை அதிகரித்தது, செலாவணி மாற்று விகிதத்தால் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் காரணமாக நிகர லாபம் உயர்ந்தது.
முதல் காலாண்டின் நிகர விற்பனை 10.78% உயர்ந்தது. கடந்த வருடம் ரூ.9,995 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.11,073 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டு ஆரம்பிக்கும்போது விற்பனை மோசமாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறியது என்று நிறுவனத்தின் சிஎப்ஓ அஜய் சேத் தெரிவித்தார்.
டெக் மஹிந்திரா நிகர லாபம் 8% சரிவு
இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 8.1 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 686 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 630 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. ஆனால் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2.6% உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.614 கோடியாகும்.
ஆனால் வருமானம் 24.8% உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ. 4,103 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ. 5,121 கோடியாக உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது வருமானம் 1.2% உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டு வருமானம் ரூ. 5,058 கோடியாகும்.
ஹெச்.சி.எல். டெக் லாபம் 53.7% உயர்வு
இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு (நான்காம் காலாண்டு) நிகர லாபம் 53.7 சதவீதம் உயர்ந்து ரூ.1,834 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,193 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 20.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 6,980 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.8,424 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வருடத்தில் வருமானம் 500 கோடி டாலர் என்ற உச்சத்தை அடைந்திருக்கிறோம். எங்களுக்கு இது முக்கியமான ஆண்டாகும் என்று நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த குப்தா தெரிவித்தார்.
-தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
காலாண்டு முடிவுகள்
டாக்டர் ரெட்டீஸ் லேப் லாபம் ரூ. 550 கோடி
டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 52.49% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 360 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.550 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிகர விற்பனை 23% உயர்ந்திருக் கிறது. கடந்த ஜூன் காலாண் டில் ரூ.2,844 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது 3,517 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதே சமயம் நிறுவனத்தின் செலவுகளும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.879 கோடி யாக இருந்த செலவுகள் இப்போது ரூ. 1,067 கோடியாக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.242 கோடியிலிருந்து ரூ. 387 கோடியாக உயர்ந்திருக்கிறது.
லுபின் நிகர லாபம் 56% உயர்வு
லுபின் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 56% உயர்ந்து ரூ.624 கோடியாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனை அதிகரித்ததன் காரணமாக நிகர லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் ரூ.401 கோடியாக நிகர லாபம் இருந்தது.கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.2,420 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.3,284 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியவில் பிஸினஸ் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்று லுபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் குப்தா தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வருமானம் 46% உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 29% உயர்ந்திருக்கிறது.
பேங்க் ஆப் இந்தியா லாபம் 16% சரிவு
பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 16 சதவீதம் சரிந்து 805 கோடி ரூபாயாக இருக் கிறது. இதர செலவுகள் மற்றும் வாராக்கடனுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்த தால் நிகர லாபம் குறைந்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 964 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ. 9,722 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,328 கோடியாக உயர்ந்திருக்கிறது.வாராக் கடன்களுக்காக கடந்த வருடம் ஜூன் காலாண் டில் 694 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இப்போது இந்த தொகை அதிகரித்து ரூ.893 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 3.28 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஐஐஎப்எல் ஹோல்டிங்க்ஸ் லாபம் ரூ. 93 கோடி
நிதித் துறையில் செயல்பட்டு வரும் ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 48% உயர்ந்து 93.80 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 63.20 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் 15% உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் 17% உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் 673 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 789 கோடி ரூபாயாக இருக்கிறது. பங்குச்சந்தை வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 107 கோடியாக இருக்கிறது. இது கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது
-தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
காலாண்டு முடிவுகள்
பெர்ஜர் பெயின்ட்ஸ் லாபம் 17% உயர்வு
பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் உயர்ந்து 57 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டின் நிகர லாபம் 49.10 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர விற்பனை 16.78 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.904 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.1,056 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிகர லாபம், விற்பனை போல செலவுகள் 16% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.833 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.967 கோடியாக உயர்ந்திருக்கின்றன.
வர்த்தகத்தின் முடிவில் 1.27 சதவீதம் சரிந்து 296.35 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
யூபிஐ நிகர லாபம் 18.5% உயர்வு
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் (யூபிஐ) நிகர லாபம் 18.5 சதவீதம் உயர்ந்து 664 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 560 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.7,613 கோடியிலிருந்து ரூ.8,547 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 10.8% அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,910 கோடியாக இருந்த நிகரவட்டி வருமானம் இப்போது 2,117 கோடியாக இருக்கிறது.
மொத்த வாராக்கடன் 3.50 சதவீதத்திலிருந்து 4.27 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.96 சதவீதத்திலிருந்து 2.48 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.
கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.122 கோடி
கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.122 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 120 கோடியாக இந்த வங்கியின் லாபம் இருந்தது. வாராக்கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.163 கோடியாக இருந்த இந்த தொகை இப்போது ரூ.86 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் குறைந்தும் நிகர வாராக்கடன் சிறிதளவு அதிகரித்தும் இருக்கிறது. மொத்த வாராக்கடன் 1.51 சதவீதத்திலிருந்து 1.30 சதவீதமாக குறைந்தும், நிகர வாராக்கடன் 0.50 சதவீதத்திலிருந்து 0.53 சதவீதமாக அதிகரித்தும் இருக்கிறது.
டைட்டன் நிகர லாபம் 2.85% சரிவு
டைட்டன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 2.85% சரிந்து ரூ.177 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.182 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனையும் 7.58% சரிந்தது. கடந்த வருடம் ரூ.3,087 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.2,853 கோடியாக சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருந்ததால், நடப்பு நிதி ஆண்டில் அதை தாண்டும் அளவுக்கு வருமானம் ஈட்டுவது கடினமாக இருக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்தார். நிறுவனத்தின் ஜூவல்லரி வியாபாரம் 10.1% சரிந்தும், வாட்ச் வியாபாரம் 10.4% உயர்ந்தும் இருக்கிறது.

ஆந்திரா வங்கி நிகரலாபம் 53% சரிவு
ஆந்திரா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 53 சதவீதம் சரிந்து ரூ.107 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் 231 கோடி ரூபாயாக இருந்தது.
கடன் தள்ளுபடி காரணமாக விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் விவசாய கடன் 1,078 கோடி ரூபாய் வாராக்கடனாக மாறிவிட்டது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிகர வட்டி வருமானம் 12.5% உயர்ந்தது. நிகர வட்டி வரம்பு 2.14 சதவீதமாக குறைந்தது. விவசாயக் கடனை தவிர்த்து பார்க்கும்போது நிகர வட்டி வரம்பு 3 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.
கிராசிம் நிகர லாபம் 20% சரிவு
ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 20% சரிந்து 487 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610 கோடியாக நிகரலாபம் இருந்தது.
நிகர விற்பனை 16% உயர்ந்து ரூ. 7,976 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,893 கோடியாக இருந்தது. பைபர்(விஎஸ்எப்) மற்றும் சிமென்ட் பிஸினஸில் விலைப் போட்டி காரணமாக லாபம் சரிந்தது. இந்த துறைகளில் நிலவும் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இருக்கிறது. விஎஸ்எப் விற்பனை 11% உயர்ந்திருக்கிறது. கெமிக்கல் விற்பனை 33% உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர கடன் 6,167 கோடியாக இருக்கிறது.

ஓபிசி லாபம் 3% உயர்வு
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.15 சதவீதம் உயர்ந்து ரூ.364 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 353 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.5,255 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,576 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இதர வருமானம் 9.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.538 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.588 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 4.33 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.11 சதவீதமாகவும் இருக்கிறது.
மாரிகோ நிகர லாபம் ரூ.185 கோடி
எப்எம்சிஜி நிறுவனமான மாரிகோவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 185 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 157 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனையும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,379 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது உயர்ந்து 1,619 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் காயா பிஸினஸ் பிரிவை கடந்த அக்டோபரில் பிரித்து விட்டதால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை கடந்த ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிட முடியாது என்று மாரிகோ தெரிவித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,173 கோடியாக இருந்த செலவுகள் இப்போது 1,376 கோடியாக அதிகரித்திருக்கிறது.

Similar topics
» காலாண்டு முடிவுகள் !
» எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!
» ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!
» எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!
» ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum