Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சிறுகச் சிறுக தங்கம்: நகைச் சீட்டு லாபமா?
Page 1 of 1

தங்கத்தின் விலை இடையிடையே கொஞ்சம் சறுக்கினாலும், நீண்டகாலத்தில் அதன் விலை உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. நடுத்தர மக்களால் தங்கத்தை மொத்தமாக பணம் கொடுத்து வாங்க முடிவதில்லை. எனவே, அவர்களுக்கும் தங்கம் வாங்கக்கூடிய வகையில் தோதாக இருப்பதுதான் நகைச் சீட்டு. தங்கம் வாங்கவேண்டும் என்பதற்காக இன்றைக்கு இந்த நகைச் சீட்டு கட்டுபவர்கள் பல லட்சம் பேர். இந்த தங்க நகைச் சீட்டில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் யூ.என். சுபாஷ்.
''இன்றைய சூழ்நிலையில் தங்கத்தை முதலீடாகவே பலரும் பார்க்கிறார்கள். தங்கம் வாங்கப் பலரும் தேர்வு செய்யும்முறை தங்க நகைச் சீட்டுதான். இந்தச் சீட்டு முறைகளில் பலவகைத் திட்டங்களை நகைக் கடைகள் வைத்திருக்கின்றன.
நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் திட்டம், மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி, முதிர்வின்போது பணத்தின் மதிப்புக்கு தங்க நகைகள் வாங்கிக்கொள்வது. திட்டத்தில் பலரையும் சேர்க்க நகைக் கடைகள், ஒருமாத தவணைத் தொகையை போனஸாக கொடுக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் நகை வாங்கும்போது வழக்கமான சேதாரம் உண்டு.
இதேபோல, மாதம் மாதம் குறிப்பிட்ட தொகைச் செலுத்தும்போது அன்றைய தங்க விலையில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு உண்டான தங்கத்தை உங்களின் பெயரில் வரவு வைப்பார்கள். திட்டத்தின் முடிவில் உங்களின் பெயரில் வரவு வைக்கப்பட்ட தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம். இதற்கு சேதாரம், செய்கூலி, வாட் வரி கிடையாது. ஆனால், இதில் சில கடைகளில் குறிப்பிட்ட அளவு சேதாரம் வரை விலக்கு வைத்துள்ளன. அதாவது, 18 சதவிகித சேதாரத்திற்கு மேல் சேதாரம் உள்ள நகைகளுக்கு கூடுதல் பணம் தரவேண்டி இருக்கும். இதில், சில கடைகள் கூடுதலாக ஒருமாதத் தவணையை போனஸாக தருகின்றன.
இந்த இரண்டு திட்டங்களும் குறுகியகால திட்டங்கள்..! 15 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை பணம் கட்டவேண்டும். முடிவில் நகையாக மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும்; பணமாகக் கேட்டால் தரமாட்டார்கள். பாதியில் பணம் செலுத்துவதை நிறுத்தினால்கூட நீங்கள் அதுவரைக் கட்டிய பணத்தைத் திரும்ப பெறமுடியாது. நீங்கள் செலுத்திய தொகையின் மதிப்பிற்கு மட்டுமே நகைகள் வாங்கிக்கொள்ள முடியும். திட்டத்தின் இடையில் வாங்கும் நகைகளுக்கு எந்தவிதமான சலுகை களும் கிடையாது. சேதாரம், செய்கூலி, வரி எல்லாமே உண்டு. அந்த தொகைக்கு வட்டி தரமாட்டார்கள்.
உங்களால் தொடர்ந்து சரியாக நகைச் சீட்டுக்கு பணம் கட்ட முடியுமா என்கிற சந்தேகம் வந்தால், நீங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஆர்.டி. முறையில் பணத்தைச் சேர்த்து மொத்தப் பணத்தைக்கொண்டு நகை வாங்கிக்கொள்ளலாம். இதில், ஒரு மாதம் தவணைக் கட்டவில்லை என்றால் சிறிய தொகை அபராதமாக இருக்கும். வட்டி 7 முதல் 8 சதவிகிதம் வரை கிடைக்கும்.
நகைச் சீட்டு திட்டத்தில் பலர் சேருவதற்கான காரணமே, அதிக சேதாரத்திலிருந்து தப்பிக்கதான். தங்க நாணயங்களுக்கு சேதாரம் என்பது அதிகபட்சம் 3 சதவிகிதமாக இருக்கும். சில கடைகளில் சேதாரம் கிடையாது. எனவே, நகைச் சீட்டு மூலம் தங்க காசு வாங்குவது என்பது லாபகரமாக இருக்காது. பின்நாட்களில் விற்கும்போது அதிக சேதாரம் போகாது.
சில நகைக் கடைகள் நீண்டகால அடிப்படையில் மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களை வைத்துள்ளன. இன்றைய சந்தை மதிப்பைவிட குறைவான விலையில் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்துகின்றன. அதாவது, உங்களுக்கு ஐந்து வருடம் கழித்து 100 கிராம் தங்கம் தேவை எனில், அதற்கான பணத்தை அந்தக் கடையில் மொத்தமாகக் கட்டிவிடவேண்டும். உங்கள் பெயரில் பாண்டு தந்துவிடும். ஐந்து வருடம் கழித்து, நீங்கள் 100 கிராம் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம். நகைகளாக வாங்கும்போது சேதாரம் உண்டு. நாணயங்களாக வாங்கும்போது சேதாரம் கிடையாது. பணமாகவும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பிடித்துக்கொண்டுதான் பணத்தைத் திரும்பத் தருவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக, தங்கம் விலை உயர்ந்தால் லாபம் என்று தெரியும். ஆனால், நகைகளாக வாங்கும்போது சேதாரம் உண்டு.
8 கிராம் தங்க ஆபரணம் வாங்கினால் பெரும்பாலும் ஒரு கிராம் தங்கத்தின் விலையை சேதாரமாகத் தரவேண்டியுள்ளது. எனவே, நீங்கள் 100 கிராமிற்கு நகை வாங்கும்போது
12 கிராம் தங்கத்திற்கான ரூபாயை சேதாரமாகத் தரவேண்டியிருக்கும். ஆக, உண்மையில் நீங்கள் 88 கிராம் தங்கம்தான் வாங்க முடியும். இந்நிலையில் ஐந்து வருட முடிவில் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்தால் மட்டுமே உங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.
உதாரணமாக, இன்று நீங்கள் ஒரு கிராம் தங்கத்தை 2,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், ஐந்து வருடம் கழித்து 2,200 ரூபாயாக இருக்குமெனில் உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். இடையில் பணமாக வாங்கினால் நீங்கள் செலுத்திய தொகையைவிட குறைவான தொகையே கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு வட்டி கிடையாது. தங்க நகைத் திட்டத்தில் போடுவதற்கு பதில் இந்தப் பணத்தை மொத்தமாக ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டால் 8 முதல் 10 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். அந்தப் பணத்தைக்கொண்டு நகை வாங்கிக்கொள்ள முடியும்'' என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார் சுபாஷ்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நகைச் சீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வதற்கு முன் அந்தத் திட்டம் உங்களுக்கு ஏற்றதா? அந்தக் கடையின் பாரம்பரியம் என்ன? அந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வதால் உங்களுக்கு என்ன லாபம் என்பதை எல்லாம் ஆராய்ந்த பிறகே தேர்வு செய்வது அவசியம்.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்க நகைச் சீட்டு லாபமா?
» இஎம்ஐ லாபமா?
» எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா?
» டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஆன்லைனில் எடுப்பது லாபமா?
» ஃபிக்ஸட் ரேட் லாபமா? Home Loan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum