Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டயர்கள் ஜாக்கிரதை!
Page 1 of 1
டயர்கள் ஜாக்கிரதை!
நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் வசித்தாலும் சரி, தினமும் விபத்துகள் இல்லாத செய்தித்தாளைப் பார்க்க முடியாது. 'ஒரே குடும்பத்தில் பயணித்த ஐந்து பேர் பலி, மீடியனைத் தாண்டி அடுத்த பக்கம் சென்ற கார், எதிரே வந்த கார் மீது மோதி 8 பேர் பலி’ என செய்திகளைப் படித்து விட்டுக் கடந்து விடுகிறோம். நெடுஞ்சாலை விபத்துகளில் மிக முக்கியக் காரணமாக இருப்பது, டயர் வெடிப்பதுதான். எங்கே செல்லலாம்; எங்கே தங்கலாம்; என்னஎல்லாம் வாங்கலாம் என சுற்றுலாவுக்கு பிளான் போட நேரம் ஒதுக்கும் பலரும், கார் சரியான நிலையில் இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவது இல்லை.
டயர் வெடிப்பு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ''நான் சொகுசு கார் வைத்திருக்கிறேன். இந்த கார் டயர் எல்லாம் வெடிக்கவே வெடிக்காது'' என்று சொல்லவே முடியாது. மும்பையில் புகழ் பெற்ற தனியார் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளர், தான் பயணம் செய்த லேண்ட்ரோவர் காரின் டயர் வெடித்ததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனால், நானோவாக இருந்தாலும் சரி, ஜாகுவாராக இருந்தாலும் சரி, கார் டயர்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
என்ன செய்யலாம்?
வாரத்துக்கு இருமுறையாவது கார் டயரின் காற்றைப் பரிசோதிப்பது அவசியம். நெடுஞ்சாலைப் பயணத்துக்குக் கிளம்பும்போது, நிச்சயம் கார் டயர்களின் காற்றின் அளவை செக் செய்யாமல் காரை எடுக்கக் கூடாது.
காரை வெளியே எடுத்த 5 கி.மீ-க்குள் காற்றை செக் செய்ய வேண்டும். டயர் ஏற்கெனவே ஹீட் ஆகி இருக்கும் என்பதால், அதன் பிறகு காற்று அடித்து உபயோகம் இல்லை.
இப்போது வரும் பல கார்களில் ட்யூப்லெஸ் டயர்கள்தான் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சராகி இருப்பதே தெரியாது. அதனால், வாரத்துக்கு இருமுறை டயரை செக் செய்யும் போதுதான், திடீரென ஒரு டயரில் காற்று மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
காற்று நிரப்பும்போது காருக்குள்ளேயே உட்கார்ந்திருக்காமல், உங்கள் டயரில் எவ்வளவு காற்று இருக்கிறது என்று பாருங்கள்.
நம் ஊர் சாலைகளின் தரம் எல்லோருக்குமே தெரியும். 'இது சர்வதேச நிறுவனம் தயாரித்திருக்கும் டயர்; 50,000 கிமீ ஓட்டலாம். ஒன்றும் ஆகாது’ என்றெல்லாம் எந்த டயரையும் நம்ப முடியாது. ஒரு டயரின் ஆயுள்காலம் என்பது 30,000- 40,000 கி.மீ-தான். அதற்கு மேல் அந்த டயர் நன்றாக இருக்கிறது என்று மெக்கானிக்குகள் சொன்னாலுமே, டயரை மாற்றுவதுதான் நல்லது.
எந்தக் காரணம் கொண்டும் விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்துக்காக, தரமற்ற டயர்களை வாங்கிப் பொருத்தாதீர்கள்.
''சென்னை டு பெங்களூர் மூன்று மணி நேரத்தில் வந்து விட்டேன்'' என்று சிலர் பெருமை பொங்கப் பேசுவதைப் பார்த்திருப்போம். இங்கே எந்த வேகப் போட்டியும் நடைபெறவில்லை. உங்களுடன் நெடுஞ்சாலையில் அலான்சோவோ, ஹாமில்ட்டனோ மோதவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நெடுஞ்சாலைப் பயணத்தின்போது உங்களுக்கு ஓய்வு தேவையோ இல்லையோ. ஆனால், காருக்கும் டயருக்கும் ஓய்வு தேவை. குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடங்கள் பிரேக் விட வேண்டியது நிச்சயம். டீ பிரேக்கின்போது டயர்களையும் கொஞ்சம் நோட்டம் விடுங்கள்.
தொடர்ந்து காரை ஓட்டிக் கொண்டே இருக்கும்போது, டயர் ஓவர் ஹீட் ஆகி வெடிக்கும் ஆபத்து அதிகம்.
எஸ்யூவி/எம்யூவி கார்களில் கவிழும் ஆபத்து அதிகம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால், சட்டென பிரேக் அடிக்கும்போது கார் கவிழ்ந்து விடும் அபாயம் அதிகம்.
ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் பிடித்து ஓட்ட வேண்டும். சிலர் ஸ்டீயரிங்குக்குள் கையை விட்டு ஓட்டுவதை ஹாபியாக வைத்திருப்பார்கள். விபத்து எந்த நேரத்தில் நிகழும் என்று சொல்ல முடியாது. எப்போதுமே காரை கன்ட்ரோல் செய்ய இரண்டு கைகளையும் ஸ்டீயரிங் வீலின் மீது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஃபார்முலா-1 ரேஸில் கலந்துகொள்ளும் நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக்கூட சாதாரண சாலைகளில் 100 கி.மீ-க்கு மேல் வேகமாக ஓட்ட மாட்டார்கள். காரணம், 100 - 120 கி.மீ-க்கு மேல் அசாதாரண சூழ்நிலையில், சாதாரண கார்களை கன்ட்ரோல் செய்வது கடினம். திடீரென சாலையின் குறுக்கே யாராவது திடீரென்று வந்தால் அல்லது சடன் பிரேக் அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், சட்டென காரை கன்ட்ரோல் செய்யக்கூடிய வேகத்தில் ஓட்டுவதே நல்லது.
காரில் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு செல்லக் கூடாது. ஓவர் வெயிட், டயர்களுக்குக் கூடுதல் சுமை.
அழகுக்காக மட்டமான வீல் கேப்புகளை வாங்கிப் பொருத்த வேண்டாம். சில நேரங்களில் இந்த வீல் கேப்புகளே டயரின் ஓரத்தைத் தேய்த்துவிடும்.
டயர் வெடித்தால் என்ன செய்ய வேண்டும்?
இதை எழுதுவது சுலபம். ஆனால், அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதுதான் எவ்வளவு சிரமம் என்பது புரியும். டயர் வெடிப்பது என்பது ஒரு பாம் வெடிப்பது போன்று அதிக சத்தத்தை எழுப்பும். எதிர்பாராத இந்த திடீர் சத்தமே நம்மை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலைக்குத் தள்ளிவிடும். அதனால், சட்டெனப் பதட்டப்படாமல் டயர் வெடித்தால், உடனடியாக பிரேக்கில் கால் வைத்து அழுத்தாதீர்கள். எக்காரணம் கொண்டும் பிரேக்கில் கால் வைக்கக் கூடாது. பிரேக் பிடித்தால், கார் கவிழ்ந்துவிடும். மாறாக, ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அழுத்தத்தைக் குறைத்து, வேகத்தைக் குறைக்க வேண்டும்.
ஸ்டீயரிங்கில் உங்கள் கை பலமாக இருக்க வேண்டும். டயர் வெடித்த உடனேயே கார் திரும்பும் என்பதால், ஸ்டீயரிங்கை ஸ்ட்ராங்க்காக கன்ட்ரோல் செய்ய வேண்டும். எந்தப் பக்கம் கார் இழுக்கிறதோ, அதற்கு எதிர்ப்பக்கமாக ஸ்டீயரிங்கைத் திருப்ப வேண்டும். திருப்ப வேண்டும் என்பதற்காக உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி ஸ்டீயரிங்கை முழுவதுமாகத் திருப்பக் கூடாது. காரின் வேகம் குறையும் வரை நேராகச் செல்வதற்கு ஸ்டீயரிங்கை கன்ட்ரோல் செய்ய வேண்டும்.
க்ரூஸ் கன்ட்ரோல் மோடில் வைத்து காரை ஓட்டி வந்தீர்கள் என்றால், உடனடியாக க்ரூஸ் கன்ட்ரோலை ஆஃப் செய்துவிட வேண்டும்.
எச்சரிக்கை பட்டனைத் தட்டிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் ஓரத்துக்கு காரைக் கொண்டுவந்து நிறுத்துங்கள்.
ஸ்பேர் வீலை மாற்றிவிட்டு, உடனே பயணத்தைத் தொடரலாம் என நினைக்கக் கூடாது. வீலின் மற்ற பாகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதனால், மெக்கானிக் அல்லது கார் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து, காரை வந்து சோதிக்கச்செய்ய வேண்டியது அவசியம்.
நம்பக் கூடாதாவை...
அதிகக் காற்றைவிட குறைந்த காற்று இருப்பதுதான் டயருக்கு ஆபத்து. டயரில் குறைந்த காற்று இருக்கும்போது சாலையுடனான உராய்வினால், ஓவர் ஹீட் ஆகி டயர் வெடிக்கும். அதனால், எப்போதுமே தேவையைவிட 4-5 புள்ளிகள் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. குறைவாக இருக்கக் கூடாது.
இன்று வெயில் அதிகமாக இருக்கிறது. 30 பிஎஸ்ஐ-க்கு பதில் 25 பிஎஸ்ஐ நிரப்பினாலே போதும் என்பார்கள் சிலர். இதுவும் புரூடாதான். வெப்பமான சாலையில் குறைந்த காற்றழுத்தம் கொண்ட டயர் ஓவர் ஹீட் ஆகும்.
மோ.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !
» தரைமட்டமான அடுக்குமாடி... வாங்கும்முன் ஜாக்கிரதை!
» பொது இடங்களில் இலவச வைஃபை... தகவல்கள் ஜாக்கிரதை!
» தவறான தகவல் கொடுத்தால்... பாலிசி ரத்தாகும் ஜாக்கிரதை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum