Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்
Page 1 of 1
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்
கூகுள் நிறுவனத்தின், அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.4. கிட்கேட் எனப் பெயரிட்டுக் கிடைக்கும் என சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தோம். இப்போது அக்டோபர் 31 அன்று, வெளியான, கூகுள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனுடன், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. மேலும், கூகுள் நிறுவனம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கூகுளின் ஆண்ட்ராய்ட் கிட் கேட், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இயங்கக் கூடியதாய் இருக்கும். இதன் மூலம், ஆண்ட்ராய்ட் பயன்படுத்த விரும்பும், அடுத்த நூறு கோடிப் பேர் கிட்கேட் மூலம் வளைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், முன்பு வந்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் போல இல்லாமல், கிட்கேட் குறைவான மெமரி இடத்தையே, ராம் மெமரியில் பயன்படுத்தும். ஜெல்லி பீன் சிஸ்டம் பயன்படுத்திய மெமரியைக் காட்டிலும், 16 சதவீத இடம் குறைவாகவே பயன்படுத்தப்படும். மேலும், கிட்கேட் செயல் திறன், 12.9 சதவீதம் கூடுதலாக இருக்கும். இதன் மூலம் கூகுளின் அனைத்து சேவைகளும் கிடைக்கும்.
முதலில், நெக்சஸ் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஆகிய போன்களில் மட்டும் கிட்கேட் தரப்படும் என்றாலும், படிப்படியாக, இந்த சிஸ்டம் மற்ற ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் வழங்கப்படும். 2014ல், மொபைல் போன்களுக்கென வழங்கப்பட இருக்கும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம், கிட் கேட் ஆக மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் மற்றும் முந்தைய சிஸ்டங்களைக் கொண்டுள்ள, ஸ்மார்ட் போன்கள், கிட்கேட் சிஸ்டத்தினை அப்டேட் ஆகப் பெற முடியுமா என்ற கேள்விக்கு கூகுள் பதில் அளிக்கவில்லை.
இதில் தரப்பட்டுள்ள போன் டயலர் அப்ளிகேஷன், நாம் எந்த எண்களுக்கு அடிக்கடி போன் செய்கிறோம் என்பதனைக் கணக்கிட்டு, அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, காண்டாக்ட்ஸ் பட்டியலில், முதலில் வைத்திடும். மேலும், போன் டயலர் அப்ளிகேஷனில் உள்ள ஊர்களை கூகுள் மேப்பில் முன்னுரிமை கொடுத்து காட்டப்படும்.
அழைப்பவர்களை அடையாளம் காட்டும் செயல்பாட்டில், தற்போது இன்னும் சில சிறப்பு தரப்பட்டுள்ளது. உங்களுடைய போன் பட்டியலில், அழைக்கும் எண் இல்லை என்றால், கூகுள் அப்ளிகேஷன், உங்கள் அருகே உள்ள வர்த்தக இடங்களுக்கான எண்களை ஸ்கேன் செய்து, அழைக்கும் எண் எதனைச் சார்ந்தது எனக் காட்டும்.
நீங்கள் போட்டோ, மேப் அல்லது கேம் பயன்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால், திரையில் வேறு நேவிகேஷன் பட்டன்கள் எதுவும் காட்டப்படாமல், அவை மட்டுமே முழுமையான திரையில் காட்டப்படும். நாம் விரும்பினால், ஸ்கிரீனில் ஸ்வைப் செய்து, இந்த நேவிகேஷன் பட்டன்களைப் பெறலாம்.
புதியதாகக் கிடைக்கும் Hangouts அப்ளிகேஷன், உங்கள் டெக்ஸ்ட், மல்ட்டிமீடியா மெசேஜ், சாட் உரையாடல், வீடியோ அழைப்புகள் ஆகிய அனைத்தையும் ஒரு இடத்தில் குவித்துக் காட்டுகிறது. உங்களுடைய போன் அல்லது டேப்ளட்டிலிருந்து, போட்டோ, டாகுமெண்ட் மற்றும் இணைய தளங்களை அச்செடுக்கலாம். எச்.பி இ பிரிண்ட் பிரிண்டர்கள், கூகுள் க்ளவ்ட் பிரிண்ட் உடன் இணைக்கப்பட்ட பிரிண்டர்களில் அச்செடுக்கலாம்.
உங்களிடம் IR blaster உள்ள ஆண்ட்ராய்ட் சாதனங்கள் இருந்தால், டிவி ரிமோட் ஆகச் செயல்படும் அப்ளிகேஷன்களை இயக்கலாம். உங்களுக்கு emoji கீ போர்ட் தேவை எனில், அது இந்த சிஸ்டத்தில் தரப்படும்.
Message Access Profile (MAP) என்ற டூலுக்கான சப்போர்ட் இதில் கிடைக்கிறது. இதனால், புளுடூத் இயக்கப்படும் கார்களில் உள்ள சாதனங்கள், தனியே இயங்கும் சாதனங்களுடன் மெசேஜ் பரிமாறப்படும் வசதி உள்ளது.
புதியதாக இமெயில் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்முடன் தொடர்புடைய நபர்களின் போட்டோக்கள், மெசேஜ்கள் காட்டப்படுகின்றன. மேலும், இதில் புதிய வகை நேவிகேஷன் தரப்பட்டுள்ளது.
இதில் அண்மைக் களத் தொடர்பு வசதி (NFC) பெறும் சாதனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
ஸ்டேட்டஸ் பார் அனைத்தும் ஒரே வண்ணத்தில் உள்ளது. அதற்கேற்ற சிறிய எழுத்து வகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூகுள் தரும் அனைத்து வசதிகளையும், கிட்கேட் சிஸ்டத்தில் எளிதாகப் பெறலாம். ஹோம் ஸ்கிரீனில் ஒரு முறை ஸ்வைப் செய்தால், கூகுள் வசதிகள் நாம் பயன்படுத்தத் தயாராய்க் கிடைக்கின்றன. ""ஓகே கூகுள்'' என்று உச்சரித்தாலே போதும்.
உடனே வாய்ஸ் சர்ச் வசதி நம் முன் கிடைக்கிறது. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தற்போது நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனுடன் இணைந்து தரப்படுகிறது. வரும் வாரங்களில், நெக்சஸ் 4, நெக்சஸ் 7 மற்றும் நெக்சஸ் 10 டேப்ளட்களுக்குக் கிடைக்கும். இவற்றுடன், பிரிமியம் வகை மொபைல் போனான, சாம்சங் காலக்ஸி எஸ்4 மாடலுக்கும் கிடைக்கும்.
எச்.டி.சி. நிறுவனம், தன் ஸ்மார்ட் போன்களில், இந்த கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 90 நாட்களுக்குள் கிடைக்கும் என அறிவித்துள்ளது. ஆனால், கூகுள் திட்டப்படி, இன்னும் பல ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அப்டேட் செய்திடும் வசதி நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆனால், எப்போது என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.
கம்ப்யூட்டர் மலர்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum