Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்...
Page 1 of 1
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்...
தபால் அலுவலகத்தில் ஸ்டாம்புகள் விற்கப்படுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்கு காப்பீட்டுத் திட்டங்கள் விநியோகிக்கப்படுவது பலருக்கும் தெரியாத விஷயம். அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டுவகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.
முதல் திட்டத்தில் நகரங்களில் வசிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவன ஊழியர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டங்கள் குறித்து முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டரிடம் பேசினோம். அவர் தந்த தகவல்கள் இங்கே உங்களுக்காக...
பாலிசி வகைகள்!
''அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த ஆகும் செலவு குறைவு என்பதால், அத்தொகை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் வழியாகச் சென்று சேர்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்கிற இரண்டு திட்டங்களில் முழு ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, மாறுதலுக்குட்பட்ட முழுஆயுள் காப்பீடு, எதிர்பார்ப்பு குறித்த கால காப்பீடு, குழந்தைகள் ஆயுள் காப்பீடு, பத்து வருட கிராமிய அஞ்சல் காப்பீடு, ஜாயின்ட் லைஃப் குறித்த கால காப்பீடு என பல வகைகள் இருக்கின்றன.
பாலிசி எடுக்கும்போது பாலிசி காலம் எவ்வளவு, எந்தவகையான பாலிசியைத் தேர்வு செய்கிறோம், அதற்கான பிரீமியம் எவ்வளவு என்பதை பாலிசிதாரர்கள் கவனிக்க வேண்டும். இந்த அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.
அஞ்சலக இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சிலவற்றை 3-4 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்ய முடியும். 3-4 ஆண்டுகளுக்கு குறையாமல் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்த பாலிசிகளுக்கு அதன்பிறகு பிரீமியம் செலுத்தாவிட்டால் அவை முன்முதிர்வடைந்த பாலிசிகளாக கருதப்படும். பாலிசி முதிர்வுக் காலத்துக்கு பிறகு அந்தப் பணம் தரப்படும்.
பிரீமியம் செலுத்தும் முறை!
இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் பிரீமியம் கட்டலாம். பிரீமியத்தை முன்னதாகவே கட்டும்போது அரை சதவிகிதம் முதல் இரண்டு சதவிகிதம் வரை தள்ளுபடி உண்டு. இந்த இன்ஷூரன்ஸ் பாலிசித் திட்டங்களிலும் நாமினி மற்றும் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்தல் (2 முறை மட்டுமே) ஆகிய வசதிகள் உண்டு'' என்றவர், இதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்தும், பல்வேறு திட்ட வகைகள் பற்றியும் விளக்கினார்.
அஞ்சலக காப்பீட்டுத் திட்ட விதிமுறைகள் (பொதுவானவை)!
இந்த பாலிசிகளைக் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 55 வயதுள்ளவர்கள் எடுக்கலாம். பிறப்புச் சான்று இல்லை என்றால் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். பிறப்புச் சான்று இல்லாதவர்கள் மருத்துவர்களிடம் தோராயமான வயது சான்றிதழை வாங்கித் தரலாம். அதில் உண்மைத்தன்மை இல்லை என்று நிரூபணமானால் பாலிசி ரத்தாகும்.
குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் கொண்ட பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். 55 வயதுள்ளவர்கள் (மருத்துவச் சான்றுடன்) அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல, 45 வயதுள்ளவர்கள் (மருத்துவச் சான்றுடன்) அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரையே பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். இந்த பாலிசிகளை எடுக்கும்போது வயது சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும். 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்.
முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்!
இந்த பாலிசியை எடுப்பவர்கள், தான் வாழும்போது இந்த பாலிசியிலிருந்து எந்த வகையிலும் பயன்பெற முடியாது. இந்த பாலிசியில் கட்டும் பிரீமியமானது பாலிசி முதிர்வு பெற்றிருந்தாலும், பாலிசிதாரரின் இறப்புக்குப் பிறகு போனஸுடன் வாரிசு தாரருக்கு வழங்கப்படும். இந்தவகை பாலிசியில் போனஸ் அதிகம், பிரீமியம் குறைவு.
குறித்த கால காப்பீடு!
இந்தவகை பாலிசிகளில் பாலிசிதாரரின் வயது 35, 40, 50, 55, 58 மற்றும் 60-ஆக முதிர்வுக் காலத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். காப்பீட்டுத் தொகையானது போனஸுடன் முதிர்வுக் காலத்திலோ, இறப்பைத் தொடர்ந்தோ, எது முன்னதாக வருகிறதோ அப்போது வழங்கப்படும். இந்தவகை பாலிசி களுக்கு பிரீமியம் சற்று அதிகம். போனஸ் குறைவு.
மாறுதலுக்குட்பட்ட முழு ஆயுள் காப்பீடு!
முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முழு ஆயுள் காப்பீடாகவும் (குறைந்த பிரீமியம்), அதற்கு பிறகு முதிர்வுறும் ஆயுள் காப்பீடாக மாறிவிடும் (பிரீமியமும் அதிகரிக்கும்). இப்படி இரண்டு நன்மைகள் தரக்கூடியதாக அமைக்கப் பட்டுள்ள இத்திட்டத்தின் முதிர்வு வயது 50, 55, 58 மற்றும் 60.
எதிர்பார்ப்பு குறித்த கால காப்பீட்டுத் திட்டம்!
இதில் 15, 20 வருடம் முதிர்வுள்ள பாலிசிகள் உள்ளன. இதில் மற்ற பாலிசிபோல் அல்லாமல் பாலிசி எடுத்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள்கால நன்மையாக காப்பீட்டுத் தொகையில் 20% அளிக்கப்படும். அதாவது, 20 வருடம் முதிர்வுள்ள பாலிசியில் 8, 12, 16 ஆண்டுகளில் தலா 20% கவரேஜ் தொகையும் 20-வது ஆண்டின் இறுதியில் போனஸ் மற்றும் மீதமுள்ள 40% தொகையும் வழங்கப்படும்.
அதேபோல 15 வருட முதிர்வுள்ள பாலிசி களுக்கு 6, 9, 12-வது ஆண்டுகளில் தலா 20% கவரேஜ் தொகையும் 15-வது ஆண்டு முடிவில் போனஸுடன் மீதி 40% தொகையும் வழங்கப்படும்.
பத்து வருட கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது எதிர்பார்ப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட குறுகிய காலத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் பாலிசியில் நான்காவது ஆண்டில் காப்பீட்டுத் தொகையில் 20%, ஏழாவது ஆண்டில் 20% மற்றும் 10-வது ஆண்டில் போனஸுடன் 60% வழங்கப்படும்.
மேலே சொன்ன 10, 15, 20 வருடங்கள் முதிர்வுகொண்ட பாலிசிகளை எடுத்த பாலிசிதாரர் பாலிசி முதிர்வடைவதற்குள் இறக்க நேரிட்டால் முழு ஆயுள் காப்பீட்டுத் தொகையும் போனஸுடன் எந்த கழிவும் இல்லாமல் வாரிசுதாரருக்கு வழங்கப்படும். இந்தவகையான திட்டத்தில் கடன் வசதி மற்றும் சரண்டர் செய்ய அனுமதியில்லை.
ஜாயின்ட் லைஃப் குறித்த கால காப்பீட்டுத் திட்டம்!
இந்தவகை பாலிசியானது கணவன், மனைவி இருவரும் இணைந்து ஒரே இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ளும் வகையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாலிசி எடுக்கும் போது கணவனுக்கும், மனைவிக்கும் ஆகும் வயதைக் கூட்டி சராசரி வயதாக கணக்கிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல பாலிசிதாரர்களிடமிருந்து பிரீமியம் பெறப்படும். பாலிசி காலத்தில் இருவரில் ஒருவர் இறந்தாலும் மற்றொருவருக்கும் பாலிசி முதிர்வு தொகையுடன் போனஸும் இணைந்து கிடைக்கும்.
குழந்தைகள் ஆயுள் காப்பீடு!
இது குறுகிய கால அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். தாயோ அல்லது தந்தையோ அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தாலோ அல்லது தற்போது புதிதாக பாலிசி எடுக்க முனைந்திருந்தாலோ தங்களின் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு குழந்தையின் தாயோ, தந்தையோ 45 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது. குழந்தையின் வயது ஐந்துக்கு குறையாமலும் 20 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தாய், தந்தையின் பாலிசிக்கான பிரீமியம் செலுத்தும் காலம் குழந்தைக்கு எடுக்கும் பாலிசிக் காலத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்'' என்று முடித்தார்.
- செ.கார்த்திகேயன்,
நாணயம் விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!
» காப்பீட்டுத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு: மாநிலங்களவை தேர்வுக் குழு ஒப்புதல்
» வாடிக்கையாளர்களுக்கு எல்.ஐ.சி. 6 புதிய திட்டங்கள்
» ஆயுள் காப்பீடு : தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்
» ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum