வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am

இ.பி.எஸ். என்றால் என்ன?

Go down

இ.பி.எஸ். என்றால் என்ன? Empty இ.பி.எஸ். என்றால் என்ன?

Post by தருண் Thu Jul 31, 2014 9:24 am

மாடு வாங்கப் போறப்போ எத்தனை படி பால் கறக்கும்னு பார்க்கணும் இல்லையா..? அதுமாதிரி இந்த கம்பெனி பங்கு எவ்வளவு சம்பாதிச்சுக் கொடுக்கும்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் வாங்கறதா, வேண்டாமானு முடிவு பண்ணணும். அதை எப்படித் தெரிஞ்சுக்கறது? அதுக்குப் பேர்தான் இ.பி.எஸ். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்துல அந்த கம்பெனியோட ஒரு பங்கு ஈட்டிய வருமானம்!

இ.பி.எஸ். என்றால் என்ன? EPS%20SHARE

இதை எப்படிக் கண்டுபிடிக்கிறது? அதுக்கு ஒரு ஈஸியான ஃபார்முலா இருக்கு. ஒரு கம்பெனியோட நிகர லாபத்தை, அதோட மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால வகுத்துட்டோம்னா கிடைக்கறதுதான் இ.பி.எஸ்! ஒரு கோடி பங்குகள் வச்சிருக்கிற ஒரு கம்பெனி ஒரு கோடி ரூபாயை நிகர லாபமா சம்பாதிச்சிருக்குன்னா, அந்த கம்பெனியோட இ.பி.எஸ். ஒரு ரூபாய்!

கம்பெனியோட லாபம் கூடினால், அந்த லாபத்தை பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்டாக பிரிச்சுக் கொடுக்க வாய்ப்பு இருக்கு. லாபம் மொத்தத்தையும் கொடுத்திட மாட்டாங்க. கம்பெனி வளர்ச்சிக்கு, எதிர்கால திடீர் செலவுக்குனு கொஞ்சத்தை கையிலே வெச்சுக்குவாங்க. அப்படி டிவிடெண்ட் கொடுக்கலைன்னா கம்பெனியோட சொத்து மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கு. அப்போ சந்தையில அந்தப் பங்கோட விலை அதிகமாயிடும். இப்படி பங்குகளை வாங்கலாமா, வேண்டாமானு முடிவு பண்றதுக்கு இ.பி.எஸ். ஓர் அளவுகோலாகப் பயன்படும்.

அதுசரி, இந்த லாபத்தைக் கணக்கு போடுறது, அதைப் பங்கு எண்ணிக்கையால் வகுக்கறது எல்லாம் வருஷக் கடைசியில நடக்கற காரியமாச்சே... அதுவரைக்கும் பங்கை வாங்காம இருக்கமுடியுமா... இல்லை, போன வருஷத்து கணக்கை வெச்சு வாங்கினா சரியா இருக்குமா... அதை எப்படி முடிவு பண்றது?

காலாண்டு அறிக்கைகள்...

எல்லா கம்பெனிகளும் மூணு மாசத்துக்கு ஒரு தடவை தன்னோட செயல்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிடும். இதுக்கு 'காலாண்டு அறிக்கை'னு பேரு. அந்த மூணு மாசத்தில் கம்பெனியோட விற்பனை, மொத்த வருமானம், நிகர லாபம்னு சகல விவரங்களும் இருக்கும். அந்த விவரங்களை போன வருஷத்தோட கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தா... போற பாதை சரியா இருக்கானு தெரிஞ்சுக்கலாம்.

இந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட கம்பெனியோட வெப்சைட், மும்பை பங்குச் சந்தையோட வெப்சைட் இதுகள்ல கிடைக்கும். இந்த காலாண்டு அறிக்-கையைக் கையில வச்சுக்கிட்டு காலாண்டு இ.பி.எஸ்-ஸைக் கணக்குப் போட்டுறலாம்.

இந்த அறிக்கையோட அடிப்படையில முதலீடு செய்யலாமானு முடிவெடுக்கும்போது முக்கியமா கவனிக்கவேண்டியது சில சமயங்கள்ல எந்த காலாண்டை கையில் வெச்சிருக்கோமோ அதே காலகட்டத்துல போன வருஷம் கம்பெனி எப்படி செயல்பட்டதுனு பார்க்கவேண்டியது முக்கியம்.

உதாரணமா சர்க்கரை ஆலைகள்லாம் சாறு பிழியும் சீஸன்ல நல்ல லாபம் காட்டும். மற்ற சீஸன்கள்ல கொஞ்சம் சுணக்கமா இருக்கும். நீங்க இப்போ பார்க்கிற காலாண்டு சாறு பிழியும் சீஸனா இருந்து, ஒப்பீடு செய்-றதுக்கு சுணக்கமா இருக்கற சீஸனை எடுத்துக்கிட்டீங்கன்னா, லாபம் அமோகமா இருக்கற மாதிரி தெரியும். அதனால, போன வருஷம் சாறு பிழியும் சீஸனையும் இந்த வருஷம் சாறு பிழியும் சீஸனையும்தான் ஒப்பிட்டு முடிவு எடுக்கணும்.

'அப்போ இ.பி.எஸ். அதிகமா இருந்தா வாங்கலாம். குறைவா இருந்தா வாங்கக் கூடாது... அப்படித்தானே...'னு கேக்கிறீங்களா? இல்லை, அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கு!

விதிவிலக்குகள்..!

இ.பி.எஸ். குறைவா இருந்தா அந்தப் பங்கை வாங்காம தவிர்க்கலாம்னு சொல்றது பொதுவான விதி. அதேசமயம், இ.பி.எஸ். குறைவா இருந்தாலும் அதோட வளர்ச்சி விகிதம் போன வருஷத்தைவிட இந்த வருஷம் அதிகமாக இருந்தா வாங்கறதைப் பத்தி யோசிக்கலாம்.

சிலசமயங்கள்ல இ.பி.எஸ். அதிகமாகவே இருக்கும். ஆனா, எதிர்காலத்தில் அந்த கம்பெனிக்கு நல்ல வளர்ச்சி இருக்காதுனு தெரிஞ்சா அந்தப் பங்கை வாங்காம இருந்திடலாம்.

இ.பி.எஸ். பல வகை!

டைல்யூட்டட் இ.பி.எஸ்.

ஒரு கம்பெனியோட நிகர லாபத்தை மொத்தப் பங்குகளோட எண்ணிக்கையால வகுத்தால் கிடைக்கிற தொகைதான் இ.பி.எஸ்-னு பார்த்தோம். ஆனா, சில சமயங்கள்ல கம்பெனியோட மொத்தப் பங்குகளோட எண்ணிக்கை எதிர்-காலத்துல உயர்றதுக்கு வாய்ப்பு இருக்கும். பொதுவா, இ.பி.எஸ். கணக்கு பண்ணும்போது இதைப் பார்க்கறதில்லை. ஆனா, அதையும் சேர்த்துக் கணக்குப் போட்டாதான் அது உண்மையான இ.பி.எஸ். ஆக இருக்கும்.

அதெப்படி திடீர்னு எதிர்காலத்துல பங்கு எண்ணிக்கை அதிகரிக்கும்?

சில கம்பெனிகள் ஊழியர்களை உற்சாகப்படுத்-தறதுக்காக 'ஸ்டாக் ஆப்ஷன்'ங்கற பெயர்ல பங்குகளைக் கொடுக்கும். சிலசமயங்கள்ல இப்படி பங்குகளாக கொடுக்காம, சில வருஷங்கள் கழிச்சு பங்குகளா மாறக்கூடிய வாரண்ட்களா கொடுக்கும். அப்படி வாரண்ட்களா இருக்கறது பங்குகளா மாறும்போது பங்கு எண்ணிக்கை அதிகரிக்கும். அப்படி வாரண்ட்களா இருக்கும் பங்குகளோட எண்ணிக்கை எவ்வளவுங்கிறது முன்னாடியே தெரியும்ங்கறதால அதையும் நாம கணக்குல எடுத்துக்கலாம். அப்படி எல்லாத்தையும் கணக்கில் எடுத்துப் பார்க்கிறதுதான் டைல்யூட்டட் இ.பி.எஸ்! இது எப்பவும் வழக்கமான இ.பி.எஸ்-ஐ விடக் குறைவாவே இருக்கும்!

கேஷ் இ.பி.எஸ்.

பெயரை வச்சே அது பணத்தோட சம்பந்தப்பட்டதுனு தெரிஞ்சிருக்குமே! தயாரிக்கிற பொருட்களை கடனுக்கு விற்கிறதும், பிறகு கடனை வசூல் பண்றதும் எல்லா இடத்திலேயும் வாடிக்கையா நடக்கறதுதான். சரக்கு வித்ததுமே கணக்குப் புத்தகங்கள்ல இந்தத் தொகையை வருமானமா எழுதி, அதை லாபமாவும் கணக்குப் பண்ணிடுவாங்க. ஆனா, பணம் கைக்கு வந்-திருக்காது. அப்படி எல்லாத்தையும் போட்டு கணக்குப் பண்ணினா சரியா வராது. கையில் வந்த பணத்தை மட்டும் வெச்சு லாபத்தைக் கணக்கு பண்ணி, அதை டைல்யூட்டட் பங்குகளால (அதிகரித்த எண்ணிக்கை) வகுத்தா கிடைக்கறதுதான் கேஷ் இ.பி.எஸ்!

புத்தகத்துல இருக்கிற கணக்கை மட்டும் பார்க்காம உண்மையான பண வரவை வெச்சு கணக்குப் போடுறதால மத்ததை விட, இது முடிவெடுக்க நல்லாவே உதவும்.

அட்ஜஸ்டட் இ.பி.எஸ்.

வழக்கமா எல்லோருமே கையில இருக்கற தகவல்களை அடிப்படையா வெச்சுத்தான் இ.பி.எஸ். எவ்வளவுனு கணக்குப் போடுறோம். அதிலே கொஞ்சம் முன்னேபின்னே இருக்கத்தான் செய்யும். கம்பெனி வெளியிடும் காலாண்டு அறிக்கைகளில்கூட வெளியாகும் இ.பி.எஸ். அப்போ இருக்கிற தகவல்களோட அடிப்படையிலதான் கொடுக்கறாங்க. அதெல்லாம் முடிஞ்சு கடைசியில தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை அறிவிக்கும்போதுதான் சகல விஷயங்களையும் கணக்கில் எடுத்து கூட்டி, பெருக்கி வகுத்து இதுதான் இ.பி.எஸ்-னு இறுதியான தகவலைச் சொல்லுவாங்க. அப்படி வெளி-யிடப்படுறதுதான் அட்ஜஸ்டட் இ.பி.எஸ். நம்ம கையில இருக்கற கணக்கோடு இதை ஒப்பிட்டு பார்த்துக்கறதுக்கு இது உதவியா இருக்கும்.

ஆன்கோயிங் இ.பி.எஸ்.

ஒரு கம்பெனிக்கு பல தொழில்கள் இருக்கலாம். அதன் மூலமா பலவிதமான வருமானங்கள் வரலாம். அதையெல்லாம் மொத்த வருமானக் கணக்கில் கொண்டு வர்றதோ, அதுக்கான செலவினங்களை கணக்கில் எடுத்துக்கறதோ சரியா இருக்காது. அதை-யெல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டாலும் அந்த இ.பி.எஸ். சரியானதா இருக்காது.

அந்த கம்பெனிக்கு முக்கியமான தொழில்னு எதை அறிவிச்சிருக்காங்களோ அதை மட்டுமே பார்த்து, அது மூலமா கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கிட்டு அதன் அடிப்படையில் கணக்குப் போடுறதுதான் ஆன்கோயிங் இ.பி.எஸ்.!

சில கம்பெனிகள் முக்கிய தொழிலை கோட்டை விட்டுட்டு மத்ததிலே கொடி கட்டியிருக்கும். அதுமாதிரி நேரங்கள்ல எல்லாத்தையும் கணக்கில் எடுத்துகிட்டுப் பார்த்தா, கம்பெனி பிரமாதமா நடக்கற மாதிரி தோற்றம் வந்திடும். அதை நம்பி பணத்தைப் போட்டுறக் கூடாதில்லையா... அதனால, ஆன்கோயிங் இ.பி.எஸ். என்னனு தெரிஞ்சுக்கறது முக்கியம்.

இதெல்லாம் சும்மா தெரிஞ்சுக்கறதுக்குதான். பெரும்பாலும் பொதுவான இ.பி.எஸ். என்னனு பார்த்துட்டு பங்குகளை வாங்கலாமா, வேண்டாமானு முடிவு பண்ணிடலாம்.

- ந .விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum