வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பி / இ விகிதம் என்றால் என்ன?

Go down

பி / இ விகிதம் என்றால் என்ன? Empty பி / இ விகிதம் என்றால் என்ன?

Post by தருண் Thu Jul 31, 2014 9:19 am

ஒரு பங்கோட சந்தை விலைக்கும், அந்தப் பங்கோட இ.பி.எஸ்-ஸூக்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம் . அதாவது பங்கு ஈட்டு விகிதம்!

மார்க்கெட்டுல ஒரு பங்கு 300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகுதுனு வெச்சுக்குவோம். கடந்த 12 மாதங்களில் அதோட இ.பி.எஸ். 20 ரூபாய். அப்படின்னா, அந்தப் பங்கோட பி.இ. விகிதம் (300/20) 15. அதாவது, தற்போதைய ஒரு ரூபாய் வருமானத்துக்கு 15 ரூபாய் கொடுத்ததாக ஆகும். பங்கின் சந்தை விலை மற்றும் இ.பி.எஸ். மாறும்போது பி.இ. மாறிக்கொண்டே இருக்கும்.

பி / இ விகிதம் என்றால் என்ன? Peratio220

இந்தக் கணக்கை வெச்சுப் பார்க்கும்போது பி.இ. அதிகமா இருந்தா அந்தப் பங்கு அதிக விலைக்கு வியாபாரம் ஆகுது. பி.இ. குறைவா இருந்தா குறைஞ்ச விலைக்கு வியாபாரம் ஆகுதுனு தெரிஞ்சுக்கலாம். அதிக விலைன்னா தவிர்த்துடலாம். குறைவா இருக்கும்போது வாங்கலாம். இதுதான் எளிமையான கணக்கு.


விதிவிலக்குகள்...

இதிலேயே சில விதிவிலக்குகள் இருக்கு. விலை அதிகமாக இருந்-தாலும் பி.இ. அதிகமாக இருந்தாலும் வாங்கலாம், ஒருவேளை, அந்த கம்பெனியோட வளர்ச்சி வேகமா இருந்தால்! இதுமாதிரியான நேரங்கள்ல அந்த நிறுவனப் பங்குகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கும். அதனாலேயே பங்குகளோட விலையும் அதிகமா இருக்கும். அப்படி இருந்தாலும் வாங்கலாம்.

அதேமாதிரி, இதுக்குமேல வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லைங்கற மாதிரி சில கம்பெனிகள் தேங்கி நின்னுபோயிருக்கும். அந்த கம்பெனிப் பங்குகள் குறைவான பி.இ. விகிதத்தில் கிடைத்தாலும் ஏறெடுத்துக்கூட பார்க்கக் கூடாது.

இந்த பி.இ. விகிதம் கம்பெனிப் பங்குகளுக்கு மட்டுமில்லை... எல்லா துறைகளுக்கும் கணக்கிடுவாங்க... அதனால, துறைகளின் பி.இ. விகிதத்தோடு பங்குகளின் பி.இ. விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதை ஒட்டியோ, அதைவிடக் குறை-வாவோ இருந்தா வாங்கலாம். இது சிம்பிளான கணக்கு!


தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum