வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஏடிஎம் - பயன்பாட்டுக்கு வந்த நாள் ஜூன் 27

Go down

ஏடிஎம் - பயன்பாட்டுக்கு வந்த நாள் ஜூன் 27 Empty ஏடிஎம் - பயன்பாட்டுக்கு வந்த நாள் ஜூன் 27

Post by தருண் Sat Jun 28, 2014 11:21 am

ஆரம்பகாலத்தில் வங்கியில் நீங்கள் நினைத்த நேரத்தில் பணம் பெற முடியாமல் இருந்தது. அதற்கு தீர்வாக தான் நினைத்த நேரத்தில் பணம் பெற வசதியாக ஏடிஎம் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவிற்கு இது அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்குள் தான் இருக்கும். ஆனால் உலகில் முதன்முறையாக பயன்பாட்டுக்கு வந்தது இன்று தான் ஜூன் 27,1967.

ஏடிஎம் கண்டுபிடிப்பதற்க்கான 1960க்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டன. லூதர் ஜார்ஜ் சிம்ஜியான் என்பவரால் பிப்ரவரி 26,1960ல் காப்புரிமை பெறப்பட்டது.அப்போது இதன் பெயர் பேங்கோகிராஃப். பல கட்ட சோதனைகளுக்கும், நடைமுறை சாத்தியங்களும் இதில் சோதித்து பார்க்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு பணம், காசோலைகளை ஏற்றுக்கொள்ளும் பணம் பெறும் இயந்திரமாக தான் இருந்தது. தற்போது உள்ளது போல பணமளிக்கும் வசதி ஆரம்பகாலத்தில் இந்த இயந்திரத்தில் இல்லை.பல சோதனைகளுக்கு பின் முதல் ஏடிஎம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஜூன் 27, 1967ம் ஆண்டு வட லண்டனில் உள்ள என்ஃபீல்டு நகரத்தில் பார்க்லேஸ் வங்கியில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

1965ல் மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட அட்டையை உயயோகிக்கும் வசதியும், 1970ல் பணம் பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியே படிப்படியாக தன்னை பல நிலைகளில் மாற்றிக்கொள்ள துவங்கியது ஏடிஎம் இயந்திரம். ஏடிஎம் கருவி வந்தபிறகு அதிகமான பணத்தை மக்கள் கையில் எடுத்து செல்லும் பழக்கம் குறைந்தது. ஏடிஎம் வங்கி பயன்பாட்டின் இன்றியமையாத விஷயமாக மாறியது. ஆரம்பத்தில் மாத வருமானத்தை எடுக்கும் மொத்தமாக எடுத்து வந்த மக்கள் பிறகு பணத்தை எடுக்காமல் தேவைக்கேற்ப எடுத்து பயன்படுத்த துவங்கினர்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் சிலர் மட்டுமே இதனை பயன்படுத்தி வந்தனர். இதற்கு அளிக்கப்பட்டுள்ல பாதுகாப்பு பின் நம்பர் தெரிந்துவிட்டால் என் பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் சிலர் இருந்தனர்.தற்போது கிட்டத்தட்ட வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருமே ஏடிஎம் கார்டு வைத்துள்ளனர்.ஏடிஎம் கார்டுகள் குளோனிங் செய்யப்படுவது, ஏடிஎம் மைய காவலாளி கொலை என பல சம்பங்கள் நடைபெற்றாலும் மக்கள் வாழ்வில் ஏடிஎம் மையங்கள் இன்றியமையாத விஷயமாகிவிட்டன.

மூலைக்கு ஒன்று என்று இருந்த ஏடிஎம்கள் தற்போது தெருவுக்கு நாலு இருக்கின்றன.எடிஎம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலை பெற்ற நாடாக உள்ளது. ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வகையில் அவரவர்களது பிராந்திய மொழியிலும், குரல் வழியாக பதிவு செய்யும்படியும், தொடுதிரை வடிவிலும் பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. விரும்பிய நேரத்தில் பணம் அளிக்கும் ஏடிஎம் கருவி பயன்பாட்டுக்கு வந்த இந்த நாள் வங்கி வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாள்!!

ச.ஸ்ரீராம்

விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum