வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற முடியுமா?

Go down

பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற முடியுமா? Empty பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற முடியுமா?

Post by தருண் Thu Jul 24, 2014 2:35 pm

ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களையோ அல்லது தனக்கு பாகமாக கிடைத்த சொத்துகளையோ, குடும்ப உறுப்பினருக்கோ அல்லது மூன்றாம் நபருக்கோ பிரித்து கொடுத்த பிறகு, அதை திரும்ப பெற்றுக் கொள்ள உரிமை உண்டா? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை..

பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற முடியுமா? Property

மதுரையை சேர்ந்தவர் சுதாகரன். அவரது குடும்பத்தின் மூத்த வாரிசு அவர். அவருக்கு பின் இளையவர்கள் நான்கு நபர்கள். தந்தையை இழந்த பிறகு தாயார் மற்றும் தம்பிகளோடு வசித்து வந்திருக்கிறார். குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பதால் மொத்த குடும்பத்தையும் அவர்தான் பொறுப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. அவரது உழைப்பில் தாயாரையும் கவனித்துக் கொண்டு, தம்பிகளையும் படிக்க வைத்து வைத்துள்ளார்.
குடும்பத்திற்கு என்று பாகப் பிரிவினையாக எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில், அவரது உழைப்பில் பல சொத்துக்களை வாங்கி அதை அம்மாவின் பெயரிலும், தனது பெயரிலும் பதிவு செய்து கொள்கிறார். குடும்பத்தின் சுமை கருதி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தம்பிகள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் போக, தனது பெயரிலுள்ள சொத்துக்களை தனது தம்பிகளுக்கு பகிர்ந்து கொடுத்து அதை பதிவும் செய்து கொடுக்கிறார். அதாவது தன்னை வைத்து பராமரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் சொத்துகளை தம்பிகளுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் தம்பிகள் பராமரிப்பதில் சிக்கல் வந்து விடுகிறது. வருமானம் இல்லாத நிலைமையில், தனது தம்பிகளும் கைவிட்டுவிட இப்போது வருத்தப்படுகிறார் சுதாகரன். நான் சம்பாதித்த சொத்துக்களை திரும்ப எனக்கே கிடைக்குமா என கேட்கிறார்.

இது தொடர்பாக சட்ட வழிமுறைகள் என்ன என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ்பாபுவிடம் கேட்டபோது, ''தனிநபர் தனக்கு உரிமையுள்ள ஒரு சொத்தை பதிவு செய்து கொடுத்த பிறகு, நேரடியாக மீண்டும் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது. சொத்து பாகமாக பெறப்பட்டிருந்தாலோ அல்லது தனிநபராக சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும் அதன் உரிமை மாற்றம் செய்து கொடுக்கப்பட்ட பின்னர், அது பதிவு வாங்கியவரின் சொத்தாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே மீண்டும் நேரடியாக உரிமை எடுத்துக் கொள்ள முடியாது.

குறிப்பிட்ட காரணங்களுக்காக உரிமை மாற்றம் செய்யப்பட்டிருப்பின், அந்த காரணங்கள் மீறப்படுகிறபோது உரிமை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடலாம். அல்லது சுயாதீனமாக இல்லாதபோது, கட்டாயத்தின் பேரில் இந்த உரிமை மாற்றம் நிகழ்ந்திருந்தால் அந்த நிலைமைகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
இந்த இடத்தில் சுதாகரன் உடல் நலம் சரியில்லாதபோது உரிமை மாற்றம் செய்து கொடுத்துள்ளார் என்பதும், குறிப்பிட்ட பிரதிபலன் எதிர்பார்த்துதான் உரிமை மாற்றம் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. எனவே அந்த குறிப்பிட்ட பிரதிபலன் நிறைவேறாதபோது அந்த பதிவை ரத்து செய்ய கோர முடியும். தன்னை பராமரிப்பது என்கிற அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்பதை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

தவிர இவரை பாராமரிப்பது தொடர்பான விவரங்கள் பத்திரப்பதிவில் தெளிவாக இருக்கும்பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அப்படி எந்த ஒப்பந்தங்களும் இல்லாதபட்சத்தில் நீதிமன்றம் மனுதாரரின் நிலைமையின் அடிப்படையிலேயே முடிவெடுக்கும்'' என்றார்.

என்னதான் ரத்த உறவாக இருந்தாலும் முன் யோசனை இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொடுக்கிறபோது இதுபோன்ற சிக்கல்கள் நேரலாம். எனவே முனெச்சரிக்கையாக இருப்பதும், ஒரு வழக்கறிஞர் ஆலோசனையோடு சொத்துக்களை உரிமை மாற்றம் செய்வதும் எதிர்காலத்துக்கு நல்லது.

-நீரை.மகேந்திரன்

முக நூல்
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum