Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தரைமட்டமான அடுக்குமாடி... வாங்கும்முன் ஜாக்கிரதை!
Page 1 of 1

பெரிய விபத்து ஒன்று நடந்தபிறகே அதுமாதிரி இனி எதுவும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பது நமக்கு வழக்கமாகவே ஆகிவிட்டது. சென்னையை அடுத்துள்ள போரூருக்குப் பக்கத்தில் இருக்கும் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று அடியோடு விழுந்து தரைமட்டமானதில் 58 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்த விபத்துக்குப்பின், ஃப்ளாட் வாங்கலாம் என்ற யோசனையில் இருந்தவர்கள் சற்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக, ஃப்ளாட் வாங்க வீட்டுக் கடன் கிடைக்குமா, அந்த ஃப்ளாட்டுக்கு வந்துசெல்ல போக்குவரத்து வசதி உண்டா, அருகில் பள்ளிக்கூடம், மருத்துவமனை உண்டா என்கிற மாதிரியான விஷயங்களைத்தான் ஃப்ளாட் வாங்குபவர்கள் பார்த்தார்கள். ஆனால், முகலிவாக்கம் அடுக்குமாடி விபத்துக்குப்பின், புதிதாக ஃப்ளாட் வாங்குபவர்கள் வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விஷயங்கள் என்னென்ன என்று பல்வேறு தரப்பினருடன் பேசினோம். கட்டட அனுமதி வாங்குவதில் தொடங்கி, கட்டிய வீட்டை வாடிக்கை யாளர்களிடம் ஒப்படைப்பது வரை கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்கள் அவர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நிறுவனமா, பொறியாளரா?
சிறிய அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்போ அல்லது பல அடுக்குக் குடியிருப்போ, எந்தக் கட்டுமானமாக இருந்தாலும் அதை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கட்டுமான திட்டம் நேரடியாக ஒரு பொறியாளரால் கட்டப்படுகிறதா அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டுவதைத் தொழிலாகக்கொண்ட ஒரு நிறுவனம் கட்டுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஒரு பொறியாளரின் நேரடி கண்காணிப்பின் மூலம் கட்டப்பட்டு வரும் திட்டம் எனில், தொழில்நுட்ப விவரங்களை நமக்கு நேரடியாக விளக்குவார். ஆனால், கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும் திட்டம் எனில் நிறுவனத்தின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளோடுதான் பேச முடியும். அவர்களது வாக்குறுதிகள் அனைத்திலும் உண்மை இருக்கும் என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கேற்ப, பொய்யான பல தகவல்களை அவர்கள் சொல்வதற்கு நிறையவே வாய்ப்புண்டு.
நம்பகத்தன்மை!
கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது பொறியாளரின் நம்பகத்தன்மையைப் பார்க்க வேண்டியது அவசியம். எத்தனை வருடமாக அவர் இந்தத் துறையில் இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடம் இந்தத் துறையில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்குமுன் கட்டியுள்ள கட்டடங்களை எந்தப் பகுதியில் கட்டியுள்ளார், அதன் தற்போதைய நிலை, அங்கு வசிப்பவர்களின் அனுபவம் போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும். அவரால் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானம் என்ன என்பதைக் கேட்டறிந்து அதையும் பார்த்துவர வேண்டும்.
நிலத்தின் தன்மை!
கட்டடம் அமைந்துள்ள நிலத்தின் தன்மை என்ன என்பதை நாம் நேரடியாகத் தெரிந்துகொள்வது அவசியம். அந்த இடத்தில் ஏற்கெனவே கட்டடம் அமைந்திருந்ததா அல்லது முதல்முறையாக கட்டப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே கட்டடம் இருந்த இடமாக இருந்தால், மண் கெட்டிப்பட்டு கடினத்தன்மை கொண்டதாக மாறியிருக்கும். இப்போதுதான் முதல்முறையாகக் கட்டப்படும் இடத்தில் மண் இளகும்தன்மையோடு இருக்கும்.
கட்டடம் கட்டுவதற்குமுன் மண் பரிசோதனை செய்வது அவசியம். பல அடுக்குக் கட்டடம் என்றால், தளம் அமையவுள்ள பகுதிகளில் சராசரியாக ஆறு இடங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பகுதியில் உள்ள மண்ணின் அடர்த்தி, எடை தாங்கும் தன்மை, எத்தனை அடிக்கு கீழே உறுதியான மண் அடுக்கு உள்ளது, அதில் கட்டப்பட வேண்டிய கட்டுமானம், தூண்கள் அமைக்கப்பட வேண்டிய விவரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிக்கையின் விவரங்கள் நமக்குப் புரியவில்லை எனில், அந்த அறிக்கையைக் கேட்டுவாங்கி நமக்குத் தெரிந்த பொறியாளர்களிடத்தில் விவரங்களைக் கேட்கலாம்.
கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்)!
மண் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் எந்தவகையான கட்டுமானம் அமைக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு வழங்கப்படுவது கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்) அறிக்கை. இதை புரமோட்டர்கள், அதற்கென இருக்கும் நிறுவனங்களிடம் வாங்கித் தர வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில்தான் உள்ளாட்சி அமைப்பு திட்ட வரைபடத்துக்கான அனுமதியை வழங்கும். இந்த அறிக்கை யில் கட்டடத்தின் எடைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டியவை என்னென்ன என குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதாரணமாக, கட்டடம் கட்டப்படும் இடம் நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்தால், அதற்கு எந்தவகையான தொழில்நுட்பம் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்கிற ஆலோசனைகள் இந்த அறிக்கை யின்படிதான் முடிவு செய்யப்படும். குறிப்பாக, எத்தனை அடி ஆழத்தில் பில்லர்கள் அமைக்கப்பட வேண்டும்; அவற்றின் சுற்றளவு, பயன்படுத்த வேண்டிய கம்பிகளின் தடிமன்கள், காங்க்ரீட், ஜல்லிகள் அளவு விவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.
சட்ட விவரங்கள்!
திட்ட அனுமதியின்படிதான் வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, இந்த அனுமதி காலாவதியாகாமல் அமலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அனுமதியில் உள்ளபடிதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா, எத்தனை அடுக்குகளுக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது, கட்டடத்தில் எங்காவது ஒருபகுதியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா, இதனால் எதிர்காலத்தில் என்னமாதிரியான பாதிப்புகள் வரும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.
கம்ப்ளீஷன் சான்றிதழ்!
கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டபின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரி களால் குடியிருக்கத் தகுதியானது, விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்கிற கம்ப்ளீஷன் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை வீடு வாங்குபவர்கள் கேட்டு வாங்க வேண்டியது கடமை. ஒரு கட்டடம் எப்படி கட்டப்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்ந்தபின்பே அதிகாரிகள் இந்தச் சான்றிதழைத் தரவேண்டும். இதேபோல, கட்டுமானத் தரமும் சோதிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இப்படி சோதனை செய்வது மிகக் குறைவுதான். இந்தச் சான்றிதழ் இல்லாத கட்டடங் களை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவே கூடாது.
அடுக்குமாடி வீடுகள் நமது காலத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. தவிர, வங்கிக் கடன் மூலமாகத்தான் வீடு வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர் நடுத்தர மக்கள். கட்டடம் கட்டும் பில்டர் பணத்துக்கு ஆசைப்பட்டோ, அல்லது அலட்சியம் காரணமாகவோ விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் போனால், இதுபோன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும்.
அடுக்குமாடிக் கட்டடங்கள் எப்படி கட்டப்படுகின்றன என்பதை அரசாங்கம் தனது கழுகுக் கண்களால் கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், அதை வாங்குகிற மக்களும் கவனமாக இருந்தால்தான் அடுக்குமாடி வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மவுலிவாக்கம் கட்டட விபத்து: சுட்டிக்காட்டப்படும் தவறுகள்!
இடிந்துபோன இந்தக் கட்டடத்துக்கு அனுமதி வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் 6 மாடி கட்டடம் கட்டத்தான் அனுமதி வாங்கப்பட்டதாம். அதற்கு ஏற்பதான் அஸ்திவாரம் போடப்பட்டு கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இடையில் கூடுதலாக 5 மாடிக்கு, அதாவது 11 மாடிக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. அதாவது, 6 மாடிக்கு போடப்பட்ட அஸ்திவாரத்தில் 11 மாடி கட்டப்பட்டிருக்கிறது.
கட்டடம் கட்டியதில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்கிறார்கள் இன்ஜினீயர்கள். குறிப்பாக, ஏரிப்பகுதியாக இருந்த அந்த இடத்தில், இதுபோன்ற கட்டடம் கட்டும்போது கீழே இறக்கப்படும் பில்லர்கள் பாறை அடுக்கு வரையிலும் இறக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டடத்தில் அது செய்யப்படவில்லை. அதாவது, 85 அடி தோண்டி அடித்தளம் அமைத்திருக்க வேண்டிய இடத்தில் பாதிகூட தோண்டப்படவில்லை. தவிர, பில்லர்களின் தடிமன் பத்துக்கும் மேற்பட்ட அடுக்குகள் தாங்கக்கூடியதாக இல்லை.
கட்டடத்தை வடிவமைத்த விஜய் பர்காத்ரா அங்கீகாரம் பெற்ற வடிவமைப்பாளர் இல்லையாம். மதுரையைச் சேர்ந்த ப்ரைம் சிருஷ்டி நிறுவனம் சென்னையில் மேற்கொள்ளும் முதல் வேலை இதுதான். வங்கி வேலை பார்த்த இதன் உரிமையாளர் மனோகரன் ஓய்வுபெற்ற பிறகு 2011-ல்தான் கட்டுமான துறையில் இறங்கியுள்ளார். அனுபவம் இல்லாததும் விபத்துக்கு காரணம் என்கிறார்கள்.
இன்ஷூரன்ஸ் க்ளைம் கிடைக்காது!
''இயற்கை பேரிடர்களால் நிகழும் கட்டட விபத்துகளுக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும். கட்டுமானத் தவறுகள், தொழில்நுட்பத் தவறுகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, இடிந்தாலோ சம்பந்தபட்டவர்கள் க்ளைம் செய்ய முடியாது. வீட்டுக் கடனுக்கான இன்ஷூரன்ஸ் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது. ஆனால், சொத்து மற்றும் உடைமைகளுக்குப் பாதிப்பு என்கிறபோது, இந்த நடைமுறைதான் பின்பற்றப்படும். தீ விபத்து, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே க்ளைம் கிடைக்கும். சாதாரண மழைக்கு வீடு இடிந்தால் க்ளைம் செய்ய முடியாது.
பில்டர்கள் கட்டும் கட்டுமான நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். கட்டுமானம் முடிந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் காலம் வரை இயற்கைப் பேரிடர்களால் இழப்பு நேரிட்டால் அதை ஈடுசெய்யும் விதமாக இந்த பாலிசி இருக்கும். பொதுவாக, கட்டடம் கட்டும்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தினால் உருவாகும் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படுமாயின் க்ளைம் கிடைக்காது. ஆனால், தொழில்நுட்பம் காரணமாக ஏற்படும் பிரச்னைகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்படி சில பாலிசிகள் வந்திருக்கிறது!''
கட்டப்படும் வீடுகளின் மேற்பார்வை!
''பாதுகாப்பு அம்சத்தைக் கணக்கில் கொண்டால் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் வீடு வாங்குவதைவிட கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் அல்லது தொடங்க உள்ள திட்டங்களில் வீடு வாங்க முயற்சிக்கலாம். ஏனென்றால், வரைபட அறிக்கை அடிப்படையில்தான் வேலை நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.
கட்டுமான வேலைகள் எப்படி நடக்கிறது, ரூஃப் டைப், சென்டிரிங்குகள், லென்டில் பீம் கட்டியபின் தண்ணீர் விட்டு காயவைப்பது, எத்தனை நாட்களுக்குப் பிறகு சென்டிரிங்குகளைப் பிரிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணிக்கலாம். தவறு நடந்தால் உடனடியாகச் சுட்டிக்காட்டுவதற்கு கட்டிக்கொண்டிருக்கும் வீடுகளை வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்.''

-விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கிரெடிட் கார்டு வாங்கும்முன்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» டயர்கள் ஜாக்கிரதை!
» வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !
» சந்தோஷம் பொங்கும் சொந்த வீடு! வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்...
» பொது இடங்களில் இலவச வைஃபை... தகவல்கள் ஜாக்கிரதை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum