Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குக்கிராமத்திற்கும் பணம் அனுப்பும் ‘பேமென்ட் பேங்க்’ வசதி வருகிறது
Page 1 of 1

வங்கி இல்லாத குக்கிராமத்திலும், பணப் பரிவர்த்தனை வசதி மட்டும் வழங்கும், ‘பேமென்ட் பேங்க்’ திட்டத்திற்கு, ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து உள்ளது.அலைச்சல்இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், கிராமத்தில் பிறந்து, நகரத்தில் வேலை செய்வோர், தங்கள் குடும்பத்திற்கு மேற்கண்ட வங்கி நடைமுறையில் பணம் அனுப்பலாம். இதனால், வங்கி வசதியில்லாத கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கி நடவடிக்கைகளுக்காக நகரங்களுக்கு செல்லும் அலைச்சல் தவிர்க்கப்படும்.
நச்சிகெட் மோர் தலைமையிலான குழு, வெறும் பணப் பரிவர்த்தனை மட்டும் மேற்கொள்ளக்கூடிய ‘பேமென்ட் பேங்க்’ திட்டத்திற்கான பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியுள்ளது. அவற்றை, ஒரு சில திருத்தங்களுடன், ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது.இத்தகைய வங்கி உரிமத்திற்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இதன்படி, பணப் பரிவர்த்தனை வசதியை மட்டும் வழங்கும் ‘பேமென்ட் பேங்க்’ உரிமைக்கு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். ஈடுபட முடியாதுஆனால், அத்தகைய நிறுவனங்கள், கடன் அல்லது தரகு சார்ந்த, இதர வர்த்தகங்களில் ஈடுபட அனுமதிஇல்லை.
வங்கிகளின் துணை நிறுவனங்களுக்கும், அனுமதி கிடையாது.குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் பங்கு மூலதனத்துடன் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கே உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற்ற நிறுவனங்கள், சில்லரை பணப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஒருவரிடம், அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே டிபாசிட் பெற வேண்டும். வங்கிகளுக்கு கடன் வழங்க அனுமதியில்லை.வங்கி, டிபாசிட் மூலம் திரட்டும் தொகை முழுவதையும், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம், ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ரொக்க இருப்பு விகிதத்தை, வங்கி பராமரிக்க வேண்டும்.இது போன்ற கடுமையான விதிமுறைகள் காரணமாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இப்பிரிவில் கால் பதிக்க தயங்கும் என, தெரிகிறது.
அதே சமயம், அஞ்சல் துறை, பணப் பரிவர்த்தனைக்கான பிரத்யேக வங்கி வர்த்தகத்தில் நுழையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆதரவுகடந்த ஆண்டு, வங்கி உரிமம் கோரி அஞ்சல் துறை விண்ணப்பித்தது. ஆனால், அத்திட்டத்திற்கு நிதியமைச்சகம் ஆதரவு அளிக்கவில்லை. தற்போது, மத்தியில் புதிய அரசு அமைந்துள்ளதால், அஞ்சல் துறை, ‘பேமென்ட் பேங்க்’ மூலம், அதன் வங்கிக் கனவை நனவாக்கிக் கொள்ளும் என, தெரிகிறது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து.

தினமலர் .
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» பணம் எப்படி உருவாக்கப்படுகிறது - என்றால் என்ன?
» பிரிக்ஸ் பேங்க்:உலக வங்கிக்கு ‘செக்’!
» மிஸ்டு கால் கொடுங்க... பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க!
» போஸ்ட் ஆபீஸ் டு பேங்க்... செல்வ மகள் முதலீட்டை மாற்றுவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum