Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
எஸ்.ஐ.பி(SIP)., எஸ்.டி.பி.(STP), எஸ்.டபிள்யூ.பி(SWP): முத்தான மூன்று வழிகள் !
Page 1 of 1

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்tடோம். இனி அதிலுள்ள முதலீட்டு வசதிகளை சரியாகப் பயன்படுத்தி அதிக லாபம் பார்ப்பது எப்படி? அதிலும் குறிப்பாக, எஸ்.ஐ.பி. எஸ்.டி.பி. மற்றும் எஸ்.டபிள்யூ.பி. உள்ளிட்ட முதலீட்டு முறைகளை பயன்படுத்தி லாபம் பார்ப்பது எப்படி என வேல்யூ இன்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டோம். இந்த மூன்று முதலீட்டு முறைகள் பற்றி தெளிவாகவே எடுத்துச் சொன்னார் அவர்.
எஸ்.ஐ.பி.! (systematic investment plan)
குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட தொகையை ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதுதான் எஸ்.ஐ.பி. அது மாதம் அல்லது காலாண்டாக இருக்கும். மாதமொருமுறை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை மொத்தமாகவே முதலீடு செய்துவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. மொத்தமாக முதலீடு செய்யும் அளவுக்கு பலரிடம் பணம் இருக்காது. உதாரணமாக, மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் மொத்தமாகப் பணம் இருக்காது.
கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கும் பணம் ஏதாவது ஒரு காரணத் தினால் செலவழிந்துவிடும். இது மாதிரியானவர்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். மேலும், ஈக்விட்டி ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யும்போது சந்தையின் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது. சந்தை பெரிய அளவில் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும்போது சந்தையின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் முதலீடு செய்திருப்பதால் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைத்து, அதிக லாபமும் கிடைக்க வாய்ப்புண்டு.
எஸ்.ஐ.பி. என்றாலே பங்கு சார்ந்த திட்டங்களுக்குத்தான் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில்கூட எஸ்.ஐ.பி. ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு, மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றால், உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
எஸ்.டி.பி.! (Systematic Transfer Plan)
மாதச் சம்பளக்காரர்களுக்கு எஸ்.ஐ.பி. சிறந்த வழி என்றால் மொத்தமாகப் பணம் வைத்திருப் பவர்களுக்கு எஸ்.டி.பி.
முறையில் முதலீடு செய்வதுதான் சிறந்தது.
உதாரணத்துக்கு, ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் இருக்கிறது. சந்தை சரிவில் இருக்கிறது என்கிறபோது இந்த 10 லட்சம் ரூபாயை லிக்விட் ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளிலோ முதலீடு செய்துவிட்டு மாதம் குறிப்பிட்ட தொகையை பங்கு சார்ந்த ஃபண்டுகளுக்கு மாற்றி லாபம் பார்ப்பதுதான் எஸ்.டி.பி.
லிக்விட் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடாகி இருக்கும் தொகைக்கு சராசரியாக 9 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்டகாலத்தில் சுமார் 12% வருமானம் கிடைக்கும்.
எஸ்.டபிள்யூ.பி.(Systematic Withdrawal Plan)
எஸ்.ஐ.பி. என்பது குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்வது. இதற்கு நேர்மாறாக குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தை வெளியே எடுப்பது எஸ்.டபிள்யூ.பி. மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கிறது. அதில் முதலீடு செய்து மாதந்தோறும் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொள்வதுதான் எஸ்.டபிள்யூ.பி. இதேபோல, கடன் சார்ந்த ஃபண்டுகளில் மாத டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் டிவிடெண்ட் விநியோக வரி போக மீதிதான் முதலீட்டாளர் கைக்குக் கிடைக்கும். மார்ச்
31 வரை 12.5 சதவிகித வரியாக இருந்தது, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், செய்த முதலீடுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, டிவிடெண்ட் விநியோக வரி போகதான் மீதி கிடைக்கும்.
ஆனால், எஸ்.டபிள்யூ.பி. முறையில் பணத்தைத் திருப்பி வாங்கும்போது, செய்த முதலீட்டில் கிடைத்த லாபத்துக்கு மட்டும்தான் வரி கட்ட வேண்டியிருக்கும். அப்படி பார்க்கும்போது, எஸ்.டபிள்யூ.பி. சரியான முறையாக இருக்கும்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: முத்தான மூன்று வசதிகள்
» ரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்!
» முதலீட்டில் மூன்று வகை…
» வீட்டுக் கடன்: வட்டி மூன்று வகை
» வீட்டு கடன் ; வட்டி மூன்று வகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum