Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தங்க நகை சீட்டுக்குத் தடையா?
Page 1 of 1
தங்க நகை சீட்டுக்குத் தடையா?
தங்கம் விற்கிற விலையில் மொத்தமாகப் பணம் தந்து வாங்க முடியாதவர்கள், தங்க நகைச் சீட்டு திட்டத்தில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், புதிய கம்பெனி சட்டத்தின் மூலம் சாதாரண மனிதர்களின் இந்த ஆசைக்கும் உலை வைத்திருக்கிறது மத்திய அரசாங்கம்.
புதிய கம்பெனி சட்டத்தின் விதிமுறைகளைத் தொடர்ந்து, சில நகைக் கடைகள் தங்க நகைச் சீட்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது அல்லது அதன் கால அளவை மாற்றி யிருக்கிறது. புதிய கம்பெனி சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள், நகைக் கடைகள் ஏன் சீட்டுத் திட்டங்களை மாற்றி வருகின்றன என்கிற கேள்விகளை சென்னையைச் சேர்ந்த கம்பெனி செகரட்டரி எம்.தாமோதரனிடம் கேட்டோம்.
‘’சிறிய மற்றும் பெரிய கடைகள் அனைத்தும் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை நடத்தி வருகிறது. இதில் சில நகைக் கடைகள் வாடிக்கையாளர் களைக் கவரும்விதமாக சீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் சுமார் 36 சத விகிதம் லாபம் கிடைக்கும் என அறிவிக்கிறது.
ஆனால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் டெபாசிட்டுக்கு தரும் வட்டி விகிதத்தைவிட நகைக் கடைகள் அதிக லாபம் தரக்கூடாது என புதிய கம்பெனி சட்டத்தில் கூறபட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வாங்கும் டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 12.5 சதவிகிதம் மட்டுமே வட்டி தரப்படுகிறது.
நகைக் கடைகள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் வசூலிக்க முடியாது. ஆனால், வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதற்கான தொகையை முன்கூட்டியே அட்வான்ஸாகச் செலுத்தலாம். இந்தப் பணத்தை அதிகபட்சமாக ஒருவருடத்துக்கு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இதற்கு மேற்பட்ட காலத்துக்குப் பணம் வசூலிக்க வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியிடம் தனியாக அனுமதி வாங்க வேண்டும். சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இதற்கான அனுமதியைப் பெற்று, டெபாசிட் வாங்கி வருகின்றன.
அதாவது, மொத்தமாகத் தங்கம் வாங்குவதற்குப் பணம் இல்லை. அதனால் சிறுக, சிறுக சேமித்து தங்கத்தை வாங்குகிறோம் என்கிற வகையில் ஒரு வருடத்துக்்கு மட்டுமே இந்தத் திட்டங்களை நடத்த வேண்டும் எனவும் கம்பெனி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஒரு வருட காலத்துக்குமேல் வசூலிக்கப்படும் தொகையை, தொழில் தேவைகளுக்காக கடன் வாங்கியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து ஒரு வருடத்துக்்கு மேற்பட்ட காலத்துக்்கு வசூலிக்கப்பட்ட தொகையை வருகிற மார்ச்
2015-க்குள் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில நகைக் கடைகள் நீண்ட காலத்துக்கு நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்தி, அந்தத் தொகையை மக்களுக்குச் சரியாகத் தரவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதனால்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அடுத்து, இந்தப் புதிய கம்பெனி சட்டம் ஏப்ரல்1, 2014-லிருந்துதான் அமலுக்கு வந்துள்ளது. அதற்குமுன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை என்ன செய்வது என்பதற்கு எந்தவிதமான விளக்கமும் புதிய கம்பெனி சட்டத்தில் இல்லை.
புதிய கம்பெனி சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களாகச் செயல்படும் நகைக் கடைகளுக்குதான் பொருந்தும். ஆனால், தனிப்பட்ட உரிமையாளரின் கீழ் இயங்கும் தங்க நகைக் கடைகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என நினைக்கிறார்கள். ஆனால், அந்தக் கடைகள் ஆர்பிஐ-ன் நேரடி பார்வையின்கீழ் வந்துவிடும்" என்றார்.
மேலும், சில தங்க நகைக் கடைகள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் தொகையை தொழில் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஆர்பிஐக்கு புகார் வந்துள்ளது. அதோடு சில முறைப்படுத்தப் படாத அல்லது பதிவு செய்யப்படாத கடைகளும் நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்துகின்றன. இதனால் கணக்கில் வராத பணம் நகைச் சீட்டு என்கிற பெயரில் அதிகம் புழங்க வாய்ப்பிருப் பதாகவும், இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள்தான் இப்போது புதிய கம்பெனி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
புதிய கம்பெனி சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை கள் பற்றி சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக் கடைகாரர்களிடம் கேட்டபோது, ‘தனிஷ்க் போன்ற பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் மட்டும் நகைச் சீட்டுத் திட்டத்தை நிறுத்திவிட்டன. ஆனால், நாங்கள் அப்படிச் செய்யாமல், நகைச் சீட்டுத் திட்டங்களின் காலத்தைக் குறைத்துக் கொண்டோம். அதாவது, 15, 18 மாதங்கள் நடத்தப்பட்ட நகைச் சீட்டுத் திட்டங்களை இப்போது 11 மாத திட்டங்களாக மாற்றியமைத் திருக்கிறோம்.
மேலும், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்குதான் இந்தச் சட்டம் பொருந்தும். நாங்கள் பார்ட்னர், தனி உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாகவே செயல்படுகிறோம். இதனால் எங்களுக்கு நகைச் சீட்டு நடத்துவதில் எந்தச் சிக்கல் இல்லை’’ என்றார்கள்.
பொதுமக்கள் அக்கறையோடு கட்டிய பணம் பாதுகாப்பாக கிடைக்கும் தரமான கடைகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்!

-விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்க நகை டு தங்க இ.டி.எஃப்... அதிகரிக்கும் தங்க மோகம்!
» தங்க இறக்குமதி அதிகரிப்பு
» தங்க விலை குறைகிறது
» மே மாதம் தங்க பத்திரம் வெளியீடு
» தங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்!
» தங்க இறக்குமதி அதிகரிப்பு
» தங்க விலை குறைகிறது
» மே மாதம் தங்க பத்திரம் வெளியீடு
» தங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum